Monday, March 14, 2016

கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று

ஏணையோருக்கும் பற்றுடன் மாலை வணக்கம். கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று பாகம் 1, ஒரு காலத்தில் தொண்டை நாடு, தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதிவரை பரவியிருந்தது, கடப்பா ஜில்லா, புல்லம்பேட்டை தாலுக்காவில் வடபெண்ணை நதியின் கிளைநதியே செய்யாறாம். இதன் மேற்கரையில் உள்ள மொத்த பகுதிக்கும் " பொத்தப்பி " நாடு என்று பெயராம். அரக்கோணம் குண்டக்கல் வழியே சென்றால் ராஜம்பேட்டையை அடையலாமாம். அங்கே தான் உடுக்கூர் என்று ஓர் கிராமம். இதன் மொத்த பரப்பளவும் தொண்டை நாட்டுக்கே சொந்தம். மலைகளால் சூழப்பட்ட ஊர் அது. அந்த ஊரில் வேடர்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. தெலுங்கு மொழிபேசும் அக்கூட்டத்தில் வேடர்குலம் உயர்ந்தகுலம். இதில் இன்னொரு பிரிவு குறவர்கள். இந்த இருபிரிவினருக்கும், வலிமைப் பொருந்திய " நாகன் " வேடன் தலைவனாக இருந்தான். உடுப்பூர் காட்டுக்கும் இவன் மன்னன். குறவர்கள் நரிகளையும் பூனைகளையுமே வேட்டையாடுவார்கள். பறவைகளையும் வலிமையான மிருகங்களை வேடவர்களே, வேட்டையாட வேண்டுமென பொத்தப்பி நாட்டின் சட்டம். அரசியின் பெயர் தத்தை. கைலாயத்திலிருக்கும் ஈசன் எண்ணினார். பிற்காலத்தில் இந்த நாகனும், தத்தையுமே கண்ணப்ப நாயனாரின் பெற்றோர்களாக இருக்க வேண்டும் என ஆசீர்வதித்தார். பயம், பக்தி இவை இல்லாதவர்கள் வேடர்கள். மிருகங்களின் தோலே இவர்களது ஆடை. இவர்களது உணவு கள், தேன், மாமிசமே. விஷந்தோய்ந்த அம்புகளுடன் திரிவதே இவர்களது வழக்கம். கள்ளமில்லாதவர்கள் தங்களது தொழிலிலும் செயலிலும் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், இவரது எண்ணங்களை இவர்கள் அறியா வண்ணம் இறைவன் நிறைவேற்றி வைக்கின்றார். நாகன் பூஜைக்கு செல்லும்போது சிலவேடர்கள் கேலி செய்தனர்.மிருக வலிமை கொண்டு ஒரே குறியால் காட்டு மிருகங்களை வீழ்த்திடற நீ, உன் மனைவிக்கு குழந்தை பாக்கியத்த கொடுக்க முடியலயே ! என்று கேலி செய்தார்கள். வயோதிக நிலையிலிருந்த சிலவேடர்கள் நாகா ! ஓயாமல் நீ பூஜை செய்வதில் என்ன லாபம் ? (தொடரும்)




கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று பாகம் 2. குழந்தை அருள் உனக்கு இல்லாததைப் போன்று, நீ பூஜை செய்யும் உன் குலதெய்வத்திற்கு பிள்ளை வரங்கொடுக்கும் சக்தி இல்லையோ ? என்று கைகொட்டி சிரித்தார்கள். இவ்வார்த்தையைக் கேள்விப்பட்ட நாகனும், அவர் மனைவி தத்தையும், பூஜை செய்து கடவுளை எண்ணி மனம் புழுங்கி அழுதார்கள். வேடர் குலத்தில் யார் எங்கு பூஜை செய்தாலும், அப்பூஜை பலித்து விட்டது என்று சொல்வதற்கு, ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் அருள்வந்து விடும். இவ்வகை அருள் பெண்களுக்கே வரும். இவர்களை தேவராட்டி என்பார்கள். இந்த குலத்தவரை பொத்தப்பி நாட்டு மக்கள் வணங்குவார்கள். நாகன் இனமக்கள் பூஜை செய்யும் போது அவர்களை அழைப்பார்கள். இவ்வகையான தேவராட்டியை தம் பூஜையின்போது அழைத்திருந்தான். அச்சமயம் அந்த தேவராட்டிப் பெண் ஆவேசங்கொண்டு ஆடி அருள் வாக்கு தந்தாள். நாகனே ! இனிமேல் உன் குலதெய்வத்திற்கு பூஜைப் போடாதே ! முருகனுக்குப் பூஜை போடு ! உனக்கு ஞானக்குழந்தை பிறக்கும் ! என்றாள். அவள் அருள் வாக்குப்படியே நாகன் தம்பதியினர் முருகனுக்கு பூஜைப் போட்டனர். சில நாட்களில் தத்தை கர்ப்பவதியானாள். ( கடவுளுக்குப் பூஜைப் போட்டால் குழந்தை எப்படிப் பிறக்கும் என்று தயவு செய்து கருதவேண்டாங்க. திடமனோதைரியமும், நல்ல சிந்தனையும், உள்ளன்போடு இறைபக்தியும் இருந்தாலே எல்லாம் கிட்டிடுங்க. கலக்கம், இறையின்மை, அவநம்பிக்கை. இருந்தால் எதுவும் கிட்டாதுங்க ) முருகனின் அருளாலும், சிவபெருமான் ஆசியாலும், ஒன்பது மாதங்களுக்குப்பின் தைமாதம். மிருகசீரிடம் நட்சத்தில் ஆண் குழந்தைப் பிறந்தது. வேடர்களின் கூட்டமும், குறவர்களின் கூட்டமும், பெரிய அளவில் அக்குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளைக் கொண்டாடினார்கள். வேடர்களின் சட்டப்படி தகப்பன் பிள்ளையை ஆகாயத்தில் தூக்கி உயர்த்திக் காட்டவேண்டும். இதுவே என்பிள்ளை என்று கோஷம் போட்டு கொக்கரிக்க வேண்டும். இவ்விழாவில் முருகனின் விளையாட்டைக்காட்ட ஆரம்பித்து விட்டான். மிருக வலிமைக் கொண்ட நாகனால் தரையில் போட்டிருந்த தன் குழந்தையை தூக்க முடியவில்லை. பலங்கொண்ட மட்டும் தூக்க ஆரம்பித்தான். (தொடரும்)



ஏணையோருக்கும் பற்றுடன் மாலை வணக்கம். கண்ணப்ப நாயனாருடைய இறைப்பற்றின் 4ஆம் பாகம். அந்த காளத்தி மலையின் தரிசனமே, திண்ணனாரின் வாழ்க்கையை இறைப்பற்றுள்ளவராக மாற்றுகிறது. காளஹஸ்தியில் உள்ள சிவனின் வலது பாகத்தில் சேர்ந்திருக்கின்ற அருளைப் பெற்றார் கண்ணப்பர். இதனால் முருகனின் அவதாரம் என்பதும், கையில் வில்லுடன் அலைவதே தொழில் என்பதால், முன்பு வில்லுடன் அலைந்த அர்ஜூணனே இவர் என்பது குறிப்பிடுகிறார்கள். சிவன் திண்ணனாரைத் தன் மலைக்கு வர. ஒரு உபாயம் செய்கின்றார். திண்ணனாரின் முன்னே காட்டுப் பன்றியாய் உருவெடுத்தார். திண்ணனாரும் அதை துரத்தினார். அது பிடிபடாமல் இவரை மலைமேல் இழுத்துச் சென்றது. திண்ணனின் இரு தோழர்கள் அதன் பின்னே ஓடினார்கள். பன்றி மலைமேல் மறைந்தது. திண்ணனார் மலை மலை ஏற ஏற. மக்களையும் நாட்டையும் மறந்தார். ஞானத்தைப் பெற்றார். இரு தோழர்களில் ஒருவர், காளத்தி ஈஸ்வரனைப் பற்றியும் சொன்னார். இதைக் கேட்ட திண்ணனார் எனும் கண்ணப்பர் கையில் வில் அம்புடன் இரவு பகலாக சிவலிங்கத்திற்கு காவல் இருந்தார். சாமிக்கு பூஜை செய்ய வேண்டுமே ! என எண்ணினார். ஆனால் இதற்கு முன்பே வேத முறைப்படி சந்தனமிட்டு, மலர்கள் தூவி லிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டிருந்து. சிவனின் மீது அதீத பக்தி கண்ணப்பனுக்கு, சிவலிங்கத்தை யாரோ அசிங்கம் செய்து வைத்திருப்பதாக தோன்றியது. அந்த பூஜையை செய்தவர். ஊருக்குள் வாழ்ந்து வந்த சிவகோசரியர் எனும், அந்தணரே வேத முறைப்படி பூஜை செய்பவர். கண்ணப்பர் மனதுக்கு தவறென்று பட்டதால், அந்தப் பூஜையைக் கலைத்தார். சாமிக்கு பசிக்குமே ! நாம் கொன்று வீழ்த்திய. இறைச்சியை லிங்கத்திற்குக் கொடுக்கலாம் என எண்ணினார். சாமியைத் தனியாக விட்டு விட்டு வருகிறோமே ! என்று அழுது கொண்டே பன்றி விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தார். கண்ணப்பரின் உதவியாளர்களான நாணனும், காடனும்.... தலைவா ! இப்பன்றி நீங்கள் எய்திய அம்பினால் வீழ்ந்தது தான். ( தொடரும் )



ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம். கண்ணப்ப நாயனாருடைய இறைப்பற்று. சிவலிங்கத்தையே அறியாத கண்ணப்பர் தோழனைப் பார்த்து நாணனே ! இதுயார் ? என்றார். தலைவா ! உச்சிமலைக்கே குடுமிமலை என்று பெயர். அதனால் இங்குள்ள சாமிக்கு குடுமிச்சாமி என்று பெயர். மெய்மறந்த திண்ணனாரின் நிலையை, தோழர்களும், உடனிருந்த வேடுவ வீரர்களும், திண்ணனாரெனும் கண்ணப்பரின் சிவபக்தியைக் கண்டு கண்கலங்கினார்கள். அவரை நாட்டுக்கு அழைத்தார்கள். சிவலிங்கத்தை விட்டு அவர்களுடன் செல்ல, மனமில்லாததால் நீங்கள் செல்லுங்கள் என்னை விட்டு விடுங்கள் என்றார். அவர்களும் அவரைத் தனியே விட்டு விட்டு அவர்களது வாழ்க்கைக்கு சென்றார்கள். காளஹஸ்தியில் சிலபடிகளைக் கொண்ட ஒரு சிறிய குன்று உள்ளது. அக்குன்றின் மீது இருக்கும். சிவலிங்கமே கண்ணப்ப நாயனார் முதன் முதலில் கண்ட குடுமிச்சாமி. கண்ணப்ப நாயனார் மூடவேடனாய் இருந்து தெய்வ பக்தியே அறியாதநிலையில் முதலில் இந்த சிவலிங்கத்தை தான் கண்டார். அந்த நாள்முதல் ஐந்து நாள் முழுவதும் பூஜை செய்தார். ஆறாம் நாள்பூஜையில் அவருக்கு சித்தி கிடைத்து, ஆணடவனுடன் ஐக்கியமாகி விட்டார். மலைமீது குடுமிச்சாமிக்கு அல்லும் பகலும் பயமாய் இருக்குமே,என்று கண்ணப்ப நாயனாருக்கு பயம் வந்தது, அதனால் அவருக்கு இரவும் பகலும் பாதுகாப்பாய் இருந்தார். இப்படியே சிலநாட்கள் கழிந்தது. சாமிக்கு பூஜைசெய்து நிவேதனம் செய்ய, நாயனார் பன்றியின் இறைச்சியைத் தீயில்சுட்டு,பல இறைச்சி துண்டுகளை தேனில் தோய்த்து,சிறிய மண்சட்டியில் நிரப்பிக்கொண்டார்.காட்டு நெல்லின் அரிசியினால் உணவு சமைத்தார்.அந்த உணவில் வேறுசில மாமிச துண்டுகளையும் பலவித காய்கறிகளையும் சமைத்து,ஒன்றாக கலந்து கொண்டார்.அடுத்து பொங்கல் சமைத்து எடுத்துக்கொண்டார். மரத்திலுள்ள பூக்களை உலுக்கினார். பூக்கள் உதிர்ந்து அவரது பரட்டைத் தலைமேல் வைத்துக்கொண்டார். சிவலிங்கத்தின் அபிஷேகத்திற்கு வேண்டிய நீரை, சுவர்ணமுகி ஆற்றிலிருந்து தனது வாயால், உறிஞ்சி நிரப்பிக்கொண்டு, குடுமிச்சாமியான சிவலிங்க சன்னதிக்கு வந்தார். தொடரு





ஏணையோருக்கும் பற்றுடன் காலைவணக்கம். 6ஆம் பாகம். கண்ணப்பநாயனார் குடுமிச்சாமி சன்னதி வந்துபார்த்தார். சிவலிங்கத்திற்கு இதற்குமுன் சிவகோசரியர் பூஜை செய்து விட்டுபோயிருந்தார். சிவலிங்கத்தின் தலைமீதும் பாதத்தின் அருகேயும் இருந்த பூக்களை,கண்ணப்பர் தனது செருப்புக்காலால், லிங்கத்தின் மீதிருந்த நெற்றிப்பொட்டையும், பூக்களையும் அப்புறப்படுத்தினார். வாயில்கொண்டு வந்தநீரை, லிங்கத்தின்மீது அபிஷேகமாக உமிழ்ந்தார். தன் தலையை ஆட்டினார். தலையிலிருந்த பூக்கள் சிவலிங்கத்தின் மீது பட்டது. பன்றியின் இரத்தத்தால் பொட்டு வைத்தார். மாமிசங்களை சிவலிங்கத்தைச் சுற்றிலும் வைத்துப் படைத்தார். இரவு முழுக்கப் பட்டினியாகக் கிடந்தார். சாமி நான் படைத்த உணவை நீ சாப்பிடவேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ண மாட்டேன் என்றார். சிவனின் சித்து விளையாட்டால் உணவுகளை, மறையச் செய்தார். தாம் படைத்த உணவு இல்லாததைக் கண்டு சந்தோஷப்பட்டார் நாயனார். அனுதினமும் இந்த பூஜையை செய்யலானார். சிவகோசரியர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யவந்தார். அங்கே பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். நாம் செய்த பூஜையை யாரோ ! தினம் தினம் கலைத்து அபச்சாரம் செய்கிறார்களேயென்று, அந்தணர் கண்கலங்கினார். ஐந்தாம் நாள் பூஜையின் போது சிவகோசரியர் சிவனிடம் அழுது புலம்பினார். ஆண்டவா இது என்ன சோதனை ? என்று, சிவபெருமான் அவர் முன் தோன்றி சிவகோசரியரே ! உமது பக்தியால் நான் பரவசமடைந்தேன். ஆயினும் எனது கண்ணப்பன் தான் அப்பூஜை செய்தான். நாளை கண்ணப்பன் எமக்கு அபிஷேக பூஜை செய்வதை, நீ மரத்தின் பின் மறைந்து பாரும். என்று சொல்லி மறைந்தார். ஆறாம் நாள் வந்தது. காலையில் சிவகோசரியர் மரத்தின் மறைவில் மறைந்து பார்த்தார். கண்ணப்பர் மாமிசப் பூஜை செய்ய வந்தவர். லிங்கத்தைப் பார்த்து அழுதார். பூஜைப் பொருட்கள் கீழே விழுந்து சிதறியது. சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இரத்தம் குபுகுபுவென்று கொட்டியது. கண்ணப்பர் தனது அழுகையைநிறுத்தி சிரித்தார். சிவலிங்கத்தின் கண்ணிற்கு மருந்துகண்டேன் என்று கோஷம்போட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தணர் ! சிவமந்திரத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தார். கண்ணப்பர் சொன்னார்.என்உடலும் மாமிசப் பிண்டமே எனக்கும் அடிபட்டால் இரத்தம்வரும்.ஆகவே!மருந்து என்னிடம் உள்ளது.நீங்கப் பயப்படாதீங்க!எனதுகண்ணை உனக்குத்தரப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே !தனது வலது கண்ணைக்கூரிய அம்பினால்தோண்டி,எடுத்து சிவலிங்கத்தின் கண்ணில் அழுத்தினார்.








ஏணையோருக்கும் பற்றுடன் இரவுவணக்கம். கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று நிறைவு பாகம். கூறிய அம்பினால் தனது வலது கண்ணைத் தோண்டி எடுத்து சிவலிங்கத்தின் கண்ணில் வைத்து அழுத்தினார். கண் லிங்கத்தின் கண்ணில் ஒட்டிக் கொண்டது. உதிரம் கொட்டுவது நின்றது. இதைக் கண்ட கண்ணப்பர் ஆனந்தக் கூத்தாடினார். அதற்குள் அடுத்த கண்ணில் இருந்து இரத்தம் பீரிட்டு வந்தது. இக்காட்சியை மரத்தின் மறைவில் மறைந்து பார்த்திருந்த அந்தணரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன்னைவிட இவனே சிறந்த சிவபக்தன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். ஆண்டவா ! இனி எனக்கு பயம் இல்லை. எனது கண் உங்களுக்கு பொருந்தி விட்டது. மற்றொரு கண் என்னிடம் இருக்கின்றது. அதையும் தோண்டி எடுத்து, உங்கள் கண் குழியில் பொருத்தி நோயைக் கட்டாயம் தீர்ப்பேன் ! என்றார். தனக்கு ஒரு கண் இல்லாததால், தனது மறு கண்ணைத் தோண்டி, லிங்கத்தின் கண் குழியில் பொருத்த அடையாளம் தெரிய வேண்டுமே யோசனை செய்தார் நாயனார். இது தான் சரியென்று ! தனது செருப்புக்காலால் ஆண்டவனின் இரத்தம் வழிந்த கண்ணில் அடையாளத்திற்காக வைத்துக் கொண்டு, அம்பால் தனது மறு கண்ணைத் தோண்டினார். நாயனாரின் கண்களிலிருந்து இரத்தம் சிவலிங்கத்தின் மீதுபட்டு வழிந்தது. இதைப் பார்த்த அந்தணர் ஐயோ ஆண்டவனே ! இதென்ன சோதனை அய்யா என்று அலறினார். அந்த காளஹஸ்தி நகரமே பூகம்பம் வந்ததைப் போல் நடுங்கியது. சிவபூதங்கள் வானத்திலிருந்து பூமாரிப் பொழிந்தார்கள். சிவலிங்கத்திலிருந்து சிவபெருமானின் கை வெளியே வந்தது. " கண்ணப்பா நில் " என்று சிவபெருமான் கண்ணப்பனின் கையைப் பிடித்து இழுத்து தடுத்தார். சிவபெருமானின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்ததாம். சிவபெருமானின் ஸ்பரிச தீட்சையால் நாயனார் பழைய நிலையில் இரண்டு கண்களையும் பெற்றார். சிவபெருமான் சிவகேசரியருக்கும் காட்சித்தந்து அவரைப் பல்லக்கின் மூலம் கைலாயம் அனுப்பினார். கண்ணப்ப நாயனாரின் இறைபக்தியை நாடே அறிய வேண்டும் என்று, அவரை தனது வலது பாகத்தில் பாதி தெரியும்படியாய் சேர்த்துக் கொண்டார். தெலுங்கு பேசும் பொத்தப்பி நாட்டுத் திண்ணனார் என்பவர் அறுபத்து மூவரில் ஒருவரானதும், கண்ணை எடுத்து, சிவலிங்கத்தின் கண்ணில் அப்பியதால் (கண்+அப்ப)=கண்ணப்ப நாயனார். இதுவே காரணப்பெயராம். ( கடவுள் என்ற சுகம் எமக்கு முதல் அத்தியாயமே) தங்களுக்கு சகோதர சகோதரிகளே ! அடுத்தப்பதிவில் " எறிபத்த நாயனாரின் " இறைப்பற்றிப் பார்ப்போம். " திருச்சிற்றம்பலம் "





No comments:

Post a Comment