Tuesday, June 21, 2016

ஒரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு துறவியைச் சந்தித்தான்.


ஒரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு துறவியைச் சந்தித்தான்.
“கடவுளை உம்மால் காட்டமுடியுமா?”என்றான்.
“முடியும்” என்ற துறவி, சற்றும் எதிர் பாராத
வகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.
“ஏன் அலறினாய்?” என்றார் துறவி.
“வலித்தது” என்றான் நாத்திகன்.
“வலியா? அதை எனக்குக் காட்டு.” என்றார் துறவி.
வேதனையிலும் சிரித்தான் நாத்திகன். “வலியை எப்படிக் காட்ட முடியும்?”
என்றான்.
“காட்ட முடியாது. உணரத்தான் முடியும். அது மாதிரி
கடவுளை உணரலாமே தவிர காட்ட முடியாது” என்றார் துறவி.
நாத்திகன் வாயடைத்துப் போனான்.
புத்திசாலிகள் இதோடு முடித்து விட்டார்கள் கதையை. கதையை
நாம் தொடர்வோம்.....
“கடவுளைக் காட்ட முடியுமா?” என்றான் குதர்க்கவாதி.
“.....காட்ட முடியாது” என்றார் துறவி.
அடுத்த
வினாடியே துறவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் நாத்திகன்.
“ஐயோ கடவுளே!” என்று அலறினார் துறவி.
“ஏன் அலறினீர்கள்?” என்றான் நாத்திகன்.
”வலித்தது”
“அதைக் காட்ட முடியுமா?”
“காட்ட முடியாது. உணரத்தான் முடியும்” குரலில் கடுகடுப்பு.
“உணர்ந்தது எப்படித்
தெரியுமா? என் கை அடித்ததால்.அதாவது, ’தொடுதல்’
என்னும் செயலால்......... இப்படி ஒரு
செயல் மூலம் உம்மால் அவரை உணர்த்த முடி
யுமா?”என்றான் நாத்திகன்.
துறவி வாயடைத்துப் போனார்!


Senthil Nathan இருந்தாலும் குதர்க்கவாதி கடவுளை காண இவ்வளவு வன்முறை கூடாது.


Prabhu Rajendiran அப்ப கடவுளை வச்சி அவங்க பன்ற வண்முறை தகுமா?


Senthil Nathan வன்முறை கூடாது. என்றுதானே பதிந்துள்ளேன்.


Prabhu Rajendiran குதர்க்கவாதி யார்?


Senthil Nathan //“கடவுளைக் காட்ட முடியுமா?” என்றான் குதர்க்கவாதி.
“.....காட்ட முடியாது” என்றார் துறவி.//


Prabhu Rajendiran ஹி ஹி ஹி சிறப்பு!


Prabhu Rajendiran நாத்திகம் என்பது அறிவு நண்பரே! குதர்க்கம் 

என்பது கண்முன் இருப்பதையே மறுப்பது!


Senthil Nathan உண்மைதான், சமுதாயம் வழிதவறிவிடாமல் 

காக்கும் பொறுப்பு அவர்களுடையதே, இக்காலத்தில் 

நாத்திகர்களை காண முடியவில்லை. அப்படி 

சொல்லிக்கொள்பவர்கள் பெரும்பாலும் capy paste 

செய்பவர்களாகவே இருக்கிறார்கள். "குதர்க்கவாதி" என 

குறிப்பிட்டது இப்பதிவின் கதாப்பாத்திரத்தின் பெயராக மட்டுமே 

பதிவிட்டேன்.



Ramasamy Ramamoorthy அப்படியே கடவுளைக் காட்டினாலும் 

எங்க கதி என்னவாகும் என்பதற்கு ஒரு சிறு கற்பனை ,/

ஒரு நானும் என் நண்பர் கடவுள் கண்ணபரமாத்மாவும் ஒரு 

பாதையில் சென்று கொண்டிருந்தோம்,எதிரே திரு,மைக்கேல் 

அவர்கள் வந்து கொண்டிருந்தார்,மைக்கேல் அவர்களிடம் 

பெருமையாக "இதோ பாருங்கள் கடவுள்,இவர் தான் கிருஷ்ண 

பரமாத்மா "என்றேன்,

மைக்கேல் -அதனாலென்ன?

நான்-இவர் தாங்க கடவுள்.சுண்டு விரலால் மலையை தூக்கியவர்,

மைக்கேல் -அதனாலென்ன ?

உஷாரான நான் கடவுளிடம் "வாருங்கள் ,,போகலாம்".என்று கூறி 

அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

சற்று தொலைவு சென்றதும் மைக்கேல் நாலு பேர் காதில் 

விழும்படி சத்தமாக "யோவ்!அந்தாள்கிட்ட விரலால் மலையை 

தூக்கும் டெக்னாலஜியை சொல்ல சொல்லு.நாட்டுக்கு 

உபயோகமா இருக்கும்.வெட்டிப் பயலுக.

நான் கடவுளிடம்"அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் 

கொள்ளாதீர்கள்",

கடவுள்- அடேய் !அந்த ஆளாவது சொர்க்கத்துக்கு 

போவான்,.என்னை வைத்து பெருமையடித்து,கேவலப்படுத்திய 

உனக்கு எப்போதும் நரகந்தான்டி என்று சொல்லி மறைந்தார்.

இரண்டு பேரும் என்னை அனாதையாய் விட்டுச்செல்ல எந்த 

திசையில் செல்வதென்று திரியாமல் விழித்தேன்.

நரகம் என்று ஒன்றிருந்தால் பெரும்பாலான 

ஆத்திகசிகாமணிகளை அங்கே சந்திக்கலாம்.

மைக்கேல் அவர்களின் பெயரை பயன்படுத்தியதற்கு 

மன்னிப்பாராக,


Murugesh Murugesh #RamasamyRamamoorthy

சகோ


இப்படித்தான்


ஆனாளுக்கு ஒரு கதை கட்டி தான்


சாமிகளை வளர்த்தது

அல்ப காரணங்களுக்காக

கோபப்படுவதும்

வரங்களை? அள்ளித்தருவதும்

கடவுளா..

Ramasamy Ramamoorthy இது கதையல்ல 

.கற்பனை.முழுக்க,முழுக்க தற்செயலாக தோன்றிய 

கருத்து,சகோ.மைக்கேல் அவர்கள் அவ்வப்பொழுது 

"உங்கள் 

கடவுளை கூட்டிக் கொண்டு வா ,என்ன பண்ணுகிறேன்..பார் 

"என்று சவால் விடுகிறார்,கடவுளை கூட்டி வந்தால் என்ன 

செய்வார் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது இந்த 

பதிவு வந்தது .உடனடியாக என்னுடைய கற்பனை பதிவை 

எழுதினேன்.


என்னைப் பொறுத்த வரை ஆரா இயற்கை என்று வள்ளுவர் 

கூறும் கிரகங்கள் ,நட்சத்திங்கள் அடங்கிய இயங்கும் 

இயற்கை,இவற்றை தாங்கி நிற்கும் பேரா இயற்கை என்று 

சொல்லப்படும் அசையா பெருநிலை ,இவற்றின் அம்சமாக 

உடல் ,உயிர் .உடலில் வாழும் போதே தன் உடலில் 

இருக்கும் உயிரை தேடுவதே வள்ளுவரின் ஆன்மீகம்.அற 

வழிகளில் முயற்சிப்பதே சிறப்பு .


என்னளவில் முடிந்து போகும் இந்த ஆன்மீகத்தால் 

யாருக்கும் தொல்லை கிடையாது.வள்ளுவர் மீதான 

நம்பிக்கையால் நான் ஒரு பொழுதுபோக்காக 

முயற்சிக்கிறேன் .


இது வரை உலகிற்கு அறிமுகமான தெய்வங்கள் எல்லாம் 

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களாகவே நான் 

நினைக்கிறேன் ,அவர்கள் அனைவரும் தங்கள் உடலை யே 

களமாக்கி ஏதோ சாதித்திருக்கிறார்கள்.இருப்பவர்கள் build up 

கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,


கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் காட்ட வேண்டியது 

சொன்னவன் பொறுப்பு .தீர்க்கதரிசனங்கள் சாத்தியம் 

என்பது என் கொள்கை. இதை நான் உறுதியாக சொன்னால் 

ஆத்திகர் ,நாத்திகர் என்று யார் வேண்டுமானனாலும் 

காணும் வழியை கூறுவது என் பொறுப்பாகும்..இதில் 

சாதிக்கும்,மதத்திற்கும் எந்த பங்கும் இல்லை 

.ஆன்மீகத்திற்கு அவனவன் உடலே உலைக்களம்.சாதியும் 

.மதமும் மனிதர்களை 

மேய்க்கவேஉதவுகின்றன,இதிலுள்ள 

குறைகளை நீக்குவது ஒவ்வொருவடைய கடமையாகும் .



Abbas Muthalif இரண்டு கதைகளிலும் , பார்க்கும் அறிவு , உணரும் 

அறிவு போன்ற முதல் 5 அறிவில் அடங்கும் விஷயங்களே பேச 

பட்டுள்ளன. 


இரண்டு கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கும் , இதை ஒரு 

பதிவாக போட்ட நண்பருக்கும் 6 ஆம் அறிவான பகுத்தறிவு 

குறித்து போதுமான தெளிவு இல்லை என்று நினைக்கிறேன்.

ராம நாதன் மதம் என்னும் அறிவில்லாத கண்ணாடி வழியாக 

இல்லாத ஒன்றை பார்ப்பது தான் அறிவு கெட்ட மூடச் செயல் 

அறிவிற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை


Abbas Muthalif உதாரணமாக ,

குண்டு ஊசியை உருவாக்கியவன் யார் என்று தெரிவது கூடுதல் 

அறிவு.

குண்டு ஊசியை அறிவுள்ள ஒன்று தான் உருவாக்கி இருக்கும் 

என்பது அடிப்படை , குறைந்த பட்ச அறிவு.

குண்டு ஊசியை உருவாக்கியவன் யார் என்று தெரியாத 

காரணத்தினால் , அது தானாகவே உருவானது என்றும் , குண்டு 

ஊசி இரும்பு தூளில் இருந்து பரிணாமம் அடைந்தது என்றும் 

வாதாடுபவன் முட்டாள்.

ஒரு குண்டு ஊசியை கூட உருவாக்க முடியாத இயற்க்கையால் , 

பரிணாமத்தால் இலட்ச கணக்கான உயிர்கள் உருவாக்க 

முடிந்தது 

என்று வாதாடுபவர்களுக்கும் , பகுத்தறிவிற்க்கும் எந்த 

சம்பந்தமும் இல்லை. 

நாத்திகம் என்பது இறை மறுப்பு மட்டும் தான் , அது ஒரு போதும் 

பகுத்தறிவு ஆகாது , மனிதன் வாழ்விற்கு சரியான வழிகாட்டி 

ஆகாது.


bbas Muthalif உதாரணமாக ,

குண்டு ஊசியை உருவாக்கியவன் யார் என்று தெரிவது கூடுதல் 

அறிவு.

குண்டு ஊசியை அறிவுள்ள ஒன்று தான் உருவாக்கி இருக்கும் 

என்பது அடிப்படை , குறைந்த பட்ச அறிவு.

குண்டு ஊசியை உருவாக்கியவன் யார் என்று தெரியாத 

காரணத்தினால் , அது தானாகவே உருவானது என்றும் , குண்டு 

ஊசி இரும்பு தூளில் இருந்து பரிணாமம் அடைந்தது என்றும் 

வாதாடுபவன் முட்டாள்.

ஒரு குண்டு ஊசியை கூட உருவாக்க முடியாத இயற்க்கையால் , 

பரிணாமத்தால் இலட்ச கணக்கான உயிர்கள் உருவாக்க 

முடிந்தது 

என்று வாதாடுபவர்களுக்கும் , பகுத்தறிவிற்க்கும் எந்த 

சம்பந்தமும் இல்லை. 

நாத்திகம் என்பது இறை மறுப்பு மட்டும் தான் , அது ஒரு போதும் 

பகுத்தறிவு ஆகாது , மனிதன் வாழ்விற்கு சரியான வழிகாட்டி 

ஆகாது.


Jai Jayan Jayan குழந்தை பாக்கியம் தருவதாக கூறி 100க்கும் 

மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 

சாமியார் கைது. - செய்தி

குழந்தை வேண்டும் என்று மரத்தை சுற்றிவருவது, 

தொட்டில் கட்டுவது, ஜோதிடம் பார்ப்பது, உச்சபச்சமாக 

சாமியார்களை நாடுவது....இது போன்ற கேவலமான 

செயல்களின் மூலம் லாபமடையும் போலிகளையும்,

அல்லாவின் ஆணை என்று ஒன்றுக்கு பத்து பெண்களுடன் 

உறவுகொள்ளும் பழைமைவாதிகளை அடையாளம் 

காண்பதுதான் பகுத்தறிவு.


ராம நாதன் குண்டூசியை மனிதன் தான் உருவாகினான் எனபது 

அனைவருக்கும் தெரியும் அதை எப்படி உருவாக்குகிறான் 

என்பதை நேரில் பார்க்கலாம் இல்லாத சுண்டக்கா கடவுள் எப்படி 

உயிர்களை உருவாகினான் என்பதை நம் முன் வந்து டெமோ 

காட்ட சொல்லுங்கள் தயாரா!! நாத்திகம் எனபது இறை 

மறுப்பு மட்டுமல்ல அதன் படி நடக்க ஆரம்பித்தால் உலகில் மதம் 

எனும் பெயரில் மனிதனை பிரித்தாளுகின்ற தன்மை இருக்காது 

பொதுவுடமை மலரும் மனிதன் சக மனிதர்களை மதிப்பான் 

காபிர் 

என சொல்ல மாட்டான்


Abbas Muthalif நாத்திகர்களுக்கு இயற்க்கைக்கும் , 

செயற்க்கைக்கும் தெரிந்த வித்தியாசம் இது தான். 





உருவாக்கியவன் யார் என்று தெரிந்தால் அது செயற்கை , 

உருவாக்கியவன் யார் என்று தெரியவில்லை என்றால் அது 

இயற்கை. 

கருவில் குழந்தை வளர்வதை வாய்ப்பு இருந்தால் scan மூலம் 

பாருங்கள். 

நாத்திகத்திற்கு எனக்கு தெரிந்த வரை எந்த நிலையான கொள்கை 

கிடையாது , இறைவனை மறுத்து விட்டு தான் தோன்றி தனமாக 

வாழ்வது தான் நாத்திகம் .

இஸ்லாமியர்கள் திரு குர்ரானை பின் பற்றி வாழ்பவர்கள் , திரு 

குர்ரானில் இறைவன் கூறுகிறான் , நான் ஒரு ஆண் ,ஒரு 

பெண்ணில் இருந்து மனித இனத்தை உருவாக்கினேன் என்று , 

இஸ்லாமில் மதம் என்ற வார்த்தைக்கோ , ஜாதி என்ற 

வார்த்தைக்கோ இடம் இல்லை. இஸ்லாம் மனிதன் எப்படி மனித 

நேயத்துடன் வாழ வேண்டும் என்று விளக்கும் சட்டம். அந்த 

சட்டத்திற்கு உட்பட்டு மனித நேயத்துடன் வாழ்ந்தால் 

இஸ்லாமியன். அந்த சட்டத்திற்கு உட்படாமல் மனித நேயம் 

அற்று வாழ்பவர்கள் காபீர்கள்.

ராம நாதன் உங்க அரேபியாவும் ISIS ம் மனித நேயத்திற்கு 

நல்ல எடுத்துக்காட்டு எவனோ உளறியதை நாங்கள் 

நம்புவது இல்லை மன நோயாளிகளை உருவாக்குவது தான் 

உங்கள் மார்க்கம்


Abbas Muthalif ISIS தான் இஸ்லாம் என்று உங்களுக்கு யார் 

சொன்னது. இஸ்லாம் என்றால் என்னவென்று தெரிந்து 

கொள்ள திரு குர்ரானை உங்களுக்கு தெரிந்த மொழியில் 

படியுங்கள். உங்களால் முடிந்தால் திரு குர்ரானில் மனித 

நேயத்திற்கு எதிராக ஒரு வசனத்தை நிருபித்து காட்டுங்கள் 

பார்ப்போம்.


ராம நாதன் இதெல்லாம் சப்பைக்கட்டு அவர்களை

 தோற்றுவித்ததே அரேபியாதான் இன்று வரை

 அவர்களுக்கு நிதி உதவிசெய்யும் நாடுகளில் அவர்கள் தான் முன்னிலை அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லாமல் என்ன இந்துக்களா



Abbas Muthalif நீங்கள் ஏன் எங்கோ இருக்கும்

 அரேபியாவிற்கும் , ISIS க்கு‌ம் போகிறீர்கள். அனைத்து

 பகுதிகளிலும் திரு குர்ஆன் மொழி பெயர்க்க பட்டுள்ளது , படித்து இஸ்லாம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.



Abbas Muthalif அப்பாவி மனிதர்களை பயங்கரவாதத்தால் கொள்ளும் நபர்கள் மனித நேயம் அற்றவர்களாம் , தீவிரவாதிகளாம் , மிருகங்களாம் ,

ஆனால் ,

அவர்கள் இஸ்லாமிற்க்காக தான் செய்தேன் என்று சொல்லும் போது உண்மையாளர்களாம் , பொய் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாம் , சத்தியவான்களாம்.

எந்த மனித நேயம் அற்ற மிருகம் , அவர்கள் சொல்லும் வாக்கு தான் நாத்திகர்களுக்கு உண்மையாம்.
யார் எதை சொன்னாலும் நம்புவது தான் நாத்திகத்தின் பகுத்தறிவு போல.
Abbas Muthalif குண்டூசியையும் மனிதன் தான் கண்டு பிடித்தான் 
அந்தக் கடவுளையும் மனிதன் தான் __
உருவாக்கினான்///


நாத்திகர்களுக்கு புரிந்து கொள்ளும் திறன் அவ்வளவு தான் வேலை செய்யும் போல.

ஒரு சாதாரண குண்டு ஊசி கூட இயற்க்கையாகவோ , பரிணாமம் அடைந்து உருவாக வில்லை . இயற்க்கையாக செயல் பட வில்லை. 

ஆனால்

பல வெளி உருப்புகளையும் கை , கால் , முகம் போன்று பல உள்ளுறுப்புகளை குடல் , இதயம் ,கல்லீரல், கிட்னி போன்ற அனைத்தையும் உள்ளடங்கிய மனிதன் இயற்க்கையாக உருவானானாம் , அவன் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் தானாகவே செயல் படுகிறதாம் , இதயம் தானாகவே துடிக்கிறதாம் , இரத்தம் தானாகவே ஓடுகிறதாம் , கிட்னி தானாகவே இரத்தத்தில் உள்ள உப்பை பிரித்து எடுக்கிறதாம் , மூளை தானாகவே சிந்திக்கிறதாம் ,

என்னால் இறை மறுப்பாளர்களை குறைந்த பட்சம் அறிவு உள்ளவர்கள் என்று கூட ஏற்று கொள்ள முடியவில்லை.


ராம நாதன் அதைத்தான் எப்படி படைத்தான் என்பதை விளக்குங்கள் இல்லை உங்கள் கடவுள் ஊமையை பேசவைக்கட்டும் இறந்தவரை உயிர்பித்து கொண்டுவரட்டும் தீராத நோய்களை குணமாக்கட்டும் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் !!
#
இந்த பித்தலாட்ட அல்லேலுயா கோஷ்டி போல அல்ல எங்களை போன்ற நாத்திகர்கள் முன்பு முடியுமா சொல்லுங்கள் நம்பிக்கையாளர்களே பிறகு அவர்தான் அனைத்தையும் படைத்தார் என்பதை கடவுளுடன் விவாதிக்கலாம்.




Abbas Muthalif அதைத்தான் எப்படி படைத்தான் என்பதை விளக்குங்கள் இல்லை உங்கள் கடவுள் ஊமையை பேசவைக்கட்டும் இறந்தவரை உயிர்பித்து கொண்டுவரட்டும் தீராத நோய்களை குணமாக்கட்டும் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் !!
#
இந்த பித்தலாட்ட அல்லேலுயா கோஷ்டி போல அல்ல எங்களை போன்ற நாத்திகர்
கள் முன்பு முடியுமா சொல்லுங்கள் நம்பிக்கையாளர்களே பிறகு அவர்தான் அனைத்தையும் படைத்தார் என்பதை கடவுளுடன் விவாதிக்கலாம்.///

தினந்தோறும் பல உயிர்கள் உருவாகி கொண்டு தான் இருக்கிறது , பார்க்கவில்லையா.

உங்கள் வாதம் கடவுள் இல்லை என்பதா , அல்லது அவன் வேலையை அவன் சரியாக செய்யவில்லை என்பதா.

எனது கேள்வி மிக எளிது, 

ஒரு குண்டு ஊசியை கூட உருவாக்க முடியாத உங்கள் இயற்க்கையால் , இத்தனை பாகங்கள் கொண்ட மனிதனை எப்படி உருவாக்க முடியும். 

மனிதனை உருவாக்கியது யார்.

ராம நாதன் மனிதனை உருவாகியது மனிதன்

Abbas Muthalif முதல் மனிதனை உருவாக்கியது.

மனிதர்களுக்கு மனிதர்களை உருவாக்கும் சக்தியை கொடுத்தது.


ராம நாதன் களிமண்ணால் உருவாக்க முடிந்தால் டெமோ காட்டுங்கள்


ராம நாதன் திரும்ப திரும்ப ஒரே மொக்கை தன்மான கேள்வியை கேட்டு எரிச்சல் ஊட்டாதீர்கள் தேவைக்கு அறிவியலை உம்முடன் சேர்த்துக் கொள்வீர்கள் அறிவியல் விளக்கத்துடன் பேசினால் பேசுங்கள் இல்லை ஆளை விடுங்கள் ஒரே அறுவை


Abbas Muthalif களிமண்ணால் உருவாக்க முடிந்தால் டெமோ காட்டுங்கள்///

முதல் மனிதனை தான் களிமண்ணால் படைத்தேன் என்று சொல்லி இருக்கிறான்.
...See more


ராம நாதன் களி மண்ணால் எப்படி படைக்க முடியும் மண்டையில் களிமண் உள்ளவன் தான் நம்புவான் கி கி கி போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள்


Abbas Muthalif பரிமாணத்தால் மனிதன் வந்தான் என்பதையும் பைத்தியக்காரன் தான் நம்புவான்.

ஒரு துளி விந்தணுவில் உயிரை உருவாக்க தெரிந்த இறைவனுக்கு , ஒரு தூள் விதையால் பெரிய மரத்தை உருவாக்க தெரிந்த இறைவனுக்கு , களி மண்ணில் இருந்து உருவாக்குவது சிரமம் இல்லை. 
...See more


சதீஷ் குமார் ஒரு குண்டு ஊசியை கூட உருவாக்க முடியாத உங்கள் இயற்க்கையால் , இத்தனை பாகங்கள் கொண்ட மனிதனை எப்படி உருவாக்க முடியும்..... //////// கடவுள் குண்டூசியை உருவாக்கியுள்ளாரா....? குண்டூசியை கூட உருவாக்க முடியாத இறைவனால் மனிதனை எவ்வாறு உருவாக்க முடியும்...?! கடவுள் உருவாக்கிய குண்டூசி, பேனா, கம்ப்யூட்டர், என்று ஏதாவது இருந்தால் காட்டலாம்...


சதீஷ் குமார் ஒரு துளி விந்தணுவில் உயிரை உருவாக்க தெரிந்த இறைவனுக்கு ,ஒரு தூள் விதையால் பெரிய மரத்தை உருவாக்க தெரிந்த இறைவனுக்கு, களி மண்ணில் இருந்து உருவாக்குவது சிரமம் இல்லை.. //// அவன் குன் என்று சொன்னாலே மரமும் மனிதனும் வந்துவிடும் என்கிற போது... எதற்காக களிமண்...??


ராம நாதன் குண்டூசியை இயற்கையின் பரிணாமத்தில் உருவான மனிதானால் கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் அறிவு வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி இதன் மூலம் உருவானதுதான் குண்டூசி, குண்டூசியை பற்றி உங்கள் இறைவன் வேதத்தில் சொல்லியுள்ளானா கேவலம் களிமண்ணால் உங்கள் இறைவன் எப்ப...See more


Jai Jayan Jayan Abbas Muthalif
நீங்க பெரிய அறிவாளி மாதிரி தெரியுது,
என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்துவையுங்கள்.

##
கடவுள் என்பவர் யார்?
அவர்கள் எத்தனை பேர்,
அவர் எப்படி உருவானார்?
விளக்கம் Pls.


ராம நாதன் யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பார்கள் நழுவல் கோஷ்டிகள்


Adhi Durai M கடவுள் சிந்தனைக்கு உட்பட்டவை (ஏனென்றால் 
செத்தவன்தான் சாமியாகுகிறான்) 
இயற்கை மனித சிந்தனைக்கு

அப்பாற்பட்டது


Ramasamy Ramamoorthy சகோ எனக்கு இது புரிவதில் சற்று சிரமம் ஏற்பட்டது .
கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்பதால் சிந்திக்க வேண்டியுள்ளது.
இயற்கை கண்ணுக்குத் தெரிவதால் சிந்தனைக்கு அவசியமில்லை am I right.

Adhi Durai M கடவுள் என்பது இறந்து மனிதனை குறிக்கும் சகோ
இதற்க்கு சிந்தனை தேவை இல்லை _


Jai Jayan Jayan உங்களிடம் இருந்து அறிவு பூர்வமான வாதத்தை எதிர் பார்க்கிறேன் , வாய்ப்பு இருக்கிறதா.
Abbas Muthalif .
எங்கே உங்கள் அறிவுப்பூர்வமான பதில்கள்,

கடவுளை போல் காணமல் போய்விட்டீர்களா?


Abbas Muthalif Abbas Muthalif
நீங்க பெரிய அறிவாளி மாதிரி தெரியுது,
என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்துவையுங்கள்.

##
கடவுள் என்பவர் யார்?
அவர்கள் எத்தனை பேர்,
அவர் எப்படி உருவானார்?
விளக்கம் Pls.///

1. அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர்.

2. ஒருவரால் முடியாது என்றால் தான் துணை வேண்டும். இறைவனால் முடியாதது என்று இல்லை , இறைவன் ஒருவன் தான்.

3. அவன் நிலையானவன் , பிறகு எப்படி உருவாக முடியும்.

Senthil Nathan Abbas Muthalif -//1. அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர்.//

ஆதிகாலத்தில் முதன்முதலில் ஒரேஒரு ஜோடியை மட்டும் தானே படைத்தார். அது எப்படி அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர் என்பது பொருத்தமாக இருக்கும்? 


//2. ஒருவரால் முடியாது என்றால் தான் துணை வேண்டும். இறைவனால் முடியாதது என்று இல்லை , இறைவன் ஒருவன் தான். //

ஜிப்ரேல், மலக்குகள், நபிகள் நாயகம் போன்றோர்கள் யார்? இறைவனுக்காக வேலை செய்தவர்கள் தானே, இந்த வேலைகளை இறைவன் செய்ய முடியாதவனாக இருந்தாரா? 

//3. அவன் நிலையானவன்// அப்படியென்றால்?


Jai Jayan Jayan 1. அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர்.

2. ஒருவரால் முடியாது என்றால் தான் துணை வேண்டும். இறைவனால் முடியாதது என்று இல்லை , இறைவன் ஒருவன் தான்.
...See more

Dhaneshkanth Amirthalingam கடவுளுக்கு வரைவிலக்கணம் உங்களுக்கு தெரியாதா?

ஆதியும் அந்தமும் அற்றவர் பிறப்பும் இறப்பும் அற்றவர் அவர்தான் இறைவன்.
...See more

Abbas Muthalif Abbas Muthalif -//1. அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர்.//

ஆதிகாலத்தில் முதன்முதலில் ஒரேஒரு ஜோடியை மட்டும் தானே படைத்தார். அது எப்படி அனைத்து படைப்பினங்களையும் படைத்தவர் என்பது பொருத்தமாக இருக்கும்? 


//2. ஒருவரால் முடியாது என்றால் தான் துணை வேண்டும். இறைவனால் முடியாதது என்று இல்லை , இறைவன் ஒருவன் தான். //

ஜிப்ரேல், மலக்குகள், நபிகள் நாயகம் போன்றோர்கள் யார்? இறைவனுக்காக வேலை செய்தவர்கள் தானே, இந்த வேலைகளை இறைவன் செய்ய முடியாதவனாக இருந்தாரா? 

//3. அவன் நிலையானவன்// அப்படியென்றால்?///

முதல் மனிதனை களிமண்ணில் இருந்தும் , அவர் சந்ததிகளை இந்திரியத்தின் மூலமாக படைத்து கொண்டு இருக்கிறான்.

இன்றளவும் , இறைவன் உருவாக்கிய உயிரின் துணை இல்லாமல் , ஒரு ஈ யை கூட விஞ்ஞானத்தால் உருவாக்க முடியாது. 

2. நண்பரே உங்கள் குழந்தையை உங்கள் மூலம் இந்த உலகத்தில் படைக்கிறான் , அவனால் தனிப்பட்ட முறையில் படைக்க முடியாது என்று அர்த்தம் இல்லை. 

நபிகள் நாயகம் என்ற மனிதர் மூலம் அவனுடைய இறுதி வேதத்தை அருளினான். வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே.


Jai Jayan Jayan Dhaneshkanth Amirthalingam
கண்டிப்பா நீங்க ஒரு அறிவாளி தெளிவா ஒரு பதில் சொல்லுங்?


Dhaneshkanth Amirthalingam Jai Jayan Jayan
கருங்கல் இறைவனாக முடியாது! ஆனால் இறைவனால் கருங்கல்லாக முடியுமே!


Dhaneshkanth Amirthalingam Jai Jayan Jayan
நான் முதலில் அப்படிக்கேட்டதற்கு காரணம் நீங்கள் பெரியாரின் கதையில் இருந்து என்ன கூற வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லை அதுதான் நான் அப்படி கேட்டதற்கான காரணம்.


Jai Jayan Jayan கடவுள் என்பன் இல்லை,
உங்க வாதபடி அது இருந்தாலும் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை, .


Jai Jayan Jayan ஏன் என்றால் அது வெறும் மாயைய் 
தன் விருப்பு வெறுப்புகளை அதன்மீது போட்டு தப்பித்துக்கொள்ள மனிதன் உருவாக்கிய பொம்மை.


Dhaneshkanth Amirthalingam Jai Jayan Jayan
கடவுள் இல்லை என நீங்களாகவே முடிவெடுத்துக்கொண்டால் எப்படி??


வாருங்கள் விவாதிப்போம்.

இறைவன் மனிதனுக்கென்று தனி சட்டங்களை உருவாக்கி இருக்க மனிதனால் எவ்வாறு தன் விருப்பு வெறுப்புக்களை இறைவன் மீது போட்டு தப்பித்துக்கொள்ள முடியும்???


Abbas Muthalif 3. தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என்று பொருள்.


Senthil Nathan Abbas Muthalif -//முதல் மனிதனை களிமண்ணில் இருந்தும்//

(வல்லோனால்எதுவும் சாத்தியமில்லை என கிடையாது)

ஆனால்
1.சிந்திப்போருக்கு சான்று உள்ளது என்பதனால். இது எப்படி ஏற்பது என புரியவில்லை. 

2.பறவைகள் விலங்குகள் எல்லாம் ?


Senthil Nathan //இன்றளவும் , இறைவன் உருவாக்கிய உயிரின் துணை இல்லாமல் , ஒரு ஈ யை கூட விஞ்ஞானத்தால் உருவாக்க முடியாது.//

(உங்கள் கருத்துப்படி பார்த்தால்)

இன்றைய நிலையில் இறைவனுக்கும் அதே நிலைதானே.


Senthil Nathan //நண்பரே உங்கள் குழந்தையை உங்கள் மூலம் இந்த உலகத்தில் படைக்கிறான்.//

1.இறைவன் என் உதவியை நாடுகிறார் என்கிறீர்களா?


2.பழைய படைக்கும் முறை என்னாயிற்று?


Senthil Nathan //நபிகள் நாயகம் என்ற மனிதர் மூலம் அவனுடைய இறுதி வேதத்தை அருளினான்.//

1.இறுதிவேதம்? முந்திய வேதத்திலும் இது போன்று சொல்லப்பட்டு உள்ளது தானே?


2.ஜிப்ரீல் சத்த வடிவில் சொன்னதனை நபிகளார் நம்பினார். நபிகளார் வாய் வழியாக சொன்னதனை தன் தோழர்கள் நம்பினார்கள், நபித்தோழர்கள் எழுதியதனை தாங்கள் நம்புகிறீர்கள் இதில் இறைவன் எங்கே?


Senthil Nathan //3. தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என்று பொருள்.//

1.இதன் பொருள் தொடக்கமும் முடிவும் தெரியாது என்பதா? இதற்கு இல்லை என்பீர்கள் என்றால் 


2.தங்கள் நம்பிக்கையின் அடிநாதம் என்ன?

No comments:

Post a Comment