வெயில் காலத்துல வெளியே அலையும் போது வழியில் ஏதாவது ஜூஸ் கடையைப்பார்த்துவிட்டால் போதும்,அப்படியே ஒரு ஜூஸ் போட்டு விட்டுப்போகலாம் என்று மனதுக்கு தோணும். ஜூஸ்
கடைக்குப் போனதும் விலை அதிகம் இருந்தாலும் ஆப்பிள் ஜூஸைதான் நிறைய பேர் குடிக்கவும் செய்வார்கள். ஆனால்
ஆப்பிள் ஜூஸ்குடிப்பது உடம்புக்கு நல்லதில்லை என்று தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.
கடைக்குப் போனதும் விலை அதிகம் இருந்தாலும் ஆப்பிள் ஜூஸைதான் நிறைய பேர் குடிக்கவும் செய்வார்கள். ஆனால்
ஆப்பிள் ஜூஸ்குடிப்பது உடம்புக்கு நல்லதில்லை என்று தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.
எப்போதுமே பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட,
அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.
அதுவும் ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் அதுதான் ஆபத்தில் உச்சம் என்கிறது அந்த ஆய்வு.
ஆப்பிள் ஜூஸில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக்
என்னும் பொருள் அதிக அளவில் உள்ளது. ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல்
பருமனுக்கு வழிவகுக்கும். ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால்,
இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான
சர்க்கரையை பயன்படுத்தினால், அது இரத்தத்தில் சர்க்கரையின்
அளவை அதிகரித்து, நீரிழிவுக்கு வழிவகுக்கும். ஆப்பிளில்
புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக
நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது. ஆப்பிள்
ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகள்
வந்து சேரும்.
பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின்
ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும்.
ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும்.
ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், அதனை அப்படியே சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment