புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.
இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.
சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment