Tuesday, June 21, 2016

கடவுளை தூக்கி கடாசிய இயற்கை


கடவுளை தூக்கி கடாசிய இயற்கை
******************************************
இயற்கையின் உருவாக்கத்தை கேலப்படுத்திய கடவுளர்களின் கொட்டத்தை அடக்கியது இயற்கை....இயற்கைக்கு மீறியது இந்த பிரபஞ்சதில் எதுவும் இல்லை
மந்தாகினி ஆற்றில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவில்,
புராண காலத்தை சேர்ந்தது
என்று சிலரும், 3,000 ஆண்டுகளுக்கு
முந்தையது என, பிறரும் கூறுகின்றனர். இந்துக்களின் புனித தலங்களில் முக்கியமான அந்த கோவிலின் சிவன் சிலை இயற்கையால் அடித்து நொறுக்கப்பட்டது .. இப்போது வரை
சீரமைப்பு பணிகள் செய்ய முடியாத அளவு சர்வநாசம் கோவிலின் உட்புறம் சகதிக்காடாக காட்சியளிக்கிறது; வெளிப்புறம் அணுகமுடியாத அளவிற்கு மிக மோசமாக சேதமடைந்துள்ளது ..மற்றொருபடம் கழிவில் அடித்து கரை ஒதுங்கிய ஆனைமுகத்தோன்
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரா நகரில் அமைந்துள்ள
இயேசு சிலை மின்னல்
தாக்கத்திற்குட்பட்டு சேதமடைந்துள்ளது
இந்த வானங்களையும் பூமியையும் ஆறே நாளில் படைத்தாக சொல்லப்படும் இயேசுவிற்கு ரியோ டி ஜெனீராவில் கோர்கொவடோ மலை உச்சியில் 2000க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ள உள்ள இயேசு சிலை 2014 ஜனவரி மாதம்14ஆம் தேதி மின்னல் தாக்கத்தால் சேதமானது . இச்சேத்தினை திருத்தும் பணியில்பலர் ஈடுபட்டு வருகின்றனர். கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக
கருதப்படுகின்றது.இதுவும் இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்..
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலம் அமைந்துள்ள சவுதியில் கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் புனிதநூல் குரான் ஆயிரக்கணக்கில் சாக்கடை நீர் அடித்து வெளியேறியது ..மற்றொன்று பூமியை ஆடாமல் அசையாமல் நிறுத்தி வைக்க மலைகளை நட்டுவைத்த அல்லாவை மீறி பூமி ஆடியதால் தகர்ந்து விழுந்த பள்ளி வாசல் ..
இயற்கை இந்த மூன்று கடவுள்களையும் முட்டுசந்துக்கு கொண்டு நிறுத்தியதில் நமக்கு ஒன்று தெளிவாகிறது
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பது




Senthil Nathan இடிந்த சில கோவில்களை வைத்து 
கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சொல்லும் தாங்கள் 


நல்ல நிலையில் உள்ள பல கோவில்களைப்பார்த்து
என்ன கருத்து சொல்லுவீர்கள்?
Senthil Nathan இதனை கோவில் உள்ள இடங்களில் மனிதர்கள் இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

Senthil Nathan -அயோக்கியதனம்!- பொருள் கூற முடியுமா?

Michael P நான் பதிவில் குறிப்பிட்டுள்ளவை சாதாரன நிகழ்வுகள் அல்ல அண்ட சராசரங்களை படைத்தவனாக மதவாதிகளால் கருதப்படும் ஆண்டவனை அசைத்து பார்த்த நிகழ்வு

Senthil Nathan ஆமாம் ஒத்துக்கொள்கிறேன், கடவுள் என்பது நடைமுறையில் பெரும்பாலும் ஏமாற்று வேலைதான்.

Jinna Machu நல்ல நிலையில் உள்ள மசூதிகளும்,
சர்ச்சுகளும் உள்ளன,
அதற்காக அந்த கடவுள்கள் உள்ளனவா?ஏற்றுக்

கொள்வீர்களா?

Senthil Nathan ஏற்றுக்கொள்வேன்.

Michael P அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எந்த கடவுளை

Senthil Nathan எந்த கடவுள் என்றால்?

Michael P //நல்ல நிலையில் உள்ள மசூதிகளும்,
சர்ச்சுகளும் உள்ளன,
அதற்காக அந்த கடவுள்கள் உள்ளனவா?ஏற்றுக்

கொள்வீர்களா?//
இதிலே எந்த கடவுள்

Senthil Nathan எல்லாம் வேறு வேறா ?

Michael P ஆமா ஆமா உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை யு ஆனர்

Senthil Nathan அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, மதவாதிகள் எல்லோரும் ஒரே இறைவன் எனும் போது வேறு வேறாக எப்படி என்பதானது எனது கேள்வி.

Michael P நீங்கள் அல்லாவை இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்வீரா?

Senthil Nathan நிச்சயமாக

Michael P இதை இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் ஏத்துக்க மாட்டானுகளே

Senthil Nathan சில பிரிவினைவாதிகளின் கைகளில் மதங்கள் இருக்கும்வரை ஏற்றுக்கொள்ளத்தான் மாட்டார்கள்.

அமைதியையும், அன்பையும், அரனையும், சகோதரத்துவத்தையும் போதிப்பதில் வேறுபாடு இல்லாத மதங்களை வைத்தே வேறுபட்டிருக்கும் மனிதர்களை காணும் போது மனது வேதனை கொள்கிறது.


மதவாதிகள் மற்றவர்களை சரியாக புரிந்து கொள்ளாமல் பிரிந்து கிடக்கிறார்களோ என்று எண்ணுகின்ற அதே வேளையில் இவர்களிடமிருந்து பிரிந்து நிற்கும், மதங்களில் உள்ள நல்லவிடயங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தங்களைப்போன்றவர்களையும் பிரிவினை வாதிகளாகவே மனம் எண்ணுகிறது.

உலகில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்வது சாத்தியமாயின், அது மதங்களை போதிக்கும் பல்வேறு மதக்குருமார்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மூலமே சாத்தியம் என்பது என்னுடைய எண்ணம்.

ஜனநாயக கடமை ஆற்ற ஊருக்கு செல்கிறேன், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம். அனைவரையும் தவறாமல் வாக்குச்செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Jinna Machu கடவுள் எனும் பெயர்,மதம்,
சாதி இவைகள் இருக்கும்
வரை நீங்கள் கூறப்படுவது

போல்,நீங்கள் விரும்புவது
போல் நடக்கவே நடக்காது
@செந்தில் நாதன்

Michael P மதங்களில் நல்லவைகள் இருந்தாலும் கெடுதல்கள்தான் அதிகம் 
தலைவாழை இலையில் அறுசுவை உணவை வைத்து பக்கத்தில் கொஞ்சம் நரகலை வைத்தால் உண்ண முடியுமா? அதுதான் மதங்களின் நிலை

Jinna Machu நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை 
என நீங்கள் குறிப்பிடுவது
தவறு,சிறு நல்ல விடயங்களை வைத்து

பெரிய கேடுகள் நடை முறைபடுத்த நினைக்கும்
நிலை கொண்டவைகளாக
மதங்களும் கடவுளும்
இருப்பதால்,மதவாதிகள்
பெரிய விடயங்களை
மறைத்து,சிறு விடயங்களை கெடுப்பது
நாத்திகர்கள் என பெரிது
படுத்துவதால் உங்களை
போல் உள்ளவர்களுக்கு
இந்த நாத்திகர்கள்
தீயவர்களாக தெரிகிறார்கள்,இதை
வைத்து மதவாதிகள்
மக்களை கவர பார்க்கிறார்கள்.நாங்கள்
தீயவர்களாக பார்க்கப்
பட்டாலும்,தீயவர்களாக
மதவாதிகளால் உண்டாக்கப்பட்டாலும்
அதை நினையாது,மக்களை
அவர்களின் அறியாமையை விலக்கவே
விடாது பனி செய்வோம்

Senthil Nathan // கடவுள் எனும் பெயர்,மதம்,
சாதி இவைகள் இருக்கும்
வரை //


இவைகளை அழிக்க கூடிய நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?

Senthil Nathan //நீங்கள் விரும்புவது
போல் நடக்கவே நடக்காது
@செந்தில் நாதன்//


நடக்கும் 

மதக்காரர்கள் தங்களுக்குள் 
(பற்றோ வெறியோ )
ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

சாதிக்காரர்களும் தங்களுக்குள் 
(பற்றோ வெறியோ )
ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கிடையே இருக்கும் 
வேற்றுமைகளை (காரண காரணிகளை )
களைந்தாலே போதும் 

ஒற்றுமை ஏற்படும்.

இது கண்டிப்பாக நடக்கும்,

இவர்கள் பிரிந்து இருப்பதனால் ஆதாயம் அடைந்தவர்கள் இவ்வாறு நடக்க விடமாட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்,

Senthil Nathan //நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை 
என நீங்கள் குறிப்பிடுவது
தவறு,//


தவறு என்பதனை ஏற்கிறேன்,

மதங்களில் உள்ள தாங்கள் ஏற்றுக்கொண்ட முதன்மையான நல்ல விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டால் நான் கொண்ட எண்ணம் தவறு என உணரும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கும்.

Senthil Nathan //தீயவர்களாக
மதவாதிகளால் உண்டாக்கப்பட்டாலும்
அதை நினையாது,மக்களை

அவர்களின் அறியாமையை விலக்கவே
விடாது பனி செய்வோம்//

பொதுப்பணி செய்வோரின் நற்பண்புகளே இதுதான். தங்கள் பனி மேலும் சிறக்க வேண்டும்.

அதே சமயம் 

தீயவர்களாக
நாத்திகவாதிகளால் உண்டாக்கப்பட்டாலும்
அதை நினையாது,மக்களை
அவர்களின் துன்பங்கள் விலக்கவே
விடாது பனி செய்கிறார்களே மதவாதிகள்

அது பொதுப்பணி ஆகாதா?

Jinna Machu பொதுப்பனியில் எந்த
மதங்களில் பிறந்தவர்
களாகயிருந்தாலும்

உதவுவதும்,அவர்களின் மதங்களில் உள்ளவர்களுக்கு
உதவினாலும் நான்
தவறு என்று கூற
மாட்டேன்,உதவி
எனும் பெயரால்
தன் மதங்களில்
உள்ள ஏராளமான
ஏழைகளை நினையாது விளம்பரத்திற்காக,
தன்னுடைய பெயர்களுக்காக
பல ஏழைகளிடமிருந்து
பறித்து சிலருக்கு
உதவுவது என்று
ஊரை ஏமாற்றுவது
தான் கேலிக்குரியது.

No comments:

Post a Comment