ஹோலிப் பண்டிகை என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது . தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அண்மைக்காலமாக வடநாட்டுக்காரர்கள் மத்தியில் தலையெடுத்தது. ஒருவர்மீது இன்னொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கலாட்டாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கும் ஒரு புராணக்கதை வழக்கம்போல் இருக்கவே செய்கிறது. அதிலும் அசுரனை (திராவிடனை) சுரர்கள் (ஆரியர்கள்) அழித்ததாக வழக்கமான கட்டுக்கதைகள்தாம்.
அசுரர்களின் அரசன் ஹிரண்ய கசிபு கடுந்தவம் புரிந்து பிரம்மதேவனிடம் யாராலும் தன்னை வெற்றிகொள்ள முடியாத வரம் பெற்றிருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு பகலிலோ இரவிலோ, வீட்டினுள்ளோ, வெளியிலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ மரணம் வராது. அதனால் மமதை மிகுந்த ஹிரணியன் மூவுலகமெங்கும் படை யெடுத்துச் சென்று எதிர்த்தவர்களை முறியடித்து அடிமைகளாக்கி கொடுங்கோல் ஆட்சி செய்யத் தொடங்கினான். நானே இறைவன். என்னைத் தவிர யாரையும் மக்கள் வழிபடக்கூடாது என ஆணை பிறப்பித்தான். பிரபஞ்சத்தில் அனைவரும் அவனுக்குப் பயந்து, ஹிரண்ய கசிபுவே தெய்வம் என்று போற்றிப் புகழ்பாடி அவனைத் துதித்து அடிபணிந்து வாழத் தொடங்கினார்கள். அப்படி அகங்காரம் பிடித்தலைந்தவனுக்கு நேர்மாறான கணத்தோடு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான்.
அப்பிள்ளை கருவில் இருக்கையில் அவன் தாயைப் பார்க்க வந்த நாரத முனிவர், அவளுக்கு பகவான் ஸ்ரீமன்நாராயணனின் மகிமையை எடுத்துரைத்து, ஓம் நமோ நாராயண என்ற மகாமந்திரத்தை உபதேசித்திருந்தார். அதை கருவிலே திருவுடன் வளர்ந்த பிரகலாதனும் கேட்டதனால், பிறந்ததிலிருந்தே ஓம் நமோ நாராயண என்று சொல்லி வரத் தொடங்கினான். இது தெரிய வந்த ஹிரண்ய கசிபு மகனின் போக்கை மாற்றப் பல வழிகளிலும் முயற்சித்தான். கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அவனிடம் ஓம் நமோ நாராயண என்று ஜபிப் பதை நிறுத்திவிட்டு, ஓம் ஹிரண்யாய நமஹ என்று சொல்லுமாறு நிர்ப்பந்தம் செய்தார்கள். அவன் மசியவில்லை. அதனால் சினம் கொண்ட ஹிரண்ய கசிபு, மகனை தனது வழிக்குக் கொண்டுவர பலவிதங்களில் முயன்றான். அடித்தான், உதைத்தான், நஞ்சு கொடுத் தான், ஏன் - உயிருடன் எரிக்கவே முயன்றான். தன் உடன் பிறந்த ஹோலிகா என்ற அரக்கியை அழைத்து மகனை மாய்த்தொழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அந்தக் கொடியவள் அதிசயமான வரத்தைப் பெற்றிருந்தாள். அவனை நெருப்பால் தீண்ட முடியாது.
தன் புகழைப்பாட மறுத்த மகனை ஹோலிகா மடியில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை மூட்டி உட்கார வைக்கப் போவதாக மிரட்டினால் பிரஹலாதன் பயத்தில் மசிந்துவிடுவான், மறுத்தால் மடிந்துவிடுவான் என எண்ணி செயலில் இறங்கினான் ஹிரண்யகசிபு. பிரஹலாதன் நெருப்பை தேர்ந்தெடுத்தான்.
என்ன ஆச்சரியம்! நெருப்பு ஹோலிகாவைச் சாம்பலாக்கியது!
பிரஹலாதன் புடம் போட்டு எடுத்த தங்கமாக திருமாலைப் புகழ்ந்தவாறே தனது அக்னிப்பிரவேசத்திலிருந்து வெற்றியுடன் மீண்டு வந்தானாம்
ஹோலிகா, பக்த பிரகலாதனைக் கொல்ல முயன்று தோற்று, அவளே சாம்பலானதைக் கொண்டாடுவதுதான் ஹோலிவிழாவாம்
செம!!
படத்தில் இருக்கும் மற்றொரு படம்
சுடுகாட்டில் நடக்கும் ஹோலி
சுடுகாட்டில் நடக்கும் ஹோலி
No comments:
Post a Comment