Tuesday, July 15, 2014

பெண்களுக்கு உதவும் எண்கள்

dWCkuDV.jpg

04423452365 ,1091 

இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்! இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.


04428551155
குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.


04426530504, 26530599

மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்! மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

04426184392, 9171313424
வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.


04425353999, 90031 61710

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

95000 99100

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

04424749002, 04426744445

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.


04428592828, 94454 64748

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான டோல் ஃப்ரீ எண் 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.

93833 37639
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Saturday, July 12, 2014

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

NMHXQ3v.png?2


புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.



ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆபத்து - அதிரவைக்கும் தகவல்!

yCbszK1.jpg


வெயில் காலத்துல வெளியே அலையும் போது வழியில் ஏதாவது ஜூஸ் கடையைப்பார்த்துவிட்டால் போதும்,அப்படியே ஒரு ஜூஸ் போட்டு விட்டுப்போகலாம் என்று மனதுக்கு தோணும். ஜூஸ்
கடைக்குப் போனதும் விலை அதிகம் இருந்தாலும் ஆப்பிள் ஜூஸைதான் நிறைய பேர் குடிக்கவும் செய்வார்கள். ஆனால்
ஆப்பிள் ஜூஸ்குடிப்பது உடம்புக்கு நல்லதில்லை என்று தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.


3iQYZee.jpg


எப்போதுமே பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட,
அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.

அதுவும் ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் அதுதான் ஆபத்தில் உச்சம் என்கிறது அந்த ஆய்வு. :o



BMT5nvd.jpg



ஆப்பிள் ஜூஸில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக்
என்னும் பொருள் அதிக அளவில் உள்ளது. ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல்
பருமனுக்கு வழிவகுக்கும். ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால்,
இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.



BOL36dK.jpg



ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான
சர்க்கரையை பயன்படுத்தினால், அது இரத்தத்தில் சர்க்கரையின்
அளவை அதிகரித்து, நீரிழிவுக்கு வழிவகுக்கும். ஆப்பிளில்
புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக
நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது. ஆப்பிள்
ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகள்
வந்து சேரும்.




cOH9GX9.jpg





பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின்
ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும்.



YU3Pjb7.jpg



ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், அதனை அப்படியே சாப்பிடுங்கள். :thumbup:

ஈசி இனி ஈஸியாக பார்க்கலாம்

u1gICMr.jpg?1

வீடு, நிலம், மனை உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு முன்பாக முதலில் ஈசி போட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகும். வீடு, விவசாய நிலம் அல்லது வீட்டுமனை ஆகியவற்றில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முதலில் சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ரீ சர்வே எண்னை குறிப்பிட்டு 25 அல்லது 10 ஆண்டுகளுக்கு வில்லங்கம் போட்டு பார்ப்பது வழக்கத்தில் உள்ளது. இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுகளுக்கு ஏற்ப தேடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி சொத்தின் மீதான வில்லங்க சான்று பெற குறைந்தது நான்கு நாட்களாகும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டதை தொடர்ந்து வில்லங்கசான்றினை வீட்டில் இருந்த படியே ஒரே நாளில் பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கு இணையதளத்துடன் கூடிய கணினி இருந்தால் போதும். 

தமிழக அரசின் பதிவு துறை இணையதளமான www.tnreginet.net என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இணையதளத்தின் இடதுபுறத்தில் வியூ ஈசி என்ற இடத்தில் கிளிக் செய்து அதில் நாம் வில்லங்கம் பார்க்க போகின்ற சொத்தின் ரீசர்வே எண், சொத்து அமைந்துள்ள மண்டலம், சொத்து அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகம், வில்லங்கம் எந்த தேதியில் இருந்து பார்க்க வேண்டும் என்பது போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டினை டைப் செய்து கிளிக் செய்தால் நமக்கு ஒரு பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடு திரையில் தோன்றும். அந்த ரகசிய குறியீட்டை நாம் குறித்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த ரகசிய குறியீட்டை டைப் செய்து கிளிக் செய்தால் நம்முடைய சொத்தின் வில்லங்க சான்று கிடைத்துவிடும்.

வில்லங்கசான்று தவிர நமது சொத்தின் பத்திரத்தையும் நாம் இணையதளம் மூலம் பார்க்க முடியும். நம்மிட பத்திரத்தின் அனைத்து பக்கங்களும் கணினியில் தோன்றும். இதற்கும் இதே முகவரியில் சென்று பார்க்க முடியும். ஒரு நபர் எத்தனை சொத்துக்கள் வைத்திருந்தாலும் அனைத்து சொத்துக்களுக்கும் அவ்வப்போது ஈஸி போட்டு பார்த்துக்கொள்ள முடியும். ஏற்கனவே பத்திரபதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கேமராக்கள் மூலமாக பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வில்லங்கசான்றுகளையும் வீட்டிலிருந்து கொண்டே பார்த்துக்கொள்ள முடியும் என்பதால் மோசடிகள், போலி கிரயம் போன்றவை நடப்பது வெகுவாக குறைய வாய்பபு உள்ளது.

mqc3KX0.png?1
  • 0

Monday, July 7, 2014

ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Av0ApYW.jpg


ரயிலில் பயணம் செய்வதற்கான இ டிக்கெட் முன்பதிவை வேகமாக செய்வதற்கு வசதியாக புதிய இணைய தளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. 

தற்போது இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) செய்து வருகிறது. www.irctic.co.in  என்ற அந்த இணைய தளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, பழைய இணைய தளமான www.irctic.co.in -க்கு பதிலாக, புதிய இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. www.nget.irctc.co.in என்ற இந்த புதிய இணையதளத்தின் மூலம் வேகமாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டிசி.யின் பழைய இணைய தளத்தை பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இணையதளம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
  • 0

நான்ஸ்டிக் பாத்திரங்கள் நல்லதா? கெட்டதா?


ன்றும் பல வீடுகளில் 'என் அம்மா சமைச்சா... அத்தனை ருசியா இருக்கும்... வாசனை ஊரையே தூக்கும்’ என்று, மனைவி செய்த சமையலை ஒரு கவளம் வாயில் வைத்ததும், வார்த்தைகளை உதிர்க்கும் கணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறியது இன்று, குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.  



மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.



ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கைதான், உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது 'நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.




இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 'மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், 'நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.




ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.




இந்த ஆய்வைப் பற்றி சர்க்கரை நோய் நிபுணர்,  'இதைப் படித்துவிட்டு சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது.


இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. 'ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்' என்றார்.


k2Pi6It.jpg


'உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை.’ 
'மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.


w9L810q.jpg


மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை. எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே'

பிளாஸ்டிக் கவர் உணவுகளால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு!


QdzyGLi.jpg

 பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சூடான உணவை பிளாஸ்டிக் கவர்களில் வைக்கும்போது, நச்சுத்தன்மை கொண்ட ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற வேதிப்பொருள் உடலில் கலக்கிறது. இதனால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நகரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கக்கூடாது என நகராட்சி, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழல் மாசு, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இவற்றை கால்நடைகள் உணவாக உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

அதிகாரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்களை கட்டி கொடுக்கின்றனர். ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற இந்த நச்சு வேதிப்பொருள் வயிற்றுக்குள் செல்லும் போது பல்வேறு வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே, அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், 

வாழை இலையில் சாப்பிட்டால் வயிற்று உபாதை ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். தற்போது பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் உணவுப் பொருட்கள் கொடுக்கின்றனர். இதில் உள்ள நச்சுச்தன்மை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் கேன்சர் வர அதிக வாய்ப்புள்ளது என்றார்.