நமது இதிகாசத்தில் நிறைய யோகிகளும் சித்தர்களும் பல ஆண்டுகள் உணவு இல்லாமல் தவம் செய்ததாக கேள்வி பட்டிருப்போம் ஆனால் சிலபேர் இதெல்லாம் பொய் உணவு உட்கொள்ளாமல் எப்படி பல ஆண்டுகள் தவம் செய்யமுடியும் என்று கேலி செய்வார்கள் அவர்களுக்கான பதிவாக இது அமையட்டும் இது பற்றிய தகவலை அகஸ்தியர் அமுதகலைஞானம் 1200 ல் இது பற்றிய குறிப்பை சொல்லிருக்கிறார் அந்தபாடல்: தானென்ற நாயுருவி வித்து தன்னை தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா பானென்ற பசும்பாலில் கரைத்துக்கொண்டு பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு தேனென்றே தியானித்துக கொண்டாயாகில் செவ்வியாய் வயிறுபசி எடுப்பதில்லை நானென்று எத்தனைநாள் இருந்தாலுந்தான் நளினமுடன் பசியாது மைந்தா பாரே. இந்த பாடலின் பொருள்: நாயுருவி செடியின் விதை எடுத்து முலைப்பாலிட்டு அரைத்து பசும்பாலில் கரைத்து எட்டி விதையை அரைத்து உண்ண பசி எடுக்காது மீண்டும் பசிக்க வேண்டுமானால் மஞ்சள் இஞ்சி திண்ண வேண்டும். இதை போன்று பல சாதனைகளை நம் தமிழ் சித்தர்கள் இந்த உலகுக்கு தந்திருக்கின்றனர் நாம்தாம் பகுத்தறிவு நாத்திகம் என்று பேசி முட்டாளாக இருக்கிறோம் .நிறைய தமிழ் பகுத்தறிவாளிகள் ஆதியில் இருந்தே தமிழனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பரப்பிவிட்டு கொண்டிருக்கின்றனர் உங்களுக்கு பதில் ஒன்றுதான் ஆன்மிகமும் அறிவியலும் தமிழனின் இரு கண்கள் ஆன்மீகம் இல்லாத தமிழன் அவன் வெறும் பிணத்துக்கு ஒப்பானவன்.
No comments:
Post a Comment