Friday, April 22, 2016

கோவிலுக்கு பெண்கள் நுழைய நீதி மன்றம் உத்தரவு .

யோக்கியன் பிரம்மசாரி ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் நுழைய நீதி மன்றம் உத்தரவு .
கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் கடவுள் தீட்டு பட்டு போய் விடுவானாம்.
அவ்வளவு பலவீனமான கடவுள் மானுட சமூகத்திற்கு எதற்கு?
இந்து மத கோவில் சிற்பங்கள் பெரும்பாலும் பெண்மை என்ற உLலின் மீது நடத்தப்பட்ட அத்துமீறிய பாலியல் வன்முறையே ,,,,,,,,
பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி மத ஆட்சாரத்தை மக்கள் மீது கட்டளையிடும் யோக்கியவான்களே ,,,,,,,,
கோவிலில் இத்தகைய ஆபாச சிலைகளை மட்டும் வைத்திருப்பது ஏன்??,,,,,,,
எந்த வக்கிர எண்னம் கொண்ட சாஸ்திர சாமியாராலோ,,,,,,
எந்த சோம்பேரி மன்னனாலோ ,,,,,,,
எந்த குருர குணம் படைத்த சிற்பியாலோ,,,,,,,,,
உருவாக்கப்பட்டவையே இந்த ஆபாச சிலைகள்.
இது நாள் வரை நாமறிந்த வரலாற்றில் ஒரு பெண் சிற்பியையும் அறிந்ததில்லை.ஒரு வேலை இருந்திருந்தால் காரி உமிழ்ந்திருப்பால் அவர்களது மூஞ்சில்,,,,
இந்த சிலைகள் இன்றளவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே.
பெண்னிடம் இருந்து பிறந்து அவர்களிடம் இருந்து அனைத்தையும் கற்று கொள்வது அவர்களை அடிமைபடுத்தி
புறக்கனித்து
அவமதிப்பதற்காகவா,,,,
இந்த அறிவியல் வளர்சி காலத்திலும் பெண்கள் கோவிலுக்குள் நுழைய நீதி மன்றத்தின் உத்தரவு தேவைப்படுவது வெட்ககேடு.
மானுட சமூகத்திற்கு சிறிதளவும் பயன்படாத இந்த பல ஆயிரம் ஏக்கர் மூட நம்பிக்கை தளங்கள் அனைத்தும் கல்வி நிலையமாக , மருத்துவமனையாக மாறி முழுமையான சமூக மாற்றத்திற்கு பயன்பட வேண்டியது காலத்தின் தேவை.
சமூக விடுதலை
வர்க்க விடுதலைக்கு முதல் அடித்தளமே பெண் விடுதலை.
பாலின ஏற்றதாழ்வுகளை அடியோடு தகர்ப்போம்.
தோழர்.மணிமாறன்.

Comments
Senthil Nathan பகுத்தறிய துனியாத பதிவு

Michael P பகுதறியும் துணிவிருந்தால் தெளிவிருந்தால் பதிவில் உள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூறவும்

Senthil Nathan அவ்வளவு அறிவு தற்சமயம் முழுமையாக என்னிடம் இல்லை என்பதனை ஒப்புக்கொள்கிறேன். ஆயினும் தங்களுக்கு ஆபாசமாக தெரியும் ஒரு விடயம் இவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்த அவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும்.?

Michael P இப்படி பெண்களை கேவலமாக செதுக்கியவன் கைல கிடைச்சான் செத்தான்

Senthil Nathan ஏற்கனவே செத்துடாங்க

Michael P அந்த செத்துபோன நாய்களை தோலுரிக்கவே இந்த பதிவு

Venki Venkat Arumai tholare

Senthil Nathan இன்றைய தினத்தில் இதனை விடவும் பெண்கள் கேவலாமாக சித்தரிக்க படுவது பற்றி அறிவீர்களா?

Michael P அந்த இழிமகன்களையும் சேரத்துதான்

Ravi Kumar உலகம் முழுதும். பெண் ஒரு. பொருளாகவே. பாவிக்கபடுகிறார், ஆண் என்றால். என்ன. என்றே. தெரியவில்லை, ஆண். பெண்டாளப்பிறந்தவனா, அப்படிஆயின், ஆன். என்பதே. ஒரு. இழி. சொல்லாக. கருதுகிறேன்.காட்டான்

Padmanaba Rao Murali பிரச்சனை அய்யப்பனுக்கல்ல. பெண்களுக்குத்தான்.

Padmanaba Rao Murali ஒரு சில கோயில்களில் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கும். அங்கு ஒரு பெண் மாத விடாய் அடையும் நிலையில் இருந்தாலோ, அடைந்தாலோ உதிர போக்கு அதிகமாகும். மேலும் கர்பபமாக இருந்தாலும் குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.

Padmanaba Rao Murali மேலும் அந்த கடும் மலை, பயிற்சி, போன்றவை செய்யும் பொழுது அடையும் நிலையான பாரபட்சமற்ற அன்பு நிலை இயற்கையாகவே பெண்களிடம் உள்ளது. அதற்காக எந்த பயிற்சியை எடுக்க தேவையில்லை. அவர்களின் இயற்கை நிலை அது.

Senthil Nathan //அந்த இழிமகன்களையும் சேரத்துதான்// வெறும் வார்த்தையால் தோலுரிப்பதனால் பெண்களுக்கு நன்மை எதுவும் கிடைக்குமா?

Padmanaba Rao Murali கோயில்களில் நோக்கமே தியானம், அதன் மூலம் முழுமையான மன அமைதி கிடைக்க வேண்டுமென்பது தான். நிறைவேறாத காம உணர்ச்சிகள் தான் கோபமாக, வெறுப்பாக, வன்முறையாக மாறுகிறது. முழு மன அமைதி கிடைக்கப்பட வேண்டுமென்றால் முதலில் எல்லாவற்றிற்கும் ஆணிவேரான காமத்தை கடந்து வர வேண்டும். முழு தியான நிலை காமத்தை கடந்தவனாலேயே மட்டுமே முடியும். கடப்பது என்பது அனுபவித்தோ அல்லது உணர்வதின் மூலமாக நிறைவடைவது.

Michael P //ஒரு சில கோயில்களில் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கும்.//

அறிவியல் சான்றுடன் நிறுபிக்க முடியுமா? எதற்கு இந்த பித்தாலட்டம்

//அங்கு ஒரு பெண் மாத விடாய் அடையும் நிலையில் இருந்தாலோ, அடைந்தாலோ உதிர போக்கு அதிகமாகும்.//

அதற்கு பலகாரணங்கள் இருக்கிறது கோவிலுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை

//மேலும் கர்பபமாக இருந்தாலும் குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.//

அப்படி எந்த அறிவியலும் கூறவில்லை இவை எல்லாம் மதவாதிகளின் புருடா

Michael P //மேலும் அந்த கடும் மலை, பயிற்சி, போன்றவை செய்யும் பொழுது அடையும் நிலையான பாரபட்சமற்ற அன்பு நிலை இயற்கையாகவே பெண்களிடம் உள்ளது. அதற்காக எந்த பயிற்சியை எடுக்க தேவையில்லை. அவர்களின் இயற்கை நிலை அது.//

அதுதான் அந்த அவர்களுக்கு இருக்கிறதே அதானல் கோவிலிக்குள் சென்றால் என்ன கெடுதி
இது ஆண் ஆதிக்கவாதிகளின் கேடுகெட்ட செயல்

Senthil Nathan இந்த அறிவியலை வைத்து நிருபணம் செய்வது சற்று கடினமான விடயம். இதே வேகத்தில் அறிவியல் வளர்ந்தால் இன்னும் 300லிருந்து 500 வருடங்கள் ஆகும். எல்லாவற்றையும் நிருவனுமென்று எண்ணாதீர்கள். சிலவற்றை உணரவும் முற்படுங்கள் ஏனென்றால் நாம் மனிதர்கள்.

Michael P உணர்வு தான் கடவுள் என்று கடவுளை நாயாக்காதீர்கள்
பதிவுக்கு என்ன பதில் என்னவோ அதை சொல்லுங்கள்

Michael P உணர்வு தான் கடவுள் என்று கடவுளை நாயாக்காதீர்கள்
பதிவுக்கு என்ன பதில் என்னவோ அதை சொல்லுங்கள்

Senthil Nathan எனக்கு தெரிந்ததனை வைத்து கட்டிய ஒரு கட்டுக்கதை

கோவிலின் கர்ப்ப கிரகங்கள் காந்தபுலம் நிறைந்த கற்களால் கட்டப்பட்டவை, பெரும்பாலும் அதன் மூன்று பக்கங்கள் சன்னல்கள் இல்லாமல் வாயிற்கதவு மட்டுமே கொண்டு இருக்கும். வெளியில் இருந்து வணங்குபவர்களுக்கு காந்த சக்தி ஒருங்கே கிடைப்பதற்காக.

மனிதனின் உடல் சோர்வானது அவனின் குளுக்கோஸ் சக்தியின் அளவினை பொறுத்தது. சாப்பிட்டால் சரியாகும்.
மனச்சோர்வானது (பிரியமானவர்களின் பிரிவு/இழப்பு போன்றவற்றினால் ஏற்படுவது ) சாப்பிடுவதினால் சரியாகாது.
மனிதனின் உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன.
அந்த இரத்த சிவப்பு அணுக்கள் இருப்பினால் சூழப்பட்டு உள்ளது. அந்த இரும்பினில் ஏற்படும் காந்தச்செரிவு இறக்கம் மனச்சோர்விற்கு காரணமாகிறது.

வரைமுறை மாறிய காந்தசெரிவினால் மனநிம்மதியற்ற நிலைகள் ஏற்படுகிறது.கோவிலை/கற்பகிரகத்தை புவி சுழற்சியின் திசையில் சுற்றிவர சுற்றிவர ரத்தத்தில் காந்த செறிவு சமநிலை படுத்தப்பட்டு மன நிம்மதி உணர்வு ஏற்படுகிறது.(கோவிலுக்கு சென்று வந்தவர்களிடம் விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்)

மாதவிடாய் காலங்களில் பெண்களிடமிருந்து வெளிப்படும் அசுத்தமானது இந்த காந்த புலத்தை பாதித்துவிட கூடாது என்பற்காக அவர்களை அனுமதிப்பது இல்லை.

கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது முழுமையான மூளை வளர்ச்சி அடையாத நிலையில் இந்த காந்த பாதையை அடையும் சமையம் மனநிலை பாதிப்பு அடைந்த குழந்தையாக பிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்களும் அனுமக்கப்படுவதில்லை.

இது உங்களுக்கே சரியாக புரியும் என்பதே சந்தேகம் தான். எனில் மற்றவர்களுக்கு அன்றைய காலத்தில் எப்படி சாத்தியம், மக்களுக்கு புரிய வைப்பது. அதனால் தான் கடவுளின் பெயரால் செய்தார்கள்.

இதனை, எதனைக்கொண்டு உங்களுக்கு நிருபணம் செய்ய சொல்லுகிறீர்கள்.

இது நான் அறிந்ததனை வைத்து கட்டிய கட்டுக்கதை.
நிருபிக்க தற்சமயம் இந்த அறிவியலைக்கொண்டு என்னால் நிருபிக்க முடியாது.

Padmanaba Rao Murali மைக்கேல் சார். நீங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அறிவியலால் நிருபிக்க முடியாது. மனத்தையோ, மணத்தையோ அறிவியலால் நிருபிக்க முடியுமா?

Michael P //கோயில்களில் நோக்கமே தியானம், அதன் மூலம் முழுமையான மன அமைதி கிடைக்க வேண்டுமென்பது தான். நிறைவேறாத காம உணர்ச்சிகள் தான் கோபமாக, வெறுப்பாக, வன்முறையாக மாறுகிறது. முழு மன அமைதி கிடைக்கப்பட வேண்டுமென்றால் முதலில் எல்லாவற்றிற்கும் ஆணிவேரான காமத்தை கடந்து வர வேண்டும். முழு தியான நிலை காமத்தை கடந்தவனாலேயே மட்டுமே முடியும். கடப்பது என்பது அனுபவித்தோ அல்லது உணர்வதின் மூலமாக நிறைவடைவது.//

ஏன் இந்த டிஜிட்டல் யுகத்தில்
ஆங்காங்கே கேவலமான இந்த நிர்வாண சிலைகளுக்கு பதிலா led tvல பூளு பிலிம் போட்டால் ஒத்துக்கொள்வீரா
இதிலும் காமம் அடங்கும்

Padmanaba Rao Murali நன்றாக கவனித்து பாருங்கள். தெரு தெருவாக வைக்க வில்லை. கோயில்களில் அதுவும் உள் துழைபும் முன் பார்வை படும்படி கோபுரங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Michael P அங்கேயே led tv வச்சுக்கலாமா?

Padmanaba Rao Murali வெச்சுக்கலாமே! ஆனால் நான் சொல்ல வந்தது வேறு நீங்கள் கேட்பது வேறு

Michael P வச்சு buleflim போடறதுக்கும் கோவில். சிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

Michael P //மைக்கேல் சார். நீங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அறிவியலால் நிருபிக்க முடியாது. மனத்தையோ, மணத்தையோ அறிவியலால் நிருபிக்க முடியுமா?//

மறுபடியும் உணரமுடியுமா அது இதுனு ஆரம்பிச்சுட்டாங்க
உங்க கடவுள் என்ன மனம்மா மணமா?

உணரத்தான் முடியும்னு கடவுளை நாயாக்கி பார்க்கிறார்கள் என்னத்தை சொல்ல

Padmanaba Rao Murali கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சார். உங்களால் காட்ட முடியுமா 1 ஆனால் நிச்சயமாக உணர முடியும். ஆக கோயில்களில் சக்தி உள்ளது என்பதை உங்களால் உணரத் தான் முடியும். அதற்கு சில பயிற்சிகள், அல்லது சில நிலைகள் தேவைப் படுகிறது.

Padmanaba Rao Murali மேலும் அந்த கடும் மலை, பயிற்சி, போன்றவை செய்யும் பொழுது அடையும் நிலையான பாரபட்சமற்ற அன்பு நிலை இயற்கையாகவே பெண்களிடம் உள்ளது. அதற்காக எந்த பயிற்சியை எடுக்க தேவையில்லை. அவர்களின் இயற்கை நிலை அது.// அதுதான் அந்த அவர்களுக்கு இருக்கிறதே அதானல் கோவிலிக்குள் சென்றால் என்ன கெடுதி இது ஆண் ஆதிக்கவாதிகளின் கேடுகெட்ட செயல் // அன்பு என்பது மன நிலை . நான் சொல்வது உடல் நிலை .

Michael P //கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சார். உங்களால் காட்ட முடியுமா 1 ஆனால் நிச்சயமாக உணர முடியும். ஆக கோயில்களில் சக்தி உள்ளது என்பதை உங்களால் உணரத் தான் முடியும். அதற்கு சில பயிற்சிகள், அல்லது சில நிலைகள் தேவைப் படுகிறது.//

ஒரு வெங்காயமும் இல்லை இப்படித்தான் நல்லாறு சனிவசரன் கோவில சத்தி இருக்கு அந்த கோவிலை தாண்டும் போது சாட்டிலைட் சில நிமிடங்கள் செயல் இழுந்து போகுது நாசா அதிர்சினு கதை உட்டானுக ஆனா அது உண்மை இல்லை இந்திய விஞ்சானி மயில்சாமி அண்ணாதுரை நிருபிச்சி புருடா விட்டவனு மூஞ்சில காறிதுப்புனாரே மறந்து போச்சா

Michael P கடவுளை காட்டு என்று மட்டும் ஆத்திகனிடம் கேட்டுவிடக்கூடாது..முடியாததை கேட்டு விட்டோமே என்ற கடுப்பில் காற்றை கண்ணால் காட்ட முடியுமா? வாசனையை கண்ணால் பார்க்க முடியுமா? கரண்டை கண்ணால் பார்க்கமுடியுமா என்று உதார் விடுகிறார்கள்.

கடவுள் என்பது ஒரு ஒலிதான் இல்லைவாசனைதான்,இல்லை. உணர்ச்சி மட்டும்தான்னு சொல்லிட்டுப்போங்க. அப்ப நாங்க கடவுளை ஏன் பார்க்க முடியலைன்னு கேள்வி கேட்டு உங்களை சங்கடப்படுத்த மாட்டோம்.

அப்புறம் வாசனை கடவுளுக்கு கோயில் நிர்வான சிலை ..கற்பகிரத்தில் ஒரு சிலை அதை யாரும் தொடக்ககூடாதுன அதுக்கு காவல் ஒரு பார்ப்பான் வேற இப்படி எல்லாம் குறுக்கு கேள்வி வரும்.

Padmanaba Rao Murali சரி சார். உங்கள் மனதை எனக்கு நேரடியாக காட்டுங்கள். நான் உங்களுக்கு கோயில்களில் உள்ள சக்தியினை உங்களுக்கு உணர வைக்கிறேன்.

Padmanaba Rao Murali நான் இங்கு கடவுளைப் பற்றி பேச வே இல்லை.

Michael P //சரி சார். உங்கள் மனதை எனக்கு நேரடியாக காட்டுங்கள். நான் உங்களுக்கு கோயில்களில் உள்ள சக்தியினை உங்களுக்கு உணர வைக்கிறேன்.//

மனம்னா என்ன?

Michael P //நான் இங்கு கடவுளைப் பற்றி பேச வே இல்லை.//

அந்த சக்தினு என்னமோ சொன்னீங்களே அது என்ன?

Padmanaba Rao Murali மனம் என்று ஒன்று உள்ளது என்று கூறுகிறார்கள். மனம்னா என்ன நீங்க எனக்குக் காட்டுங்க. சக்தி ன்னா காந்த அலைகள்

Praba Karan மனம் என்பது இருதய மா? மூளையாக?
சக்தி என்பது காந்த அலைகள்/// கோயில்களில் உள்ள சக்தி யை வைத்து ஒரு லவுடு ஸ்பீக்கர் உருவாக்கி காட்ட முடியுமா பாய்

Michael P //மனம் என்று ஒன்று உள்ளது என்று கூறுகிறார்கள்.//

கூறத்தானே செய்யுறாங்க அது என்னனு விளக்குங்க

Praba Karan மதங்கள் பெண்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் என்பது தான் உண்மை

Praba Karan ஐயப்பன் கோயிலில் பெண்கள் மறுப்பு க்கு இன்னொரு காரணம் உண்டு.
ஐயப்பனின் வரலாறு.

Michael P அந்த அசிங்க மான கதையாச்சே

Michael P அப்படி ஒரு காந்த அலைகள் அங்கிருந்தால் அந்த கோவிலில் உள்ள எந்த எலக்ட்ரானிக் சாதனங்களும் வேலை செய்யாது உண்மையில் கடவுளை காப்பது அந்த எலக்ரானிக் உபகரணங்களே


Praba Karan எங்கே காணோம் முரளி சார் ஐ.
LikeReply2Yesterday at 01:09
Michael P அந்த சக்தி வாய்ந்த காந்த அலை இருந்தால் கோவிலில் இடி விழுகிறதே ஏன்? அதை தடுக்க இடிதாங்கி வைப்பதேன்

Praba Karan சாதாரண ஒரு பூட்டு இல்லை எனில் கடவுள் காணாமல் போய் விடுகிறான்

Michael P இல்லாத கடவுளுக்கு இத்தனை வக்காலத்து வாங்குறாங்க ஆனா கடவுளமட்டும் காணோம்
பாவம் இவர்கள்

Praba Karan இந்த கடவுள்கள் இந்திய நாட்டை மட்டுமே ஆக்கிரமிப்பு செய்தது ஏனோ

Senthil Nathan எனக்கு தெரிந்ததனை வைத்து கட்டிய ஒரு கட்டுக்கதை

கோவிலின் கர்ப்ப கிரகங்கள் காந்தபுலம் நிறைந்த கற்களால் கட்டப்பட்டவை, பெரும்பாலும் அதன் மூன்று பக்கங்கள் சன்னல்கள் இல்லாமல் வாயிற்கதவு மட்டுமே கொண்டு இருக்கும். வெளியில் இருந்து வணங்குபவர்களுக்கு காந்த சக்தி ஒருங்கே கிடைப்பதற்காக.

மனிதனின் உடல் சோர்வானது அவனின் குளுக்கோஸ் சக்தியின் அளவினை பொறுத்தது. சாப்பிட்டால் சரியாகும்.
மனச்சோர்வானது (பிரியமானவர்களின் பிரிவு/இழப்பு போன்றவற்றினால் ஏற்படுவது ) சாப்பிடுவதினால் சரியாகாது.
மனிதனின் உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன.
அந்த இரத்த சிவப்பு அணுக்கள் இருப்பினால் சூழப்பட்டு உள்ளது. அந்த இரும்பினில் ஏற்படும் காந்தச்செரிவு இறக்கம் மனச்சோர்விற்கு காரணமாகிறது.

வரைமுறை மாறிய காந்தசெரிவினால் மனநிம்மதியற்ற நிலைகள் ஏற்படுகிறது.கோவிலை/கற்பகிரகத்தை புவி சுழற்சியின் திசையில் சுற்றிவர சுற்றிவர ரத்தத்தில் காந்த செறிவு சமநிலை படுத்தப்பட்டு மன நிம்மதி உணர்வு ஏற்படுகிறது.(கோவிலுக்கு சென்று வந்தவர்களிடம் விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்)

மாதவிடாய் காலங்களில் பெண்களிடமிருந்து வெளிப்படும் அசுத்தமானது இந்த காந்த புலத்தை பாதித்துவிட கூடாது என்பற்காக அவர்களை அனுமதிப்பது இல்லை.

கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது முழுமையான மூளை வளர்ச்சி அடையாத நிலையில் இந்த காந்த பாதையை அடையும் சமையம் மனநிலை பாதிப்பு அடைந்த குழந்தையாக பிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்களும் அனுமக்கப்படுவதில்லை.

இது உங்களுக்கே சரியாக புரியும் என்பதே சந்தேகம் தான். எனில் மற்றவர்களுக்கு அன்றைய காலத்தில் எப்படி சாத்தியம், மக்களுக்கு புரிய வைப்பது. அதனால் தான் கடவுளின் பெயரால் செய்தார்கள்.

இதனை, எதனைக்கொண்டு உங்களுக்கு நிருபணம் செய்ய சொல்லுகிறீர்கள்.

இது நான் அறிந்ததனை வைத்து கட்டிய கட்டுக்கதை.
நிருபிக்க தற்சமயம் இந்த அறிவியலைக்கொண்டு என்னால் நிருபிக்க முடியாது.

இது தொடர்ப்பான கேலியான கேள்விகளை எதிர்பார்க்கிறேன்.

Michael P இவைகள் அத்தனையும் கட்டுகதைகளே அறிவியலின் முன்பு எந்த சான்றும் இல்லை

Senthil Nathan ஆமாம்

Senthil Nathan இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் நிறுபிக்க.

Michael P அப்படி சக்தி இருந்தா கோவிலுக்கு போகாம நேரா மருத்துவமனை ஏன் பக்கதர்கள் ஓடனும்

Senthil Nathan எல்லா நோய்களும் மருத்துவ மனைகளில் சரி செய்யப்படுகிறதா? அதுபோலவே

Michael P 100க்கு 99% சதவீதம் சரிசெய்ய படுகிறதே

ஆனா கோவிலில்

Padmanaba Rao Murali மனம் அமைதி கொண்டு உண்மை நேரடியாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை, விளக்கத்தைப் பெற வே கோயில்.

Senthil Nathan தகவல் தவறானது. இன்றைய மருத்துவம் என்பது சில சிறிய வியாதிகளை தவிர்த்து ஏனைய வியாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலையையும், அடுத்து அடுத்து வீரிய மருந்து எடுத்துக்கொள்ளும் நிலையையும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் நிலையையுமே அதிகம் கொண்டுள்ளது. இன்றைய மருத்துவமனைக்கு நிகராக போட்டி போட கோவிலால் முடியாது. ஒரு குறிப்பிட்ட பங்கு கொள்ளும் அவ்வளவு தான்.

Michael P நீங்க கோவிலுக்கு போய் உங்கள் நோயை தீர்த்துக்கொள்ள தயாரா?

Senthil Nathan இல்லை, வேண்டிக்கொள்ள மட்டும் தான் தயார்

Jaya Kumar Anthony மனம் அமைதி கொண்டு உண்மை நேரடியாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை, விளக்கத்தைப் பெற வே கோயில்.///// காலையில் உடற்பயிற்ச்சி தொடருங்கள் மன அமைதியும் ஆரோக்கியமும் கிட்டும். ஆலயம் என்பது மன நோயாளிகளுக்கே.

Padmanaba Rao Murali அந்தோணி உண்மைதான்.. வீட்டில் முறையாக செய்வதற்கான பயிற்சி ஆலயங்களில் கொடுக்கப்படுகிறது. தகுதி பெற்றவுடன் ஆலயத்திற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலும் ஆசிரியரை வைத்து பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நான்கு பேருடன் பள்ளி பில் பயிற்சி பெறுவது உன்னதம் அல்லவா?

No comments:

Post a Comment