Tuesday, May 3, 2016

சட்டம் ஏழைக்கு சவக்குழி பணக்காரனுக்கு நந்தவனம்

சட்டம் ஏழைக்கு சவக்குழி
பணக்காரனுக்கு நந்தவனம்
சட்டம் வறியவனுக்கு
தீக்குளிப்பு
வசதியானவனுக்கு
பல்லக்கு
சட்டம் கோழைக்கு
போர்க்களம்
கோடிஸ்வரனுக்கு
மாளிகைவாசம்
சட்டம் ஒருமைப்பாட்டுக்கு
உருவாக்கப்பட்டத
பஞ்சத்தால் பழிவாங்கப்பட்டவர்களுக்கு
எதிராக வீசப்படும் போர்வாளா?
விபச்சாரம் புரிந்தவள்மீது
கற்கள் வீசப்பட்ட போது
''பாவம் செய்யாதவர் எவராவது இருந்தல்
இவள் மீது கற்களை வீசுங்கள்
என்றார் இயேசு''
அங்கேதான் சட்டம்
வாயடைத்து நிற்கிறது
காக்கிச்சட்டைக்கும்
காசுள்ளவனுக்கும்
சட்டம்தான் கவசம்
இத்தச்சட்டம்
இந்த தேசத்தில்
ஒழுக்கத்தையோ
நீதியையோ காப்பற்றவில்லை
ரத்தத்தில் தோய்ந்த
ஆடைகளை அதிகம்
இதுதான் நெய்து கொடுத்தது நமக்கு
சட்டமென்னும் கழுகுவாயில்
அதிகம் கொத்தி உண்ணப்படுவது
ஏழைமனிதர்கள்தான்
குற்றங்கள் விளைவதற்கு
நிலங்களை உருவாக்கிவிட்டு
சட்டமென்னும் அரிவாளால்
அறுவடைசெய்வதை நிறுத்துங்கள்
வாழத்தெரியாமல்
செத்துக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு
சட்டத்தால்
சவக்குழி தோண்டாதீர்கள்
ஒடுக்கப்பட்டவர்களின்
மூச்சிலே எரிந்து ஒளிந்துபோகும்
உங்கள் சட்டம்
கற்பிழந்த சட்டத்தை
முதலில்தூக்கி குப்பையில் போடுங்கள்
நெடுந்தீவு-நேதாமோகன்
02.04.13
LikeShow More Reactions
Comment
16 comments
Comments
Barathy Rajhbharathy கற்பிழந்த சட்டத்தை
முதலில்தூக்கி குப்பையில் போடுங்கள்
Senthil Nathan கோபமும் உணர்ச்சியும் அதிகம் உள்ளது . இது செயல்பாட்டுக்கு உதவாது
Ravi Mookan arumai...arumai.....arumai....See translation
மாதுளன் கிருபா சட்டம் ஒரு இருட்டறை......
Vani Kalaivani your kavithi suppar
Jon Simiyon கற்பிழந்த சட்டத்தை
முதலில்தூக்கி குப்பையில் போடுங்கள்
பசுந்தீவு மயூ அருமையான வரிகள் மோகன் வாழ்த்துக்கள்
தாழையூர் கிருஷாந்தி குற்றங்கள் விளைவதற்கு
நிலங்களை உருவாக்கிவிட்டு
சட்டமென்னும் அரிவாளால்...See more
நெடுந்தீவு எம்.நேதாமோகன் நன்றிகள் கோடி சகோதரி

No comments:

Post a Comment