இஸ்ரேல் ராணுவத்துக்கு 'பிரியாணி' விருந்தளித்த பாஜக பொருப்பாளர் !
'காசா' கொலை களத்திலேயே பந்தல் அமைத்து விருந்தளித்த ரீனா புஷ்கர் !!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடூரம்!!!
கடந்த 35 நாட்களாக 1800 க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாக கொன்று குவித்து வரும் இஸ்ரேலிய ராணுவத்துக்கு, காசா கொலை களத்தின் அருகிலேயே 'பிரியாணி' விருந்தளித்துள்ளார், இஸ்ரேலுக்கான பாஜகவின் 'கன்வீனர்' ரீனா புஷ்கர்.
30 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் குடிபெயர்ந்த இந்தியரான ரீனா புஷ்கர், காஸா மக்களை வெற்றிகரமாக கொன்று குவித்ததற்காக, 2000 இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு 400 கிலோ பிரியாணியை விருந்தாக படைத்துள்ளார்.
இஸ்ரேலிய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், காசா கொலை களத்துக்கு மிக சமீபமான இடத்தில் தற்காலிக பந்தல் அமைத்து 'பிரியாணி'யை சமைத்து விருந்தளித்துள்ளார், ரீனா புஷ்கர்.
ரீனா புஷ்கர் இஸ்ரேலுக்கான பாஜகவின் அதிகாரப்பூர்வ 'கன்வீனர்' என்பதும், மோடி உள்ளிட்ட பாஜகவின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர் என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.
இஸ்ரேலுடனான இந்திய உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த 'வைகோ' உள்ளிட்டவர்கள் கோரிவரும் இந்த தருணத்தில், ரீனா புஷ்கர், கொலை களத்தில் இஸ்ரேல் படைக்கு 'பிரியாணி' விருந்தளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
No comments:
Post a Comment