Wednesday, March 2, 2016

சிந்தித்தால் வாக்களிக்க வேண்டாம் என்றுதான் தோன்றும்

மனித சட்டங்களின் பலவீனமே இது தான். இறைச் சட்டத்தினால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.

"நல்ல முறையில் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில், வறுமை என்பது வெட்கப்படக் கூடியது. கெட்ட ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில், செல்வம் என்பது வெட்கப்படக்கூடியது" - கன்பூசியஸ்
போர்ப்சின் (Forbes) பில்லியனர் லிஸ்ட்டின் படி, அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவில் தான் அதிகமான கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர்.
அதே சமயம், உலக மனித வளர்ச்சிக் குறியீட்டில், இந்தியா 130 வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் தான் வறுமையின் காரணமாக மக்கள் எலியைத் உண்ணும் அவலம் உள்ளது.. வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலைச் செய்து கொள்கின்றனர்.
இதிலிருந்து நாம் உறுதியாகச் சொல்லலாம்....செல்வம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து வருகின்றதே தவிர, நாட்டின் எல்லா குடிமக்களிடமும் அல்ல. இதற்க்குக் காரணம், பதவி வெறிபிடித்த அரசியல் வாதிகளும், பண வெறி பிடித்த அதிகாரிகளும், வளைந்து கொடுக்கும் சட்டங்களும், எவன் செத்தால் நமக்கென்ன என்று போகும் பொது மக்களும் தான்.
மாற்றம் வேண்டுமென்றால் தனிமனிதனிடமிருந்து உருவாக வேண்டும். அதேபோல், தேர்தலின்போது சிந்தித்து வாக்களிப்போம்.
பட உதவி: The Logical Indian

Comments
Senthil Nathan சிந்தித்தால் வாக்களிக்க வேண்டாம் என்றுதான் தோன்றும், இது முரணானது. பணத்தை முடிந்த அளவு முதலீடு செய்து முடியும் வழிகளிளெல்லாம் திருப்பி எடுப்பதுதான் இன்றைய அரசியல். ஜாதி,, மதம்,, கட்சி,, பணம் இவைகள் சாராமல் யாருக்கு வோட்டு போடுவது?

No comments:

Post a Comment