Monday, July 7, 2014

பிளாஸ்டிக் கவர் உணவுகளால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு!


QdzyGLi.jpg

 பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சூடான உணவை பிளாஸ்டிக் கவர்களில் வைக்கும்போது, நச்சுத்தன்மை கொண்ட ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற வேதிப்பொருள் உடலில் கலக்கிறது. இதனால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நகரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கக்கூடாது என நகராட்சி, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழல் மாசு, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இவற்றை கால்நடைகள் உணவாக உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

அதிகாரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்களை கட்டி கொடுக்கின்றனர். ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற இந்த நச்சு வேதிப்பொருள் வயிற்றுக்குள் செல்லும் போது பல்வேறு வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே, அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், 

வாழை இலையில் சாப்பிட்டால் வயிற்று உபாதை ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். தற்போது பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் உணவுப் பொருட்கள் கொடுக்கின்றனர். இதில் உள்ள நச்சுச்தன்மை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் கேன்சர் வர அதிக வாய்ப்புள்ளது என்றார்.

No comments:

Post a Comment