Tuesday, April 19, 2016

இஸ்லாத்தின் தனித்த சிறப்பு யாது?


Nadodi Tamilan shared his post.
Nadodi Tamilan added 2 new photos.
சமூகத்தில் அல்லது ஆன்மீகத்தில் எவ்வளவு பெரிய மரியாதை உடையவராக இருந்தாலும், இஸ்லாத்தில் சமத்துவம் தான் முக்கியத்துவம் பெறுமே தவிர தனி மனிதன் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வகையில் இன்று இறந்துவிட்ட மதீனா இமாமின் உடல் தூக்கிச் செல்லப்பட்ட முறையும், எல்லோரும் அடக்கம் செய்யப்படும் இடத்தில் இவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டதும் நினைவுறுத்துகின்றன.
இஸ்லாத்தில் தனி மனிதனுக்கோ, இனத்திற்கோ முக்கியத்துவம் இல்லை. இரண்டே பிரிவு தான். இறை நம்பிக்கை & இறை நிராகரிப்பு.
Senthil Nathan //இரண்டே பிரிவு தான். இறை நம்பிக்கை & இறை நிராகரிப்பு// பெரும்பாலும் எல்லோருமே இதுபோன்று இரண்டு நிலைப்பாடு கொண்டவர்கள் தானே, இதில் இஸ்லாத்தின் தனித்த சிறப்பு யாது?

Nadodi Tamilan இஸ்லாத்தின் தனிச் சிறப்பு மேலே உள்ள பகுதியில் சொல்லப்பட்டுள்ளது ...மீண்டும் படியுங்கள் சகோ.

இன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மக்கா/மதீனா சென்றால், நபி பெருமகனார் தொழுத பள்ளியில் நீங்கள் தொழலாம்...எவனும் தடுக்க முடியாது. ஒருவேளை அங்கே இறந்து விட்டால், நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில், அதே முறையில் அடக்கம் செய்யப்படுவீர்கள்.

இது இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டான தனிச் சிறப்பு. நீங்கள் மதங்களை ஆய்வு செய்து வருபவர் என்று எனக்குத் தெரியும்...நேர்மையுடன் சொல்லுங்கள்...இந்தச் சிறப்பு எங்கே உள்ளது?

Senthil Nathan இரண்டு ஐயங்கள்

1.என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் பிராமிணர்கள் உட்பட சில குறிப்பிட்டவர்களே இந்துக்கள் ஆவார்கள், அவர்கள் புனித இறைத்தன்மையை நிலைநாட்ட சில வரையறைக்கு உட்பட்ட கட்டுபாடுகளுடன் வாழ்கிறார்கள் மற்றவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களே. இணைந்தவர்களில் கோவிலுக்குள் நுழைய அனுமதி அற்றவர்கள், கருவறை நுழைய அனுமதி அற்றவர்கள் என்ற பாகுபாடு உள்ளது. ஆயினும் யாராயினும் பிராமன தர்மத்தினை முழுமையாக பின்பற்றினால் அவருக்கு தீட்சி வழங்கி கருவறையில் பூஜிக்கும் இந்துவாக அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.

மற்றவற்றை இனி வணங்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்பதின் மூலம் ஒருவர் இஸ்லாத்தினை ஏற்பாரானால் இஸ்லாத்தின் புனிதம் எத்தகையது?

2.இறை நம்பிக்கை & இறை நிராகரிப்பு.- இது எத்தகையது, மாற்று மதக்காரர்களும் இறைமறுப்பில் தானே வருவார்கள்.
மாற்று மதத்தவர்களிலும் இறை நம்பிக்கை இல்லாதவர்களிலும் குற்றம் செய்ய அஞ்சுபவர்கள் மற்றும் நன்மைகள் செய்பவர்கள் இருக்கிறார்கள் தானே, அப்படி இருக்கையில் ஏகத்துவன் இவர்களை நிராகரிப்பான் வேறுபாடு பாப்பான் என்பதின் பொருள் என்ன?

Nadodi Tamilan #1: "
மற்றவற்றை இனி வணங்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்பதின் மூலம் ஒருவர் இஸ்லாத்தினை ஏற்பாரானால் இஸ்லாத்தின் புனிதம் எத்தகையது? " - ஒரு மனைவி தன் கணவனிடம், "நான் உங்களை மனதார விரும்புகின்றேன்... இருந்தாலும் இன்னும் சிலரையும் விரும்புகின்றேன்" என்று சொன்னால் அது சரி என்று எந்த கணவராவது ஏற்றுக்கொள்வாரா?

Nadodi Tamilan இதேபோல், தன்னைப் படைத்து பரிபாலிக்கும் ஒருவன் இருக்கும்போது, அவனால் படைக்கப்பட்ட ஒன்றை வணங்கினால் அதை இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை அல்ல, சகோ.

யார் இறைவன் என்று உறுதியாக அறியமுடியாமல் குழப்பத்தில் இருக்கும்போது தான் இது போன்ற சிந்தனைகள் தோன்றும்.

முதலில் என் இறைவன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதற்கான அளவுகோல்களை நீங்கள் ஏற்படுத்துங்கள். அந்த அளவுகோல்களின் மூலம் எல்லா மதத்தையும் ஆராயுங்கள்.

இவன் தான் இறைவன் என்று ஏற்றுக்கொண்ட பின்பு அதில் உறுதியாக இருங்கள்.

Nadodi Tamilan வேண்டுமென்றால் நாம் இருவரும் சேர்ந்ததே அளவுகோல்களை உருவாக்குவோம். அதை வைத்து எல்லா மதத்தையும் ஆராய்வோம்.

Nadodi Tamilan #2 "இறை நம்பிக்கை & இறை நிராகரிப்பு.- இது எத்தகையது, மாற்று மதக்காரர்களும் இறைமறுப்பில் தானே வருவார்கள்.
மாற்று மதத்தவர்களிலும் இறை நம்பிக்கை இல்லாதவர்களிலும் குற்றம் செய்ய அஞ்சுபவர்கள் மற்றும் நன்மைகள் செய்பவர்கள் இருக்கிறார்கள் தானே, அப்படி இருக்கையில் ஏகத்துவன் இவர்களை நிராகரிப்பான் வேறுபாடு பாப்பான் என்பதின் பொருள் என்ன?" 
- உண்மை. மற்று மத்ததவரிலும் நன்மக்கள் எப்போதும் இருப்பார்கள். ஆனால் முதலில் நீங்கள் நன்மையை ஒருவரிடம் எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், அவரைப் பற்றிய உண்மையான கருத்து உங்களிடம் இருக்க வேண்டும். இறைவனைப் பற்றி நாம் கருத்து ஏற்படுத்துவதை விட, இறைவன் சொல்லும் கருத்தை ஏற்பது தான் அறிவுடைமை. மனிதன் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அது காலத்திற்கு காலம் மாறுபட்டு உண்மை மறைக்கப்பட்டு விடும்.

Senthil Nathan திரு Nadodi Tamilan அவர்களுக்கு.

புனித வேதாகமத்தினை ஏற்க எண்ணுபவர் தன்னையும் புனிதப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா என்பது தான் எனது முதல் கேள்வி

வேதங்கள் என்பது மனிதர்களிடையே சாந்தியையும் சமாதானத்தினையும் மற்றும் நல்ல பண்புகளையும் மேலோங்க செய்வதே ஆகும். நல்லவராக இருந்தாலும் அவர் எங்கள் மதத்தை ஏற்றால் தான் அவரை நல்லவராக இறைவன் அங்கீகரிப்பான் என்பது முறையானதா?

ஒருவரின் பேச்சு திறமையால் மட்டுமே உண்டு என்றும் இல்லை என்றும் நிறுவ முடியுமே அன்றி, கடவுள் என்ற பதமானது நிருபிக்கவும் நிராகரிக்கவும் முடியாதது என்பது என்னறிவுக்கு எட்டிய விடயம்.

No comments:

Post a Comment