Tuesday, June 21, 2016

எங்களுக்கு கொள்கை இல்லையாம்

எங்களுக்கு கொள்கை இல்லையாம்
சில பைத்தியக்கார்ர்கள் கூறுகிறார்கள்.
கடவுள் என்றும் கடவுளின் பெயர்
என்றோ இந்த உலகில் யாரையும்
ஏமாற்றக்கூடாது,
கடவுளின் பெயர்களை கூறி யாரிடம்
பொருளோ,பணமோ பெறக் கூடாது
கடவுள் என்பது பெரும் ஆற்றல் அது
நம்மை காக்கும் என்றோ,தண்டிக்கும்
என்றோ பொய்யான,கற்பனையான
நம்பிக்கைகளை நம்பக் கூடாது
பரப்ப அனுமதிக்கக் கூடாது
இது தான் ஒவ்வொரு நாத்திகனின்
தலையாய கொள்கை இதிலிருந்து
உருவாவது தான் கடவுள் இல்லை,
கடவுள் என்பது கற்பனை என்பதும்

Comments
Michael P சரியாக சொன்னீர்கள் ..
மதவாதிகளின் கொள்கைகள் எல்லாம் மதவெறிமட்டுமே

Jai Jayan Jayan சரிதான்,
அவங்களமாதிரி கடவுள் பேரை சொல்லி 
கொள்ளையடிக்க தெரியாது 

கொலைசெய்ய தெரியாது 
கோயில்ல வச்சு காமலீலை பண்ண தெரியாது,
மனுஷன அடிமைபடுத்தி கொடுமைபடுத்த தெரியாதது
இப்படி எதுவுமே பண்ணாம அவன் பண்றத தப்பு சொன்னா, அப்புறம் இப்படிதான் சொல்லுவான்.

Arivu Arivarasan அருமை. எந்த நாத்திகனும் நாத்தக கொள்கைகைகாக ஆத்திகனை கொன்றது கிடையாது.எந்த கோவிலையும் இடித்தது கிடையாது.கடவுள் என்ற பெயரில் தன் மத்த்ததிற்காக மற்ற மத்த்தவரை கொலை செய்வதும் மற்ற மதகோவில்களை இடிப்பவர்கள் அனைவரும் ஆத்திகரகளே

Natarajan Gopalsamy கடவளை படைத்தத யார் கடவுள் பிறப்பிற்கு முன் என்ன இருந்தது ஆத்திகர்கள் இதற்கு நேரடியாக பதில் கூறவும்

Chocka Lingam சரியான பதிலடி.

Senthil Nathan இது எப்படி கொள்கை ஆகும், ஆத்திக கோட்பாட்டில் இல்லை என்ற வார்த்தையை மட்டும் சேர்த்திருப்பது?

Jinna Machu அப்படியா? 

கடவுள் என்ற கோட்பாட்டில்

இல்லை என்று கூறும் போது
ஏன் கோபம் வருகிறது?

கடவுளின் கோட்பாட்டில் இதுவும்
ஒன்று என செல்லவேண்டியது தானே

Senthil Nathan இதில் கோபம் வர என்ன இருக்கிறது?

பக்திமார்க்கத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர்

இறைவனை உணராமலையே
பெரியவர்கள் சொன்னார்கள்
சாமியார்கள் சொன்னார்கள்
வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்
என
மூடத்தனமாக நம்புகிறார்கள், பின்பற்றுகிறார்கள்.

அதுபோலவே உள்ளதாக
தங்கள் கொள்கையினை கருதுகிறேன்.

இல்லையென நம்புங்கள் எனச்சொல்லுவதும்
அதனை 
அப்படியே நம்புவதும் மூடத்தனம் ஆகாதா?

ஒரு விடயத்தை இல்லை, இல்லை, இல்லை
எனச்சொல்ல அறிவு தேவைப்படுமா?

இல்லை என சொல்லுவதனை காட்டிலும்
இல்லை என உணரும் வகையில் 
தங்கள் கொள்கைகள் இருந்தால்
நன்றாக இருக்கும் என்பதே
என் பதிவின் நோக்கம்.

Jinna Machu செந்தில் நாதன்//ஆத்திகர்களாக
இருந்தவர்கள் கடவுள் இல்லை
என உணர்ந்த பின் தானே

நாத்திகர்களாக மாறுகிறார்கள்.
தான் இது வரை கடவுளின் பெயரால் பணமாக இழந்த்து
போல் வேறு யாரும் பணத்தை
இழக்க வேண்டாம்,ஏமாற
வேண்டாம் என்பதற்காக
பாடுபடுகிறார்கள்

Arivu Arivarasan செந்தில் நாதன்.... இல்லாத ஒன்றை இருக்கு என்று தூண்டுவதால்தான் இல்லாத ஒன்றை இல்லவே இல்லை என் தூண்டவேண்டியுள்ளது.இருக்கின்ற ஒன்றைதான் உணரமுடியுமே தவிர இல்லாத ஒன்றை எப்படி உணரவைக்கமுடியுமென எதிர்பார்க்கிறீரகள்

Siva Erambu Jaffna கடவுள் இல்லையென்று சொல்ல துணிவும், நேர்மையும் இருக்க வேண்டும் அப்படியானவர்கள் தான் நாத்திகர்கள்!!

Senthil Nathan Arivu Arivarasan-//செந்தில் நாதன்.... இல்லாத ஒன்றை இருக்கு என்று தூண்டுவதால்தான் இல்லாத ஒன்றை இல்லவே இல்லை என் தூண்டவேண்டியுள்ளது.//

அருமை

Senthil Nathan //இருக்கின்ற ஒன்றைதான் உணரமுடியுமே தவிர இல்லாத ஒன்றை எப்படி உணரவைக்கமுடியுமென எதிர்பார்க்கிறீரகள்//

உணரமுடியாததெல்லாம் இல்லையென கூறுவது சரியானது தானா?


கண்பார்வை அற்றவருக்கு காட்சிகளை எப்படி விளக்க முடியும்.?

அறியாத மொழிகளில் உள்ள எழுத்துகளை அபத்தமானது என கூறுவது சரியானதா?

Michael P கண்பார்வை அற்றவனுக்கு எப்படி இறைவனை புரிய வைக்க முடியும்

Michael P //அறியாத மொழிகளில் உள்ள எழுத்துகளை அபத்தமானது என கூறுவது சரியானதா?//

அறியாத மொழியை அறிந்து கொள்ள முடியும்

ஆனால் அறியாத/தெரியாத இறைவனை

Senthil Nathan அறியா/தெரியாத இறைவனையும் அறிந்து கொள்ள முடியும்.

அறிந்தவர்களைத்தான் நான் அறிவேன், அறிந்தவழியினை அறிய முற்படும் நிலையிலே இருக்கிறேன்.


அனைவராலும் ஏன் முடியவில்லை என்பதும் என்னறிவுக்கு இன்னும் எட்டாத விடயமாக உள்ளது.

Arivu Arivarasan கண்பாரவையற்றோர பள்ளியில் சேர்ந்து அவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி எழுதலாம் பட்டிக்கலாம். எத்தனையோ கண்பாரவையற்றோர் ஹோட்டலில பல் போடுகிறார்கள் அவரகளால் முடியவில்லை என்று சொல்லவில்லைஏ

Senthil Nathan வழிமுறைகளை பின்பன்றுவதின் மூலம் காட்சிகளை அவர்கள் அறிகிறார்களா ? அல்லது யூகம் செய்கிறார்களா?

இதற்கே இவ்வளவு வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளபோது, இறைவனை அறிய எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் இறைவனை அறிய முடியவில்லை, அறிய முடியவில்லை என உரைப்பது முறைதானா?

Arivu Arivarasan இறைவனும் கண்பார்வையற்றொரும் ஓன்றா?

Senthil Nathan இல்லை.

Arivu Arivarasan தூணிலும் துரும்பிலும் இருக்ககூடிய இறைவன் நம் பிறக்கும் போதே நம் உடம்பில் இறைவன் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கலாமே.இவ்வளவு கேள்வி கேட்பாடு இருக்காதே.அப்படி இருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து இருக்கு என்று சொல்லபோய்கிறேன்

Senthil Nathan அது அடிமைத்தனம் ஆகிவிடாதா?

Selvaraj Ponniah கடவுள் பெயரை சொல்லி உலக அளவில் பெரிய வியாபாரம் நடைபெறுகிறது.
ஒரு இரவில் அனைத்து மக்களும் கடவுள் இல்லை என்பதை ஏற்று கொண்டால் இந்த கடவுள் வியாபாரிகள் பாடு அதோ கதி தான்.

Jai Jayan Jayan Senthil Nathan 
இப்ப மட்டும் என்ன நடக்குது,
கடவுள் பெயரை வச்சு பெரிய அடிமைத்தனமும்,

பிரிவினைவாதம்,
வியாபாரம்,
இருக்கிற எல்லா மோசடிகளும் கடவுள் பெயராலேதான் நடக்குது.

Senthil Nathan உண்மைதான், கடவுளின் பெயராலும் நடைபெறுகிறது. தங்களைப்போன்றோர்களினால் அந்த நிலை பெருமளவு குறைந்துள்ளது.

Arivu Arivarasan உண்மை


No comments:

Post a Comment