Monday, March 14, 2016

ஆன்மீக தகவல்கள்

சில குறிப்புகள் நம்புக்கையுடன் கடைப்பிடித்து நீங்களும் கோடீஸ்வரன் ஆகுங்கள்! இதை தான் ஸ்ரீ மஹா விஷ்ணு அஸ்ட்ரோ விரும்புகின்றது. வாழ்த்துக்கள்!!!
1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித
ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப ்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை
காலைப் பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு
அதிகரிக்கும்.
9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது
குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால்
பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்
கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு,
பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்
வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக
பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்
அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்
விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி
ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்
இல்லாதவர்
கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்
லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி
நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசியமுண்டாகி செல்வ வரத்து
உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை
மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை
அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் சேரும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம்
ஆகர்ஷணம் ஆகும்.
===================================================================




அம்பத்தூரில் ஒரு பட்டறையில் தினக்கூலி வேலை ஆனாலும் செய்த வேலைக்கு மாதந்திர சம்பளம். லீவு போட்டாலோ, விடுமுறை நாட்களுக்கோ சம்பளம் கிடைக்காத தொழிலாளிகளில் ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. இம் மாதிரியான கஷ்ட ஜீவன குடும்பங்களில் அனேக வீடுகளில் பிறந்த பிள்ளைகள் பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தால் கஷ்டம் எவ்வாறு விஸ்தரிக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அந்த தொழிலாளிக்கு நண்பர் ஒருவர். மகா பெரியவா பக்தர்.
இதோ பாருடா, நீ ஒரு நாள் காஞ்சிபுரம் போ. கருணைக் கடலான காஞ்சிப் பெரியவரை ஒரு தடவை சென்று தரிசித்து அவரது ஆசியைப் பெற்றுக் கொண்டு வா. அப்புறம் பாரேன், உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்", என்று தொழிலாளியின் நண்பர் யோசனை சொன்னார். அப்போதிலிருந்து அந்த ஏழைத் தொழிலாளி மனதில் காஞ்சி மகானைப் போய் ஒரு தரம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வேர் விட்டது.
முதலாளி ஒரு சில மாதம் கழித்து ஏதோ தொழில் சம்பந்தமாக வெளியூர் அனுப்பினார். போக வேண்டிய இடமும் காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பத்தை கொடுத்தது. ஆனதால் காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழி கேட்டுக் கொண்டு பெரியவா எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்குள் அப்போது ஒரு எண்ணம் தோன்றியது.
உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருப்பாராமே, இந்த சாமியாரைத் தான் எப்படிப் போய் பார்ப்பது? என்னை அவர் பார்ப்பாரா? என்கிற ஒரு சந்தேகத்தோடு அந்த தொழிலாளி யாரோ குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.
இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ.ஆரவாரமோ ஏதும் அந்த இடத்தில் தென்பட வில்லை
அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது. அது தான் ஆரவாரமில்லை. கூட்டமில்லையோ? "என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது. நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்றுஅவரது கண்கள் தேடியபோது, ஒரு வயதானவர் அவரது கண்களில் தென்பட்டார்.
வந்தவர் அவரிடம் கேட்டார்.
இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே. அவர் எங்கேபோயிருக்கார்?
அவரையா பார்க்க வந்தாய் ? யார் சொல்லி அனுப்பினது உன்னை?"
இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் தொழிலாளியின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால்வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் காஞ்சி பெரிய சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார்'' என்றார்.
"அவர் கிட்டே போய் உன்னுடைய சிரமங்களைச் சொன்னால் தீர்வு கிடைக்குமா என்ன?" என்று அந்த கிழவர் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்ட போது '
'ஏன் இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்'
வயதாவர் தொடர்ந்தார்.
"சிரமம், சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறேப்பா? அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..." என்று கிழவர் மேலும் சொன்னார்.
''இது எப்படிங்க சாத்தியம்?' நான் தானே அத்தனைகஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்குது . என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பாங்க ?"
வயதான பெரியவர் சிரித்தபடியே அந்த தொழிலாளியிடம் "இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க. உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத் தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.
இதைக் கேட்ட அம்பத்தூர் தொழிலாளிக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது. அவர் வயதானபெரியவரைப் பார்த்து,
"பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போலஇருக்கு. என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான். நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே. என்கிருக்கார்னும் தெரியலே, என்னை அவர் பார்ப்பாரோன்னும் சந்தேகமா இருக்கு. எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும். என் மொதலாளி கோவிப்பான். அதனாலே இங்கே காத்திருந்து அந்த சாமியாரை பார்க்கமுடியாது போலிருக்கு. எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது. எதோ உங்களாண்டை பேசினது னாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு
ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார்.
வயதானவர் முகத்தில் சிரிப்புடன் 'என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும்அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்த வண்ணம் ஒன்றுமே தோன்றாமல் மலைத்து நின்றார்.
அதுவரை அந்த சாதாரண தொழிலாளியிடம் அன்பாகப் பேசிக் கொண்டிருந்த அந்தத் தவ முனிவரைத் தரிசிக்க இப்போது ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.
இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகபேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் தொழிலாளி பக்தர் வியந்தார்.
"நமஸ்காரம் பண்ணிக்கிறேன் சாமி'' என்ற அந்த பக்தரை ஆசிர்வதித்தார் மகான்.
யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக்கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல்விலகின


======================================================================================



தெரியாத அதிசயங்கள்:
1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
2.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.
16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.
17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.
19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.
21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.
22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்

=====================================================================================


தீராத நோய்கள் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
ஓரு சிகப்பத் துணியில் உங்கள் வயது எண்ணிக்கைக்கு தக்கவாறு மிளகு வைத்து முடிந்து, அதை அகல் விளக்கில் வைத்து நெய் விட்டு சனிக்கிழமை ராகு காலத்தில் அமிர்த கடிகை நேரமான 9:20 - க்கு மேல் 9:30 - க்குள் காலபைரவருக்கு 19 - வாரம் தீபம் ஏற்றினால் தீராத நோயும் விலகும். ஏழரை சனி, அஷ்டமத்துச்சனியின் பாதிப்புகள்
அகலும்.

=======================================================================================




கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.
பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
3. சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]
*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]
9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]
13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]
கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.
கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.


=====================================================================


ஒரு சிஷ்யனின் கேள்வி ?
குருவே சிரஞ்சீவி என்றால் என்ன?
நான் சிரஞ்சீவி ஆக இயலுமா?
குருவின் ஞான விளக்கம்:
மகனே ஒருவன் தன்னை முதலில் யார் என்பதை உணர வேண்டும். பின்னர் தனது பிறவி நோக்கத்தை அறிய வேண்டும், தனது சரீரம் உருவான விதம் புரிதல் வேண்டும்.
சரீரத்தின் தாயான உயிரை உணர்தல் முக்கியம். உயிர் எனும் கடவுள் உணர்ச்சியாக சரீரம் எடுத்த திசைக்கு எதிர் திசையில் உணர்ச்சியினை ஒடுக்கி கவனத்தில் உயிராக பயணித்து உச்சிவெளி எனும்சிரசினில் சஞ்சாரம் செய்து பழக வேண்டும்.
சதா சர்வ காலமும் சிரசில் சஞ்சாரம் செய்பவனே சிரஞ்சீவியாக மரணத்தை வென்று நம் அனுமனை போல் வாழ்கிறான். அவனே இறை நிலை எனும் இயற்க்கை எனும் உயிரை அடைந்தவன்.
இவை யாவும் ஒருதேர்ந்த குருவின் முகாந்திரமாக அமைதல் அவசியம்.
அனுமனின் தியான ரகசியம் இன்னொரு பதிவில் பின்னாளில்.
உயிரே கடவுள்
பிடித்திருந்தால் பக்கத்தை share & Like செய்யுங்கள்.. மட்றவர்களுக்கு பயனுறும்...!


இது ஒரு உண்மைச் சம்பவம்!.
.
கடவுள் இருக்கிறாரா?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான்.
'கடவள் நல்லவராஃ'
'ஆம் ஐயா'
'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?
'ஆம்'
'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்?
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சுரி.........நாம் மீண்டும் ஆரம்பிப்போம், கடவுள் நல்லவரா'?
'ஆம் ஐயா'
'சாத்தான் நல்லவரா?'
'இல்லை'
'எல்லாரும் கடவுள் படைப்புதான் என்றால சாத்தான் எங்கிருந்து வந்தார்'?
கடவுளிடமிருந்துதான்'
'சரி இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா'?
'ஆம்'
'அப்படியனெ;றால் அவற்றை உருவாக்கியது யார்'?
(மாணவர் பதில் சொல்லவில்லை)
'இவ்வுலகதில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தனஃ'
(மாணவர் மௌனமாய் நிற்கிறார்)
விஷமங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல், கடவுளை கண்hல் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேள்வி பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா? வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?'
................................(மௌனம்)
'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித்தானே?'
'ஆம் ஐயா'
'நம் நடைமுறை வாழ்க்கiயிலும் சரி. பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி. ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி. எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது. கடவுள் இல்லை என்று இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?'
'ஒன்றுமேயில்லை, எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது'
'ஹம்ம்......நம்பிக்கை..........அதுதான் இப்போது பிரச்சனையே...'
ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
'ஐயா............வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?'
'நிச்சயமாக உள்ளது.'
'அதே போல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?'
'நிச்சயமாக.'
'இல்லை ஐயா, நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.'
(வகுப்பறையில் நிசப்தத்தில் ஆழ்கிறது)
'ஐயா................வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்ப நிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல குளிரை அளக்க முடியுமா? வேப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது
வெப்பம் இல்லை என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே – 240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.
(குண்டூசி விழும் சப்தம்கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
'சரி, இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா, அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?' 'ஆமாம் தம்பி, இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.'
'நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா, இருட்டு என்பதே வெளிச்சத்தின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணை கூச்ச செய்யும் ஒளி என பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்க முடியும். அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது, இல்லையா?'
'சரி தம்பி, நீ என்னதான் கூற வருகிறாய்?'
'ஐயா........நான் கூறுகிறேன், கடவுளைப்பற்றிய உங்கள் கருத்து பிழையானது.'
'பிழையா? ஏப்படி என்று விளக்கிக் கூற முடியுமா?'
'ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள் கெட்ட கடவுள், இருட்டு – வெளிச்சம், வெப்பம் - குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள். அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்க முடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத் தூண்டல்களினால்தான். மின்சாரத்தை அளக்க முடிந்த உங்களால் காந்தத் தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை. இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்பதமாகக் கருதுகிரீர்கள் உண்மையில் 'வாழ்வு இனி இல்லை' என்ற தன்மையே இறப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சரி, இப்பொழுது சொல்லுங்கள் ஐயா, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?' – கேட்டான் மாணவன்.
'இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமோனால், ஆம் அதுதான் உண்மை, குரங்கிலிருந்து மனிதன் உருவானான்' பேராசிரியர் பதிலுரைத்தார். 'உங்கள் கண்களால் மனிதப்பரிமான வளர்ச்சியை கண்டிருக்கிறீர்களா– மடக்கினான் மாணவன்.
(பேராசிரியர் தன் தலையை இல்லைதன் தலைமை இல்லை என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்)
மாணவன் தொடர்ந்தான், 'அப்படியென்றால். யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒரு வகையான அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உங்கள் கருத்து. அதை நிரூபிப்பதற்கு உங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப்படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள் இல்லையா? அப்படியானால், நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?'
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
'இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?'
(வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்கிறது)
'மாணவர்களே யாரவாத நமது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையாவது நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் நமது பேராசிரியரின் மூளையை தொட்டதோ, பார்த்ததோ, நுகர்ந்ததோ இல்லை அல்லவா, அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை! என்று. மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால் வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போகிறது)
'நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி' என்றார் பேராசிரியர்.
'அதுதான் ஐயா........ இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. பார்க்க முடியவில்லை என்றாலும், தொடமுடியவில்லை என்றாலும் உணர முடிந்த கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இதுதான் உலகத்தில் சகலமானவற்றையும் இயங்கிக்கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை'
இவ்வாறாக விவாதம் நிறைவுற்றது. இது ஒரு உண்மைச் சம்பவம்!
இறுதி வரை பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்,
வேறு யாருமல்ல.
ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் -நமது முன்னாள் குடியரசுத்தலைவர்


ஹோரைகள்
சூரிய ஹோரை:
**************
செய்யக்கூடியவை:
--------------------------
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் .
தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
ஹோரைகள் தரும் பலன்கள்
செய்யகூடாதவை :
---------------------------
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது
ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது
சந்திர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்
செய்ய கூடாதவை:
--------------------------
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.
செவ்வாய் ஹோரை
******************
செய்யக்கூடியவை :
-----------------------------
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .
செய்ய கூடாதவை:
--------------------------
கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .
புதன் ஹோரை
*************
செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புது கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.
செய்ய கூடாதவை:
--------------------------
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.
குரு ஹோரை
*************
செய்யக்கூடியவை :
---------------------------
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது.
புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.
சுக்கிர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.
சனி ஹோரை
************
செய்யக்கூடியவை :
--------------------------
சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம்.
செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை
போய்ப்பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க கூடாது.
தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.
ஹோரையை அறிந்து நற்காரியங்களை செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்
என்றும் நட்புடன்
m.சங்கர் குருக்கள் கீழ ஆம்பூர்
9865010385
ரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் .
தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
ஹோரைகள் தரும் பலன்கள்
செய்யகூடாதவை :
---------------------------
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது
ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது
சந்திர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்
செய்ய கூடாதவை:
--------------------------
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.
செவ்வாய் ஹோரை
******************
செய்யக்கூடியவை :
-----------------------------
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .
செய்ய கூடாதவை:
--------------------------
கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .
புதன் ஹோரை
*************
செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புது கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.
செய்ய கூடாதவை:
--------------------------
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.
குரு ஹோரை
*************
செய்யக்கூடியவை :
---------------------------
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது.
புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.
சுக்கிர ஹோரை
**************
செய்யக்கூடியவை :
---------------------------
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.
சனி ஹோரை
************
செய்யக்கூடியவை :
--------------------------
சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம்.
செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.
செய்ய கூடாதவை:
---------------------------
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை
போய்ப்பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க கூடாது.
தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.
ஹோரையை அறிந்து நற்காரியங்களை செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகள் 





தியானம் எளிய விளக்கம்:-
எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல.
அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம்.
அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும்.
உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.
முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம்.
எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம்.
அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை.
(அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).
உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம்.
கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது.
பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள்.
சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.
ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி.
உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.
அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும்.
உங்கள் பேச்சை மாற்றும்.
நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும்.
நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.
தியானம்.
உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம்.
பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள்.
சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்....
• நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு.
வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.
• இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள்.
• மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது.
தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.
• ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.
அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.
தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும்.
ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம்.
தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.
அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும்.
திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.
ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.



திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் மணி சாஸ்திரி. சுமார் 40 வருடங்களுக்கு முன் காஞ்சி மடத்தோடு தொடர்பு கொண்ட பலருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். சுத்தமான வைதீகக் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இருந்தாலும் தான் கொண்ட ஆசார அனுஷ்டானங்களை என்றென்றும் விடாமல், தொடர்ந்து மேற்கொண்டவர் மணி சாஸ்திரி. இவரது ஒட்டுமொத்த குடும்பமே மகா பெரியவா சேவையில் பூரித்து திளைத்தது.
இவருடைய அண்ணன் – ஹரிஹர சாஸ்திரி ஒரு காலத்தில் மயிலாப்பூரில் வைதீக காரியங்களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர்களுடைய தம்பியான சந்துரு சாஸ்திரி பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில் பூஜகராக இருந்தார்.
1979-களில் ராஜ்தூத் பைக் ஒன்று வாங்கினார் ஹரிஹரசாஸ்திரி. அப்போது அந்த விஷயம் மீடியாக்களில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. காரணம் – வைதீகம் போன்ற தொழிலில் இருப்பவர்கள் அப்போது சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்வது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. வைதீகக் காரியங்களில் இருக்கும் பலர் இன்றைக்கு பைக், கார் போன்ற வாகனங்கள் வைத்துக் கொள்வது சகஜம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் எல்லாமே நடையாத்தைரை தான். கொஞ்சம் தொலைவு நடக்கவேண்டும் என்றால் தான் பேருந்துகளில் பயணிப்பார்கள்.
ஹரிஹர சாஸ்திரிகள் பைக் வாங்கிய விஷயத்தை அப்போது பிரபலமாக இருந்த இல்லஸ்ட்ரேடட் வீக்லி இதழ் ‘பைக் வாங்கிய முதல் சாஸ்திரி’ என்று இவரது படத்தையும் போட்டு செய்தி வெளியிட்டது. மஹாபெரியவா கூட இது பற்றி ‘என்ன ஹரிஹர சாஸ்திரியாரே…பைக் வாங்கிட்ட போலிருக்கு’ என்று விசாரித்தாராம். இது ஒரு துணுக்குத் தகவல் தான். அனுபவத்துக்கு வருவோம்.
1983-ல் சென்னை பெசண்ட் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் மணி சாஸ்திரி. மாதாமாதம் சுமார் 400 ரூபாய் வாடகை. மஹாபெரியவா சேவைக்காக அவ்வப்போது காஞ்சிபுரம் சென்று பெசண்ட் நகர் வீட்டுக்குத் திரும்பி வருவது வழக்கம். பெரியவா காஞ்சிமடத்தில் இருக்கும் காலகட்டங்களில் குடும்பத்துடன் சென்று சேவை செய்வார் மணி சாஸ்திரி.
ஒருமுறை பெசண்ட்நகர் வீட்டில் இருந்த மணிசாஸ்திரி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவருக்குத் திடீரென என்ன ஆயிற்று என்று குழம்பிய வீட்டார், தங்கள் குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான டாக்டர் பி.ஆர்.ஷெட்டியிடம் அழைத்துப் போனார்கள். மணிசாஸ்திரியைப் பரிசோதித்துப் பார்த்த ஷெட்டி இவரை உடனடியாக ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனாலும் மணிசாஸ்திரியின் பொருளாதார நிலை பற்றி நன்கு அறிந்தவர் ஷெட்டி. எனவே தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து அடையாறு பகுதியில் இருக்கும் வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையில் சேரச் சொல்லி அனுப்பினார்.
அதன்படி பதறிப் போனவர்கள், மணி சாஸ்திரியை அழைத்துக் கொண்டு V.H.S.மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அட்மிஷனும் உடனடியாகக் கிடைத்தது. பலதரப்பட்ட மருத்துவர்களும் வந்து மணிசாஸ்திரியைப் பரிசோதித்தார்கள். ஏராளமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் உடலில் எக்கச்சக்க காம்ப்ளிகேஷன் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருவாரம் இங்கேயே சிகிச்சை செய்வோம். அதன் பிறகு பார்ப்போம் என்றார்கள்.
மணி சாஸ்திரிகளிடம் இருந்து பேச்சே இல்லை. உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை. குடும்பத்தினர் அனைவரும் கலங்கினர். மஹாபெரியவாளுக்கு சேவை செய்தே தேய்ந்து போன இந்த தேகத்தை அந்த மகானே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தனர்.
டாக்டர்கள் சொன்ன ஒரு வாரம் முடிந்தது. ஆனால் மணி சாஸ்திரியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் தோற்றுப் போயினர். இந்த நிலையில் ‘நாளை இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்’ அதுதான் நல்லது’ என்று சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொன்னார்கள் டாக்டர்கள். அடுத்து என்ன செய்வது என்றே அந்தக் குடும்பத்தினருக்குப் புரியவில்லை. கண்ணீர் மல்க நின்றனர் அனைவரும்.
அப்போது ஹரிஹர சாஸ்திரி மருத்துவமனைக்கு வந்தார். படுக்கையில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த தம்பி மணிசாஸ்திரியிடம் சென்றார். தம்பியை இந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு. ‘கவலைப்படாதடா….உனக்கு ஒண்ணும் இல்லை. காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்த்திட்டு வருவோம் வாடா’ என்றார் தம்பியிடம் சுவாதீனமாக. மணிசாஸ்திரியிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. கேட்கக் கூடிய கேள்வியை உள்வாங்கிக் கொள்பவர்களால்தானே பதில் சொல்லமுடியும்? இப்போது தான் மணி சாஸ்திரி அந்த நிலையில் இல்லையே.
உடன் இருந்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் பதறிப் போனார்கள். உடலில் அசைவே இல்லாமல் இருக்கும் இவரை எப்படி காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போவது? அது ரொம்பவும் ஆபத்தானது என்று சட்டென்று மறுத்துப் பேசினார்கள். ஹரிஹர சாஸ்திரியைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.
மணி சாஸ்திரி வராவிட்டால் என்ன? அவன் சார்பாக நானே போய் மஹாபெரியவாளைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். அந்தக் கருணை தெய்வம் தான் இவனை உயிர்ப்பிக்க வேண்டும். நிச்சயம் இவனைக் காப்பாற்றும் என்று ஹரிஹர சாஸ்திரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டார்.
தம்பி மணி சாஸ்திரியை அவர் முன்பு இருந்த பழைய உற்சாக நிலையில் பார்த்துவிடத் துடித்தார் ஹரிஹர சாஸ்திரிகள். ‘மணி சாஸ்திரியை எப்படியாவது காஞ்சிபுரம் கூட்டிப்போனால், மகா பெரியவாளைப் பார்த்ததுமே எழுந்து உட்கார்ந்து விடுவான். ஆனால், அவன் இப்போது இருக்கும் நிலையில் காஞ்சிபுரத்துக்கு எப்படிக் கூட்டிப்போவது?’ என்று தீவிரமாக யோசித்தார் ஹரிஹர சாஸ்திரிகள்.
‘மணி சாஸ்திரியை எப்படியாவது காரில் உட்கார வைத்து காஞ்சிபுரம் கூட்டிப் போய் விடுவது’ என்ற ஹரிஹர சாஸ்திரிகளின் கருத்தை, குடும்பத்தினர் உட்பட மருத்துவர்கள் எவருமே ஏற்கவில்லை. அது மணி சாஸ்திரியின் தற்போதைய உடல் நிலைக்கு உகந்ததல்ல என்று கருத்து தெரிவித்தனர் அடையாறு வி.ஹெச்.எஸ். மருத்துவர்கள்.
“சரி… மணி சாஸ்திரியின் சார்பாக நான் காஞ்சிபுரம் புறப்படுகிறேன். அந்தக் கருணை தெய்வத்திடம் கண்ணீர் மல்க வேண்டுகிறேன். பயன் இல்லாமலா போகும்?” என்று திடமான நம்பிக்கையுடன் தன் குடும்பத்தினரிடம் சொன்ன ஹரிஹர சாஸ்திரிகள், அன்று இரவே காஞ்சிபுரம் கிளம்பத் திட்டமிட்டார்.
இவர்களின் குடும்பத்தின் மீது அபாரமான அன்பும் தீவிர மரியாதையும் கொண்ட, ‘பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த அன்பர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்களின் முயற்சியால் பயணத்துக்கு ஒரு காரும் ஏற்பாடானது. அந்த காரில் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரம் புறப்படத் தயாரானார்கள்.
ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்படத் தயாரான அதே இரவு. நேரம் மணி 11. இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துக்கு வருவோம்.
மடத்தில் பூஜைகளைப் பார்த்துவிட்டு, மஹா பெரியவாளையும் தரிசித்துவிட்டு, இரவு ஆகாரத்தையும் முடித்து, பக்தர்கள் பலரும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டிருந்தார்கள். மடத்திலேயே தங்கி மறுநாளும் மஹா ஸ்வாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அனுக்கிரகமும் உள்ளவர்கள் மட்டும் மடத்தில் இரவு தங்கி இருந்தார்கள். நேரம் ஆகி விட்டபடியால், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்கப் போய்விட்டார்கள்.
கிட்டத்தட்ட காஞ்சி மடமே அமைதியான சூழ்நிலையில் இருந்தது. இரவு காவல் காக்கும் பணியில் உள்ள வாட்ச்மேன், மடத்தின் பிரதான கதவைப் பூட்டுவதற்காக முனைந்து கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்து, ஒரு சீடனை அனுப்பி அந்த வாட்ச்மேனைக் கூட்டிவரச் சொன்னார் மகா பெரியவா.
‘கதவைப் பூட்டுகிற வேளையில் பெரியவா வரச் சொல்கிறாரே…. ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது’ என்று தனக்குள் பரபரத்த வாட்ச்மேன், தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து அவசர அவசரமாக இடுப்பில் சுருட்டிக் கட்டிக் கொண்டு, மடத்துக்குள் விரைந்தார்.
பெரியவாளைப் பார்த்ததும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டார்.
பிறகு வாட்ச்மேனிடம் பெரியவா, “கதவைப் பூட்டிடாதே… மெட்ராஸ்லேர்ந்து ஹரிஹர சாஸ்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வருவான். கதவைப் பூட்டிட்டா அவனுக்குக் கஷ்டமா போயிடும். அவன் வந்தப்பறம் பூட்டிக்கோ” என்று சொல்ல, பெரியவாளின் ஞான திருஷ்டியைக் கண்டு பரவசப்பட்ட வாட்ச்மேன், “அப்படியே ஆகட்டும் சாமீ” என்று மீண்டும் கும்பிடு போட்டு, வெளியே நடந்தான்.
மடத்தின் மெயின் ‘கேட்’ அருகே வந்தவன், கதவைப் பூட்டாமல், அங்கேயே ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கியது.
ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அந்த கார், காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலில் ‘கிறீச்’சிட்டு நின்றது.
இதைத்தானே வாட்ச்மேனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்?!
முதலில் ஹரிஹர சாஸ்திரிகள் காரில் இருந்து இறங்க, வாட்ச்மேன் பரவசமானான். “வாங்க ஐயரே… நீங்க இன்னிக்கு ராத்திரி, மடத்துக்கு வருவீங்கன்னு சாமீ இப்பதான் அரை மணி நேரம் முன்னே சொன்னாரு… உங்களுக்காகக் கதவைக்கூட பூட்ட வேண்டாம்னு சாமீ சொல்லிச்சு. வாங்க, வாங்க” என்று வரவேற்றான். ஹரிஹர சாஸ்திரிகளை முன்னே அறிந்தவர்தான் இந்த வாட்ச்மேன்.
தன்னுடன் வந்த ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய பிரமுகர்களைப் பார்த்து, “மடத்துக்கு இன்னிக்கு நாம வரப்போறோம்னு பெரியவாளுக்கு நியூஸ் கொடுத்திருந்தேளா?” என்று கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.
அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினர்.
ஹரிஹர சாஸ்திரிகள் மெய்சிலிர்த்துப் போனார்.
“மகா பெரியவாளே…” என்று நா தழுதழுக்க, அந்தக் கலியுக பரமேஸ்வரனின் திருநாமம் உச்சரித்து மடத்தின் வாசலுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். இதுவே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது அவருக்கு!
மெல்லிய விளக்கொளியில் இருந்த ஸ்ரீமடத்துக்குள் அவர்கள் நுழைந்தனர்.
அப்போது ஒரு சிஷ்யன் வேகமாக இவர்களிடம் வந்து, “மாமா… பெரியவா உங்களுக்காகக் காத்திண்டிருக்கா… உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னா” என்றான், அடுத்தகட்ட அதிரடியாக.
ஹரிஹர சாஸ்திரிகளுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் அடுத்த அதிர்ச்சி. ‘நாம் வரப்போவது பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவாவது பரவாயில்லை. வந்தவுடனே நம்மைப் பார்க்க வேண்டும் என அந்தப் பரப்பிரம்மம், இரவில்கூட ஓய்வெடுக்காமல் காத்துக் கொண்டிருக்கிறதே!’
சிஷ்யன் முன்னால் நடக்க, பரபரவென்று அவனைப் பின்தொடர்ந்தார்கள் அனைவரும்.
பெரியவா அமர்ந்திருந்த அந்தக் குடிசையின் வாசலுக்குச் சென்றதும், சிஷ்யன் ஒதுங்கிக் கொண்டான். ஹரிஹர சாஸ்திரிகள் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், “வாப்பா ஹரிஹரா… ராத்திரி வேளைல வந்திருக்கே. முக்கியமான ஜோலின்னு, துணைக்கு ஆசாமிங்களையும் கூட்டிண்டு கார்லயே வந்திட்டியோ?” என்று அந்த மகா முனிவர், இவர்களைப் பார்த்து இயல்பாகக் கேட்டார்.
“அது வந்து பெரியவா…” என்று ஹரிஹர சாஸ்திரிகள் மெள்ள விஷயத்தைச் சொல்லத் துவங்க … “முதல்ல எல்லாரும் உக்காருங்கோ. ஆகாரமெல்லாம் ஆயிடுத்தோல்யோ? இல்லேன்னா அரிசி உப்புமா ரெடி பண்ணச் சொல்லட்டுமா?” என்று கேட்டார் பெரியவா.
“எல்லாம் ஆச்சு பெரியவா. எதுவும் வேண்டாம்” என்றவர்கள், தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.
“பெரியவா… என் தம்பி மணி சாஸ்திரி ஒடம்பு முடியாம படுத்திண்டிருக்கான். இன்னிக்கோ, நாளைக்கோன்னு டாக்டர்கள் நாள் குறிச்சிட்டுப் போயிட்டா…” என்று அடுத்து எதோ சொல்ல வந்த ஹரிஹர சாஸ்திரிகளை பெரியவா இடை மறித்தார். “ஏண்டா… இப்ப அவனை, தனியா விட்டுட்டா எல்லாரும் இங்க வந்திருக்கேள்?” என்று திகைப்புடன் கேட்டார்.
பெரியவாளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது ஹரிஹர சாஸ்திரிகளுக்கு.
சில விநாடிகள் தியானத்துக்குப் பிறகு பெரியவா திருவாய் மலர்ந்தார். “அசடே… இந்தப் பிரசாதத்தைக் கொண்டுபோய் மணிகிட்ட கொடு. எல்லாம் காமாட்சியோடது” என்று பிரசாதத் தட்டுகள் இருந்த பக்கம் கைநீட்டிக் காண்பித்தார்.
அங்கே-
நாலைந்து மூங்கில் தட்டுகள். அதில் ஏராளமான புஷ்பங்கள், மாலைகள், விதம்விதமான பழங்கள், விபூதி, குங்குமம் என்று அனைத்தும் ஃபிரஷ்ஷாக இருந்தன. மூங்கில் தட்டின் விளிம்புகூட கண்களில் படவில்லை. அந்த அளவுக்குப் பிரசாதங்கள் அனைத்தும் அடர்த்தியாக – மூங்கில் தட்டையே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன.
ஹரிஹர சாஸ்திரிகளும் பெரியவாளிடம் இருந்து தன் வாழ்க்கையில் எத்தனையோ முறை பிரசாதங்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது போன்றதொரு பிரசாதங்களை – தூக்க முடியாத அளவுக்கு – அவர் பெற்றதே இல்லை.
எல்லோரும் பெரியவாளின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள். அனைவரையும் ஆசீர்வதித்தார் மகா பெரியவா.
“பெரியவா உத்தரவு கொடுத்தா, பிரசாதங்களை எடுத்துண்டு இப்பவே மெட்ராஸ் கௌம்பிடுவோம். மணி ரொம்ப சந்தோஷப்படுவான்” என்று தரையில் இருந்து, மெள்ள எழுந்தபடி கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.
“அவசரப்படாதே… மணி சாஸ்திரி பத்திரமா இருப்பான். அகால வேளை. இங்கேயே படுத்துண்டுட்டு விடிகார்த்தால வெளிச்சம் வர ஆரம்பிச்சவுடனே கௌம்புங்கோ” என்றார் மகா ஸ்வாமிகள்.
“உத்தரவு பெரியவா” என்றபடி, வந்தவர்களுடன் சேர்ந்து தானும் மூங்கில் தட்டுகளைச் சுமந்தபடி அங்கிருந்து வெளியே வந்தார் ஹரிஹர சாஸ்திரிகள். மடத்தின் ஒரு மூலையில் – தலைமாட்டில் பிரசாதத் தட்டுகளை வைத்துவிட்டு மேல்வஸ்திரத்தைத் தரையில் விரித்து, லேசாகக் கண் அயர்ந்தனர்.
புரண்டு புரண்டு படுத்தார்களே தவிர, எவருக்கும் தூக்கம் வரவில்லை.
பொழுது விடிந்தவுடன் இந்தப் பிரசாதங்களைக் கொன்டுபோய் தம்பி மணியிடம் சேர்க்க வேண்டும் என்பதே ஹரிஹர சாஸ்திரிகளின் நினைப்பாக இருந்தது. ‘அவன் இந்நேரம் எப்படி இருக்கிறானோ? பெரியவாளின் ஆசியுடன் தேறி விடுவானா?” என்றெல்லாம் இவரது எண்ணம் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.
அதிகாலை ஐந்து மணிக்கு மடத்தின் வாசலில் சாணம் தெளித்து, கோலம் போடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரிஹர சாஸ்திரிகள் உட்பட அனைவரும் காருக்கு வந்துவிட்டனர். டிரைவரும் தயாராகவே இருந்தார்.
பிரசாதங்களைச் சுமந்தபடி அந்த கார், அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. பெரியவாளின் பிரசாதத் தட்டு ஒன்றைத் தன் மடியில் வைத்திருந்த ஹரிஹர சாஸ்திரிகள், ஏதோ பெரியவாளே தன்னுடன் பயணித்து வருவதுபோல் உணர்ந்தார்.
காலை சுமார் ஏழரை மணிக்கு அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரிக்குள் அந்த கார் நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், தங்களால் முடிந்த தட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு மணி சாஸ்திரி இருந்த வார்டை நோக்கி நடந்தனர்.
மலர்களும் மாலைகளும் நிரம்பிய அந்த மூங்கில் தட்டில் இருந்து கிளம்பிய திவ்யமான நறுமணம், மருத்துவமனையின் சூழலையே மாற்றியது.
எதிர்ப்பட்ட மருத்துவர்களும் நர்ஸ்களும், காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து மகா பெரியவா ஆசியுடன் இந்தத் தட்டுகள் வந்துள்ளன என்பதை அறிந்து, அதைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வந்திருந்த சில உறவுக்கார அன்பர்கள், அதற்கு நமஸ்கரிக்கவே செய்தனர்.
இந்தக் களேபரங்களை எல்லாம் தாண்டி மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் இவர்கள் செல்வதற்குச் சில நிமிடங்கள் கூடுதலாகவே ஆயின.
‘தம்பி மணி சாஸ்திரி நேற்றைய இரவுப் பொழுதை எப்படிக் கழித்தானோ? அவனுடைய தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?’ என்றெல்லாம் ஹரிஹர சாஸ்திரிகள் மனம் கன்னாபின்னாவென்று அலைந்தது.
இதோ ஹரிஹர சாஸ்திரிகள், மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரசாத மணம், அந்த அறைக்குக் கூடுதல் பிரகாசம் தந்தது. சூழலையே இதமாக்கியது.
“தம்பீ மணி…” என்று கூப்பிட்டுக் கொண்டே வார்டுக்குள் முதலில் நுழைந்த ஹரிஹர சாஸ்திரி ஏகத்துக்கும் அதிர்ந்துவிட்டார்
ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பியவர்களும் மடத்தில் இருந்து பெரியவாளின் அனுக்ரஹமாகக் கிடைத்த பிரசாதங்களைக் கைகளில் சுமந்திருந்தனர். ‘மணி சாஸ்திரியின் கையில் எப்படியாவது இந்தப் பிரசாதங்களைக் கொடுத்து, மஹாபெரியவாளின் அருள் அவனுக்குக் கிடைக்கவைக்க வேண்டும். பிரசாதமாகக் கொண்டு வந்திருக்கும் ஓரிரு பழங்களை நறுக்கி, அவனுக்கு உட்கொள்ளக் கொடுக்க வேண்டும். விபூதி பிரசாதத்தை அவன் நெற்றியில் இட்டுவிட்டு, தினமும் தலைமாட்டுக்கு அருகில் வைக்கச் சொல்ல வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் அவரது அண்ணனான ஹரிஹர சாஸ்திரிகள்.
மணிசாஸ்திரி இருந்த வார்டுக்குள் நுழைந்ததும், ஏகத்துக்கும் அதிர்ந்து விட்டார் ஹரிஹர சாஸ்திரி. உடல் நலம் முடியாமல் – நோயின் உக்கிரமம் தாளாமல் சுருண்டு படுத்திருப்பான் மணி சாஸ்திரி என்று சென்றவருக்கு, அவர் ஜம்மென்று நிமிர்ந்து பெட்டில் உட்கார்ந்திருந்ததால் அதிர்ச்சி இருக்காதே பின்னே?! அது மட்டுமல்ல… ‘வாப்பா ஹரிஹரா… எங்கேர்ந்து வர்றே? என்று மணி சாஸ்திரி குரலில் பிசிறு இல்லாமல் கேட்ட கேள்வியைத் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை ஹரிஹர சாஸ்திரி.
தம்பியை இந்த நிலையில் பார்த்ததும், ஹரிஹர சாஸ்திரிக்குப் பேச்சே எழவில்லை. கண்களில் நீர் கசிய ஆனந்தப்பட்டார். நெகிழ்ச்சியில் பூரித்தார். காஞ்சி மடத்துக்குச் சென்று பெரியவா தரிசனம் முடித்து வந்திருக்கும் வேளையில் இப்படி ஓர் அற்புதமா என்று எண்ணி, அந்த நடமாடும் தெய்வத்தை ஒரு கணம் இருந்த திசையில் இருந்தே மனமுருக வேண்டிக் கொண்டார். மானசீக நமஸ்காரத்தைத் தெரிவித்தார்.
பிற்கௌ தன் இயல்புக்கு வந்த ஹரிஹர சாஸ்திரி ‘என்ன மணி எப்படிடா இருக்கே? இப்படித் திடீர்னு எழுந்து பெட்ல உக்காந்திண்டிருக்கியே..உன்னால முடியறதா? டாக்டருங்க பார்த்தா ஏதானும் சொல்லப் போறா’ என்று வேகவேகமாக நடந்து பெட்டில் மணிசாஸ்திரியின் அருகில் உட்கார்ந்து கொண்டார் ஹரிஹர சாஸ்திரி. கூடவே நர்ஸ், மற்றும் டாக்டர்களின் அனுமதி பெறாமல் எழுந்து உட்கார்ந்து தன்னை சிரமப்படுத்திக் கொள்கிறானோ என்றும் கவலைப்பட்டார் ஹரிஹர சாஸ்திரி.
‘ஒண்ணும் கவலைப்படாதீங்கோ…நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி வரைக்கும் என்னால எதுவும் முடியாம இருந்தது. இன்னிக்கு முடியறது. எழுந்து உட்கார்ந்தேன்’ என்றார் மணி சாஸ்திரி.
‘எப்படிடா முடியறது? இந்த நாள் வரைக்கும் எங்களையெல்லாம் இப்படிக் கவலைப்பட வெச்சுட்டியேடா…உனக்கான நாளையும் டாக்டருங்க குறிச்சிக்கும்படியா வெச்சுட்டியேடா’ என்று மணி சாஸ்திரியை ஆதுரமாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தார் ஹரிஹர சாஸ்திரி.
‘எனக்கு ஒன்னும் இல்லேண்ணா… நேத்து ராத்திரி பெரியவா இங்கே வந்தா…’ மணி சாஸ்திரி இப்படிச் சொல்லத் துவங்க மிரண்டு போனார் ஹரிஹர சாஸ்திரி.
‘என்ன சொல்றே..பெரியவா இங்கே வந்தாளா? எந்தப் பெரியவா?
என்னண்ணா இப்படிக் கேக்கறேள்? நமக்கு எல்லாம் பெரியவான்னா யாரு? காஞ்சி தெய்வம் தான். சாட்சாத் அந்தப் பெரியவா இங்கே வந்தா…’
வந்தாரா… இந்த ஆஸ்பத்திரிகு வந்தாரா…என்ன சொன்னார்? ஹரிஹர சாஸ்திரியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை. தம்பி சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.
‘ராத்திரி ரெண்டு மணி இருக்கும். தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுத்தேன். திடீர்னு அதிகார தொனியில் ஒரு குரல் – ‘மணி எழுந்து உட்கார்டானு. பொசுக்குன்னு எழுந்து பார்த்தா யாருமே இல்லை. எதோ பிரமையோன்னு திரும்பப் படுத்துட்டேன். அப்புறமும் அதே அதிகாரக் குரல் – ‘மணி..உனக்கு ஒண்ணுமே இல்லை. நீ ஆரோக்கியமா இருக்கே.எழுந்து உட்கார்டா’ தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
மஹாபெரியவா என் முன் தோன்றி சொன்னார். ‘ஜய ஜய சங்கர’னு கன்னத்துல போட்டுண்டு ‘அப்படியே ஆகட்டும் பெரியவா’னு சட்டுன்னு போர்வையை விலக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இது நாள் என்னைப் பாடாப் படுத்திண்டிருந்த உபாதை எதுவும் அதுக்குப் பிறகு கொஞ்சமும் இல்லை. உடம்பு ரொம்ப இயல்பா ஆயிடுத்து’ – மணி சாஸ்திரி வெகு சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஹரிஹர சாஸ்திரிகளும், அவருடன் வந்தவர்களும் அடைந்த ஆச்சரியத்துக்கும் பிரமிப்புக்கும் அளவே இல்லை. ‘மணி உனக்கு ஒடம்பு நன்னா ஆகணும்னு தான் காஞ்சிபுரம் போய் அந்த மஹானைத் தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு வந்தோன். ஆனா அவரோட பிரசாதம் உன் கைக்கு வந்து சேர்றதுக்குள்ளே உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துட்ட அந்த தெய்வத்தின் கருணையை எப்படிப் பாராட்டறது’ என்றவர், தான் கொண்டுவந்த பிரசாதத்தில் இருந்து விபூதியை மட்டும் எடுத்து மணி சாஸ்திரியின் நெற்றியில் இட்டுவிட்டார்.
V.H.S.மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் இந்தத் தகவல் போய் ஓடோடி வந்தார்கள். ‘நேற்றைய தினம் வரை நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மணி சாஸ்திரியா இவர்? என்று ஆளாளுக்குத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வந்த பிரசாதம் மருத்துவமனைக்குள் விநியோகம் ஆனது.
‘என்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்றேள்?” என்று மணி சாஸ்திரி ஆர்வமுடன் கேட்டது மருத்துவர்களுக்கே மாபெரும் சந்தோஷத்தை தந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து இயல்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மணி சாஸ்திரி. 1983-ஆம் வருடத்திலேயே நாள் குறிக்கப்பட்ட மணி சாஸ்திரி, பன்னிரண்டு வருடங்கள் கழித்து 1995-ல் இயற்கை எய்தினார்.
காஞ்சி மடத்துக்கு மணிசாஸ்திரி செய்திருந்த தொண்டைப் பாராட்டி மடத்தின் சார்பில் அவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு தந்திருந்தார்கள். அந்த வீட்டில் தான் அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.
பெரியவா சரணம் பெரியவா கருணை.
கட்டுரையாளர் : தெய்வத்தின் குரல் திரு.சுவாமிநாதன் அவர்கள்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர. Halasya Sundaram Iyer திருநெல்வேலி



=====================================================================================



''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் தெரியும்மா?''
ஒரு நாள் பெரியவா தரையில் சயனித்துக் கொண்டிருந்தார்.
நானும் என் மனைவியும் அவர் பாதாரவிந்தத்தின் அடியில்
உட்கார்ந்திருந்தோம்.
''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம்
தெரியும்மா?'' என்று கேட்டார்.
''நாயன்மார்களில் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்''
பின்னர் அதே முற்றத்தில் ஸ்ரீபெரியவா திருவடிகளின்
சமீபத்தில் நாங்கள் இருவரும் தரையில் படுத்து உறங்கினோம்.
ஆழ்ந்த நித்திரை.
''ஏய் யாராடா அங்கே''! என்ற பெரியவா குரல் கேட்டு
விழித்து எழுந்தோம். உடனே அவள் தன்னுடன் எப்போதும்
வைத்திருக்கும் கற்பூரத்தை தாம்பாளத்தில் வைத்து
ஏற்றினாள். ஸ்ரீபெரியவா எழுந்து உட்கார்ந்தார். கற்பூர
தீப ஒளியில் அவருடைய விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்
பெற்றோம்!
இதே கைங்கர்யத்தை என் மனைவி நாங்கள் எத்தனை
நாட்கள் மடத்தில் தங்கினாலும்,ப்ரதி தினமும்,பெரியவாளுக்கு
கற்பூர ஹாரத்தி எடுத்து சேவிப்பது வழக்கம். இருளின் மத்தியில்
கற்பூர சேவையில் பெரியவா விஸ்வரூப தரிசனம் எங்களுக்கு
எப்போதும் கிடைத்து வந்தது. பெரியவா சயனித்ததும் அவர்
பாதகமலத்தின் அடியில் நாங்கள் தம்பதிகளாக சயனிக்கும் பாக்யமும்
தவறாமல் கிடைத்தது. அவர் அனுக்ரஹத்தினால் அந்த பாக்யமும்,
ஸ்வதந்திரமும் எங்களுக்கு ப்ராப்தமானபடியால் மடத்தில் உள்ள
எல்லாரும் எங்களை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள்.
ஸ்ரீபெரியவாள் யதியாகவும், பீடாதிபதியாகவும் ,ஜகத் குருவாகவும்
ஆனபடியால், சாமான்ய க்ரஹஸ்தனான எங்களுக்கு தமபதிகளாக
நெருங்கி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பில்லை.
அடியேனுக்கு வேத அத்யயனம், வித்வாம்சம், பாண்டித்யம்
போன்ற எந்த யோக்யதையோ, மடத்துக்கு அளவு கடந்த திரவிய
சகாயம் செய்யக் கூடிய தனிகனாகவோ இல்லாதபோதும்,
ஸ்ரீபெரியவாள் அத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவராயிருந்தும்,
நான் விசிஷ்டாத்வைதனாயிருந்தும், அடியனை பத்னி சஹிதம்
அவர் திருவடிச் சாயையில் இருத்தி வைத்துக் கொண்டது
தெய்வ சங்கல்பம் அன்றி வேறில்லை.!
ஒரு நாள் விஸ்வரூப தரிசனத்துக்கு ஹாரத்தி காண்பிக்கும்போது
நான் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லி தண்டம் சமர்ப்பித்து
நின்றேன்..
அது குதத்வம் சொல்வதாக அமைந்த அழகிய ஸ்லோகம்.
ப்ரம்மானந்தம் ப்ரம ஸுகிர்தம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஸம் தத்வமஸ்யாமி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ ஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||
அப்போது வ்த்யார்த்தி நாராயண ஐயர் என்பவர் அங்கு இருந்தார்.
அன்று ஸ்வர்ணமுகி நதியில் நானும் என் மனைவியும் ஸ்னானம்
செய்யும்போது, நாராயண ஐயரும் எங்களுடன் இருந்தார்.
அவர் ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடில் கற்றுக் கொள்; உச்சரிப்புத் தவறாக
சொல்லாதே என்றார். நான் வெட்கம் அடைந்தேன்.
அன்று இரவு பெரியவா முற்றத்தில் மேனாவில் அமர்ந்திருந்தார்.
பத்துமணி அளவில் நாங்கள் அம்மாவுடன் வந்தனம் செய்து
நின்றிருந்தோம்.
வித்யார்த்தி நாராயண ஐயரும் உடனிருந்தார்.
அவரைப் பார்த்து பெரியவா''இவாளை உனக்குத் தெரியுமா''?
என்றார். நாராயண ஐயர்''தெரியுமே நெல்லிக்குப்பம் வைஷ்ணவ தம்பதிகள்''
என்று பதில் சொன்னார்.''காலையில் ஸ்னானம் செய்யும்போது கேட்டுத்
தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும்படி
அவாளிடம் சொன்னேன்.'' என்றார்.
சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு பெரியவா ஒரு ஸ்லோகம்
சொல்லி நாராயணாய்யரிடம் அதற்கு அர்த்தம் கேட்டார்.
அவரும் அர்த்தம் சொன்னார்.
ஸ்ரீபெரியவாள் அந்தச் சொல்லுக்கு'' ப்ரம்மா என்றுகூட
அர்த்தமாகிறதே! விஷ்ணுன்னுதான் சொல்லணுமா?
ப்ரம்ம என்று வைச்சுண்டே அதற்கு முழு அர்த்தமும்
சொல்லலாமே!
''இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத்
தெரியவில்லை. நீ பொய் அவனுக்கு புத்தி சொல்லப்
போயிட்டயோ?ஏதோ அவனுக்குத் தெரிந்ததை ஆசையாகச்
சொன்னான்''
அன்று முதம் வித்யார்த்தி நாராயண ஐயர் எங்களிடம் அதிகப்
ப்ரியமாகப் பழகினார்.
இதுவும் நெல்லிக்குப்பம் தம்பதினர் அனுபவமே! இவர்களுக்கு
பெரியவாளோட பரிபூர்ண கடாக்ஷம் இருக்கு என்பதில்
சந்தேகம் ஏதும் உண்டோ!
மேலும் பல முறை பல விதமான அனுபவங்கள் இவர்களுக்கு!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா










No comments:

Post a Comment