Wednesday, July 30, 2014

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்
சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவற்றில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர்
தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ
பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள்
இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின்
வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின்
திருமேனியும், இந்த பாறைகளும்
ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலை
க்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த
பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்
கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த
இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால்
கருங்கல் வெடித்துவிடும். ஆனால்,
சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத்
தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.
ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365
நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர்
இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம்
தெரியும். உலோகச்சிலையானாலும்
உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஏழுமலையான் திருவுருவச்சிலையில்
அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த
கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும்
சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள்
எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி,
காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம்
நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்க
ின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும்
110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள
குளிர்பிரதேசம். அதிகாலை 4.30
மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால்
அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம்
முடிந்தவுடன்
ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால்
வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.
வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக,
நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம்
சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல்
வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள்
அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில்
சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல்,
தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை,
முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம்,
மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி,
பாதாம்கேசரி, முந்திரிப்பருப்
பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில்
தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய
மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர
வேறு எந்த நைவேத்தியமும் கோவில்
கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத்
தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்
எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச்
செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம்
செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும்
ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால்
அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6
கிலோ எடையும் கொண்ட
புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த
ஆடையை கடையில் வாங்க முடியாது.
திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500
ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில்
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான்
வஸ்திரம் சாத்துவார்கள்.
இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய
பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள்
காத்திருக்க வேண்டும்.
4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம்
ரூபாய் கட்டணமாகும்.ஒவ்
வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள்
சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய
பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள்
காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம்
சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள்
ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறன.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய
இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள்
காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில்
இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்
து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு,
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள்
முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51
வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும்.
பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும்,
காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம்
நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார்
ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில்
இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள்
பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில்
அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின்
விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர்,
தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம்
போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான்
திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000
கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள
இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும்
இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக
உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்த
ி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12
கிலோ எடை.
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.
சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375
கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம்
உலகில் யாரிடமும் கிடையாது. இதன்
மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண
தேவராயர், அச்சதராயர் போன்றோர்
ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும்,
அறக்கட்டளைகளையும்
செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,
செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ
அரசியும்
இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர்
ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக
அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம்
கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால்
செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில
மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன்
பெருந்தேவி நகைகளைத்தந்து,
பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம்
குலோத்துங்க சோழன்
திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்த
ிஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள்
பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ
இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்
படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற
உற்சவம் நடைபெறுகிறது.
அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில்
விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உல
தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம்
பொருந்திய ஈஸ்வரனாகவும்,
சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும்
அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்
சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள்
மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல
நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம்
உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய
மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின்
திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால்
ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த
ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி.
அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்
முன்னோர்களால், வெறுங்கை வேடன்
என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்
பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33
ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர்
வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய
ஏழுமலையானை பிராத்தித்திருகிறார்.
குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்
நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல்
ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759
முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும்
மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில்
ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள்
நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்
விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலர்மேல்மங்கைக்
கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில்
தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த
நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.
உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில்
படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள்
மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது,
மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள
அறையில் வியாழன் இரவு அறைத்து தயார்
செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும்
அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள்
பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள
வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள்
அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும்,
ஒரு நாள் சிவனாகவும்
கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம்
புஷ்கரணியில் கலக்கிறது.
ஆகவே இது புனிதமான நீராகும்.
இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற
படியே இரு கைகளாலும்
தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும்.
இது விசேஷ வழிபாடாகும்.
25.
வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு மு
சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில்
“வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும்,
தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின்
போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான்
திருமேனியுடன் இருப்பார். முதலில்
ஒரு தீபாராதனை எடுக்கப்படும்.
பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும்.
பிறகு நைவேத்தியம் செய்யப்படும்.
பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும்.
ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப்
பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர்
பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில்
எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின்
தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால்
இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள்
இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ
ஆண்டாள் அணிந்த மாலைகள்
திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்
. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக
வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180
கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ,
பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ
வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர்
காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147
சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர்
காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830
தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50
கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட
மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள்
தமிழில்தான் உள்ளன.

Friday, July 25, 2014

கருணாவின் சொத்தாக சொல்லப்படுவது- நன்றி தினமலர் கருத்து பகுதி


Santhosh Gopal - vellore,இந்தியா
25-ஜூலை-201403:44:48 IST Report Abuse
Santhosh Gopal1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 18 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 15 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 9 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 10 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி. 
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி" அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18.எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார். 32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை. 
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி. 
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம் 
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி. 37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி. 38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி. 39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம். 40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி. 42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி. 43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி. 44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம். 45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம். 46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி. 49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி. 51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி. 52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி. 53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி. 54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி. 55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை. 56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்" மதிப்பு - தெரியவில்லை. 57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி. 58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது. 59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி. 60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி. 61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 500 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது. 62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி. 63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை 64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை. 65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது. 66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே. 67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை" - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது. 68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள். 69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். இதனுடன் 2G ஊழல் பணம் 1.76 லட்சம் கோடிகள் கருணாநிதி குடும்பத்திடம் தான் உள்ளது. என்ன இந்த சொத்துக்களெல்லாம் உங்களுக்கோ உங்கள் குடும்பதிர்க்கோ சொந்தம் இல்லை என்றால், அரசே எடுத்துகொள்ள சம்மதமா?
Rate this:
401 members
members
166 members
Share this comment

Arumugam Palani - salem,இந்தியா
25-ஜூலை-201405:41:57 IST Report Abuse
Arumugam Palaniஇதற்கு தமிழின தலைவர் என்ன பதில் கூறுவார் ?இந்த தமிழ் நாளிதழ்கள் ஏன் இது போன்ற கருத்துக்களை அச்சுஊடகத்தில் பிரசுரிப்பதில்லை? அவர்களுக்கு பயமா அல்லது இதில் உண்மையில்லை என்ற நினைப்பா?மக்களுக்கு தெரியும் இவை அனைத்தும் உண்மை என்று...
Rate this:
4 members
0 members
46 members
Share this comment

chandrasekaran - chennai,இந்தியா
25-ஜூலை-201406:46:50 IST Report Abuse
chandrasekaranநீங்கள் சொன்ன இந்த சொத்துக்கள் எல்லாம் கருணா ரொ..ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ப ப ப கஷ்டப்பட்டு கதை வசனம் எழுதி சம்பாதித்தது....
Rate this:
2 members
0 members
13 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
25-ஜூலை-201407:02:14 IST Report Abuse
Pannadai Pandianதலைவா .....பின்னிட்டீங்க .....கருத்த படிச்சுட்டு யாரோ "கொல்றாங்களே .....கொல்றாங்களே "ன்னு டப்பிங் குரலில் 7 முறை எகோ சவுண்டில் காது ஜவ்வு கிழியிராப்ல கோபாலபுரத்துலயிருந்து கத்தறது தெரியுது....
Rate this:
2 members
0 members
12 members
Share this comment

Skv - bangalore,இந்தியா
25-ஜூலை-201408:42:42 IST Report Abuse
Skv வோட்டு போடவே பிறந்த தமிழர்கள். ரெண்டு கட்சியும் போடும் பிச்சையில் வாழும் இவர்களுக்கு இதெல்லாம் பத்தி கவலையே இல்லே...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

Shanmuga Sundaram - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201409:34:53 IST Report Abuse
Shanmuga SundaramWell done. சந்தோஷ். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று எதிர் கேள்வி கேட்கும் முனா கானா தமிழ்நாட்டின் சாபம், நாம் செய்த பாவம். இந்த ஆள் ஊரை ஏமாற்றி அடுத்தவர் சொத்தையும் அரசாங்க சொத்தையும் அடித்து உலைக்குள் போட்டுக் கொண்டது இந்த உலகத்துக்கே தெரியும். இந்த லட்சணத்தில் கேள்வி கேட்கிறார்... கேள்வி... கண்ணதாசன் இன்று நம்மிடையே இல்லை என்பது சோகமான விஷயம். அவர் மட்டும் இருந்திருந்தால் முனா கானாவுக்கு இப்படி எதிர் கேள்விகேட்க இவ்வளவு தைரியம் வந்திருக்காது. கதை எழுதினாராம்... பணம் வந்ததாம்.... அந்த உருப்படாத திரைக் கதைகளையெல்லாம் சன் டிவியில் கூட போடுவதில்லை.... அடுத்தது திருக்குறளுக்கு உரை எழுதினேன் அதற்கும் பணம் கிடைத்தது என்பார்.... பரிமேலழகரும், முவ எழுதிய உரைக்கும்மேலாக இவர் ஒன்றும் எழுதி கிழித்து விடவில்லை. இவ்வளவு வயதான மனிதரை இவ்வளவு திட்ட வேண்டியிருக்கிறதே என்று நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இந்த ஜென்மம் சும்மா கிடைக்காமல் அண்டக்க முண்டக்க என்று எதையாவது உளறி வைத்து கோபத்தை கிளறி விடுகிறதே... நீதி துறை மட்டுமல்ல, எந்த துறையையும் இந்த மனிதர் விட்டு வைக்கவில்லை. சொத்து சேர்ப்பதே தன் வாழ்நாளின் பிரதானமான கொள்கையாக வாழ்ந்தவர். அப்படி சொத்து சேர்ப்பதற்கு யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் தமிழன துரோகி என்று பட்டம் கொடுத்து விடுவார்......
Rate this:
3 members
0 members
16 members
Share this comment

அந்நியன் - california,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201409:38:47 IST Report Abuse
அந்நியன்என்னப்பா நீ இங்கே குடுத்து இருக்கிற லிஸ்ட் வெறும் 1% தான்....மீதி எங்கே??...
Rate this:
2 members
0 members
7 members
Share this comment

Sikkalur Mariappan - salem,இந்தியா
25-ஜூலை-201410:17:28 IST Report Abuse
Sikkalur Mariappanஅம்மாடி கேட்கவே தலை சுற்றுது சூப்பர் அப்பு...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment

Raju Nellai - coimbatore,இந்தியா
25-ஜூலை-201410:25:52 IST Report Abuse
Raju Nellaiசந்தோஷ்..உங்கள் பட்டியலில் நிறைய விடுபட்டது போல இருக்கிறது.. பரவாயில்லை.. இவர் சொத்து பட்டியலை முழுமையாக வெளியிட சொத்து மலர் என்று ஒரு இணைப்பு வெளியிட்டால் தான் முடியும் போல......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
25-ஜூலை-201411:33:40 IST Report Abuse
N.Purush Bharatwajஅது இது எது.....இது மட்டுமல்ல அவரோட சொத்து....( இந்த வசனத்தை மண்வாசனையில் காந்திமதி சொல்வது போல் படித்து மகிழுங்கள்)...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment