Wednesday, March 30, 2016

"ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் "


https://www.facebook.com/groups/410598659080912/633832083424234/?comment_id=633916516749124&ref=notif&notif_t=like&notif_id=1459370710970776



ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு ஆற்றலுள்ள தமிழனை விலைபேசி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்.கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச்செய்து சரிந்த இந்து மதத்தை தாங்கிப் பிடித்தனர். இப்போது அதே வரிசையில் எழுத்தாளர் குணா எனப்படும் எஸ் .குணசீலன் என்பவரின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று தமிழ் தேசிய வியாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்....அப்போது போலவே , இப்போதும் , கிளர்ந்தெழுந்து அந்த நூலை அலசி ஆராய்ந்து ..திரு.மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் படைத்துள்ள "ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் "எனும் நூல் தமிழர்தம் இனமான போருக்கு நல்ல ஆயுதம்.தமிழை, தமிழர்களை காக்கும் கவசமே "திராவிடர்" எனும் சொல் , ஆரியம் உள் நுழைய அனுமதிக்காத அரண் அது.தமிழ் இளைஞர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய நூல்..பொக்கிசம்

Comments
முகிலன் விக்ரம் ஆரியரிடமும் உங்கள் கொள்கை இருக்கிறதே .என்ன விலை கொடுத்தீர்

Michael P என்ன கொள்கை என்ன விலை

முகிலன் விக்ரம் உங்கள் பதிவை படித்து பார்க்கவும்

Michael P படிச்சாச்சு

முகிலன் விக்ரம் இதற்கு பெயர் தான் பகுத்தறிவோ...

Michael P இப்படி கேள்வி கேட்பதற்கு பேருதான் பகுத்தறிவா?
எதையும் பூடமாக சொல்லாமல் நேரடியா சொல்லுங்கள்

முகிலன் விக்ரம் கமல் அய்யா அவர்களுக்கு என்ன விலை பேசினீர்கள் உங்கள் கொள்கைக்கு மாற என தெரிந்து கொள்ளலாமா

Michael P கமல் மதங்களை எதிர்த்து புத்கமா எழுதினார்
நான் திக அல்ல அதை நீங்கள் வீரமணியிடம் கேட்க வேண்டும் 
இது பகுத்தறிவாளர்கள் தளம்
முகிலன் விக்ரம் நானும் 7,8 வருடம் என்னை நானே பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டு இருந்தவன் தானய்யா

Michael P மேற்க்கொண்டு பகுத்தறிவை வளர்க்காததற்க்கு நானா பொறுப்பு

Manikandan Gurusamy பகுத்தறி்வு நூல்கள் வேண்டுவோர் அழைக்கவும் - வாசிப்புலகம், சென்னை - 9962554348

Senthil Nathan //அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்//மதவாதிகளும் தங்களுக்கு எதிரான கருத்துடைய நூல்களையும் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

Michael P உங்களுக்கு மதவாதிகளின் கருத்துக்கள் ஏற்புடையதாயின் அவரது கருத்துகளை மறுத்து ஒரு லட்ச ரூபாயை பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள் அவர் பரிசு அறிவித்து 25வருடங்களுக்கு மேலாகிறது ..ஏன் யாரும் முயற்சி செய்யவில்ல
Senthil Nathan தொடர்பு உடைய மறுபதிவு தானா? எனக்கு புரியவில்லை.

Senthil Nathan அந்த இனத்தை சாராதவன் அந்த இனத்தை அரணாக காப்பாத்தினான், முன்னேற்றினான், முன்னேற்றுவான் என்பதெல்லாம் பொய், மாயை, சுயநலமிக்க ஏமாற்றுத்தனமான பேச்சு.

Michael P அப்படித்தானே அந்த இனம் செய்தது இன்றுவரை அதன் விழுதுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன் நீதி கூட அவன் காலடியில் தான் உலகத்தை உற்று நோக்குங்கள் அதற்கு ஈரோட்டு கண்ணாடிதான் வேண்டும்

Senthil Nathan தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்.

நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது.

பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.

தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்,
உற்றுநோக்கினால் ஈரோட்டு கண்ணாடியும்
சேர்த்து விரட்டப்படும்.

Michael P //தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால். //

எதை?????

/நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது. //

எப்படி??

//பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.//

உங்களை தமிழை படிக்க விடாமல் செய்தார்களா?

சாதிகளை கடைபிடியுங்கள் ஏன்றார்களா?

தமிழை படித்தால் நாக்கை அறுத்தார்களா?

தமிழை கேட்டால் காதில் ஈயத்தை ஊத்தினார்களா?

தமிழை ஈனமொழி என்றார்களா?

இப்படி பல

கோவிலில் தமிழை சொல்லவோ ..தமிழரை புரோகிதர் ஆக தடுத்தார்களா?

தமிழை படிக்கவிடாமல் சமஸ்கிரத்தை திணித்தார்களா?

//தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்,
உற்றுநோக்கினால் ஈரோட்டு கண்ணாடியும்
சேர்த்து விரட்டப்படும்.//

ஈரோட்டு கண்ணாடி இல்லாதால் வந்த வினை கண்ணாயோடு சேர்த்து கை தடியும் தேவை

Senthil Nathan [//தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால். //

எதை????? ]

தன்னிலை உணராமை.
Senthil Nathan [/நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது. //

எப்படி??]

நிறைய படித்துள்ளேன், அதில் கற்றுக்கொண்டது, பயன்பட்டது, சம்பாரித்தது ஒன்றுமில்லை. சரளமான மொழி அறிவுகூட இல்லை.(இதில் திராவிட அரசு மிகவும் கவனமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.)

இன்னமும் ஜாதி மதத்தின் பெயரால் வேறுபடுத்தியும் தாழ்த்தியும் வைத்துள்ளது.(ஓட்டு பொறுக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மட்டும்)

தரமற்ற இலவசங்களுக்கு கையேந்த வைத்துள்ளது.

திறமைக்கும் senioratyக்கும் சம்பந்தமே இல்லாமல் வேலைவாய்ப்பை வைத்துள்ளது.(அதுவும் மிக சொற்ப அளவே)

சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காக தாராளமாக மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளது.

கல்வியை வியாபராமாக செய்கிறது.

இதனையெல்லாம் தாண்டி என்னுடைய முன்னேற்றம்

எப்படி??
Senthil Nathan [//பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.//

உங்களை தமிழை படிக்க விடாமல் செய்தார்களா?

தமிழை படித்தால் நாக்கை அறுத்தார்களா?

தமிழை கேட்டால் காதில் ஈயத்தை ஊத்தினார்களா?

தமிழை படிக்கவிடாமல் சமஸ்கிரத்தை திணித்தார்களா?

கோவிலில் தமிழை சொல்லவோ ..தமிழரை புரோகிதர் ஆக தடுத்தார்களா?

தமிழை ஈனமொழி என்றார்களா?]

நானும் திராவிடர்கள் அப்படி சொல்லவில்லை என்று தானே சொல்லிவுள்ளேன்.

மேலும்

தமிழை மட்டுமே படிக்க வைத்தார்கள்,
வேறு எதையும் கற்றுவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்
பெரும்பாலும் தமிழை பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்கள்.

Senthil Nathan [சாதிகளை கடைபிடியுங்கள் ஏன்றார்களா? ]

சாதி சான்றிதழும்,, அதில் ஏற்றத்தாழ்வுகளும்,. அதனடிப்படியில் சலுகைகளும் சாதியை ஒழிக்கும் நடைமுறைகளா?

Senthil Nathan

No comments:

Post a Comment