Wednesday, March 2, 2016

ஆத்திகன் Vs நாத்திகன் vithi

நாதிகர்களே .....இஸ்லாத்தைப் பற்றி பேசும்போது சில முஸ்லிம்களின் செயல்பாடுகளைப் பற்றி இதுதான் இஸ்லாம் என்று பேசக்கூடாது, இது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல அணைத்து மதத்திற்கும் பொதுவானது,மதத்தினுடைய கோட்பாடு என்பது வேறு மனிதர்களின் புரிதல்,செயல்பாடுகள் என்பது வேறு.நீங்கள் ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கும் போது அந்த மத நூல்களிலே குறிப்பிட்டுள்ள அறிவுக்கு ஒப்பாத சட்டங்களை விமர்சனம் செய்யலாம் ஆனால் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை குறைக்கூறி பிரயோஜனம் இல்லை ஏனென்றால் அது அவர்களின் புரிதலிலே ஏற்பட்டுள்ள குறைப்பாடு.அவர் அவர்களுக்கு புரிந்த அளவுக்கு அந்த மதத்தினுடைய கோட்பாடுகளைப் பின்பற்றுவார்கள் அது சரியாகவும் இருக்கலாம்,தவறாகவும் இருக்கலாம்.நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,நீங்கள் முஸ்லிம்களை விமர்சிப்பது கட்டுரைக்கு வேண்டும் என்றால் சுவாரஸ்யத்தைக் கூட்டும்,அறிவுக்கு பொருந்தாது.

Comments
Senthil Nathan இக்கருத்து எல்லாமதத்திற்க்கும் எல்லோருக்கும் பொருந்தும் தானே?

Dawwah Messanger Al Haqq அல் குர்ஆனில் ஒரு பிழையை காட்டுங்க, நபி(ஸல்)அவர்களின் ஆதாரபூர்வமான சொல்,செயல்,அங்கிகாரத்தில் ஒரு தவறை காட்டுங்க,
அதன் பிறகு நபி(ஸல்)அவர்களையும் அல் குர்ஆனையும் தரக்குறைவாக விமர்சிப்பதில் தவறில்லை.
எனக்கு வேண்டியது எனது பகுத்தறிவு ஏற்றுகொள்ளக்கூடிய ஒரே ஒரு தவறுதான்.
சவால் முடியுமா?


Senthil Nathan வேதத்தில் பிழை இருக்காது என்பது எனது நம்பிக்கை, அது மனித உணர்தலில் ஏற்படும் தவறாகத்தான் இருக்கும், திருக்குர்ஆன் பற்றிய அறிவு எனக்கில்லை, கேள்வி அறிவு மட்டும் தான். எனது வினா- விதி பற்றியும்அதன் வழியில் சொர்க்கம் நரகம் பற்றியும் விளக்கம் தேவை, முரணாக உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

Dawwah Messanger Al Haqq இஸ்லாத்தில் விதி

விதி என்றால் அனைத்து செயற்பாடுகளும் இறைவனின் நாட்டப்படி நடக்கிறது என நம்புவதாகும், இது இஸ்லாமிய நம்பிக்கையின் 6 வது அம்சமாகும்.

மனிதன் செய்கின்ற பாவங்களும் இறைவனின் நாட்டம் என்பதால் இறைவன் பாவம் செய்யும் மனிதர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்.இதுவே சஹோதரர் கூரிய முரண்பாடாகும்.

ஏன் இறைவனின் நாட்டப்படி அனைத்தும் நடக்கிறது என்று நம்பவேண்டும் என்பதற்க்கு இஸ்லாம் ஒரு காரணத்தை கூறுகின்றது.
அதாவது
நாம் ஒன்றை இழந்து மனவேதனை அடையும் போது "இது இறைவனின் நாட்டப்படி நடந்தது" என்று கூறி ஆறுதல் அடைவதற்காக...

அதாவது
இதனடிப்படையில் இறைவனின் நாட்டப்படி நடந்தது என்று துன்பத்தின் போது மனதை ஆறுதல்படுத்தி கொள்வதற்காக மட்டுமே கூறலாம்.
ஆனால்
உண்மையில்
மனிதன் செய்யும் செயற்பாடுகள் இறைவனின் நாட்டப்படி நடந்தது என கூறமுடியாது,காரணம் மனிதன் செய்யும் செயற்பாடுகளுக்கு மனிதன்தான் காரணம்,அவனது சுயமான பகுத்தறிவுதான் காரணம்.

இறைவன் முக்காலமும் உணர்ந்தவன் என்ற அடிப்படையில் விதி என்றால் நடக்கப்போவதை இறைவன் தனது எதிர்காலத்தை அறியும் ஆற்றலால் அறிந்து அதை ஒரு ஏட்டில் எழுதி வைத்திருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. ஆக மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு வழங்கப்பட்டால் மனிதன் எவ்வாறான செயற்பாடுகளை எல்லாம் செய்வான் என்பதை இறைவன் தனது முக்காலத்தை உணரும் அறிவால் அறிந்து எழுதி வைத்து இருக்கிறான்.

ஆக இங்கு மனிதனால் நடக்க இருக்கும் செயற்பாடுகள்தான் விதியென எழுதப்பட்டுள்ளது,
மாறாக இறைவன் மனிதனின் செயற்பாடுகள் இவ்வாறுதான் நடக்க வேண்டும் எழுதவில்லை.

மனிதனின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை இறைவன் முன்னரே எழுதிவைத்திருக்கிறான்.
ஆகவே எழுதியதுதான் நடக்கப்போகிறது.
இதையே இஸ்லாம் இறைவன் நாடியது நடக்கிறது எழுதியது நடக்கிறது என்று துன்பத்தின் போது நம்பி ஆறுதல் அடையுமாறு கூறுகின்றது.
ஆனால் நாம் விதியை நாம் செய்யும் பாவங்களுக்கு காரணமாக கூற முற்படுவதை இஸ்லாம் ஏற்க்கவில்லை.


Senthil Nathan விதி என்பது இப்படி நடக்கும் என்று கூறுவது, இப்படி நடக்கணும் என்று கூறுவதில்லை என்று கூறுகிறீர்கள். இது ஜோதிடம் ஆகாதா?

Senthil Nathan //ஒரு ஏட்டில் எழுதி வைத்திருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. //இருக்கிறதா? எங்கு இருக்கிறது? இது போன்ற ஏடினை இஸ்லாம் உடன்படுமா? முரண்படுமா?

Senthil Nathan முக்காலமும் அறிந்த இறைவன் ஒருவன் பிறந்ததுமே அவன் சொர்க்கம் போவானா நரகம் போவானா என்பதனையையும் அறிந்திருப்பாரானால் அறிவு கொடுக்கப்படுவதின் நோக்கம் என்ன?

கொடுக்கப்பட்ட அந்த அறிவை சொர்க்கம் போபவன் நல்லதுக்கும், நரகம் போபவன் கேட்டதுக்கும் பயன்படுத்த தூண்டுபவர் யார்??

Dawwah Messanger Al Haqq //விதி என்பது இப்படி நடக்கும் என்று கூறுவது, இப்படி நடக்கணும் என்று கூறுவதில்லை என்று கூறுகிறீர்கள். இது ஜோதிடம் ஆகாதா?//

சஹோதரரே... இஸ்லாம் ஜோதிடத்தை ஆகுமாக்கவில்லை. ஏன் என்று தெரியுமா? இப்படி நடக்கும் என்று கூறும் சக்தி இறைவனைத் தவிற வேறு யாருக்கும் இல்லை என்கிறது இஸ்லாம்.
இறைவனைத்தவிர வேறு யாராவது இப்படி நடக்கும் என்று கூறினால் அது ஜோதிடம் என்ற பெயரில் பொய்யாகும்.
இறைவன் இப்படித்தான் நடக்கும் என்று அவனது அறிவைப்பயன்படுத்தி எழுதினால் அது எந்த பிழையும் இல்லாமல் அப்படியே நடக்கும் அதுதான் விதி ஆகும்.

////ஒரு ஏட்டில் எழுதி வைத்திருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. //இருக்கிறதா? எங்கு இருக்கிறது? இது போன்ற ஏடினை இஸ்லாம் உடன்படுமா? முரண்படுமா?//

பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 6:59

வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை 10:61

ஆகவே மேற்கூறப்பட்ட வசனங்களில் அனைத்தும் ஒரு ஏட்டில் இருப்பதாக அல் குர்ஆன் கூறுவதால் இஸ்லாம் ஏட்டினை உடன் படுகிறது.

//முக்காலமும் அறிந்த இறைவன் ஒருவன் பிறந்ததுமே அவன் சொர்க்கம் போவானா நரகம் போவானா என்பதனையையும் அறிந்திருப்பாரானால் அறிவு கொடுக்கப்படுவதின் நோக்கம் என்ன?
//
இறைவனுக்கு யார் சுவர்கம் போவார்கள் யார் நரகம் போவார்கள் என்பது முன்னமே தெரியும். ஆனால் மனிதன் செய்யும் செயற்பாடுகளை இறைவன் தீர்மானிப்பதில்லை.அவனது சொந்த அறிவு தீர்மானித்தால்தான் அவனுக்கான பரிசை அல்லது தண்டனையை வழங்குவதில் நியாயம் இருக்கும் என்பதற்காகவே சொந்த அறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட நோக்கமாகும்.

//கொடுக்கப்பட்ட அந்த அறிவை சொர்க்கம் போபவன் நல்லதுக்கும், நரகம் போபவன் கேட்டதுக்கும் பயன்படுத்த தூண்டுபவர் யார்??//

அறிவை யாரும் தூண்டுவது கிடையாது சஹோதரரே அறிவுதான் மனிதனை சூழலுக்கு ஏற்றவாறு நன்மை செய்யும் படியாகவும் அல்லது தீமை செய்யும்படியாகவும் தூண்டுகிறது.
உதாரணமாக ஒரு மனிதன் கடன் கொடுக்க வேண்டும் என்றால் அந்த கடனை கெட்டவழியில் திருடித்தான் செலுத்தவேண்டும் என்று அறிவு சொன்னால் அந்த மனிதன் திருடுவான்.
அல்லது உழைத்துதான் கடனை அடைக்க வேண்டும் என்று அறிவு தூண்டினால் நல்ல வழியில் உழைத்து கடனை செலுத்துவான்.
ஆக இங்கு மனிதனின் அறிவு எவ்வாறு சிந்திக்க வேண்டும் என மனிதனுக்கு சொல்லிக்கொடுக்கவே இறைவன் இறைத்தூதர்களையும் வேதங்களையும் மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அனுப்பினான்.

Senthil Nathan ///ஒரு ஏட்டில் எழுதி வைத்திருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. //இருக்கிறதா? எங்கு இருக்கிறது?

Dawwah Messanger Al Haqq அந்த ஏடு இறைவனின் பாதுகாப்பில் இருக்கும்,அப்படி ஒரு ஏடு இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.
அது எங்கிருந்தால் நமக்கென்ன.

Senthil Nathan இது தங்களின் பகுத்தறிவுக்கு ஏற்புடைய பதிலாக உள்ளதா? திரு Dawwah Messanger Al Haqq அவர்களே

Dawwah Messanger Al Haqq நீங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கருதினால் காரணம் என்ன?. சஹோதரர் செந்தில் நாதன் அவர்களே...

Senthil Nathan நாமே பாதுகாப்போம் என்று சொன்ன திருக்குரான் இன்றளவும் அப்படியே இருக்கும் போது, என்னுடைய பாதுகாப்பில் உள்ளது என்று சொன்னதாக சொன்ன புத்தகம் (//அது எங்கிருந்தால் நமக்கென்ன.//) இல்லை என்பது போல சொல்லுவது தங்களின் பகுத்தறிவுக்கு ஏற்புடைய பதிலாக உள்ளதா? திரு Dawwah Messanger Al Haqq அவர்களே

Dawwah Messanger Al Haqq //நாமே பாதுகாப்போம் என்று சொன்ன திருக்குரான் இன்றளவும் அப்படியே இருக்கும் போது, என்னுடைய பாதுகாப்பில் உள்ளது என்று சொன்னதாக சொன்ன புத்தகம் (//அது எங்கிருந்தால் நமக்கென்ன.//) இல்லை என்பது போல சொல்லுவது தங்களின் பகுத்தறிவுக்கு ஏற்புடைய பதிலாக உள்ளதா? திரு Dawwah Messanger Al Haqq அவர்களே//

நான் சொன்னதை நீங்கள் சரியாக கிரகிக்கவில்லை என்று நினைக்கிறேன். சஹோதரரே...

சஹோதரரே, உங்களுக்கு ஒன்று தெரியுமா இறைவன் அல்குர்ஆனை புத்தக வடிவிலே இறக்கவில்லை,மாறாக ஒலி வடிவில்தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது, அதை மனிதர்களே புத்தகமாக வடிவமைத்தார்கள்.
மனிதர்களுக்கு வழிகாட்டியான அல் குர்ஆன் மனிதர்களின் கண்களில் கட்டாயம் பட வேண்டும்.

நான் அந்த விதியை எழுதிய புத்தகம் இறைவனுடைய பாதுகாப்பில் இருக்கும் என்று எனது சுய சிந்தனையின் படிதான் கூரினேன்.
இறைவன் அந்த புத்தகத்தின் இருப்பிடத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. அந்த புத்தகம் இறைவனுடைய பாதுகாப்பில் எங்கிருந்தால் நமக்கென்ன என்ற கருத்தையே நான் சுருக்கமாக கூறினேன்.

Senthil Nathan //அப்படி ஒரு ஏடு இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.//-//நான் அந்த விதியை எழுதிய புத்தகம் இறைவனுடைய பாதுகாப்பில் இருக்கும் என்று எனது சுய சிந்தனையின் படிதான் கூரினேன்// முரன்படுகிரீர்களா? விதி நூல் பற்றிய தகவல் இறைவனுடையதா? தங்களுடையதா? அப்படியான நூல் தாங்கள் அறிந்த அளவில் இல்லை என்றா சொல்ல வருகிறீர்கள்?

Dawwah Messanger Al Haqq /////அப்படி ஒரு ஏடு இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.//-//நான் அந்த விதியை எழுதிய புத்தகம் இறைவனுடைய பாதுகாப்பில் இருக்கும் என்று எனது சுய சிந்தனையின் படிதான் கூரினேன்// முரன்படுகிரீர்களா? விதி நூல் பற்றிய தகவல் இறைவனுடையதா? தங்களுடையதா? அப்படியான நூல் தாங்கள் அறிந்த அளவில் இல்லை என்றா சொல்ல வருகிறீர்கள்?///

சஹோதரரே, இறைவன் அல்குர்ஆனில் விதியை பற்றி எழுதிய நூல் ஒன்று இருப்பதாக கூறுகிறான்.
ஆனால் அதன் இருப்பிடத்தை பற்றி கூறவில்லை.
அந்த புத்தகம் இறைவனுடைய பாதூகாப்பில ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் என்பதூ எனது கருத்து.
அந்த புத்தகம் இறைவனுடைய பாதுகாப்பில் எங்கிருந்தால் நமக்கென்ன.

நான் கூரியதில் எந்த முரண்பாடும் இல்லை.

Senthil Nathan தாங்கள் இருக்குமென்றாவது நப்புகிரீர்களா?
Dawwah Messanger Al Haqq இருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் என்ன சஹோதரரே நான் நம்புகிரேனா என்று கேட்கிறீர்கள். நிச்சயம் நம்புகிறேன்.

Senthil Nathan கை பெருவிரல் ரேகைகையை கொண்டு கணிக்கப்படும் நாடி ஜோதிடம் நான் அறிந்த வகையில் மிகத்துல்லியமாக கணிக்கப்படுகிறது. அதில் ஒருமனிதனின் ஒன்பது காண்டங்களை பற்றிய தகவல் சொல்லபடுகிறது. நிகழ்கால நிகழ்வுகள் உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இவைகள் ஓலைசுவடி படித்தே சொல்லுகிறார்கள். இதனை எழுதியது அகத்தியர் என்றும் சொல்லப்படுகிறது. இது நீங்கள் சொல்லும் நூலாக இருக்குமா? இருக்காது என்றால் எதனால்?

Dawwah Messanger Al Haqq //கை பெருவிரல் ரேகைகையை கொண்டு கணிக்கப்படும் நாடி ஜோதிடம் நான் அறிந்த வகையில் மிகத்துல்லியமாக கணிக்கப்படுகிறது. அதில் ஒருமனிதனின் ஒன்பது காண்டங்களை பற்றிய தகவல் சொல்லபடுகிறது. நிகழ்கால நிகழ்வுகள் உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இவைகள் ஓலைசுவடி படித்தேசொல்லுகிறார்கள். இதனை எழுதியது அகத்தியர் என்றும் சொல்லப்படுகிறது. இது நீங்கள் சொல்லும் நூலாக இருக்குமா? இருக்காது என்றால் எதனால்?//

நான் ஆய்வு செய்த வகையில் எந்த வகை ஜோதிடமாக இருப்பினும் சரி பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறைதான் ஜோதிடம், ஜோதிடம் என்பது ஒரு பொய்யான அனுமானமே.

விதியைப்பற்றி எழுதிய புத்தகமானது மனிதனது வாழ்கையை பற்றி மட்டும் கூறவில்லை. இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதில் இருந்து இந்த பிரபஞ்சத்தை இறைவன் அழிக்கும் வரையிலும் நடக்கும் அனைத்து செயற்பாடுகளும் விதிப்புத்தகதத்தில் உள்ளது.
உதாரணமாக ஒரு கல்லை மனிதன் கிணற்றுக்குல் போடுகிறான் என்றால்
அந்த கல்லின் அசைவு ஒவ்வொரு நொடியிலும் எப்படி இருக்கும் என்ற விபரம், அந்த கல் என்ன வேகத்தில் போகும் என்ற விபரம், கிணற்று நீரை எவ்வளவு நேரத்தில் கல் தொட வேண்டும் என்ற விபரம், நீருக்குள் அந்த கல் செல்லும் வேகம் பற்றிய விபரம்,அந்த கல் தரையை அடைய எடுக்கும் நேரம் பற்றிய விபரம்.அந்த கல் தரையை அடைந்த பின் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்ற விபரம்.
இப்படி ஒரு கல்லின் அசைவை பற்றியே இத்தனை விபரங்கள் இருக்கும் என்றால் இந்த பிரபஞ்சத்தில் கடைசி வரைக்கும் நடக்கும் அனைத்து விடயங்களைப் பற்றியும் எத்தனை விபரங்கள் இருக்கும்.

நீங்கள் கூரிய ஓலைச்சுவடியில் இப்படியெல்லாம் இருக்குமா?

விதியை பற்றிய புத்தகத்தை இறைவன் அவனது பாதுகாப்பில் வைத்திருக்கிறான், அதை மனிதர்களுக்கு வெளிப்படுத்த மாட்டான்.
மறைவான விடயங்கள் பற்றிய அறிவு இறைவனைத்தவிர வேறு யாருக்கும் இல்லை, என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

Senthil Nathan //
நான் ஆய்வு செய்த வகையில் எந்த வகை ஜோதிடமாக இருப்பினும் சரி பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறைதான் ஜோதிடம், .//எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா?

Senthil Nathan //ஜோதிடம் என்பது ஒரு பொய்யான அனுமானமே// நீங்கள் ஒரு விடயம் பற்றி அனுமானம் செய்ய அது பற்றி அறிந்திருத்தல் வேண்டும் தானே, ஜோதிடம் பற்றிய உங்களின் அறிவு என்ன?

Senthil Nathan //அதை மனிதர்களுக்கு வெளிப்படுத்த மாட்டான்.// வெளிப்படுத்தின ஓலைச்சுவடி என்பது அனுமானம், பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை. வெளிப்படாத, வெளிப்படவே படாத, வெளிப்படுத்தவே மாட்டான் என்று சொல்லப்படுகின்ற நூலின் மீது தங்களுக்கு நிச்சியமான நம்பிக்கை.? இது என்ன மாதிரியான நம்பிக்கை?

Senthil Nathan ///மறைவான விடயங்கள் பற்றிய அறிவு இறைவனைத்தவிர வேறு யாருக்கும் இல்லை, என்பது இஸ்லாமிய நம்பிக்கை.//எங்களுடைய நம்பிக்கையும் அதுதான். சாதாரண மனிதனையோ மற்றதையோ கடவுளாக பார்ப்பதில்லை. எங்களின் பிரச்சனைகளுக்கு நாங்கள் அறியாத மறைவான விடயங்களை எடுத்து சொல்லி தீர்வு செய்பவரையே கடவுளாக வணங்குகிறோம். எதிர்காலம் பற்றிய அறிவு இவ்வுலகில் அநேகருக்கு இருந்தது. இறைஞானம் உடைய அநேருக்கு இது சாத்தியமே, இதையெல்லாம் இல்லை என ஒதுக்கிவிட்டுவிட்டு, இறைவன் என்று எதனை நம்புகிறீர்கள்? இது என்ன மாதிரியான நம்பிக்கை?

Dawwah Messanger Al Haqq //எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா?//
நல்ல தொழிலை நேர்மையாக செய்வர்களே இல்லையென்று எதை வைத்து கூறுகின்றீர்கள்?
தவரான தொழிலை செய்தால் செய்கின்ற தொழிலும் தவறுதான் செய்பவரும் பிழையானவரே...

//நீங்கள் ஒரு விடயம் பற்றி அனுமானம் செய்ய அது பற்றி அறிந்திருத்தல் வேண்டும் தானே, ஜோதிடம் பற்றிய உங்களின் அறிவு என்ன?//

ஜோதிடம் மனித வாழ்வைப்பற்றிய முக்கால ஞானம் என்கிறார்கள்.
ஜோதிடம் உண்மையாக இருந்தால் ஒரு மனிதன் குற்றவாளியாக நீதி மன்றத்தால் சந்தேகிக்கப்பட்டால் அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை கண்டுபிடித்துவிடலாமே...
அது நம்பக்கூடியதன்று என்பதாலேயே சட்டம் அதை ஏற்பதில்லை.

//வெளிப்படுத்தின ஓலைச்சுவடி என்பது அனுமானம், பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை. வெளிப்படாத, வெளிப்படவே படாத, வெளிப்படுத்தவே மாட்டான் என்று சொல்லப்படுகின்ற நூலின் மீது தங்களுக்கு நிச்சியமான நம்பிக்கை.? இது என்ன மாதிரியான நம்பிக்கை?//

வெளிப்படுத்தப்பட்ட அந்த ஓழைச்சுவடியால் மனிதவாழ்கையின் எதிர்காலத்தை பற்றி உண்மையை கூற முடியவில்லையே! அந்த ஓழைச்சுவடி வெளிப்படுத்தப்பட்டும் நம்பமுடியவில்லையே.

ஆனால் வேளிப்படுத்தப்படவில்லை என்று நான் கூறும் நூலில் மனிதவாழ்க்கையின் எதிர்காலத்தைப்பற்றி மிகத்துள்ளியமாக சிறிதும் பிசகின்றி எழுதப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான். ஆக வெளிப்படுத்தப்படாத நூலாக இருந்தாலும் அதில் உள்ளது அப்படியே நடக்கிறது என்றால் அந்த நூலை நம்புவதில் எந்த கஷ்டமும் இல்லை.

//எங்களுடைய நம்பிக்கையும் அதுதான். சாதாரண மனிதனையோ மற்றதையோ கடவுளாக பார்ப்பதில்லை.//

அப்ப எதை கடவுளாக பார்கின்றீர்கள் சஹோதரரே...?

Senthil Nathan தாங்கள் நம்பும் கடவுளின் சாட்சியாக கடையாக நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் புரிந்தே பதில் தந்துள்ளீர்களா? புரியவில்லையா? சமாளிக்கீர்களா? மற்றவைகள் தகுந்தாற்போல் இருந்தது. இந்த பதில்கள் அப்படியாக இல்லை, இந்த கேள்வியில் குறுக்குகேள்வி எழுப்பாமல் மேற்கூறிய நான்கு கேள்விகளை மீண்டும் வாசித்து பதில் தாருங்கள், ஆரோக்கியமானதாக இருந்தால் கண்டிப்பாக தொடருவோம், ஏதேனும் விடயங்கள் தெரிந்து தெளிந்துகொள்ளும் நோக்கிலேயே தான் என்னுடைய கேள்விகள். இன்னும் அனேக சந்தேகங்கள் உள்ளது. ஒரு தலைப்பையே விவாதித்துள்ளோம். இறைவனின் நாட்டம் இருந்தால் மீண்டும் கலந்து உரையாடுவோம், அநேக பதில் தந்தமைக்கு நன்றிகள். திரு Dawwah Messanger Al Haqq அவர்களே.

Dawwah Messanger Al Haqq அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வின் மீது ஆனையாக நான் புரிந்துதான் பதிலலித்தேன். ஆனால் நான் சொன்ன பதிலை நீங்கள் புரியாதது போன்று காட்டிகொள்கிரீர்கள். நான் நீங்கள் கடைசியாக கேட்ட நான்கு கேள்விகளுக்கும் பதிலலிக்கும் போது சில கேள்விகள் கேட்டேன் அதற்க்கு நீங்கள் பதிலலிக்காமல் எவ்வாறு விவாதத்தை முடிப்பது.
கேட்ட கேள்விக்கு பதிலலிக்க முடியாமல் நீங்கள்தான் சமாளிப்பது போன்று உள்ளது.
குருக்கு கேள்வி கேட்பதில் தவறில்லை. நீங்கள் கடைசியாக கேட்ட கேள்வியை போன்று குருட்டு கேள்விதான் கேட்ககூடாது. சரி சஹோதரரே எதிர் கேள்வி கேட்டதும் விவாதத்தை முடிக்கலாம் என்கிறீர்கள்.
சரி உங்களின் விருப்பம்.

எனக்குத் தேவை பகுத்தறிவு ஏற்று கொள்வது போன்ற ஒரே ஒரு பிழை. முடியுமா சவால்?

நன்றி சஹோதரே

Senthil Nathan முதலில் தாங்கள் என்னை மன்னிக்கவும்,
தங்களில் மறுபதிப்பை சரியான விதத்தில் புரிந்துகொள்ளாமைக்காக. நான் சரியான விதத்தில் விளங்கிக்கொள்ளவே விரும்புகிறேன்.

ஒவ்வொன்று பதிவுக்கும் விளக்கம் பெறவே விரும்புகிறேன்.

[//எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா?//
நல்ல தொழிலை நேர்மையாக செய்வர்களே இல்லையென்று எதை வைத்து கூறுகின்றீர்கள்?
தவரான தொழிலை செய்தால் செய்கின்ற தொழிலும் தவறுதான் செய்பவரும் பிழையானவரே...]

தாங்கள் ஜோதிடம் பற்றிய கருத்து சொல்லும் போது
//நான் ஆய்வு செய்த வகையில் எந்த வகை ஜோதிடமாக இருப்பினும் சரி பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறைதான் ஜோதிடம், ஜோதிடம் என்பது ஒரு பொய்யான அனுமானமே.// என்று கருத்திட்டு இருந்தீர்கள், அதன் பொருட்டே -எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா?- என்று கேட்டேன். உதாரணத்திற்கு கடவுளுக்கு அடுத்ததாக மதிக்கப்படும் தொழிலான மருத்துவத்துறையில், மனித உறுப்புகளை திருடும் மருத்துவர்களும் இருக்கிறார்கள், போலியான மருத்துவர்களும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து மருத்துவ துறையே தவறானது என்று கூறுவீர்களா ? என்பது தான் என்னுடைய கேள்வி.

//நல்ல தொழிலை நேர்மையாக செய்வர்களே இல்லையென்று எதை வைத்து கூறுகின்றீர்கள்?//ஒவ்வொரு தொழிலிலும் நேர்மையானவர்களே அநேகர், ஒரு சில பணத்தாசை பிடித்த அரைகுரைகளால் தான் அந்த தொழிலுக்கே கெட்டபெயர் இதுவே என்னுடைய எண்ணம்.

இப்போது என்னுடைய கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
-எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா-
Dawwah Messanger Al Haqq //கடவுளுக்கு அடுத்ததாக மதிக்கப்படும் தொழிலான மருத்துவத்துறையில், மனித உறுப்புகளை திருடும் மருத்துவர்களும் இருக்கிறார்கள், போலியான மருத்துவர்களும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து மருத்துவ துறையே தவறானது என்று கூறுவீர்களா ? என்பது தான் என்னுடைய கேள்வி.//

சஹோதரரே... நீங்கள் கூரிய உதாரணம் நான் சொன்ன கருத்துக்கு பொருந்தாது என்கிறேன்.
காரணம் மருத்துவத்துறை நல்ல தொழில்தான் அதை உடல் உருப்புக்களை திருடி தவறான முறையில் செய்தால் இங்கு செய்யும் மருத்துவர் கெட்டவர்.
ஆனால் நான் சொன்ன கருத்து என்வென்றால் ஜோதிடத்துறையே பொய்யானது என்கிறேன், பின்னர் ஏமாற்று வேலையான இந்த ஜோதிடத்தை எவ்வாறு நல்லமுறையில் செய்வது? நல்லமுறையில் பொய் சொன்னால் ஏற்று கொள்ளமுடியாதே!
உதாரணமாக ஒரு கேள்வி கேட்கிறேன்,
திருட்டுத்தொழில்துரையையே நான் பிழை என்கிறேன் என்றால் அதை எப்படி நல்லமுறையில் செய்வது? திருட்டை நல்ல முறையில் திருடினால் ஏற்றுகொள்ள முடியாதே!

//ஒவ்வொரு தொழிலிலும் நேர்மையானவர்களே அநேகர், ஒரு சில பணத்தாசை பிடித்த அரைகுரைகளால் தான் அந்த தொழிலுக்கே கெட்டபெயர் இதுவே என்னுடைய எண்ணம்//

நீங்கள் கூரிய இந்த கருத்தை ஏற்க்க முடியாது காரணம், நல்ல தொழிழான மருத்துவத்துறையில் இருந்து கொண்டு தவறு செய்தால் மருத்துவரைத்தான் அனைவரும் கெட்டவர் என்று கூறுவார்கள், யாரும் மருத்துவத்துறையை குறை சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நான் கூறுவது என்வென்றால் கெட்ட தொழிலான ஜோதிடத்தை செய்பவர்கள் நேர்மையாளர்களாக இருக்கமுடியாது.ஜோதிடத்துக்கு கெட்ட பெயர் ஜோதிடம் பார்க்கும் நேர்மையற்றவர்களால் இல்லை, மாறாக ஜோதிடமே பொய்யான எதிர்வுகூறல் என்பதால்தான் ஜோதிடத்துக்கும் கெட்ட பெயர்,ஜோதிடம் பார்ப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.

//இப்போது என்னுடைய கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
-எந்த தொழிலில் ஏமாற்றுபவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? இதில் தொழில் பிழையானதா? அத்தொழிலை செய்பவர் பிளையானவரா-//

நீங்கள் பொருந்தக்கூடிய உதாரணத்துடன் பதில் சொல்லவில்லை.
அதனால் எனது பதிலிலும் மாற்றமில்லை.

நல்ல தொழிலை நேர்மையாக செய்வர்களே இல்லையென்று எதை வைத்து கூறுகின்றீர்கள்?
தவரான தொழிலை செய்தால் செய்கின்ற தொழிலும் தவறுதான் செய்பவரும் பிழையானவரே...

உங்களுக்கு ஒரு சவால் , நீங்கள்
பகுத்தறிவு பூர்வமாகவோ அல்லது விஞ்ஞானபூர்வமாகவோ ஜோதிடத்தை உண்மை என்று நிருபித்தால் நான் ஜோதிடம் நல்ல தொழில்தான் ஆனால் சில பொய் ஜோசியர்களால்தான் ஜோதிட தொழிலுக்கே கெட்ட பெயர் என்பதை நான் ஒப்புகொள்கிறேன், இது முடியுமா?
பதில்தரவும்.

Senthil Nathan நிருபிக்க என்ன செய்ய வேண்டும்?

Senthil Nathan தாங்கள் தங்களுக்கு தெரிந்த ஜாதகம் உள்ளவரின் ஜாதகத்தினையும் அதற்கான ஐந்து கேள்விகளையும் பதிவிடுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அறிந்து பதில் சொல்லுகிறேன்.

Dawwah Messanger Al Haqq உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சஹோதரரே...
ஒரு மனிதன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை இந்த உலகத்தில் எந்த வகையான ஜோசியகாரனாலும் சொல்ல முடியுமா?
நினைப்பதும் மனித செயற்பாடுதானே!

அத்துடன்
நான் இன்னும் ஒரு கேள்வி கேட்டேன்.அதாவது ஜோசியம் மிக துள்ளியமாக இருக்கும் என்றால் ஏன் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்ச்சிகளாக ஜோதிடத்தை சட்டம் ஏற்க மறுக்கிறது?

இந்த கேள்விக்கு பகுத்தறிவிலான பதிலை கூறுங்கள் பார்க்கலாம்.
பின்னர் ஜோசியம் சரியானது என்பதை நானும் ஒப்புகொள்கிறேன்.

இறைவனுடைய விதியைபற்றிய ஏட்டில் மனிதன் நொடிக்குநொடி என்ன நினைப்பான் என்பது எழுதப்பட்டிருக்கும்.

Senthil Nathan //ஒரு மனிதன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை இந்த உலகத்தில் எந்த வகையான ஜோசியகாரனாலும் சொல்ல முடியுமா?
நினைப்பதும் மனித செயற்பாடுதானே!//

கண்டிப்பாக சொல்ல முடியாது. மற்றும் மனிதன் நினைத்ததெல்லாம் செயல்பாடு ஆகாது.

Senthil Nathan //ஜோசியம் மிக துள்ளியமாக இருக்கும் என்றால் ஏன் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்ச்சிகளாக ஜோதிடத்தை சட்டம் ஏற்க மறுக்கிறது?//

இறைவனால் சொல்லப்பட்ட இறைச்சட்டம் மனித குலத்திற்கே பொருத்தமானது, சரியானது என்று சொல்லபடுகிறது. ஆனால் அதனை எல்லோரும்(பெரும்பாலானோர்) பயன்படுத்தாததினால் அது நம்பக்கூடியதன்று என்று சொன்னால் அது ஏற்புடையதா
Dawwah Messanger Al Haqq //கண்டிப்பாக சொல்ல முடியாது. மற்றும் மனிதன் நினைத்ததெல்லாம் செயல்பாடு ஆகாது.//
நினைத்ததெல்லாம் செயல்பாடாகாது என்று கூறினீர்கள்,இதை ஏற்க்க முடியாது, காரணம் எதை நினைத்தாலும் மனிதனுடைய மூளை வேலை செய்யும் மூலைக்கு வேலை கொடுத்தால் மனித உடலில் சக்தி இழக்கப்படும். நடந்தால் எவ்வாறு மனித சக்தி கூறையுமோ அவ்வாறு ஒரு விடயத்தை நினைத்து பார்க்கும் போதும் மனித சக்தி குறையும் என்பதால் நினைப்பதனைத்தும் செயற்பாடுதான்.

ஆக ஒரு மனிதன் இந்த வயதில்தான் திருமணம் செயலை செய்வான் என்று ஜோதிடன் எதிர்காலத்தை சரியாக கூறூகிறான் என்று நீங்கள் கருதினால் மனிதனின் மனதில் நினைக்கும் செயற்பாட்டை ஏன் ஜோதிடனால் கூறமுடியாது?
இதிலிருந்து மனிதன் ஜோதிடம் என்ற பொய்யை நம்பி ஏமாற்றப்படுகிறான் என்பது தெரிகிறது.

//இறைவனால் சொல்லப்பட்ட இறைச்சட்டம் மனித குலத்திற்கே பொருத்தமானது, சரியானது என்று சொல்லபடுகிறது. ஆனால் அதனை எல்லோரும்(பெரும்பாலானோர்) பயன்படுத்தாததினால் அது நம்பக்கூடியதன்று என்று சொன்னால் அது ஏற்புடையதா ?//

நான் கேட்ட கேள்விக்கும் நீங்கள் சொன்ன இந்த பதிலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஜோதிடத்தை உண்மையான சாட்ச்சியாக எந்த சிறுபான்மை அரசாங்கம் நம்புவதாக நீங்கள் கூறுகிரீர்கள்?
இன்றைய உலகில் எந்த சிறுபான்மை அரசாக இருந்தாலும் சரி பெரும்பான்மை அரசாக இருப்பினும் ஜோதிடத்தை நம்புவதில்லை, காரணம் ஜோதிடம் பொய் என்பதால்.

ஆக ஜோதிடம் பற்றி நான் கேட்ட கேள்விக்கு பகுத்தறிவுபூர்வமாக பதில் சொல்லவில்லை. என்கிறேன்.

ஆகவே நீங்கள் கூறும் ஜோதிடஓலையை நான் நம்பும் விதியின்புத்தகத்துடன் ஒப்பிடவே முடியாது.

Senthil Nathan //இதை ஏற்க்க முடியாது, // முதலில் ஜோதிடம் என்பது ஒருவர் மனதில் நினைப்பதை எல்லாம் கூறுவதோ, தங்கள் இறைவன் எழுதி வைத்திருப்பதாக நம்பும் விதி நூல் போன்று நொடிக்கு நொடி குறிப்பிடுவதோ அல்ல. ஒரு மனிதனின் முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடுவது ஆகும்.
ஜோதிடத்தை உண்மை என வாதிடவும் இங்கு நான் வரவில்லை,அது என்னுடைய நோக்கமும் அல்ல. மறைவானதை இறைவன் மட்டுமே அறிவான் என்கிறீர்களே இவர்கள் யார்? இவர்கள் வைத்திருக்கும் ஏடு எத்தகையது? https://www.youtube.com/watch?v=9j4IjMrX7Pw
After one and a half hours my leaf was found! What was written on it…
YOUTUBE.COM

Senthil Nathan தங்களின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்.



பச்சை தமிழன் பிழை என்றால் என்ன? எது நடந்தால் அது பிழை? ஏனெனில் பிழை கூறாலாம் ஆனால் நீங்கள் அதை பிழையாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். இறைவன் சொன்னால் அதனால் அது பிழை இல்லை என்று சொல்வீர்கள்.

Dawwah Messanger Al Haqq பிழையைதான் பிழையென்று ஏற்க முடியும்,இறைவன் கூறியது பிற மனிதனை பாதிக்காது என்பதால் அதை எவ்வாறு பிழை என்று கூறுவது?
இறைவன் கூரியது நிருபிக்கப்பட்ட விஞ்ஞானத்துக்கு முரணாக இருந்தால் அது இறைவன் சொல்லவில்லை என்று தெரிந்து விடும்.
எனக்கு தேவை ஒரே ஒரு காரணம்தான் சஹோதரரே ...


محمد توفيق பரிணாமம் பற்றி தங்கள் கருத்து என்ன

பச்சை தமிழன் இன்று செய்தால் தண்டனை மற்றும் தவறு அப்படி ஒரு செயலை முன்னர் செய்யலாம் என இறைவன் சொல்வாரா? அப்படி சொன்னால் அது பிழையா? இல்லை இறைவன் சொல்கிறார் என்பதால் பிழை இல்லையா?

Dawwah Messanger Al Haqq சஹோதரரே உங்கட மூளையை கொஞ்சம் யூஸ் பன்னுங்கோ...
சரி எது? தவறு எது? என்பதை தீர்மானிக்கும் முழூ அதிகாரமும் இறைவனுக்குதான் இருக்கிறது.

உதாரணமாக ஒரு அம்மா தனது பிள்ளையிடம் நேற்று மழை பேய்ததால் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என்று கட்டளை இட்டால், நேற்று அந்த பிள்ளை அம்மாவின் பேச்சை கேட்காமல் வெளியே போனால் அது தவறு.
இன்று மழை பேயவில்லை, அதனால் பிள்ளை வெளியே செல்ல அம்மா அனுமதிக்கிரால்,ஆக இன்று வெளியே செல்வது தவறில்லை.
நேற்று அம்மா தவறு என்று கூரியது இன்று தவறில்லை, இங்கு தவறு சரியென்பதை சூழலை வைத்து அம்மா தீர்மானிக்கிறால்,
இதை எவ்வாறு அறிவுகெட்ட தனம் என கூறமுடியாதோ
அதே போன்று இறைவனும் சூழலுக்கு ஏற்றவாறு சில சட்டங்களை இட்டு நேற்றய சூழலுக்கு அதை சரி என்கிறான், இன்றைய சூழலுக்கு அதை பிழை என்கிறான்.
இதை எவ்வாறு நீங்கள் அறிவுகெட்டதனம் என்று கூறுகிரீர்கள்.

உதாரணமாக இஸ்லாத்தை பொருத்த வரையில் இறைவனுடைய கட்டளையை மனிதன் நிறைவேற்ற வேண்டும்.
இறைவனுடைய விருப்பம் முதல் சொடி ஆண் பெண்ணில் இருந்து மனித இனம் பெறுக வேண்டும் என்பதே...
ஆகவே அன்றய சூழலில் சஹோதரன்கள் தனது சஹோதரிகளை திருமணம் முடிக்க இறைவன் அநுமதித்திருந்தான், இந்த கட்டளையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் இறைவனின் இந்த சித்தத்தை நீங்கள் எதை வைத்து பிழை என்கிறீர்கள்.

இன்று கூட பிறந்த சஹோதரியை திருமணம் வேண்டிய அவசியம் இல்லை,காரணம் ஒரே வயிற்றில் பிறக்காத பெண்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்,இறைவன் அவனது சித்தத்தின்படி கூட பிறந்த சஹோதரியை திருமணம் செய்ய கூடாது என்கிறான், இந்த சட்டத்திலும் யாரும் பாதிக்கப்பட போவதில்லை.
ஆக தான் விரும்பியவாறு மனிதனை சூழலுக்கு ஏற்றவாறு கட்டளைகள் இட்டு சோதிப்பதை நீங்கள் எதை வைத்து தவறு என்கிரீர்கள்?

தயவு செய்து தலைப்பை விட்டு வெளியே செல்லாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவும் சஹோதரரே...


Friendy Lam Pilai irunthal thankal therivikkalam nanbah

Friendy Lam Ethil pilai enpathai piraku parpom

பச்சை தமிழன் இன்று செய்தால் தண்டனை மற்றும் தவறு அப்படி ஒரு செயலை முன்னர் செய்யலாம் என இறைவன் சொல்வாரா? அப்படி சொன்னால் அது பிழையா? இல்லை இறைவன் சொல்கிறார் என்பதால் பிழை இல்லையா?

Friendy Lam Pirantha kulanthaikku pal than kodukka vendum bannum purotavum koduka kudathu
Athu valara valara than athan thevaikal nivarthe seiyapadum


பச்சை தமிழன் நல்ல பதில்.. குழந்தைகள் பால் குடிக்கலாம் அது பிழை இல்லை வளர்ந்த பின் பாலும் குடிக்கலாம் புராட்டாவும் சாப்பிடலாமே?? வளர்ந்த பினனும் பால் குடிப்பது தவறு இல்லையே??

பச்சை தமிழன் நான் கேட்டதிற்கும் நீங்கள் சொன்ன பதிலுக்கும் சம்பந்தமில்லை .. அதை கொண்டே கேட்கிறேன் .. முதலில் பால் தான் குடிக்கவேண்டும் என்ற சூலலை ஒருவாக்கிவிட்டு வளர்ந்த பின் பால் குடித்தால் குற்றம் என்று சொன்னால் அது பிழையா இல்லை இறைவன் சொல்கிறார் என்பதால் பிழை இல்லை என்று சொல்வீர்களா?

Friendy Lam Athu kidakkattum.
Vilaiyadum kulanthaiku anaithu vilaiyattu porulum kodukkum nam viparetha porutkalai kodukka marukkinrom en enpathai ippothu ariverkal nanbareh


Friendy Lam Nadodi Tamilan Sako patchai tamilanukku vilakkam kurunkalSee translation

Nadodi Tamilan பச்சை தமிழன் நீங்கள் எதைப் பற்றி கேட்கின்றீர்கள் என்று புரியவில்லை. சிறிது விளக்கமாக சொல்லுங்களேன்.
ஒன்றை முதலில் அனுமதித்து விட்டு பிறகு தடுத்தது பற்றி சொல்கின்றீர்களா? எந்த சட்டம் என்று விளக்கமாக சொல்லுங்கள்.


Nadodi Tamilan நேரம் கிடைக்கும்போது அவசியம் பதிவு செய்கின்றேன்.

Dawwah Messanger Al Haqq சஹோதரரே உங்கட மூளையை கொஞ்சம் யூஸ் பன்னுங்கோ...
சரி எது? தவறு எது? என்பதை தீர்மானிக்கும் முழூ அதிகாரமும் இறைவனுக்குதான் இருக்கிறது.

உதாரணமாக ஒரு அம்மா தனது பிள்ளையிடம் நேற்று மழை பேய்ததால் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என்று கட்டளை இட்டால், நேற்று அந்த பிள்ளை அம்மாவின் பேச்சை கேட்காமல் வெளியே போனால் அது தவறுஇன்று மழை பேயவில்லை, அதனால் பிள்ளை வெளியே செல்ல அம்மா அனுமதிக்கிரால்,ஆக இன்று வெளியே செல்வது தவறில்லை.
நேற்று அம்மா தவறு என்று கூரியது இன்று தவறில்லை, இங்கு தவறு சரியென்பதை சூழலை வைத்து அம்மா தீர்மானிக்கிறால்,
இதை எவ்வாறு அறிவுகெட்ட தனம் என கூறமுடியாதோ
அதே போன்று இறைவனும் சூழலுக்கு ஏற்றவாறு சில சட்டங்களை இட்டு நேற்றய சூழலுக்கு அதை சரி என்கிறான், இன்றைய சூழலுக்கு அதை பிழை என்கிறான்.
இதை எவ்வாறு நீங்கள் அறிவுகெட்டதனம் என்று கூறுகிரீர்கள்.

உதாரணமாக இஸ்லாத்தை பொருத்த வரையில் இறைவனுடைய கட்டளையை மனிதன் நிறைவேற்ற வேண்டும்.
இறைவனுடைய விருப்பம் முதல் சொடி ஆண் பெண்ணில் இருந்து மனித இனம் பெறுக வேண்டும் என்பதே...
ஆகவே அன்றய சூழலில் சஹோதரன்கள் தனது சஹோதரிகளை திருமணம் முடிக்க இறைவன் அநுமதித்திருந்தான், இந்த கட்டளையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் இறைவனின் இந்த சித்தத்தை நீங்கள் எதை வைத்து பிழை என்கிறீர்கள்.

இன்று கூட பிறந்த சஹோதரியை திருமணம் வேண்டிய அவசியம் இல்லை,காரணம் ஒரே வயிற்றில் பிறக்காத பெண்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்,இறைவன் அவனது சித்தத்தின்படி கூட பிறந்த சஹோதரியை திருமணம் செய்ய கூடாது என்கிறான், இந்த சட்டத்திலும் யாரும் பாதிக்கப்பட போவதில்லை.
ஆக தான் விரும்பியவாறு மனிதனை சூழலுக்கு ஏற்றவாறு கட்டளைகள் இட்டு சோதிப்பதை நீங்கள் எதை வைத்து தவறு என்கிரீர்கள்?

தயவு செய்து தலைப்பை விட்டு வெளியே செல்லாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவும் சஹோதரரே...


Dawwah Messanger Al Haqq ஒரு மனிதன் திருடுகிறான் என்றால் பொருளை பறிகொடுத்தவன் நேற்றும் பாதிக்கப்பட்டான் ,இன்றைக்கும் பாதிக்கப்படுகிறான், நாளைக்கும் பாதிக்கப்படுவான் ஆக இவ்வாறான செயல்களில் இறைவன் சட்டத்தை மாற்றி கூறமாட்டான். காரணம் எல்லா சூழலிலும் பொருளை பறி கொடுத்தவன் பாதிக்கப்படுவான் என்பதால்,

பச்சை தமிழன் ஈசா நபி காலத்தில் அல்லது அதற்க்கு முன் மது அனுமதிக்கப்பட்டது.. இன்று ஒரு சொட்டு உள்ளே நுழைந்தாலும் அது ஹராம்??? ஈசா நபி மது அருந்துவது தவறு என்று சொல்லவே இல்லையே?? அனுமதிக்க பட்டதாக குரானில் உள்ளதென என் நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன்..

Nadodi Tamilan //அனுமதிக்க பட்டதாக குரானில் உள்ளதென// இதற்க்கு ஆதாரம் வேண்டும் சகோ!

Nadodi Tamilan தெளிவான விளக்கம் இந்த கானொளியில் கிடைக்கும்

பச்சை தமிழன் இதேபோல் சகோதரர திருமணமும் அப்படிதான்.. அவசியம் ஏன் வந்தது இறைவன் ஒரு ஜோடிகளை படைத்ததன் காரணமாக தானே? இது தவறான படைப்பு என்று எண்ணம் தோன்றுகிறது...

Nadodi Tamilan இல்லை... இங்கேயும் பகுத்தறிவு தான் உள்ளது... நன்றாக சிந்தித்துப் பாருங்கள்....

ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தொடர்வது தான் அறிவுக்கு ஏற்றது.

உதாரணத்திற்கு, எல்லோரையும் ஒரே நேரத்தில் படைப்பது அறிவுப்பூர்வமானதா?

இறைவன் இரண்டு ஜோடிகளைப் படைக்க வல்லமை அற்றவன் அல்ல.


Dawwah Messanger Al Haqq உங்களுக்கு தவறான எண்ணம் தோன்றுவற்கான அடிப்படை என்ன?

ஒரே பெற்றோர்களில் இருந்து வந்ததால் மனிதவர்கத்தில் யாரும் உயர்ந்தவருமில்லை, தாழ்ந்தவருமில்லை என்ற சம சிந்தனையை ஏற்படுத்தவும் இறைவன் ஒரு சோடி மனிதரில் இருந்து மனிதவர்க்கத்தை பெருக வைத்திருக்கிறான். அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றால் தீண்டாமை ஒழிந்துவிடும்.

உங்களுக்கு தவறாக தோன்றுவதன் அடிப்படை என்ன?


பச்சை தமிழன் இதை நீங்கள் தவறு என்று கூற மாட்டீர்கள்.. மாறாக இறைவனின் விருப்பம் என்பீர்கள்..

பச்சை தமிழன் இப்போது திருடுவது போல மதுவும் எப்போது அருந்தினாலும் தவறு தானே???

Nadodi Tamilan தவறுதான்... நீங்கள் கேட்பது திருட்டுக்கு தண்டனை ஏன் முதலில் சொல்லவில்லை... பிறகு என் வந்தது.. என்று கேட்பது போல் உள்ளது ... இங்கேயும் முதல் கேள்வியின் உள்ள குழப்பம் தான் தெரிகின்றது...

Nadodi Tamilan நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பொது, என் குழந்தை வேண்டும்... ஒரு முழு மனிதனாகவே எல்லோரும் பெற்றுக்கொள்ளலாமே....smile emoticon

Nadodi Tamilan இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையை வைத்து கேட்கின்றீர்கள்... சிறுக சிறுக அந்த சமுதாயத்தை வழிபடுத்தி, மற்ற சமூங்கங்களுக்கு முன் மாதிரியாக திகழவே இறைவன் சிறிது சிறிதாக, அப்போதைய கால சூழக்கு ஏற்ப அருளினான். இறைவன் நாடியிருந்தால் ஒரு புத்தகமாகவே கொடுத்து இருக்க முடியும்.

Nadodi Tamilan இதுவும் குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கான சான்று...

எந்த ஒரு புத்தகமும் 20 வருட அளவில் எழுதினால் அது குப்பைக்குத் தான் போகும்... 20 வருடத்தில் எல்லாமே மாறிவிடும்... சிறுக சிறுக இறக்கப்பட்ட உஅலகம் அழியும் வரை அந்த சட்டங்கள் செல்லுபடியாகுமேன்றால் அது இறைச் சட்டமாகிய குரான் தான் என்பது மறுக்க முடியாத உண்மை சகோ.


Senthil Nathan எத்தனை இஸ்லாமிய நாடுகளில் திருக்குர்ஆன் சொல்லும் இறைச்சட்டம் முழுமையாக பின்பற்றபடுகிறது? இதற்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளும் இன்றளவும் செல்லுபடி ஆகிறதே?

Nadodi Tamilan இறைவன் நாடினால் நாளை தொடர்வோம் smile emoticon

Dawwah Messanger Al Haqq பச்சைத்தமிழனுக்கு,

மது அருந்துதல் இறைவனைப் பொருத்தவரையிலும் பத்தறிவுள்ள மனிதனை பொருத்தவரையிலும் எப்போதும் தவறுதான்....



இறைவன் எந்த ஒரு சமூகத்துக்கும் மது அருந்துங்கள் என்று கூறவில்லை.
ஆனால் நபி(ஸல்)அவர்களின் காலத்தில் அன்றைய அரபுகள் மதுப்பிரியர்களாக இருந்தனர்,
அவர்களிடத்தில் சென்று முதல் சட்டமாக நீங்கள் மது அருந்தகூடாது என்று இறைவன் கட்டளை இடுகிறான் என்று சொல்லி இருந்தால்,இறைவன் என்ற சொல்லுக்கே சரியாக இலக்கணம் தெரியாத அவர்கள்
"நீங்க சொல்பவர்களுக்கெல்லாம் நாங்கள் கட்டுப்பட முடியாது" என்று கூரி இறை கட்டளையை உதாசீனம் செய்திருப்பார்கள்.
எனவேதான் நபி(ஸல்)அவர்கள் முதலில் இறைவன் என்றால் எப்படிப்பட்டவன், அவனது பண்புகள்,அவனின் படைக்கும் திறமைகள்,சொர்க்கம், நரகம் போன்ற விடயங்களை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக அந்த மக்களிடம் கூரி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களின் மனதில் இறையச்சத்தை உருவாக்கிய பின்னரே மதுத்தடை சட்டத்தை இறைகட்டளைப்படி நபி(ஸல்)அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இறையச்சத்தால் பூரணமாக நிரம்பியிருந்த அந்த மக்கள் நபி(ஸல்)அவர்கள் மதுத்தடை சட்டத்தை கூரியதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மதுக்குவளைகளை மக்காவின் தெரு ஓரங்களில் உடைத்தெரிந்தாக வரலாறு கூறுகிறது.
இறைவனை பொருத்தவரையில்
மது அருந்துதல் எப்போதும் தவறுதான்,
ஆனால் நபி(ஸல்)அவர்கள் அந்த மக்கள் மனதை பக்குவப்படுத்தி அவர்கள் இறைவனுக்கு கட்டுபட்டு நடக்கும் மனோநிலையை அடையும் வரை மது அருந்துவதை தடுக்க நினைப்பது சரியான திட்டமிடல் இல்லை.
மாணவனுக்கு எழுத்துக்களை கற்று கொடுத்தபின்தான் வாசிக்க கற்று கொடுக்க வேண்டும்.

இறைவன் எந்த ஒரு சமூகத்துக்கும் மது அருந்துங்கள் என்று கூறவில்லை.
ஆனால் நபி(ஸல்)அவர்களின் காலத்தில் அன்றைய அரபுகள் மதுப்பிரியர்களாக இருந்தனர்,
அவர்களிடத்தில் சென்று முதல் சட்டமாக நீங்கள் மது அருந்தகூடாது என்று இறைவன் கட்டளை இடுகிறான் என்று சொல்லி இருந்தால்,இறைவன் என்ற சொல்லுக்கே சரியாக இலக்கணம் தெரியாத அவர்கள்
"நீங்க சொல்பவர்களுக்கெல்லாம் நாங்கள் கட்டுப்பட முடியாது" என்று கூரி இறை கட்டளையை உதாசீனம் செய்திருப்பார்கள்.
எனவேதான் நபி(ஸல்)அவர்கள் முதலில் இறைவன் என்றால் எப்படிப்பட்டவன், அவனது பண்புகள்,அவனின் படைக்கும் திறமைகள்,சொர்க்கம், நரகம் போன்ற விடயங்களை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக அந்த மக்களிடம் கூரி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களின் மனதில் இறையச்சத்தை உருவாக்கிய பின்னரே மதுத்தடை சட்டத்தை இறைகட்டளைப்படி நபி(ஸல்)அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இறையச்சத்தால் பூரணமாக நிரம்பியிருந்த அந்த மக்கள் நபி(ஸல்)அவர்கள் மதுத்தடை சட்டத்தை கூரியதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மதுக்குவளைகளை மக்காவின் தெரு ஓரங்களில் உடைத்தெரிந்தாக வரலாறு கூறுகிறது.
இறைவனை பொருத்தவரையில்
மது அருந்துதல் எப்போதும் தவறுதான்,
ஆனால் நபி(ஸல்)அவர்கள் அந்த மக்கள் மனதை பக்குவப்படுத்தி அவர்கள் இறைவனுக்கு கட்டுபட்டு நடக்கும் மனோநிலையை அடையும் வரை மது அருந்துவதை தடுக்க நினைப்பது சரியான திட்டமிடல் இல்லை.
மாணவனுக்கு எழுத்துக்களை கற்று கொடுத்தபின்தான் வாசிக்க கற்று கொடுக்க வேண்டும்.

Dawwah Messanger Al Haqq எனக்குத் தேவை என் பகுத்தறிவு ஏற்று கொள்வது போன்ற ஒரே ஒரு பிழை, முடியுமா? சவால்

Senthil Nathan விதி பற்றியும்அதன் வழியில் சொர்க்கம் நரகம் பற்றியும் விளக்கம் தேவை, முரணாக உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

Friendy Lam Arputhamana vilakkam sako.See translation

Friendy Lam Ippathivil ithu pothu manathe.

Friendy Lam Inshaallah Veru pathivil unkalai alaikinren.

No comments:

Post a Comment