பெரும்பாலும் ஆத்திகர்கள் தங்கள் கடவுள்களை மனித உருவத்தோடு ஓத்தே கர்பணை செய்து வைத்திருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கடவுளின் வெளிப்பாடாகவும் சித்தரித்திருப்பார்கள். கோபம், ஆசை, பழிவாங்கும் குணம், தண்டிக்கும் மனப்பாங்கு, குறை கூரும் செயல், இன பாகுபாடு, மொழி பற்று, ஆயுதங்கள் சுமப்பது, பெண் மோகம், அடிமைப்படுத்துவது, தன்னை முன்னிலைப் படுத்தி கொள்வது, தனக்கு கீழ் உள்ளவர்களை அடிபனியச் சொல்லும் மனப்பாங்கு.
சொல்லப்போனால் கருணையும் அன்பும் மட்டுமே சிறந்த மனிதன் என்ற ஒன்றுக்கு தகுதி பெற முடியும், மற்றதை நம் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. கடவுள் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அந்த அன்பும் கருணையும் தவிர எல்லாம் இருக்கிறது நீங்கள் கூறும் கடவுளார். பேச்சுக்கு வேண்டுமென்றால் கடவுள் அன்பானவன் கருணையாளன் என்று சொல்லிக்கொள்ளலாம்.
கடவுள் பல உயிரினங்களை படைப்பானாம், பல உருவங்களை படைப்பானாம், பல கட்டளைகளை பிரப்பிப்பானாம் ஆனால் மனித உருவத்தில் இருப்பானாம். ஐயா! ஆன்மிக வாதிகளே, மத வாதிகளே, உங்கள் உணர்ச்சிகளை கொண்டு செதுக்கிய, உருவாக்கிய மனிதன் எப்படி ஐயா கடவுளாக முடியும்?
No comments:
Post a Comment