சுப்ரீம் கோர்ட்டில் 'விடுதலை' கிடைத்த பின்பும்.... தொடரும் போலீஸ் தொல்லைகள் !
அக்ஷார்தம் கோயில் தாக்குதல் வழக்கில், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அப்பாவிகளை, தற்போதும் போலீஸ் பின் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறது.
நீதிமன்றம், தங்களை அப்பாவிகள் என விடுவித்து விட்டாலும், இப்போதும் தங்களை போலீஸ் பின்தொடர்ந்து வேட்டையாடுவதால், பீதிவயத்துடனேயே வாழவேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்ஷார்தம் கோயில் தாக்குதல் வழக்கில், குஜராத் போலீஸ் பொய் வழக்கில் 6 முஸ்லிம்களை கைது செய்திருந்தது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமானதை தொடர்ந்து, கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் இவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்டது.
ஆதம் அஜ்மீரி, முஃப்தி கய்யூம் மன்சூரி என்ற முஃப்தி பாபா, ஸலீம் ஷேக், சாந்த் கான், மவ்லானா அப்துல் மியா காதிரி, அல்தாஃப் மாலிக் ஆகியோர் இவ்வழக்கில் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றம், தனது கணவரை குற்றமற்றவர் என விடுதலைச் செய்த பிறகு, குஜராத் போலீஸ் தங்களிடம் கூடுதல் வன்மத்துடன் நடந்துகொள்வதாக 'அல்தாஃப் மாலிக்'கின் மனைவி கூறுகிறார்.
திருமணம் முடிந்த 3-வது நாள் அல்தாஃப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
இவர் சிறையில் இருந்தபோது முதல் குழந்தை பிறந்தது.
குழந்தையை பார்ப்பதற்கு அல்தாஃப் மாலிக் வீட்டிற்கு வந்தபோது ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் 50 போலீஸ்காரர்கள் உடன் வந்தனர்.
இவர்களில் 2 பேர் தனது படுக்கை அறைக்குள் நுழைந்த கொடுமையான சம்பவங்களையும் நினைவு கூறுகிறார், அல்தாஃப் மாலிகின் மனைவி.
10 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்யப்பட்ட 'அப்துல் மியா'வையும் விசாரணை என்ற பெயரில், போலீஸ் அலைக்கழித்து வருகிறது.
No comments:
Post a Comment