Monday, April 25, 2016

அறிவியல் கூறிய பூமியும் வேதங்கள் உளறிய பூமியும்


அறிவியல் கூறிய பூமியும்
வேதங்கள் உளறிய பூமியும்

Comments
Senthil Nathan //வேதங்கள் உளறிய பூமியும்// வேத வசனங்களையும் ஆதாராமாக பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

Michael P அது வேதங்களை படித்வர்கள் வந்து சொல்லட்டும் .இதுவரை யாரையும் காணோம்

Senthil Nathan வேதம் சொல்கிறது என்று தாங்கள் சொல்லுவீர்கள் எனில் அது எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று ஆதாரம் இடுவதும் தங்களின் பொறுப்பு தானே.

Michael P அறிவியல் கூறுவது உங்களுக்கு தெரியும்
வேதம் கூறுவதும் உங்களுக்கு தெரியும் மறுங்களேன் பார்ப்போம்

Senthil Nathan வேதம் தெரியாது. இன்னும் அருகதை பெறவில்லை.

Michael P பைபிள் விடும் புருடா!!!!!
**************************
பூமி உருண்டையா ?
பூமி வட்டமா?
பூமி தட்டையா?

பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் விட்ட புருடா..

பூமி உருண்டையானதா என கேள்வி எழுப்பினால் எசையா 40:20 வசனத்தை மேற்க்கோள் காட்டுகின்றனர்

அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40 :22

ஆனால் ஆங்கில பைபிளோ இப்படி சொல்கிறது பூமி வட்டம் என்று
வட்டமும் உருண்டையும் ஒன்றா ,.எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகின்றனர்

It is he that sits on the circle of the earth, and the
inhabitants thereof are as grasshoppers; that
stretches out the heavens as a curtain, and
spreads them out as a tent to dwell in

இல்லை பூமி உருண்டைதான் என கிறிஸ்தவர்கள் வாதிட்டால் ஏன் தாளமியையும் புருனேவையும் கிறிஸ்தவம் கொன்றது ஏன்? பதில் சொல்வார்களா கிறிஸ்தவர்கள்
L
Michael P குரானில் பூமி உருண்டை என்ற வார்த்தை எங்கும் இல்லை ..குரான் சொல்வது எல்லாம் பூமி தட்டையானது கருத்தில் தான் வசனங்கள் அமைந்துள்ளன

Dhanaraj Nagappan Senthil Nathan வேதம் தெரியாமல் வேதத்தை முட்டுக் கொடுக்காதீர்கள்.

Senthil Nathan முட்டுக்கொடுப்பது எனது நோக்கமல்ல, தங்களைப் போன்றவர்களிடம் தகவலை சரியான விதத்தில் விளங்கிக்கொள்ளவே கேள்விகளை வைக்கிறேன்.

Dhanaraj Nagappan வேதம் தெரியாமல் வேதத்தை ஏன் புகழ்கின்றீர்கள் என்பது என் கேள்வியின் உட் கருத்து.

Dhanaraj Nagappan வேதத்தைப் படிப்பதற்கு அருகதை என்ன வேண்டிக் கிடக்கின்றது.

Senthil Nathan வேதங்களில் குறை இருக்காது என நான் நினைக்கிறேன். குறைகள் கூறும்போது அதுபற்றிய சந்தேகங்களை கேட்கிறேன், மற்றபடி புகழ்வதெல்லாம் இல்லை.

Senthil Nathan எல்லாவற்றையும் படிப்பதனால் மட்டும் சரியான காரணங்கள் விளக்கங்கள் புரிந்து விடாது, சிலவற்றை ஆசிரியர்கள் போதிப்பதினால் தான் முடியும். ஆசிரியர் போதித்தாலும் அனைவருக்கும் புரியாது. சில விடயங்களை ஆசிரியர்கள் எல்லோருக்கும் போதிக்க மாட்டார்கள், அதற்கான தகுதிகளை வகுத்துள்ளார்கள், அத்தகைய தகுதியை என்னால் எட்ட முடியவில்லை.
குறிப்பாக
வேதம் கற்றுக்கொள்ள அவர்கள் சொன்ன கட்டுப்பாடுகளை என்னால் கடைபிடிக்க முடியவில்லை அதனால்

Dhanaraj Nagappan தங்களின் காரணம் சரி என என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. ஆசிரியர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். ஆசிரியர்களே இல்லாத கல்வி சாத்தியமே. ஆசிரியர்களை விட கணிணிகள் மிகவும் நன்றாக சொல்லித் தரும்.

Dhanaraj Nagappan வேதங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் இணையத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் புரியாததற்கு எதுவும் இல்லை.

Dhanaraj Nagappan ////வேதங்களில் குறை இருக்காது என நான் நினைக்கிறேன். குறைகள் கூறும்போது அதுபற்றிய சந்தேகங்களை கேட்கிறேன், மற்றபடி புகழ்வதெல்லாம் இல்லை.//// வேதங்களைப் படிக்காமலேயே வேதங்களில் குறை இருக்காது என்ற முடிவுக்கு தாங்கள் வரக் காரணம் என்ன?

Senthil Nathan நான் செல்போன் சர்விஸ் சொல்லித்தருபவன். நான் கொடுக்கும் நோட்டை வைத்தே பழுது நீக்குகிறார்கள். நான் கொடுக்கும் நோட்டை வைத்து உங்களால் செல்போனின் பழுது நீக்கிவிட முடியுமா?

Dhanaraj Nagappan பதில் பொருத்தமாக இல்லை. வேதங்களைப் படிக்காமலேயே வேதங்களில் குறை இருக்காது என்ற முடிவுக்கு தாங்கள் வரக் காரணம் என்ன?

Senthil Nathan அறிந்த அளவில் குறைகள் தென்படாதினால்.

Dhanaraj Nagappan வேதத்தைப் படித்ததில்லை என்றும் கூறுகின்றீர்கள். ஆனால் அறிந்த அளவில் குறைகள் தென்படவில்லை என்றும் கூறுகின்றீர்கள். அரைகுறை படிப்பு ஆபத்தானது அல்லவா?

Senthil Nathan ஆமாம்

Dhanaraj Nagappan அரை குறை அறிவு ஆபத்தானது ஆயிற்றே. அந்த அரைகுறை படிப்பை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள். முழுமையாகப் படித்து விட்டு பிறகு சந்தேகம் கேளுங்கள். முழுமையாகப் படித்து விட்டு பிறகு அதில் குறை உள்ளதா இல்லையா என்று கூறுங்கள்.

Dhanaraj Nagappan தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் முன்பாக வேதங்கள் நகைப்புரியன.

Dhanaraj Nagappan வேதங்களைப் படிப்பதற்கு ஆசான் யாரும் வேண்டியது இல்லை. இணையத்தில் கிடைக்கின்றது. புத்தகங்களாகக் கிடைக்கின்றது. படிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் தேடிப் படித்துப் பாருங்கள். அவைகள் ஒரு குப்பை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

Senthil Nathan காலமில்லை, பின்னர் கண்டிப்பாக பதில் தருகிறேன் திரு Dhanaraj Nagappan அவர்களே.

போதி மரம் பூமி உருண்டையா வட்டமா என அடித்துக்கொண்டு சாகாதீர்கள்
தமிழில் உருண்டை என சொல்வதன் காரணம்
எபிரெய மொழியில் உ்ள்ள மூலசொல் இரண்டுக்கும் பயன்படுத்தப்படும் சொல்

Note, the Biblical Hebrew word for “circle” (חוג—chuwg) can also mean “round” or “sphere.”

Michael P போதிமரம் அப்படியே அந்த பக்கமா போய் முட்டிக்கோங்க

Dhanaraj Nagappan உருண்டையா தட்டையா என்பதுதானே படம். போதி மரம் எதற்காக உருண்டையா வட்டமா என்று ஆராய்கின்றார். ஆனால் மைக்கேல் அவர்கள் சொன்னபடி போய் முட்டிக் கொண்டார் பாருங்கள். அதை என்னவென்று சொல்வது.

Senthil Nathan //அரை குறை அறிவு ஆபத்தானது ஆயிற்றே. அந்த அரைகுறை படிப்பை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள்.//

நான் வேதத்தில் எந்த ஒரு தவறும் இல்லையென உறுதியிட்டு கூறவில்லையே. அது(வேதம்) பற்றி முழுமையாக அறியாத நான் அவ்வாறு கூறுவது சரியாக இருக்காது என்பதும் அறிவேன்.
மற்றும் நான் கூறியது வேதங்களில் குறை இருக்காது என நான் நினைக்கிறேன் என்று தான்.

Senthil Nathan // முழுமையாகப் படித்து விட்டு பிறகு சந்தேகம் கேளுங்கள். முழுமையாகப் படித்து விட்டு பிறகு அதில் குறை உள்ளதா இல்லையா என்று கூறுங்கள்.//

கண்டிப்பாக முறையாக முழுமையாக கற்று அறிந்த பின்பு கூறுவேன். அதற்காக என்னை தயார் செய்வேன்.

Senthil Nathan //தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் முன்பாக வேதங்கள் நகைப்புரியன.//

எந்தவிடயம் நகைப்புக்கு உரியதாக உள்ளதென்று சுட்டிக்காட்டுங்கள் சிரித்து மகிழ்வோம். மற்றும்
இன்றைய விஞ்ஞானமும் (சில) உலகிற்கு அச்சுறுத்தலாகவும் மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்வதாகவும் இருக்கிறதே இதனை மறுப்பீர்களா?

Senthil Nathan //வேதங்களைப் படிப்பதற்கு ஆசான் யாரும் வேண்டியது இல்லை. இணையத்தில் கிடைக்கின்றது. புத்தகங்களாகக் கிடைக்கின்றது. படிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் தேடிப் படித்துப் பாருங்கள்.//

தங்கள் அளவுக்கு எனக்கு புத்திக்கூர்மை இல்லை என எண்ணுகிறேன். வாசிப்பது, படிப்பது, கறப்பது, கற்பிப்பது இவைகள் அனைத்தும் தனித்தனிக்கூறுகள். நுண்ணிய வேறுபாடுகள் உள்ளது. தங்களின் கூற்று சாத்தியமெனில் பள்ளிகள் கல்லூரிகளின் அவசியம் என்ன?

Dhanaraj Nagappan Senthil Nathan எதிர் காலத்தில் பள்ளிக் கூடங்கள் அவசியம் அற்றுப் போய்விடும். இப்பொழுதே தொலை தொடர்புக் கல்வி போன்ற மாற்று முறைகளும் E School போன்ற மாற்று கல்வி முறைகளும் வந்து விட்டன. சாதாரணமாக ஒரு புத்தகத்தை வாசிப்பதற்குக் கூடத் தெரியாதுங்களா? அப்ப சிரமம்தான். ஆனால் இனையத்தைப் பயன்படுத்தத் தெரிகின்றது. வேதங்கள் சரி என்று தெரியும் என்று கூறுகின்றீர்கள். இப்படிப்பட்ட நீங்கள் வேத புத்தகம் வாசித்து புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறுகின்றீர்கள். அப்பாவி போல வேசம் போடுகின்றீர்கள். நீங்கள் அப்பாவி அல்ல.

Dhanaraj Nagappan ஆதிகாலத்து மனிதன் கற்களை கூர்மை செய்து தாக்க கற்றுக் கொண்ட போதும், கத்தியைக் கண்டுபிடித்த போதும் உங்களைப் போன்ற யாராவது ஒருவர் இப்படிக் கூறிக் கொண்டே இருந்திருப்பார். அதற்காக விஞ்ஞான வளர்ச்சி நிற்காது. விஞ்ஞான வளர்ச்சியை அனுபவித்துக் கொண்டே விஞ்ஞான வளர்ச்சியைக் குறை கூறும் உங்களை போன்றோர் செயலை என்னவென்பது.

Dhanaraj Nagappan Senthil Nathan வேதத்திலிருந்து புத்திசாலித்தனமான, உலகிற்கு அவசியமான வரி ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். நானும் தெரிந்து கொள்கின்றேன்.

Senthil Nathan அப்பாவி அல்ல தான். ஆனாலும் வேதங்களை தனித்து புரிந்துக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலி இல்லை என எண்ணியிருந்தேன். என்னறிவின் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றிகள்.

Dhanaraj Nagappan வேதத்தில் நீங்கள் படித்த அரையும் குறையுமான அளவிலிருந்தே, உலகிற்கு அவசியமான வரிகள் ஏதாவது ஒன்றைக் கூறுங்களேன். நானும் தெரிந்து கொள்கின்றேன்.

Senthil Nathan கற்ற அறிவு இல்லாமல் கேட்ட அரைகுறை அறிவினால் தெரிந்து கொண்டதினால் என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. வேணுமானால் உலகிற்கு ராமாயணம் மகாபாரதம் உலகிற்கு உணர்த்த விரும்பிய வரிகளை சுருக்கமாக பதியவா?

Dhanaraj Nagappan ராமாயணம் மகாபாரதத்தைப் போல் அசிங்கம் பிடித்த கதை உலகத்தில் உண்டுங்களா? அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாரும் அவரவர் தகப்பனுக்குப் பிறக்காததன் காரணம் தெரிந்தால், அதில் ஏதாவது உலக நீதி இருந்தால் விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்கின்றேன்.

Senthil Nathan எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று ஸ்ரீராமர் வாழ்ந்து காட்டியது ராமாயணம், எப்படியெல்லாம் வாழக்கூடாது என ஸ்ரீகிருஷ்ணர் எடுத்துக்கூறியது மகாபாரதம்.

Dhanaraj Nagappan நீங்கள் கூறுவது கம்ப ராமாயணமா அல்லது வால்மீகி ராமாயணமா?

Senthil Nathan நான் அறிந்தது கம்ப ராமாயணம் தான் என எண்ணுகிறேன்.

Dhanaraj Nagappan வால்மீகி ராமாயணக் கதையை சீர் படுத்தி ஒரு கதையை கம்பர் கூறுகின்றார். வால்மீகி ராமாயணமே மூல கதை. அதில் வரும் ராமன் குடிகாரன். பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தவன். அதை தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றவாறு கம்பர் திருத்தி ஒரு கதை சொன்னார். இதெல்லாமா வழி காட்டும் தத்துவங்கள். அண்ணா எழுதிய கம்ப ரசம் புத்தகம் படித்துள்ளீர்களா? கம்ப ராமாயணத்தில் காணப்படும் ஆபாசங்கள் பற்றி படித்துள்ளீர்களா? ராமன் பிறப்பு ஒரு அசிங்கமான கதை அல்லவா?

Senthil Nathan குறை பெரும்பாலும் எல்லாவற்றிலும் சொல்லமுடியும் அதிலுள்ள நல்ல விடயத்தினை பிரித்து அறிவது தானே அறிவு.

Dhanaraj Nagappan தலை வாழை இலை போட்டு அதில் அன்னமிட்டு, நாவுக்கினிய உணவுப் பொருட்களைப் பரிமாறி விட்டு, அதில் ஒரு பக்கம் நரகலை வைத்து விட்டு, நல்ல விசயத்தை மட்டும் சாப்பிடு என்றால் அது நியாயமாகுமா? அது போல கடவுள் கதையில் ஆபாசத்தை நிரப்பியது ஏன்? எது மனதில் புகும் நல்லதா, ஆபாசமா?

Dhanaraj Nagappan தீ பரவட்டும் என்னும் புத்தகத்தைப் படியுங்கள். அண்ணா அவர்களும், சோமசுந்தர பாரதியார் அவர்களும் பொது இடத்தில் மக்கள் மத்தியில் நிகழ்த்திய வாதங்கள். கம்பராமாயணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டிய காரணம் என்ன என்று அண்ணாவும், கம்பராமயாணம் பக்திக் காவியம் என சோமசுந்தர பாரதியாரும் வாதிட்டது. அதைப் படித்து இராமாயணத்தின் கீழ் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். தீ பரவட்டும் புத்தகம் எல்லா பெரிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

Senthil Nathan பின்னர்தொடர்வோம்

Senthil Nathan வாய்பிருந்தால் படித்துப்பார்கிறேன். தங்கள் பதிவுகளின் படி எனது புரிதல் என்னவெனில் தமிழர்களின் மீது ஆரியர்களின் ஆதிக்கத்தினை நீக்கி திராவிட ஆதிக்கத்தினை ஏற்படுத்த இவ்வாறு செய்திருக்கலாம்.அவர்களின் கருத்து இருக்கட்டும் தங்கள் கருத்து?

No comments:

Post a Comment