Tuesday, September 9, 2014

ஆண்களும் குழந்தை பெறலாம்! பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை…

பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !
இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது
Canada-Dr
- See more at: http://www.canadamirror.com/canada/30658.html#sthash.DOwGa91g.yS5XrPjb.dpuf

ஜாதிகள் தோற்றமும் விளக்கமும்

http://perumalthevan.blogspot.in/


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF

இல்லறமும் நல்லறமும்

இல்லறமும் நல்லறமும்

இல்லறமும் நல்லறமும் - பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள்

ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் கொண்டது தான் மனிதப் பிறவி. ஒன்றையொன்று விலக்கிக் கொண்டதோ ஒன்றையொன்று தழுவாமல் தனிப்பட்டதோ அல்ல ஆண்மையும் பெண்மையும். இதற்கு அடையாளம் தான் அர்த்தநாரீஸ்வரர்.

ஆண்களுக்கு இடப்பக்கம் பெண் வடிவமாகவும், பெண்களுக்கு இடப்பக்கம் ஆண் வடிவமாகவும் அமைந்திருக்கிறது என்பது சாத்திரம். இவ்விரண்டில் விரும்பியவர்கள் விரும்பிய பக்தியை ஏற்று அனுசரிக்கலாம். அதாவது இல்லறத்தை விரும்புகிறவர்கள் அதை அனுசரிக்கலாம்.

துறவறத்தை விரும்புகிறவர்கள் அதைச் சாரலாம். ஆக இரண்டு அறங்களும் தரம் ஒன்றேயன்றி இரண்டல்ல. ஏற்றத்தாழ்வுமல்ல. இல்லறத்தை அனுபவிக்கிறவர்களுக்கு அவர்களுக்குரிய பலனை கொடுப்பதற்காக ஆண் - பெண் இணைப்பு மூலம் புத்திரன் என்ற பெயரால் அவர்களுடைய காலம் நிறைவேற்றப்படுகிறது.




இதே போல் துறவறம் பூனுகிறவர்களுக்கு இந்த பாசம் இடகலை - பிங்கலை என்ற நாடிகள் சூரியநாடி சந்திரநாடிகள் என்ற பேதத்தின் மூலம் சீடன் என்ற பெயரால் ஒரு புத்திரன் கிடைக்கிறது. அதன்மூலம் துறவிகளின் காலம் வளர்கிறது.




இல்லறத்திலும் துறவறத்திலும் சிறிது பெரிது பார்ப்பது பேதமை.  இரண்டும் ஒரே நிறையையும் தகுதியையும் கொண்டது தான். இதில் பெரிது சிறிது பேசுகிறவர்கள் இரண்டும் விளங்காத நபர்களாகத் தான் இருக்க முடியும்.

இல்லறம் இல்லையேல் உத்தமர்கள் பிறக்க வழியில்லை. துறவறம் இல்லையேல் மனநெறியை சாதிக்கும் மகாயோகிகள் தோன்ற வழியில்லை.

ஆகவே இல்லறமும், துறவறமும் வெவ்வேறல்ல. அது அவரவர் மனப்போக்கிற்க்கும் பிராணத்துவ தர்மத்திற்கும் தக்கவாறு உண்டாக்கப்பட்ட காரியமாகும்.

பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள் பக்கம்-92 

'கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழித்திடும் : விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரிக்கை




விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் 2012ஆம் ஆண்டு ஹிக்ஸ் பாஸன் என்ற இந்த கடவுள் துகளைக் கண்டுபிடித்தனர். . மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டனைச் சேர்ந்த பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி தெரிவித்-துள்ள விஞ்ஞானி, ஹிக்ஸ் பாஸன் என்றழைக்கப்படும் கடவுள் துகளில் கவலைக்குரிய அம்சம் ஒன்று உள்ளது. அதாவது 100 பில்லியன் கிகா-எலக்ட்ரான் - வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது அதிநிலைத்தன்மை பெறும் அபாயமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இதன் பொருள் என்னவெனில் பிரபஞ்சம், பேரழிவு வெற்றிட சீர்கேடு என்ற நிகழ்வுக்கு ஆட்பட நேரிடலாம், காரணம் உண்மையான வெற்றிடக் குமிழ் ஒளியின் வேகத்தில் விரிவாக்கம் பெறும். இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது. அதி ஆற்றலில் ஹிக்ஸ் என்ற அந்தக் கடவுள் துகள் நிலைகுலையும் தன்மை உள்ளது என்ற அபாயத்தை அவ்வளவு எளிதாக மறந்து விடவோ, அலட்சியம் காட்டவோ முடியாத விஷயம். என்று ஸ்டார்மஸ் என்ற புதிய புத்தகத்திற்கு அவர் அளித்துள்ள முன்னுரையில் தெரிவித்துள்ளார். 

இறந்து விட்டதாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்தார்

வாணியம்பாடி: வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த ஜப்ருல்லா மனைவி ஷேனாஸ் (54). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்ததாக தெரிகிறது. அவரது இறப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, நேற்று காலை ஷேனாசின் உடலை அவரது குடும்பத்தினர் வாணியம்பாடி ஜாப்ராபாத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வந்தனர். 

மாலை 5.30 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது. உடல் மீது உறவினர்கள் தண்ணீர் ஊற்றிய போது, ஷேனாசின் கண்கள் லேசாக அசைந்துள்ளன, உதடுகள் மேலும் கீழுமாக அசைந்துள்ளன. இதனால் பயத்தில் உறவினர்கள் அலறினர். உடனே அவரது குடும்பத்தினர் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டரை, அழைத்து உடலை பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதித்த டாக்டர், ஷேனாஸ் கோமா நிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என தெரிவித்துள்ளார். அதன்படி சிறிது நேரத்தில் ஷேனாஸ் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியில் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை

               காசி நகரைச் சுற்றி 45-கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை மற்றும் காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை இதற்க்கு காரணம் என்னாவாயிருக்கும்?  ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். காசியை அடைந்த அனுமன், எங்கும் லிங்கங்களாக காட்சி அளித்ததால் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். 

பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன், அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கோபித்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி காசியில் கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை என கூறுகின்றனர்.

Sunday, August 10, 2014

flipkart ஆக்கமும் வளர்ச்சியும்


W5Ipz4Q.jpg


சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.


ஆரம்பம்


d3bMEmP.jpg

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.


ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.

பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.


கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.


முதலீடு திரட்டல்


பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.


கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.


வளர்ச்சி

gIkWn0Q.jpg



திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.


மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் MYNTRA.com நிறுவனத்தை வாங்கியது. 2012-ம் ஆண்டு லெட்ஸ்பை(Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.

6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.

4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால்... ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.