மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட நட்புக்கு, புதிய வடிவமாகத்தான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பேனா நட்பு என்ற முகமறியா நண்பர்கள் வட்டம் உருவானது. பலரும் பல்வேறு ஊர்களில் வசித்தாலும், நேரில் சந்தித்துக் கொள்ளாமலே தங்களது நட்பினை கடிதங்கள் மூலம் வளர்த்து வந்தனர்.விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, பேனா நட்பு என்பது, வடிவம் மாறி, இன்று சமூக வலைதளங்களாக உருப்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நம் சிறு வயது நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி தோழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து அவர்களுடைய நட்பை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும், நண்பர்களின் நண்பர்களையும் நாம் நட்பாக்கிக் கொள்ள முடியும். ஒருமித்த கொள்கைகளும் கருத்துகளும் உடையவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட முடியும்.இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் சமூக வலைதளங்களையே பயன்படுத்துகின்றனர்.தேர்தல் பிரசாரங்கள்கூட தற்போது இவற்றின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. இதன் மூலம் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் இளைஞர் சமுதாயத்தை எளிதில் சென்றடைகிறது. இன்று பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள்கூட பொதுமக்களின் குறைகளை இந்த சமூக வலைதளங்களின் மூலம் அறிந்து கொண்டு அவற்றின்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், இதன் பயன்பாட்டைப் பாராட்டத்தானே வேண்டும்!ஆனால், அதே நேரத்தில் இந்த விஷயத்தில் நன்மையோடு தீமையும் சேர்ந்தே இருக்கிறது. இதுபோன்ற சமூக வலைதளங்களில் உறுப்பினர்களாகச் சேரும் நபர்கள், தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களை மறைத்து, போலியான பெயர்களில் மற்றவர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது.இதில் பெரும்பாலும், ஆண்கள் தங்களை பெண்களாகச் சித்திரித்து மற்ற பெண்களின் நட்பைப் பெற்று, அவர்களைக் காதல் வலையில் வீழ்த்த முயற்சிப்பதும், சில பெண்கள், ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்க முயல்வதும் தொடர்கதையாகி வருகிறது.மேலும், பிரபலமானவர்களின் பெயரில் சமூக வலைதளக் கணக்கைத் தொடங்கி, அவரே கருத்து வெளியிடுவதுபோல கருத்துகளை வெளியிட்டு, அப்பிரபலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.இத்தகைய குற்றங்களை கண்காணிப்பதற்கென்றே தனியாக சைபர் கிரைம் போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். இவர்களது பணியே இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கைதேர்ந்த குற்றவாளிகளைக் கைது செய்வதுதான்.இளைஞர்கள் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், இதனை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதி தங்களின் முழு நேரத்தையும் இதிலேயே கழிக்கின்றனர். நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும், நட்பு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவும், பயனுள்ள பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைதளங்கள், கிட்டத்தட்ட இளைஞர்களை இணைய அடிமைகளாகவே மாற்றி விட்டன என்பது கசப்பான உண்மையே.சமூக வலைதளங்கள், உலகையே நட்பு என்னும் குடைக்குள் அடக்கி, உலகை ஒன்றாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால், இவை இளைஞர்களின் சிந்தனை, செயல்பாடு மற்றும் பொன்னான நேரம் அனைத்தையும் ஜீரணித்துவிடும் சமூக "கவலை' தளமாக மாறி வருகின்றன என்பதுதான் மிகவும் கவலையளிக்கும் செய்தி.
மக்களின் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக இருக்க பெரும்பான்மையான மக்கள் விரும்புவது திரைபடம் பார்ப்பதைத் தான். மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான். சிறந்த போட்டோகிராபி இயக்குனருக்கான தகுதிகள்:
ஒரு திரைப்படத்தின் காட்சி அமைப்பு சிந்தனை, நல்ல தொழில் நுட்பம், நெருக்கடியான தருணத்தில் நிதானம் இழக்காமல் இருத்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன் போன்றவை ஒரு சினிமட்டோபிராபி இயக்குனருக்கு முக்கிய தகுதிகள் ஆகும். ஆரம்ப நாட்களில் இந்த போட்டோகிராபி தொழிலானது ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டரே இயக்குனராகவும் இருப்பார். ஆனால் இன்றைய காலத்தில் போட்டோகிராபி இயக்குனரின் பணி மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனர், ஒரு படத்திற்கான சொத்தாக மதிக்கப்படுகிறார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.
இத்துறைக்கான படிப்பு மற்றும் கல்லூரிகள்:
ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனராக உருவாக படிப்பை விட ஆசிரியரே முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமாட்டோகிராபி தொடர்பான கல்வியை திரைப்பட கல்லூரியில் படிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை இப்படிப்பு 2 முதல் 3 வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது. புனேவில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இது தவிர விஸ்லிங் உட்ஸ் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பள்ளி படிப்பை முடித்த பிறகு 2 வருட படிப்பை மேற்கொள்ளலாம்.திரைப்பட கல்லூரிகளில் பயிற்சி என்பது தியரி மற்றும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். மேலும் கல்லூரிக்கு வெளியில் தனியாக பல ப்ராஜெக்ட்கள் செய்ய வே ண்டியிருக்கும். இந்த படிப்பானது கேமராக்களை வைத்து செயல் முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது.கலைநயத்தை கற்றல்:இப்படிப்பில் முதல்வருடம் பொது அடிப்படை படிப்பாக இருக்கும். இதில் டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். இதில் ஒரு நாளில் முதல் பாதி தியரி வகுப்புகளும், பிற்பாதி செயல் முறை விளக்கத்திற்கும் ஒதுக்கப்படும். மாலை வேளையில் திரைப்படங்கள் திரையிடப்படும். அடுத்த ஆண்டில் நடைமுறை பயிற்சிக்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது. இதில் குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமென்டரி போன்றவைகளை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்காக பல வீடியோக்களை மாணவர்கள் தயாரிக்க வைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் இத் துறையில் சிறந்து விளங்க முடியும்.பயிற்சியின் தன்மை:
இப்படிப்பை கற்றலின் போது மாணவர்கள் ஒரு குழுவாக பயிற்சி பெற வைக்கப்படுகிறார்கள். குழுவாக பணியாற்றும் போது அதில் மாணவர்கள் சிறந்த அனுபவத்தை பெறமுடியும். இது போன்ற பயிற்சியில் ஒருவரின் சுய சாதனையைவிட ஒரு குழுவின் சாதனை பெரியதாக தோன்றும். இதில் ஒவ்வொருவரின் தனித்திறமையை அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் மகத்துவம் வெளிப்படும். மேலும் ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு திரைப்பட கல்லூரியில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இத்துறையில் தனிமனிதன் என்ற முறையில் உங்கள் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு.இத்துறைக்கேற்ற மாறுபட்ட படிப்பு:
சினிமாட்டோகிராபி துறையில் பயிற்சி பெற திரைப்பட கல்லூரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களை கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்கும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு பல விதமான கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் செய்தி அல்லது டாகுமென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடைக்கிறது. மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகள் சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய படிப்புகளில் திரைப்பட கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களின் சிறியளவு மாடல்கள் பின்பற்றப்படுகிறது.பணி வாய்ப்புகள்:
படித்து முடித்ததும் விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில் சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற சினிமாட்டோகிராபர்கள் ஹீரோக்கள் மற்றும் தலைசிறந்த இயக்குனர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இத்துறையில் வெற்றியடைவது மிகவும் எளிதான ஒன்று அல்ல. இத்துறையை பொறுத்தவரை தொழில்நுட்ப அறிவுடன் பொறுமையும் மிக அவசியம். இதில் அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும்.ஆரம்ப காலத்தில் பல சிக்கல்களையும், தடைகளையும் கடக்க வேண்டியிருக்கும். அதை முடித்துவிட்டால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கும். இத்துறையில் டாகுமெண்டரி படத்திற்கு சில ஆயிரங்களும், முதல் படத்திற்கு சில லட்சங்களும் ஊதியம் பெறலாம். ஆனால் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் கோடிகள் வரை இத்துறையில் ஊதியமாக பெற சாத்தியங்கள் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.
இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.
வங்கி டெபாஸிட்தாரர்களின் விழிப்புணர்வு மேம்பாட்டு நிதியம் (Depositor Eduction and Awareness Fund) அமைக்கப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட்டுகளை ஒன்று திரட்டி இந்த நிதியம் அமைக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர்களில் ஒருவர் தலைமை வகிக்கும் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். வங்கி டெபாஸிட்தாரர்கள் சார்ந்த நலத்திட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிதியத்திலிருந்து அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கி நிர்வாக கட்டுப்பாடு விதிமுறை பிரிவு 26இன் படி Section 26 of Banking Regulation Act) ஒவ்வொரு வருட முடிவிலும், நிர்வகிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்குகளில், பத்து வருடங்களுக்கு மேல் உரிமை கோரப்படாத டெபாஸிட்டுகளின் விவரங்களைப் பற்றிய அறிக்கையை, இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.வருடத்திற்கு வருடம் இம்மாதிரி கணக்குகளின் எண்ணிக்கையும், தொகையும் அதிகரித்து வருவதுதான் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்புக்கு முக்கிய காரணமாகும்.சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்திய வங்கிகளில் உரிமம் கோரப்படாத டெபாஸிட் கணக்குகளின் எண்ணிக்கை 1.33 கோடி. அந்த கணக்குகளில் குவிந்திருக்கும் டெபாஸிட்டுகளின் மொத்த தொகை 3,652 கோடி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (714 கோடி ரூபாய்), கனரா வங்கி (525 கோடி ரூபாய்), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (101 கோடி ரூபாய்) ஆகிய வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னிலை வகிக்கின்றன.டெபாஸிட்தாரர்களின் ஒப்புதல் இல்லாமலே அவற்றின் கால வரம்பை (ûT (Maturiy period) நீட்டிக்கும் பழக்கம் சில வங்கிகளியிடையே நிலவி வருகிறது. இதுபோன்ற டெபாஸிட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உரிமம் கோரப்படாத கணக்குகளின் எண்ணிக்கையும், அதன் கூட்டுத்தொகையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலோட்டமாக பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கியின் ஒரு நிதி நிர்வாக மேம்பாடு போல தோன்றினாலும், நம்மில் பலருடைய உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட் பணமும் இந்த நிதியத்தில் சேர வாய்ப்புள்ளதால், இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.ஆர்.பி.ஐ.யின் நடப்பு விதிமுறைகளின்படி, ஒருவருடைய வங்கி கணக்கில் தொடர்ந்து இரு வருடங்கள் பணபரிமாற்றம் எதுவும் நடக்கவில்லையென்றால், அந்த கணக்கு டார்மன்ட் (Dormant Accounts) வகையை சார்ந்ததாக கருதப்படுகிறது. நடப்பு (Current), சேமிப்பு (Savings), காலவரை வைப்பு (Fixed), அயல் நாட்டில் வாழும் இந்தியர்களின் அந்நியச் செலாவணி (NRI Deposits) ஆகிய கணக்குகள் இந்த விதிமுறைக்குள் வரும்.ஆனால், வங்கிகள் முன்ஜாக்கிரதையாக ஒரு வருடத்திற்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை (Inoperative Accounts) இயங்கும் கணக்குகளிலிருந்து (Operative Accounts) தனியாக பிரித்தெடுத்து, அவற்றை அதிக கண்காணிப்புகளுக்கு உட்படுத்துகின்றன. கேட்பாரற்ற கணக்குகளில் எளிதாக மோசடிகள் நடக்கக்கூடும் என்பதுதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணமாகும்.கணக்கு வைத்திருப்பவர் அல்லது மற்றவர் மூலமாக ஒருவருடைய வங்கி கணக்கில், ஒரு வருடத்தில் ஒரு பண பரிமாற்றம் நடந்திருந்தாலும், அந்த கணக்கு இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஒருவருடைய காலவரை வைப்புத்தொகைக்கான வட்டித்தொகை, அவருடைய பெயரிலுள்ள நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டால், அந்த கணக்கில் வேறெந்த பண பரிமாற்றம் இல்லையென்றாலும், அது இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஆனால், சேமிப்பு கணக்கிற்கான வட்டி தொகை அந்த கணக்கில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை சேர்க்கப்படுவது பணபரிமாற்ற நடவடிக்கையாக கருதப்படமாட்டாது.
ஆனால், வேறெந்த பண பரிமாற்றமும் இல்லாமல், வங்கிகளின் கட்டணம் மட்டும் ஒரு கணக்கில் கழிக்கப்பட்டிருந்தால், அந்த கணக்கு, தனியாக பிரிக்கப்பட்டு, இயக்கப்படாத கணக்குகளில் சேர்க்கப்படும்.
இம்மாதிரி பிரிவினைக்குப் பிறகு, டெபாஸிட்தாரர்களுக்கு அதைப்பற்றி எழுத்து மூலம் அறிவிக்கவேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். வங்கிகளிலிருந்து பெறப்படும் கடிதங்களுக்கு நாம் உடனடியாக பதில் அளிக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு மேல், கணக்கு இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களை அந்த பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வங்கி கிளையின் விலாச மாற்றம், கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிட மாற்றம், மறதி, வயோதிகம், இறப்பு போன்ற காரணங்கள் இதில் அடங்கும். ஊர் மாறியிருந்தால், அந்த விலாசத்தை தெரிவித்து, அருகிலுள்ள அதே வங்கியின் கிளைக்கு கணக்கை மாற்றித் தர விண்ணப்பிக்கலாம். அயல்நாடு சென்றிருப்பது போன்ற நியாயமான காரணங்களை அளித்தால், வங்கிகள் ஒரு வருட கால அவகாசத்தை இரு வருடங்களாக நீட்டிக்கும் வாய்ப்புள்ளது.தகவல் பரிமாற்றம் இல்லையென்றால், இந்த காலகட்டத்தில் கணக்கில் பணம் இருந்தாலும் காசோலைகளை சில வங்கிகள் திருப்பி அனுப்பிவிடுகின்றன. இதனால், கணக்கு வைத்திருப்பவருக்கு அவமானமும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், அவசர தேவைக்கு ஏ.டி.எம். மற்றும் இணையதளம் மூலமாகவும் பண பரிவத்தனை செய்ய முடியாது.
இயக்கப்படாத பிரிவில் சேர்க்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு உரிய வட்டித் தொகையை வங்கிகள் வழங்கவேண்டும் என்பது விதிமுறை. இந்த பிரிவு கணக்குகளுக்கு அதிக கண்காணிப்பு தேவைப்படுவதால் ஒவ்வொரு வங்கியும் நிர்வாக கட்டணங்களை வசூலிக்கின்றன.இதைத் தவிர, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை கணக்கில் இல்லையென்றால் அதற்கான கட்டணமும் நிலுவை தொகையிலிருந்து கழிக்கப்பட்டுவிடும். எனவே, வங்கி கணக்குகளை இயக்காமல் நீண்ட காலம் விட்டுவிட்டால், அந்த கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி வங்கி கட்டணமாக கரைந்து மறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, உரிமை கோரப்படாத டெபாஸிட்தாரர்களின் பெயர் மற்றும் விலாசங்களை அவர்களுடைய இணையதளத்தில் வங்கிகள் வெளியிட்டு, அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும். வங்கி கணக்குகளை புதுப்பிக்கும் வழிமுறைகளையும் வங்கிகள் தெரிவிக்கவேண்டும்.
இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, சமீபத்திய விலாசத்திற்கான சான்று மற்றும் புகைப்படத்தை (KYC documents) வங்கிக்கு அளிக்கவேண்டும்.இந்த ஆவணங்கள் மூலமும் கையொப்பம் மூலமும் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு, கணக்கை வங்கி புதுப்பிக்கும். இயக்கப்படாத கணக்கை இயங்கும் கணக்காக மாற்றுவதற்கு, வங்கிகள் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.
பணி புரியும் நிறுவனங்களை மாற்றும்போது, ஊழியர் இன்னொரு வங்கியில் கணக்கு துவங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அம்மாதிரி சமயங்களில், முந்தைய கணக்கு இயக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆகவே, பணிபுரியும் நிறுவனங்களை மாற்றும்போது, முந்தைய வங்கி கணக்கு தேவையில்லை என்றால் அதை முடித்து விடுவதுதான் நல்லது.ஓய்வு ஊதியம் பெறும் முதியோர் இறந்த பிறகு, வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பித்து, அந்த கணக்கை மூடிவிட வேண்டும். இல்லையென்றால், நிர்வாக செலவுகளை செலுத்தும்படி, வங்கியிலிருந்து வசூல் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புள்ளது.நம்முடைய அன்றாட பணபரிவர்த்தனைக்கு தேவையில்லாத வங்கி கணக்குகளை மூடிவிட்டால், நம்முடைய பணம் நம் கையைவிட்டு, ரிசர்வ் வங்கியின் உரிமை கோரப்படாத நிதியத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பில்லை. சில கணக்குகளை தொடர நேரிட்டால், வருடத்திற்கு ஒரு முறையாவது அக்கணக்குகளில் நூறு ரூபாயை செலுத்துவதற்கு மறக்கக்கூடாது.
தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக :கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த :தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.காசம் இறைப்பு நீங்க :கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.தலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.தும்மல் நிற்க :தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.
பொதுவாக சமுகவலைதளங்களில் இந்த பேக் ஐடி அதாவது போலி நபர்கள் தொல்லை அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது அதிலும் Facebookல் அதிக அளவான பேக் ஐயடிகள் நாளுக்கு நாள் உருவாக்க படுகின்றது என்பது ஒவ்வொரு பேஸ்புக் பயனாளர்களும் அறிந்த உண்மை
இது ஒரு விதமான மன நோய் என்று கூட கூறி விடலாம் . இவ்வாறான போலி ஐயடிகள் பல விதமான தேவைகள் கருதி உருவாக்க படுகின்றது அதில் அதிக பயங்கரமானது நம் கணக்கு போல நமது பெயரில் ஆரம்பிப்பது இது கொடுமையானது சரி இதனை தடுக்க வழி இருக்கின்றதே Report பண்ணினால் போதும் என்பது நாம் அறிந்ததுதான். எல்லோருக்கும் Report பண்ண முடியும் ஆணால் பிரச்சனை என்னவென்றால் எது பேக்ஐடி என்று கண்டு பிடிப்பது தான் கஸ்ரம் இந்த பதிவு பேக் ஐடியை கண்டு பிடிப்பது எப்படி என்பதுதான் இதற்க்கு ஒரு வழி இருக்கின்றது கீழே உள்ள முகவரி ஊடாக உள் நுழைந்து உங்கள் நம்பர்களில் எத்தனை நண்பர்கள் பேக் என்பதை அறிந்து கொள்ளுங்கள்முகவரி
வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கணப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.