Monday, July 7, 2014

ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Av0ApYW.jpg


ரயிலில் பயணம் செய்வதற்கான இ டிக்கெட் முன்பதிவை வேகமாக செய்வதற்கு வசதியாக புதிய இணைய தளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. 

தற்போது இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) செய்து வருகிறது. www.irctic.co.in  என்ற அந்த இணைய தளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, பழைய இணைய தளமான www.irctic.co.in -க்கு பதிலாக, புதிய இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. www.nget.irctc.co.in என்ற இந்த புதிய இணையதளத்தின் மூலம் வேகமாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டிசி.யின் பழைய இணைய தளத்தை பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இணையதளம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
  • 0

No comments:

Post a Comment