Wednesday, May 4, 2016

வர்ணம்


மதமே இல்லாதிருந்த தமிழகத்தில்- சமண மதம், பௌத்தமதம், இந்துமதம் ஆகியன அனைத்தும் வடக்கிருந்து வந்தவைகளே. இந்து மதத்தின் சிறப்பு நான்கு வருணங்களுடன் பல சாதிகளையும் பரப்புரை செய்தது.

Comments
Senthil Nathan //பல சாதிகளையும் பரப்புரை செய்தது.// ?

Viswa Nathan கீதையும், மனுதர்ம சாத்திரமும்..!

Dhanaraj Nagappan இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Senthil Nathan நான்கு வர்ணங்களை கேள்விப்பட்டு உள்ளேன். ஜாதிகளை பற்றி என்ன கூறப்பட்டு உள்ளது?

Praba Karan நான்கு வர்ணங்களையும் கேள்விப்பட்டுள்ளேன்.சாதியைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது/// என்ன சாமி இவ்வளவு அப்பாவி யாக கேள்வி கேட்டுவிட்டீர்கள்...
செய்யும் தொழிலை விட்டு வெளியே வந்து விடக்கூடாது
எனும் அடிப்படை உங்களுக்கு புரியவில்லை போலும். சாதி அறிவிக்கப்படவில்லை எனில் பார்ப்பனர் கோயில் மணியை விடாமல் கெட்டியாகப் பிடித்து கொண்டு இருப்பதைப் பார்த்தும் கூட புரியவில்லையா என்ன? ? 
சாக்கடை அள்ளும் பணிக்கு ஏன் மற்றவர்கள் வரக்கூடாது எனும் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் புரியலாம்.
சாதி என்ன கூறப்பட்டுள்ளது எனக் கேட்கும் தங்களுக்குள் ஒரு சத்திரியன் இன்னொரு சத்திரியனுக்கு அதாவது ஒரு இனத்தை சார்ந்த சத்திரியன் இன்னொரு சத்திரியனான மற்றொரு இனத்திற்கு பெண் கொடுத்து எடுப்பதில்லையே ஏன் எனும் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் புரியவரலாம்.
Senthil Nathan இதுவெல்லாம் நடைமுறையில் இருப்பது தான். வேதத்தில்?

Praba Karan வேதம் படைப்பு. மனித மூளையில் தோன்றிய எழுத்து

Senthil Nathan இருக்கலாம். இந்து மதம் பல சாதிகளை பரப்புரை செய்தது-இந்த கூற்றுக்கு சான்று உள்ளதா?

Praba Karan சாதி அமைப்பின் மூல காரணம் வர்ணம்.
இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் உங்களுக்கு


Senthil Nathan தனித்து சாதி பற்றி குறிப்பு இல்லைதானே?

Praba Karan சூத்திரன் என்பது என்ன சாதி இதற்கு பதில் கூறும் முதலில். பிறகு சொல்கிறேன் சாதியைப் பற்றி தனியாக எப்படி கூறினார்கள் என்று

Senthil Nathan சூத்திரன் என்பது எப்படி சாதி? அது வர்ணம் தானே.

Praba Karan வர்ணத்தின் அடிப்படை சாதியா மத மா.
வர்ணம் என்பது என்ன என்பதை புரியாமல் கேட்கிறீர்களா என்ன?


Praba Karan வர்ணம் என்ன மந்திரமா?

Praba Karan வர்ணம் சாதி இல்லை எனில் பார்ப்பனர் சூத்திரன் என்று தன்னை கூறலாமே ஏன் கூறவில்லை

Senthil Nathan இது நான் கேட்க வேண்டிய கேள்வி. நான்கு வர்ணங்களும் 4000க்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட ஜாதிகளும் ஒன்றா?

Praba Karan நாலுக்குள் அடக்கம் நாலாயிரம், நாலாபுறமும்.
இது ஏற்பா???


Praba Karan திருக்குறள். அதிகாரம் 133, பாடல் ,1330.
இப்போது சிந்தனை செய்து பாருங்கள்


Viswa Nathan சிவபெருமான்,பகவான் கிருஷ்ணர்,வேத வியாசர்,வால்மீகி இவர்களுக்கெல்லாம் சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளனவே - அறிந்து கொண்டு விவாதம் செய்ய வாருங்கள்.

Senthil Nathan திருவள்ளுவர் வெறும் 133 அதிகாரங்களை மட்டுமே சொல்லி நிறுத்தி விடவில்லை. 1330 குறலையும் சொல்லியுள்ளார். அது போல

Senthil Nathan //சிவபெருமான்,பகவான் கிருஷ்ணர்,வேத வியாசர்,வால்மீகி இவர்களுக்கெல்லாம் சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளனவே// ஏதேனும் குறிப்பு கொடுங்கள் அறிந்துவிட்டு வருகிறேன்.

Praba Karan கற்பனை காவியங்களுக்கு ஆதாரம் கிடையாது. .. கடவுளைப் போலவே . தெரியாதா

Senthil Nathan காவியங்களுக்கு ஆதாரமெல்லாம் கேட்கவில்லை, அந்த கற்பனை காவியத்தில் சாதிகள் பற்றி எந்த இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது என்று குறிப்பு சொன்னால் நல்லா இருக்கும்.

Prasaad Chandrasekar In mahabaratha karnan belongs to suthiran. Its mentioned right . Still u r adking whr its mentioned nu

Senthil Nathan சூத்திரன் என்பது ஜாதியின் பெயரா?

Kumaresh ஆமாம் , அது சாதியின் பெயர் தான் .....
அதனால் தான் ராமாயணத்தில்
பார்ப்பனக்குழந்தை இறந்து போனதுக்கு, சூத்திரரான சம்பூகன் அவன் குல தெயவத்தை வணங்கியதால் தான் என்று ராமன் சம்பூகனை வெட்டிக்கொள்கிறார் .... அதன் பின் பார்ப்பனக் குழந்தை உயிர்ப்பிழைக்கிறது ....
அதாவது ஒரு சூத்திரன் தன் குல தெய்வத்தை வணங்கியதால் தீட்டாகிவிட்டது
என்று ராமயணத்தில் வருகிறது..


Senthil Nathan கேள்வி எளிதானது தானே.
நான்கு வர்ணங்களை பற்றி சொல்லி உள்ளதனை போல சாதிகளை பற்றியும் சொல்லி உள்ளாதா என்பதே எனது கேள்வி.

தேரோட்டி, படகோட்டி, கப்பலோட்டி என்பதெல்லாம் ஜாதிப்பெயரா? சில தொழில் பெயர்கள் சாதியாக்கப்பட்டதும், இழிவு படுத்தப்பட்டதும் மறுப்பதற்கு இல்லை,
ஆயினும் ஜாதி வன்கொடுமைகளை வேதத்தோடு தொடர்பு செய்தல் என்ன மாதிரியான ஒப்பீடு மதிப்பீடு?


Prasaad Chandrasekar Appo krishnan yadhavan nu iruke athu?

Viswa Nathan மஹாபாரதத்தைப் படித்துப் பார்த்தால் பல மகரிஷிகளின் சாதிபற்றி தெரிய வரும்.

Dhanaraj Nagappan Senthil Nathan நீங்கள்தான் வேதத்தை முழுமையாகப் படிக்கவில்லை என்று கூறுகின்றீர்கள். எதைத்தான் முழுமையாகப் படித்து உள்ளீர்கள். எதையும் முழுமையாகப் படிக்காமல் அவற்றை ஆதரிக்கின்றீர்கள். ஆத்திகர்கள் கூறிய கேள்வி ஞானம் மட்டும் உண்டு என்று கூறுகின்றீர்கள். அப்புறம் எப்படி அதில் சாதி இல்லை. இதில் சாதி இல்லை என்று கூறுகின்றீர்கள். நீங்கள் உண்மையில் வேதம் மற்றும் இந்து மத புராணங்கள் ஆகியவற்றைப் படித்துள்ளீர்களா இல்லையா

Dhanaraj Nagappan அரை குறையாக வந்து இந்து மதத்தை ஆதரிக்காதீர்கள்.

Dhanaraj Nagappan Senthil Nathan எனக்கு எதுவும் தெரியாது எல்லாவற்றையும் நீங்கள் நிரூபியுங்கள் என்பது ஒரு விதமான வாதம். முட்டாள் போல நடிப்பது. நடிப்பை விட்டு உண்மையான முகத்துடன் வருக

Senthil Nathan திரு Dhanaraj Nagappan அவர்களே, நான் கேட்கும் கேள்வியானது அறிந்துகொள்ளவே.

Dhanaraj Nagappan இறை மறுப்பு பற்றி அறிந்து கொள்ள என்றால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நீங்கள் நம்புவதாகவும், Defend செய்வதுமான இந்து மதத்தைப் பற்றியே எதுவும் தெரியாது என்பது எவ்விதத்தில் சரி. வேதம் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் கூறுகின்றீர்கள். ஆனால் வேதம் சரியானது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டும் எப்படி ஒரே சமயத்தில் உண்மையாக இருக்கும்.

Dhanaraj Nagappan நீங்கள் இந்து மதத்தை ஆதரித்தால் அதைப் பற்றி நீங்கள்தான் விளக்கம் தர வேண்டும். அதை விடுத்து அப்பாவி போல் எங்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள்.

Dhanaraj Nagappan Senthil Nathan உங்கள் வழியிலேயே இந்து மதத்தின் பேரில் எனக்கு எழும் சில சந்தேகங்களைக் கேட்கின்றேன். நான்கு வர்ணங்கள் என்றால் என்ன. அதன் தேவை இன்றைய சமுதாயத்து என்ன? பதில் சொல்லுங்கள்.

Praba Karan வால்மீகி சூத்திரன். .. கிருஷ்ணா யாதவ் என்று சாதியை அப்போதே அறிவித்து விட்டு விடயமே தெரியாதா பாய்

Praba Karan திலகர் மாதிரியே பேசுறீங்க சகோ. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய மாமனிதர் அவர் அவரும் இப்படி தான் பேசுவாராம்.

Praba Karan இந்து மதத்தின் முக்கிய கோட்பாடு என்ன? ?
சனார்த்தன தர்மத்தை காப்பதே...


Praba Karan சனார்த்தன தர்மம் என்றால் என்ன?
குலதர்தம்,மனுதர்மப்படி சமூக அமைப்பு நடக்க வேண்டும். சாதியத் தத்துவத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது .
யார் யாருக்கு எது எது என்று விதிக்கப்பட்டுள்ளதோ சாதி முறைப்படி அவரவர் அதன்படியே் நடக்க வேண்டும் .அதையே சுதர்மம் என்று பகவத் கீதையில் கண்ணன் கூறியதாக எழுதியிருக்கிறார்கள்.
ஏனைய்யா தெரிந்தும் தெரியாதது போல் வழ வழ கொழ கொழ என்று பேசுகிறீர்கள்?


Praba Karan வர்ணம், சாதி இரண்டும் வெவ்வேறல்ல.
முதலில் இந்த அடிப்படை புரிந்தாலே போதும் இத்தனை கேள்விகள் கேட்டிருக்க மாட்டீர்கள்.


Praba Karan நாலாயிம் சாதியை நான்கு வர்ணங்களில் அடக்கி வைத்துள்ளனர் என்பதை முதலில் புரிந்து கொள்ள முயலுங்கள்

ராம நாதன் ஜாதி என்கிற சொல்லே தமிழில் இல்லை அதனால் சாதி என சொல்லாமல் ஜாதி என்றே சொல்லுவோம் எனக்கு ஒரு நண்பர் எனது பதிவிற்கு சொன்னது

Kumaresh செந்தில் நாதன் அவர்களே !
வர்ணங்களும் ஜாதிகளும் ஒன்றுதான் என்று சொன்னால்
ஒத்துக்க மாட்டிக்கிறிங்க ....

வர்ணம் வேற, ஜாதி வேறனு
சொல்றீங்க ..

வர்ணங்கள் ஜாதி இல்லையென்றால் ,, ராமாயணத்தில் சூத்திரரான சம்பூகனை ! " சூத்திரனான நீ உன் குல தெய்வத்தை வழிப்பட்டதால் தீட்டாகிவிட்டது
அதனால் பார்ப்பனக்குழந்தை இறந்தும் விட்டது என்று சொல்லி சம்பூகனை ராமன் ஏன் வெட்டிக்கொள்கிறார் ?
சூத்திரன் என்றால் இழிஜாதி என்பதால் தான் ......

சம்பூகனை ராமன் வெட்டிக்கொன்னப்பிறகு பார்ப்பனக்குழந்தை உயிர்ப்பிழைத்துவிட்டதாம் !
இப்படிப்பட்ட தீண்டாமை கொடும ராமாயணத்தில் உள்ளது ....


Senthil Nathan //Dhanaraj Nagappan இறை மறுப்பு பற்றி அறிந்து கொள்ள என்றால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நீங்கள் நம்புவதாகவும், Defend செய்வதுமான இந்து மதத்தைப் பற்றியே எதுவும் தெரியாது என்பது எவ்விதத்தில் சரி. வேதம் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் கூறுகின்றீர்கள். ஆனால் வேதம் சரியானது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டும் எப்படி ஒரே சமயத்தில் உண்மையாக இருக்கும்.//

திரு Dhanaraj Nagappan அவர்களே

"வேதம்சரியானது" என்று கூறுவதற்கும் "வேதம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்" என்று கூறுவதற்கும் அநேக வேறுபாடுகள் உள்ளது.

என் எண்ணத்திற்கு காரணம் தவறு உணரவில்லை என்பதே.

என் எண்ணத்திற்கு தவறென்று உணர செய்து விட்டாலே வேதம் சரியானது என்ற எண்ணம் தகர்ந்து விடும்.

வேத அறிவானது வெறும் கேள்வி ஞானம் மட்டுமே. எல்லாம் அறிந்து கொண்டு தங்களை சங்கடத்தில் ஆழ்த்துவதர்க்காக என என்ன வேண்டாம். அது என் எண்ணம் கிடையாது. அறிந்து கொள்வது மட்டுமே.

எல்லாம் அறிந்துகொண்டு மற்றவர்களுக்கு அதனை போதிப்பது எனது நோக்கமாக இருந்தால் இது போன்று ஒரு பக்கத்தினை நிறுவி தங்களை போன்றவர்களுக்கு friends requests கொடுத்து விளக்கம் கொடுப்பேனே அன்றி இது போல செய்ய மாட்டேன்.


Senthil Nathan //Dhanaraj Nagappan நீங்கள் இந்து மதத்தை ஆதரித்தால் அதைப் பற்றி நீங்கள்தான் விளக்கம் தர வேண்டும். அதை விடுத்து அப்பாவி போல் எங்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள்.//

நாத்திகரிடம் கேள்வி கேட்டாலே அவர் ஆத்திகராகி விடுகிறாரா? அது, அவர் சார்ந்த மதத்தினை ஆதரிப்பதாகுமா?
தங்களைபோன்றவர்கள் சந்தேகமே இல்லாத அளவுக்கு விடையளிபதின் மூலமே என்னைப்போன்ற ரெண்டும் கெட்டான்கள்(ஆத்திகமுமின்றி நாத்திகமுமின்றி) ஏதேனும் ஒன்றில் கரை சேர முடியும்.

"அப்பாவி" "உண்மை முகத்தோடு வாருங்கள்" இது போன்ற வரிகளை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனை தனிமனித விமர்சனமாக கருதுகிறேன், மற்றும் எதன் அடிப்படையில் இப்படி பதிவிடுகிறீர்கள்? தயவு செய்து இது போன்று பதிவிடுவதனை தவிருங்கள்,



Senthil Nathan //Dhanaraj Nagappan நீங்கள் இந்து மதத்தை ஆதரித்தால் அதைப் பற்றி நீங்கள்தான் விளக்கம் தர வேண்டும். அதை விடுத்து அப்பாவி போல் எங்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள்.//

நாத்திகரிடம் கேள்வி கேட்டாலே அவர் ஆத்திகராகி விடுகிறாரா? அது, அவர் சார்ந்த மதத்தினை ஆதரிப்பதாகுமா?
தங்களைபோன்றவர்கள் சந்தேகமே இல்லாத அளவுக்கு விடையளிபதின் மூலமே என்னைப்போன்ற ரெண்டும் கெட்டான்கள்(ஆத்திகமுமின்றி நாத்திகமுமின்றி) ஏதேனும் ஒன்றில் கரை சேர முடியும்.

"அப்பாவி" "உண்மை முகத்தோடு வாருங்கள்" இது போன்ற வரிகளை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனை தனிமனித விமர்சனமாக கருதுகிறேன், மற்றும் எதன் அடிப்படையில் இப்படி பதிவிடுகிறீர்கள்? தயவு செய்து இது போன்று பதிவிடுவதனை தவிருங்கள்,

//Dhanaraj Nagappan Senthil Nathan உங்கள் வழியிலேயே இந்து மதத்தின் பேரில் எனக்கு எழும் சில சந்தேகங்களைக் கேட்கின்றேன். நான்கு வர்ணங்கள் என்றால் என்ன. அதன் தேவை இன்றைய சமுதாயத்து என்ன? பதில் சொல்லுங்கள்.//

அந்தணர் தொழில்கள் :

1. வேதம் ஓதுதல்,
2. வேதம் ஓதுவித்தல்,
3. வேள்வி புரிதல்,
4. வேள்வி செய்வித்தல்,
5. ஈதல்,
6. ஈதலை ஏற்றல்.



அரசனது தொழில்கள் :

1. குடிகாவல்
2. ஈகை,
3. வேள்விகள் புரிவது,
4. வேதம் பாராயணம் செய்விப்பது,
5. விஷய சுகங்களில் மனத்தை அலையவிடாமல் உறுதியாக நிற்பது.



வைசியருக்கான தொழில்கள் :

1. ஆநிரைகாத்தல்,
2. தானம் கொடுத்தல்,
3. கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல்,
4. வட்டிக்கு விடுதல்,
5. பயிர்த் தொழில் செய்தல்.

சூத்திரர்களுக்கான தொழில்கள் :

ஏவலரான இவர்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்.

சூத்திரன் என்பவர்கள்

1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; 2.பக்தியினால் வேலை செய்கிறவன்.
3.வேசிக்கு பிறந்தவன்
4.விலைக்கு வாங்கப்பட்டவன்;
5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன்;
6.குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; 7.குற்றத்திற்காக வேலை செய்கிறவன்.

இதன்தேவை சமுதாயத்திற்கு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வர்ண தர்மமானது மக்களை வகை செய்வதாகவே அறிகிறேன். ஒருவர் மற்றவர் தர்மத்தினை கடைபிடிக்க வேதகாலத்தில் தடையிருந்தாக அறியவில்லை.

ராமன் குருகுல கல்வியின் போதும், வனவாசத்தின் போதும் சத்திரிய தர்மத்தினை துறந்து அந்தனர் தர்மத்தினை பின்பற்றி உள்ளார்.

பஞ்சபாண்டவர்களும் அந்தனர் தர்மத்தினை பின்பற்றி உள்ளார்

சில(வால்முகி..) முனிவர்களும் சூத்திர தர்மத்திலிருந்து அந்தனர் தர்மத்தினை பின்பற்றி உள்ளனர்.

பின்பற்றும் தர்மத்தினை செம்மையாக பின்பற்றுங்கள். வர்ண தர்மத்தினை மாற்றிக்கொள்ள விரும்பினால் அல்லது சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஏற்றார் போல் தங்களை செம்மை படுத்திக்கொண்டு பின்பற்றுங்கள் என்று சொல்ல வருவதாகவே எனக்கு படுகிறது
திரு Dhanaraj Nagappan அவர்களே.
(இன்றைய தினத்தில் இவ்வாறு மாற்றிக்கொள்வது அவ்வளவு எளிது அல்ல என்பது அறிகிறேன்)



Senthil Nathan //Praba Karan வால்மீகி சூத்திரன். .. கிருஷ்ணா யாதவ் என்று சாதியை அப்போதே அறிவித்து விட்டு விடயமே தெரியாதா பாய்//

ஆம், ஒப்புக்கொள்கிறேன், இது தான் நான் கேட்ட கேள்விக்கான பதில். வேதத்தில் சொல்லப்பட்டது போன்ற யாதவ சாதி தற்போதும் உள்ளது. பதிலுக்கு நன்றிகள்.


இது போன்று தற்போது நடைமுறையில் உள்ள சாதிகள் பற்றிய குறிப்பும் சொன்னால் என் சந்தேகம் முற்றிலுமாக தீர்ந்து விடும்.



Praba Karan நாலாயிரம் சாதி களையும் சொல்ல இயலாது தான் நான்கு வர்ணங்களில் அடக்கி வைத்தனர் என்பது நான் சொல்லித் தான் தெரியவேண்டுமா என்ன


Senthil Nathan Praba Karan திலகர் மாதிரியே பேசுறீங்க சகோ. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய மாமனிதர் அவர் அவரும் இப்படி தான் பேசுவாராம்.

அப்படியா, நல்லது. அவர்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது அறிய முற்படுகிறேன்.



Praba Karan ஏன் இரண்டுங்கெட்டானாக இருக்கிறீர்கள். நீங்க சொன்னது தான் பாய்


Senthil Nathan உரிய அறிவு இல்லாததினால் தான்.


Praba Karan உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி


Senthil Nathan //Praba Karan வர்ணம், சாதி இரண்டும் வெவ்வேறல்ல.
முதலில் இந்த அடிப்படை புரிந்தாலே போதும் இத்தனை கேள்விகள் கேட்டிருக்க மாட்டீர்கள்//.

வர்ணம் என்பதனை வரையறுத்து சொல்லப்பட்ட அளவுக்கு சாதி பற்றியும் சொல்லப்பட்டு இருக்குமோ என்ற அறியும் ஆர்வத்தில் தான் இத்தனை கேள்விகள்



Senthil Nathan //Praba Karan நாலாயிம் சாதியை நான்கு வர்ணங்களில் அடக்கி வைத்துள்ளனர் என்பதை முதலில் புரிந்து கொள்ள முயலுங்கள்//

புரிகிறது. எல்லோருமே இந்த நான்கு வர்ணத்திற்குள்ளேயே வருவார்கள் என்பது புரிகிறது. வேதகாலத்திற்கு முன்பே இருக்கும் நம்மிடம் இந்த வேதங்கள் வந்து தான் தற்போது இருக்கும் சாதிகளை
நிறுவியது பரப்பியது என்பதற்கான சான்று கேட்டேன். அதுவும் தெரிந்து கொள்வதற்காகத்தான்.



Praba Karan வர்ணத்தில் சாதிகள் பத்திரமாக முடிந்து வைக்கப்பட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை


Praba Karan மனுதர்ம புத்தகம் படித்தீரா பாய்


Senthil Nathan ஏதேனும் லிங்க் இருந்தால் பதிவிடுங்கள்.


Santhosh Kumar வர்ணமும் சாதியும் வேறுவேறில்லை வர்ணத்திலும் பார்ப்பான் உயர்ந்தவன் சூத்திரன் தாழ்ந்தவன், சூத்திரன் என்பவன் தனக்கு மேலுள்ள மூன்று வருணத்தாறுக்கும் பொறாமையின்றி தொண்டூழியம் செய்பவன் அதாவது உழைப்பவன், சாதியிலும் பார்ப்பான் உயர்ந்தவன் அவனுக்கு மேல் சாதியில்லை என்பதே நிதர்சணம் ஆக சாதியின் அடிப்படை வர்ணம் அதன் கருத்தியல் தான்... இதைவிட வேற என்ன வேண்டும் நண்பர் செந்தில் நாதன் அவர்களே, மேலும் வேத்ததை எடுத்துரைக்கும் மனு வில் இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது தனக்கு கீழுள்ள வர்ணத்தில் ஒரு ஆடவன் திருமணம் செய்து கொள்ளலாம் அதே தனக்கு கீழுள்ள வர்ணத்தில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளக்கூடாது மீறினால் வர்ணத்துக்கு தக்கபடி தண்டனை அளிக்கப்படவேண்டும் என்கிறது மனு,அதில் மரண தண்டனையும் அடக்கம், இதை தற்காலத்தோடு ஒப்புநோக்க வேண்டுமென்றால் உயர்சாதி ஆண் கீழ் சாதி பெண்னை திருமணம் செய்தால் அவன் உயிர் பறிக்கப்படுவதில்லை, மாறாக கீழ் சாதி ஆண் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவன் உயிர் பறிக்கப்படுகிறது இது மனு தோற்றுவித்தவை என நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை என நினைக்கிறேன், மனு வர்ணம் சொல்கிறது அது சாதிக்கும் பொறுந்துகிறது எனில் வர்ணமே சாதிக்கு அடிப்படை இன்னும் விளங்கவில்லையெனில் மனுதர்மசாஸ்திரம் படியுங்கள்... இந்து மதத்தின் வேர் வேதம், வேதம் வர்ணத்தை அடிப்படையாக கொண்டது, வர்ணம் சாதிமயமானது... நன்றி


Praba Karan mausmriti Wikipedia and encylopedia வில் பாருங்கள் பலமொழிகளில் அடக்கம். Senthil Nathan.


Viswa Nathan மனுதர்ம சாஸ்திரம் பத்தாவது அத்தியாயம்- ஸ்லோகம் 6 முதல் படியுங்கள் 
செந்தில் நாதன்.



Dhanaraj Nagappan Senthil Nathan எதைக் கேட்டாலும் படித்தது இல்லை என்று பசப்புகின்றீர். ஆனால் பார்ப்பன நச்சைப் பரப்புகின்றீர். வர்ண நடைமுறை இப்போது உள்ளதா என்றால் குழப்பமான பதில் தருகின்றீர்கள். நாத்திகத்தைக் கேள்வி கேட்பது என்பதற்கும் காவி இதயம் கொண்டவர் என்பதற்கும் வேறுபாடு உண்டு. /////பஞ்சபாண்டவர்களும் அந்தனர் தர்மத்தினை பின்பற்றி உள்ளார்

சில(வால்முகி..) முனிவர்களும் சூத்திர தர்மத்திலிருந்து அந்தனர் தர்மத்தினை பின்பற்றி உள்ளனர்.//// என்று எழுதியுள்ளீரே. எதுவும் தெரியாமலா இவ்வளவு தெளிவாக பார்ப்பனீய கொண்டையைக் காட்டுவீர். இப்போது உள்ள பார்ப்பனர் தாங்கள்தான் அந்தனர் என்று கூறுகின்றார்களே அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்க நீர் தயாரா? இப்போது இருக்கும் பார்ப்பனர் யாவரும் பிச்சை எடுத்து மட்டுமே வாழ்க்கை நடத்துகின்றார்களா? இல்லை என்றால் அவர்கள் தங்களை அந்தணர் என்று அழைத்துக் கொள்வது பித்தலாட்டம் அல்லவா? அதை ஏன் நீர் எதிர்க்கவில்லை. ஆகவேதான் கூறுகின்றேன் உங்களின் உண்மை முகத்துடன் வருக. அப்பாவி வேடம் போட வேண்டாம்.

Senthil Nathan திரு Dhanaraj Nagappan அவர்களே, 

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மொத்தமாக ஆறு மணிநேரம் செலவு செய்துள்ளேன். எல்லாம் இணையத்தில் அறிந்தது.


பகவத் கீதை, பைபிள், குரான் எல்லாம் வைத்துள்ளேன், படிக்கவும் முயற்சி செய்தேன், புரிந்து கொள்ளுவது எனக்கு கடினமாக இருந்தது.
அதனால் தான் படித்தது இல்லை என்றேன்.

வேதாந்திரிகளிடம் முறையாக வேதம் கற்கலாம் என சென்றேன், கட்டுபாடுகள் கடைபிடிக்க சொன்னார்கள், என்னால் கடைபிடிக்க முடியவில்லை
அதனால் தான் படித்தது இல்லை என்றேன்.

வேதங்கள் பற்றி அறியும் ஆர்வம் ஏனோ என்னை தொத்திக்கொண்டது.

அதனால் 
எனக்கு கிடைத்த அனைத்து மத சொற்பொழிவுகளையும் கேட்க ஆரம்பித்தேன்.

இந்த அறிவை எப்படி நான் படித்தேன் என்று சொல்லுவது?

என்ன முகத்தை எதிர் பார்க்கிறீர்கள்?

Senthil Nathan //தங்களை அந்தணர் என்று அழைத்துக் கொள்வது பித்தலாட்டம் அல்லவா?// கண்டிப்பாக .
தற்சமயம் பெரும்பாலும் யாரும் வர்ண தர்மத்தினை பின்பற்றுவதே இல்லை.
Praba Karan கண்டிப்பாக யாரும் வர்ண தருமத்தை பின் பற்றுவதே இல்லை /// சிரிச்சிட்டேன். ஒட்டு மொத்தமாக இந்தியாவும் சிரிக்கும்.

Dhanaraj Nagappan நடைமுறையில் இல்லாத ஒன்றை எதற்காக உயர்வாகப் பேசுகின்றீர்கள். பார்ப்பனர்களை ஏன் நீங்கள் எதிர்த்தும், திட்டியும் பதிவுகள் எழுதுவதில்லை.

அன்பு. உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ வேண்டும் என்று உண்மையோடு மூடநம்பிக்கையை விதைத்தவர்கள் பார்ப்பனர்கள்.ஆனால் அந்த காலம் மலையேரிவிட்டது.இப்பொழுது எல்லா ஜாதியிலிருந்தும் மூட நம்பிக்கை முலம் பணம் சம்பாதிப்பவர்கள் வந்துவிட்டார்கள்.ஆன்லைன் வர்த்தகத்தில் அனுமான் டாலர்,மஹாலட்சுமி யந்திரம் என.திரு.Dhanraj nagappan அவர்களே திரு.Micheal.p போல எல்லா தரப்பு விஷயங்களும் பேச தெரியாதா?எப்பொழுதும் பார்ப்பன எதிர்ப்பு என செத்த பாம்பையே அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.எனக்கு தெரிந்து உங்கள் பார்வையில் எல்லோரும் பார்ப்பனராக தெரிவது ஏதோ பிரச்சனைதான்.

அன்பு. மனம் ஒரு வினோத அமைப்புதான்.இது எப்பொழுதும் பிறரை முட்டாலாக நினைக்கிறது ஆனால் அது ஒரு போதும் தன்னை முட்டாளாக நினைப்பதில்லை.

அன்பு. மனம் எப்பொழுதும் பிறரை சந்தேகிக்கிறது அது ஒரு போதும் தன்னை சந்தேகிப்பதில்லை.

அன்பு. ஒரு தந்தை தன் மகனின் நடத்தை மேல் மனநிறைவு இல்லாமல் அவனை அழைத்து சொன்னார் நீ நெறய தவறுகள் செய்கிறாய் திருத்திக்கொள் என்று.அதற்க்கு மகன் சொன்னான்,அப்பா நான் செய்வதில் எதுவுமே தவறாக எனக்கு படவில்லையே என்று.எல்லா மதங்களிலும்,பகுத்தறிவிலும் கூட இதுதான் நிலை.

Dhanaraj Nagappan ///எப்பொழுதும் பார்ப்பன எதிர்ப்பு என செத்த பாம்பையே அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.//// எது செத்த பாம்பு. பார்ப்பனர் மட்டுமே இப்படி பொய்யான பரப்புரை செய்து வருகின்றார்கள். இந்திய வெளிநாட்டு தூதுவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர்கள். நீதித் துறையில், தமிழகம் தவிர்த்து, இந்தியா முழுவதும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றங்களில் எத்தனை விழுக்காடு பார்ப்பனர்கள். கருவறை நுழைவுக்கு இன்னும் போராட்டம் நடக்கின்றது பார்ப்பன பாம்பு நல்ல உயிரோட்டத்துடன் உள்ளது. அன்பு. நீங்கள் பார்ப்பனர் போல உள்ளது. அதனால்தான் இப்படிக் கூறுகின்றீர்கள்.

Dhanaraj Nagappan உயர் பதவிகளை இன்றும் பார்ப்பனர்களே பெரும்பான்மையாக ஆக்கிரமித்து உள்ளனர் என்பதை அறிக.

Dhanaraj Nagappan அன்பு. வெற்றிடம் என்பது தவிர மற்றபடி எந்த வாதமும் முன்வைக்கத் தெரியாதா.

Dhanaraj Nagappan அன்பு. எல்லா தரப்பு விசயங்களையும் நான் பேசியே ஆக வேண்டும் என்பது கட்டாயமா என்ன? என்ன பேச வேண்டும் என்று எனக்குத் தெரியும். உங்களது மூடத் தனத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள். நீங்கள் பார்ப்பனராக இருந்தால் சக மனிதனை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஏற்ற தாழ்வையும், வர்ணாசிரமத்தையும் விட்டு மனதளவில் வெளியே வாருங்கள். பூனூல் போட்டு, மனிதரில் நான் உயர் பிறப்பு என்று கூறுவதை விட்டு வெளியே வாருங்கள். உங்களை யாரும் தாழ்த்தவில்லை. அடுத்தவருடன் சரி சமமாக இருங்கள் என்றே கூறுகின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Dhanaraj Nagappan இந்தியாவில் உள்ள உயர் பதவிகளை பெரும்பான்மையாக பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டும், Discretionaray Power, Interview போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்பதவிகள் கிட்டாமல் பார்த்துக் கொண்டும், பார்ப்பனர்கள் இன்றும் வாழ்வது உங்கள் கண்ணில் படவில்லை என்றால், கோளாறு உங்கள் மனதில்தான். நீங்கள் திருந்துங்கள். பார்ப்பனர்கள் செத்த பாம்பு என்று மனதாரப் பொய்யுரைத்து, பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களைப் பகடி செய்யாதீர்கள். Very cheap Taste.

அன்பு. உங்கள யாருங்க பார்ப்பனர திட்ட வேண்டான்னு சொன்னது.நல்லாதிட்டுங்க.ஆன வடநாட்டுலருந்து சாய்பாபவ கொண்டந்து டெவலப்பு பன்றானுங்க,அல்லேலூயா குறூப்ப்பு தகடு செஞ்சு விக்க ஆரம்பிச்சுட்டாங்க,லேட்டச்ட்டா டெக்மாலஜிய மூடநம்பிக்கைல புகுத்துறாங்க.ஒரு பகுத்தறிவாளர் எல்ல...ஏரியாவுளயும் பேசனுமில்லையா.எத்தனை நாளைக்கு பழைய சோறு சாப்பிட முடியும்.அங்க பாருங்க Micheal.p சார் பார்ப்பனர்,அறிவியல்,இந்து,கிறித்துவம்,இஸ்லாமியம்,பகுத்தறிவுன்னு எல்லா ஏரியாலயும் கலக்கறாரு.டெவலப்பு பண்னுங்க சார்.


Dhanaraj Nagappan நான் என்னைப் போல இருந்து விட்டுப் போகின்றேன். சிண்டு முடியும் வேலை எல்லாம் வேண்டாம். மைக்கேல் அய்யா அவர் போல இருந்து விட்டுப் போகின்றார். எனக்கு எதயும் டெவலப் செய்ய வேண்டிய தேவை இல்லை. எனக்குத் தோன்றினால் நான் டெவ்லப் செய்து கொள்வேன். மூட நம்பிக்கையைப் பரப்புவதிலிருந்து நீங்கள் முதலில் வெளியே வாருங்கள்.