Tuesday, April 19, 2016

பசியும் வேதனையும்


பசியும் வேதனையும் இதைவிட கொடுமை என்றால் முதலில் அகற்றபட வேண்டியது கடவுள் என்னும் அதிகார வர்க்கத்தின் கற்பனையை தான்

Comments
Senthil Nathan கடவுள் மறுப்பாளர்கள் ஆதிக்கமாய் இருக்கும் இடங்களில் நாடுகளில் பசியும் வேதனையும் இருப்பதில்லையா?

Muthuraja N Senthil Nathan அந்த பிள்ளையின் கலவரத்தை பாருங்கள் எல்லாம் வல்லவனுக்கு செலவிடபடும் உழைப்பின் மதிப்பை சரியாக பயன்படுத்தினால் இதில் பாதி குறையும் ( கடவுள் மறுப்பு ஆதிக்க இடங்களில் ஓப்பிடும் போது குறைவு தான் ஆனால் அங்கேயும் கடவுள் நம்பிக்கைக்கு செலவிட படும் உழைப்பில் குறை உள்ளது

Michael P இப்படி பசியும் வேதனையும் கண்டு கடந்துபோகிறவன் மனிதனே இல்லை

Senthil Nathan 1.வறுமையை ஒழிக்க முடியுமா?

2.கடவுளை ஒழிப்பதால் வறுமை ஒழியும் என்பதின் அடிப்படை என்ன?

3.தெண்டச் (கற்பனை) செலவு என்பது இதில் மட்டும் தான் உள்ளதா?. மற்றவற்றை குரலுயர்த்தி சாடுவதில்லையே ஏன்?

Muthuraja N ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

- ஆல்பட் ஐன்ஸ்டீன்

இதன் அடிபடையில் சமூகத்தையே மனிதன் சார்ந்திருக்க வேண்டியுள்ளது

Senthil Nathan சரி

Michael P //1.வறுமையை ஒழிக்க முடியுமா?//

நிச்சயம் முடியும்

//2.கடவுளை ஒழிப்பதால் வறுமை ஒழியும் என்பதின் அடிப்படை என்ன?//

கடவுள் காப்பாற்றுவன் என்ற மூடநம்பிக்கை ஒழியும் ..தான் உழைத்தால்தான் உணவு ..நாமே நம் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் கடவுள் அல்ல என்ற உணர்வு பிறக்கும் ..தன்னம்பிக்கை உருவாகும்

///3.தெண்டச் (கற்பனை) செலவு என்பது இதில் மட்டும் தான் உள்ளதா?. //

இப்போதுகூட ஒருலட்சத்தி எட்டு வடையை கோர்த்து அனுமானுக்கு போட்டார்களே அது தண்ட செலவு இல்லையா?

//மற்றவற்றை குரலுயர்த்தி சாடுவதில்லையே ஏன்?//

கபாவில் பட்டு கருப்புத்துணிக்கும் எழுத்துகளுக்கு தங்கம் பூசும் செலவும் பலகோடிகள் அதையும் இங்கே இங்கே எடுத்துக் கூறி இருக்கிறோம்

மற்றவை என்ன????

Senthil Nathan மற்றவற்றை என்றால்

100 கோடி,150 கோடி என சினிமா எடுப்பது,
100 அடி கட்டவுட்டு வைத்து பாலாபிசேகம் செய்வது

அலங்கார தோரணவாயில், வழி நெடுக ப்ளெக்ஸ்கள், ஆடம்பர மேடைகள் அமைத்து பிரச்சாரம் செய்வது.

ஆடம்பரமான முறையில் விசேடங்கள் நடத்துவது

இது போன்றவற்றை குறிப்பிட்டேன்

Senthil Nathan //கடவுள் காப்பாற்றுவன் என்ற மூடநம்பிக்கை ஒழியும் ..தான் உழைத்தால்தான் உணவு ..நாமே நம் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் கடவுள் அல்ல என்ற உணர்வு பிறக்கும் ..தன்னம்பிக்கை உருவாகும்//

நீங்கள் சமாளிப்பதை பார்த்தால்
அம்மா வரட்டுமென்று காத்திருக்கோம் என்று சொன்னவர்களை போல
கடவுள் வந்து காப்பாத்தட்டும் என்று காத்திருப்பவர்களுக்கு பெயர்தான் ஏழைகள் என்று
சொல்லுவீர்கள் போல?

Senthil Nathan //ஒருலட்சத்தி எட்டு வடை// என்னாச்சு பூஜை முடித்த பின்பு பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுத்தார்களா இல்லை வடை வீணாப் போச்சா?

Michael P //மற்றவற்றை என்றால்

100 கோடி,150 கோடி என சினிமா எடுப்பது,
100 அடி கட்டவுட்டு வைத்து பாலாபிசேகம் செய்வது

அலங்கார தோரணவாயில், வழி நெடுக ப்ளெக்ஸ்கள், ஆடம்பர மேடைகள் அமைத்து பிரச்சாரம் செய்வது.

ஆடம்பரமான முறையில் விசேடங்கள் நடத்துவது

இது போன்றவற்றை குறிப்பிட்டேன்//

ஆம் இதுவும் தெரிந்து கொண்டே செய்யும் மகா அயோக்கிய தனம்

Senthil Nathan இதனை எதிர்க்க எத்தனிக்கவாவதும் முடியுமா?

Michael P //நீங்கள் சமாளிப்பதை பார்த்தால்
அம்மா வரட்டுமென்று காத்திருக்கோம் என்று சொன்னவர்களை போல
கடவுள் வந்து காப்பாத்தட்டும் என்று காத்திருப்பவர்களுக்கு பெயர்தான் ஏழைகள் என்று
சொல்லுவீர்கள் போல?//

கடவுள் ஒருபோதும் அவர்களை காப்பாற்ற மாட்டான் ..அரசியல்வாதிகளுக்க கொள்ளையடிக்கவே நேரம்பத்தாது வறுமையில் வாடுபவர்களுக்கு ஒருவாய் சோறு மனிதாபிமானம் உள்ளவர்கள் கடமை

Michael P //ஒருலட்சத்தி எட்டு வடை// என்னாச்சு பூஜை முடித்த பின்பு பிரசாதமாக 
பக்தர்களுக்கு கொடுத்தார்களா இல்லை வடை வீணாப் போச்சா?//

பிரசாதம் என்ற பெயர் கோடிக கணக்கில் வியாபாரம் அதில் கொள்ளையடித்து பலர்
வடை வீணாகிபோகி நாறியது தனி

Senthil Nathan வறுமையில் வாடுபவர்களுக்கு ஒருவாய் சோறு மனிதாபிமானம் உள்ளவர்கள் கடமை //உண்மை, அருமை. இதில் கடவுளை ஒழிக்க வேண்டும் என்பது?

Michael P கடவுளுக்கு கொட்டு வதயாவது வறுமையில் உள்ளவர்களுக்கு கொடுப்பார்கள் என்ற நப்பாசையில் தான்

Senthil Nathan நல்லது.
.

No comments:

Post a Comment