Tuesday, May 3, 2016

பிரார்த்தனையால் வெற்றி என்றால்

பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு?
விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper with Kr Raghavi and 38 others.
பிரார்த்தனையால்தான் வெற்றியா?..........
கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.
அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.
ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.
விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?
பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.
இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...
LikeShow More Reactions
Comment
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan கடவுள் என்பது நல்ல நம்பிக்கை(கடவுள் உண்மையாக இருக்காது என்பது எனது கருத்தும்) தன் மீது நம்பிக்கை இழக்கும் சமயத்தில் தனது நம்பிக்கையை ஒரு சதவீதம் கூட குறைக்க முடியாத(கல்) ஒன்றின் மீது நம்பிக்கை கொள்வது வேண்டுதல். பல சமயங்களில் வேண்டுதல்கள் பளித்துள்ளது(அவரவர் மன வலிமையை பொறுத்தது ). மனவலிமையை ஏற்படுத்த முடியாததும் அதை கேலி செய்வதும் தான் பகுத்தறிவா? இதில் ஹி ... ஹி ... வேறே . பதிலுரை தாருங்கள் பார்ப்போம்.
Annamalai Arunachalam Arumugam நமது நம்பிக்கை வேறு... அவர்கள் நம்பிக்கை வேறு... நம்பிக்கையை கிண்டல் செய்வது முறையன்று....

No comments:

Post a Comment