Tuesday, May 3, 2016

பார்ப்பனர் - தமிழர் - திராவிடர் (வே.மதிமாறன்)


பார்ப்பனர் - தமிழர் - திராவிடர் (வே.மதிமாறன்)
0:00

Senthil Nathan பார்பனர்கள்னா யாரு? அவுக இப்ப எங்கே இருக்கார்கள் ? இப்ப என்ன செய்கிறார்கள்? அவுகளை பற்றியே இன்னும் எவ்வளவு வருசத்துக்கு பேசியே உங்கள் பொழைப்பை ஓட்டுவீர்கள்? தமிழனோட முன்னேற்றத்திற்கு (யாரையும் தாழ்த்தாமல்)எப்போது பேச போறிய ?

Mohamed Ghouse பார்பனர்கள் இல்லாமல் பிரப்பிலிருன்து கல்யானம் கருமாதி அனைத்தும் அவன் இல்லாமல் இல்லையே இந்துக்கள் என்பதே பர்பனர்கலுக்கு அடிமைபட்டவர்கள் தானே! அவன் இல்லாவிட்டால் வேதமும் இந்து மதமும் இல்லை என்பதை உருவாக்கிவைத்துல்லானே?

Senthil Nathan திரு Maher Hussain அவர்களே பெரியாரின் வாரிசுகள் அரசமைத்தவுடனேயே பார்பனர்களுக்கு எந்த சலுகையும் இல்லாமல் செய்து விட்டனர். அவர்கள் வகுத்து பாட்டிற்கு நீங்கள் சொன்னதை செய்து பிழைக்கிறார்கள் வேறென்ன செய்வது. மற்ற மத கோட்பாடுகள் போல் அனைவரும் சமம் என்ற கோட்பாடு இந்து மதத்தில் இல்லை புனிதம் ஆனவர்கள் (இது பிறப்பால் ஏற்படுவதில்லை) மட்டும் தான் படிப்பார்கள் பாதுகாப்பார்கள், இந்து மதம் புனிதமானதாக அவர்கள் கருதுகிறார்கள். நான் புனிதமாக முயற்ச்சிகள் செய்கிறேன். நான் வெள்ளையர்களால் இந்து மதத்தில் ஒட்டி வைக்கப்பட்ட ஒட்டுண்ணி. இதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.

Karthik Pass Karthik திராவிட மாயை – ஒரு பார்வை!

ஒரு தந்தியால் முடங்கிய போராட்டம்

கம்பராமாயணம் பற்றி நவீன எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் சொல்கிறார்:

“தமிழில் கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம் என்றால் அது கம்பன்தான். என்னைப் பொறுத்தவரை, சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்தின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். கம்பராமாயணத்தில் ஒரு சொல்கூட வீணான சொல் கிடையாது” என்பது அவருடைய மதிப்பீடு.

படைப்பாளிகளும், கலைஞர்களும், பக்திமான்களும் தொடர்ந்து கம்பராமாயணத்தை வாசிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன் கம்பராமாயணப் புத்தகத்தைக் கொளுத்த வேண்டும் என்று சில புத்திசாலிகள் ஆர்ப்பரித்தார்கள். சத்தமாகப் பேசிவிட்டால் அது சங்க இலக்கியமென்றும், மைக்கில் சொல்வதெல்லாம் மணிமேகலை என்றும் சிலர் அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு வேகமாகப் புறப்பட்ட கழகத்தின் கண்மணிகள் ஒரு உத்தரவால் முடங்கி விட்டார்கள். ‘கம்பராமாயணம் மற்றும் பெரிய புராணத்தைக் கொளுத்தும் போராட்டம் கைவிடப்படுகிறது’ என்று ஈ.வெ.ரா. அறிவித்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு நாடே நகைத்து விட்டது. ஆங்கில அரசின் உயர் பதவியில் இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் இந்தபோராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று ஒரு தந்தி அனுப்பினாராம். கழகத்தவருக்கு ஈ.வெ.ரா. மேலிடம்; ஈ.வெ.ராவுக்கு ஆர்.கே. சண்முகம்செட்டியார் மேலிடம். மேலிடத்து உத்தரவை மீற முடியுமா? போராட்டம் முடக்கப்பட்டது.

சென்னையில் நடந்த கம்ப ராமாயணச் சொற்போரைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். சென்னையில் நடந்தது கூத்து என்றால், சேலத்தில் நடந்தது கேலிக்கூத்து.
-
சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்க பாடசாலை மண்டபத்தில், 14.03.1943 அன்று நடந்த விவாதத்தில் சி.என்.அண்ணாதுரையும், பேரா.சு.சோமசுந்தர பாரதியும் பேசுவதாக ஏற்பாடு.சோமசுந்தர பாரதியார், “இன்றைய வாதத்தில் பெரிய புராணமும் சேர்க்கப்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆகையால் நான் அது பற்றிப் பேசப் போவதில்லை…” என்று தொடங்கினார்.மேலும், “கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டாம் என்று சொல்லி, கொஞ்ச நஞ்சமிருக்கும் மரியாதையையும் போக்கடித்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் கம்பராமாயணத்தைக் கொளுத்துவது என்று முடிவு செய்திருந்தால், நான் சொல்லி அதை நிறுத்த முடியாது…“கம்பராமாயணக் கருத்திலே உள்ள குறைகளை மக்களுக்கு மெள்ள மெள்ள எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவு வளரச் செய்ய வேண்டும். எதிரியின் கருத்தை மெள்ள மெள்ள மக்களுக்குக் கூறி, மக்கள் எதிரியின் கருத்தை ஆபாசமென்று கருதி எள்ளி நகையாடும் விதமான, நிதானமான வேலையே மிக்க பயன் அளிக்கும் என்பதை நான் தெரிந்து கொண்டே, ஆரியர்களை எங்கெங்கு எதிர்க்க வேண்டுமோ அங்கெல்லாம் செய்து வந்திருக்கிறேன்” என்றார் அவர்.
அதாவது அண்ணாதுரையின் தப்பாட்டத்தில் இது இன்னொரு வகை. தன்னுடைய தரப்பு ஆளையே அழைத்து வந்து எதிரே பேச வைத்து விட்டு வெற்றி, வெற்றி என்று வீர முரசு கொட்டுவதுதான் திராவிட பாரம்பரியம் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இப்படிப்பட்ட போலிப் பெருமைகளால் உருவாக்கப்பட்டதுதான் திராவிட மாயை.

திராவிட மாயையின் உபகதையான, அண்ணா மாயையில் சொல்லப்படும் இன்னொரு பொய்யை இப்போது பார்க்கலாம்.

Karthik Pass Karthik தேசமும் தெய்வமும் இரண்டு கண்கள் என்று வாழ்ந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி கழகத்தவரால் ஒரு கதை சொல்லப்படுகிறது. கதையின் சாராம்சம் இதுதான்.

-
‘மேடையில் கடுமையாகப் பேசிய தேவரை, அண்ணாதுரை தன் கனிவான பேச்சால் கவர்ந்து விட்டார்’ என்பதுதான் அந்தப் பொய். இதை எப்படிச் சொல்கிறார்கள், உண்மையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.ஆனந்த விகடன் வார இதழில் (16.09.1990) கருணாநிதியின் நண்பரும் தி.மு.க. பிரமுகருமான எஸ்.எஸ். தென்னரசு எழுதுகிறார்.“பேரறிஞர் அண்ணா அனைத்துத் துறைகளிலும் பெரு பெற்றி அடைந்ததற்குக் காரணம் அவரது அறிவாண்மை மட்டுமல்ல. அவரிடம் நிறைந்திருந்த இனிய இயல்புகளும் பிரதானமானவை…“1962 வாக்கில் நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் என் மனதில் அழியாத ஓவியமாக நிலைத்து நிற்கிறது” என்று எழுதுகிறார் எஸ்.எஸ். தென்னரசு.

Naina Mohamed பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிரானவர் அல்ல அவர்களின் கொள்கைகளுக்கே எதிரானவர். மனு தர்மம் என்பதை நான் எதிர்க்கிறோம் என்று எந்த பார்ப்பானராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.

Peter John மதத்தின் பெயரால் அடித்துகொள்ளும் மக்களே இந்த வீடியோ வை பார்த்தாவது திருந்துங்கள்
http://www.tubechop.com/watch/4102226

Sowmiya Narayanan சங்க காலத்தில் சேர தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், திராவிட தேசம் என்று இருந்தது...

Sowmiya Narayanan ஆரியம் நன்று தமிழ் தீது என்று சொன்னவன் ‘வேட்கோ” குயக்கொண்டான்..

வினோத் தாமோதிரன் பார்பனர்கள் யாருன்னு தெரியாம கருத்து சொல்லக்கூடாது

No comments:

Post a Comment