Wednesday, March 2, 2016
கடவுள் பற்றிய அறிவு.
ராம நாதன்
Comments
Senthil Nathan
கடவுள் பற்றிய அறிவு மட்டும்மல்ல வேறு எந்த அறிவுடனும் பெரும்பாலும் குழந்தைகள் பிறப்பதில்லை.
ராம நாதன்
குறைந்த பட்ச அறிவு உண்டு
Senthil Nathan
எது பற்றிய அறிவு?
ராம நாதன்
தனது தாயை அடையாளம் கண்டு கொள்ளும் பால் குடிக்க சொல்லியா கொடுக்கிறார்கள் இதுபோல இன்னும் சுயமாக அறிந்து கொள்ளும் திறன் கூட இருக்கலாம்
Senthil Nathan
ஆமாம், ஆனாலும் இது பிறந்த பின்னர் கற்றுக்கொள்கிறது என்று சொல்லுதல் தானே பொருந்தும்.
ராம நாதன்
பிறப்பதற்கு முன் கூட பாட்டு வைத்தால் அதற்கு குழந்தை அசைந்து கொடுப்பதாக சொல்லக் கேட்டு இருக்கிறேன்
Senthil Nathan
கர்ப்பமான தாய்மார்கள் நீதி கதைகள் சொல்ல கேக்கலாம், புதிர்களை விடுவிக்கலாம், குறிப்பிட்ட மாதத்தில் சில படங்களை கூட கருவில் இருக்கும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம், அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் என்று இன்றைய விஞ்ஞானமும் அன்றைய புராணங்களும் கூட சொல்லுகின்றன. நானும் அதனை அறிந்திருக்கிறேன்.
Dhanaraj Nagappan
Senthil Nathan புராணங்களில் இல்லாத கற்பனைகள் எது? எல்லா வகையான கற்பனைகளும் உள்ளது. யானைத் தலையை மாற்றி வைப்பது கூட உள்ளது. எலி வாகனம் என உள்ளது, பத்து தலை உள்ளதாக உள்ளது, தவம் செய்தால் சம்பந்தமே இல்லாத பார்ப்பன சிறுவன் இறப்பான் என உள்ளது, குதிரைக்குப் பிறந்தான், சூரியனுக்குப் பிறந்தான் என உள்ளது. பத்துமாதம் கர்ப்பம் என இல்லாமல் உடனடியாகப் பிறந்தான் என உள்ளது. புராணத்தையும், விஞ்ஞானத்தையும் இனை வைத்துப் பேசுவதா? இது தப்பாச்சே!!!!
Senthil Nathan
பல விடயங்கள் கற்பனை கதைகள் என்று சொல்லப்பட்டு வந்தது. அறிவியல் வளர வளர அறிந்துகொண்டு வருகிறோம்.
திண்ணனின் (கண்ணப்பன்) கதைகூட வாய்ப்பற்றது என்றுதான் சொல்லப்பட்டது. ஒருவர் கண்ணை மற்றவருக்கு மாற்றுவது. ஆனால் அது இன்று நடைமுறை சாத்தியமே.
சஞ்சயனின் கூற்றும் சாத்தியமற்றது கற்பனை என்றுதான் சொல்லப்பட்டது. ஒரு விளையாட்டைக்கூட நேரடியாக காணமுடிகிறது.
யானைத்தலைக்கும் சூச்சம காரணங்கள் இருக்கும். மதங்கள் சொல்லும் சூச்சமங்களை முழுமையாக அறிய இன்றைய அறிவியலுக்கு இன்னும் 500 வருடங்களுக்கு மேலேயே ஆகும் என்பது என்னுடைய கணிப்பு.
புரியாத விடங்களை மூடத்தனம் என புறந்தள்ளி விடுதல் அறிவுடைமை ஆகாது. எதற்காக இப்படி சொல்லப்பட்டிருக்கும் இதில் திரிப்பு இருக்குமா? திணிப்பு இருக்குமா? என பகுத்தறிந்துப்பார்ப்பதனையே பகுத்தறிவுவாதமாக இருக்கணும் என்பது எனது எண்ணம்.
வேதங்கள் என்பது நம்தலைமுறைக்கு நம்முன்னோர்கள் தங்கள் அறிவியல் அறிவை சூச்சமாக தொகுத்து கொடுத்த தொகுப்பு. சில விடயங்கள் காலத்தாலேயே விளங்கும். திரு Dhanaraj Nagappan அவர்களே.
ராம நாதன்
Senthil Nathan
இதன் பொருள் புரியவில்லை?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment