Wednesday, March 16, 2016

உடுமலை கௌரவகொலை






Engals Engals
9 hrs
💭யோசித்து யோசித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டேன்.
😷இனிமேல் தூய்மையான சாதிக்காரனாக இருக்கப்போகிறேன்.
🎤எப்படி என்று கேட்கிறீர்களா?
🔴எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் யாரவது ரத்தம் தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ரத்தம் எந்த வகையாக இருந்தாலும் சரி, ரத்தம் கொடுக்கிறவர்கள் எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் வைத்தியம் பர்க்காமலே நான் சாவேன்
💉எங்கள் வீட்டுப் பெண்களைப் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தால் பிரசவம் பார்க்கும் டாக்டரும், நர்சுகளும் எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் என்ன ஆனாலும் அவர்கள் வீட்டிலேயே கிடக்கட்டும்.
🐄எங்கள் பிள்ளைகள் குடிக்கப் பால் கொடுக்கிற பால்காரன், அந்தப் பால்மாட்டை வளர்க்கிற மாட்டுக்காரன் எல்லோரும் எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளுக்குப் பாலே வேண்டாம்.
📚எங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியே வேண்டாம்.
🌾நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை விளைவித்த விவசாயி, அந்த காடுகளிலும் வயல்களிலும் வேர்வை சிந்தி வேலை செய்த கூலிக்காரர்கள் எல்லோரும் எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எங்களுக்குச் சோறு வேண்டாம்.
👪எங்கள் துணிகளைச் சலவை செய்யும் சலவைக்காரனும் - அது மட்டுமல்ல - என் முடியைச் சிரைப்பவனும் கூட எங்கள் சாதிக்காரர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அழுக்கையே உடுத்திச் சிரைக்காமலே காலம் கடத்துவோம்.
💀கடைசியில் நாங்கள் இறந்துபோனால் சுடுகாட்டில் குழி வெட்டுபவனும் எங்கள் சாதிக்காரனாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் பிணங்கள் அழுகி நாறட்டும்.
👺ஏனென்றால் எனக்கு எல்லாவற்றையும் விட என் சாதி முக்கியம்!
👍நல்லா காரி துப்புங்க பகுத்தறிவாளர்களே நானுகிட்டு தொங்குறானுங்களான்னு பார்ப்போம்
💭திருந்துங்கடா களவும் கற்ற ஐந்தறிவு மானிட குரங்கினமே!
🔴முகநூல் பகுத்தறிவாளன்








No comments:

Post a Comment