Friday, April 22, 2016
சிசிகேமரா
Michael P
கடவுள் இருக்கிறது என்பதை விட சிசிகேமரா இருக்கிறது என்கின்ற பயமே பெரும்பாலான தவறுகளை தடுக்கிறது
Comments
Arivu Arivarasan
Bigin Berson
கடவுள் உண்மையாகவே இருந்து இருந்தால் கேரளாவில் கோவிலில் தீ பிடித்து நூற்றுக்கணக்கானோர் செத்திருக்க மாட்டார்கள்.
கடவுள் காப்பாற்ற மாட்டான். கோவில்களில் Fire Safety Systems ஐ Install செய்து இருந்தால் ஒரு உயிர் கூட போயிருக்காது.
Bigin Berson
கடவுளின் கையாலாகாத்தனத்துக்கு கேரளா கோவில் தீ விபத்து ஒரு நல்ல உதாரணம்.
Chinnamuthu Manivannan Manivannan
இது தான் உண்மை.
Michael P
சும்மா இருந்த சாத்தானை சொறிந்துவிட்டதில் மெக்காவில் 800பேர் கடந்தாண்டு பலியானார்கள்
Bigin Berson
இந்த சாவு எப்படி நடந்தது ?
Michael P
சைத்தானை கல்லெறியும் சடங்கில் கூட்ட நெரிச்சலில் சிக்கி 800பேருக்கு மேல் பலியானார்கள் கடந்த வருடம்
Bigin Berson
பாவம் இவர்கள். கடைசி வரை உண்மை என்ன என்பதை அறியவில்லை. கடவுளை நம்பி உயிர் போனது தான் மிச்சம். இதற்கு அல்லாவின் managerகள் என்ன விளக்கம் குடுத்தார்கள் ?
Sridhar Sri
கடவுள் பார்த்தால், பரிகாரம் செய்ய 1000 வழிகள் இருக்கிறது, ஆனால், சிசி டிவி பார்த்தால் சரி செய்ய ஒரே ஒரு வழி தான் இருக்கிறது!
Senthil Nathan
//'சிசிடிவி கேமரா இருக்கு'
என்கிற பயமே//
ஒருவரை பயமுறுத்துவது பகுத்தறிவுப்படி சரியா? பயமில்லாமல் தவறு செய்ய வழி உள்ளதா?
Michael P
// பயமில்லாமல் தவறு செய்ய வழி உள்ளதா?//
உள்ளது கடவுள்
Michael P
//ஒருவரை பயமுறுத்துவது பகுத்தறிவுப்படி சரியா?//
கடவுள் ஒருவரை பகுத்தறிவு படி பயமுறத்துவது சரியா?
Senthil Nathan
கடவுள் பெயரால் பயமுறுத்துவது பகுத்தறிவுப்படி சரி
Michael P
கடவுளுக்கு பயந்தவன் மனநோயாளி
Senthil Nathan
எதுக்கும் யாருக்கும் பயப்படாதவன்?
Bigin Berson
எதுக்கும் பயப்படாதவன் பொறுப்பில்லாதவன் !
Senthil Nathan
அப்படியா? வேறு யாரும்?
A Salim
சிசிடிவி காமெரா தப்பு செய்யாமல் பயமுறுத்துவது என்று சொல்லும்போது பகுத்தறிவு இப்படி கேள்வி கேக்க சொல்லுது'' ?/////////////Senthil Nathan //'சிசிடிவி கேமரா இருக்கு'
என்கிற பயமே//
ஒருவரை பயமுறுத்துவது பகுத்தறிவுப்படி சரியா?/////////////////////////////////////////////////////////////////// கடவுள் பயமுறுத்தலாமா என்று கேள்வி கேட்டா உடனே பக்முத்தறிவு இப்படி பதில் சொல்ல சொல்லுது ????????????????????////////// Senthil Nathan கடவுள் பெயரால் பயமுறுத்துவது பகுத்தறிவுப்படி சரி /////////////////////////////////////////////////
Senthil Nathan
பதில் தருகிறேன்.
Senthil Nathan
கடவுள் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கான காவல் நிலையம் போன்றது. தவறு செய்ய துணியாமல் இருக்கவும் சுய ஒழுக்கம் வழுவாமல் கட்டுபாடோடு வைக்கவும் இது உதவுகின்ற கோட்பாடு என்பது என்னுடைய எண்ணம். இதில் சில மூடத்தனமும் கலந்திருக்கு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
இதனை பகுத்தறிந்தே கடவுள் பெயரால் பயமுறுத்துவது சரி என்றேன்.
கடவுளின் பெயரால் பயமுறுத்துவது மூடத்தனம் எனக்கருதும் நாத்திகர்களிடம் சிசிடிவி கேமராவால் ஏற்படுகிற பயம் மட்டும் சரிதானா? எனக்கேட்டேன்.
ஒழுக்கம் நிலைக்க வரையறுக்கப்பட்டபயத்தினை ஆதரிக்கிறேன்.
ஒடுக்குவதற்காக பயமுறுத்துபவர்களையும், எதுக்குக்காகவும் பயப்படாதவர்களையும்
நிராகரிக்கிறேன். திரு A Salim அவர்களே.
A Salim
''ஒழுக்கம் நிலைக்க வரையறுக்கப்பட்டபயத்தினை ஆதரிக்கிறேன்.'' கேமரா அந்த வரையரைக்குள் வராதா???
Senthil Nathan
என்னைப்பொறுத்தவரையில் கேமரா வரையறைக்குள் வரும். இது (கேமரா) போன்று ஒருவன் பார்த்துகொண்டு இருக்கிறான் என்று கேமரா இல்லாத காலத்தில் உருவாக்கிய கடவுள் கோட்பாட்டை நிந்திப்பவர்களிடமே இந்த இரண்டு பயத்திற்கு இடையே ஏன் முரண்படுகிறீர்கள் என்பதான பொருளில் தான் எனது கேள்வி.
A Salim
இப்போ தான் உங்கள் கருத்தை விளங்கிவிட்டேன்... ரொம்ப சிரமப்பட்டீங்களா??? பயந்து தவறிழைக்காமல் வாழ்வது பண்பாளனுக்கு அழகில்லை என்பது தான் என் கருத்து. இந்த பதிவு பண்பாளரகளைப்பத்தினது இல்லை என்றெ நான் நினைக்கிறேன். பயந்து தப்பு பண்ணாமல் இருப்பவர்களில் கடவுளுக்கு பயப்படுவதை விட அதிகமானவர்கள் கேமறாவுக்கு பயப்படுகிறார்கள் என்று தான் நான் புரிந்து கொண்டது. என் புரிதலில் தவறிருந்தால் சுட்டிக்காட்டும் ''கடமை '' உங்களுக்கு உள்ளது.
Senthil Nathan
//பதிவு பண்பாளரகளைப்பத்தினது இல்லை என்றெ நான் நினைக்கிறேன்//
உண்மைதான். பெரும்பாலும் தன்னை பண்படுத்திக்கொள்ளவும் பண்படுத்திக்கொள்ள இயலாதோருக்கும் தான் கடவுள் அவசியம் ஆனவர். பண்பாளர்களுக்கு என்னைப்பொறுத்தவரையில் அவசியம் அற்றவரே.
//பயந்து தப்பு பண்ணாமல் இருப்பவர்களில் கடவுளுக்கு பயப்படுவதை விட அதிகமானவர்கள் கேமறாவுக்கு பயப்படுகிறார்கள்//
உண்மைதான், ஆனாலும் தற்சமயம் கேமராவுக்கு பயப்படுபவர்களும் பாமரர்கள் மட்டுமே. அதிகார வர்க்கத்தினரும், திட்டம் தீட்டி தவறு செய்பவர்களும் அதன் சுவிட்ச் எங்கு உள்ளதென்று தெரிந்தே உள்ளனர்.
Michael P
இந்த கேமராவில் சிக்குபவர்கள் அதிகார வர்க்கமும் பணக்காரனுகளுமே
Senthil Nathan
எந்த கேமராவில்?
Michael P
மனித கண்டுபிடிப்பு கேமராக்களில் பட்டன் கேமரா
சூட்கேஸ் கேமரா தொப்பி கேமரா மோதிர கேமரா கண்கண்ணாடி கேமரா கம்யூட்டர் கேமரா புத்தக கேமரா ..இன்னும் எத்தனை வேண்டும்
Senthil Nathan
அதிகார வர்க்கமும் பணக்காரனுகளும் சிக்கியது எந்த கேமராவில்?
Senthil Nathan
கடவுளும் மனித கண்டுபிடிப்புத்தானே, மறுப்பீர்களா?
Michael P
முன்னாள் பிஜெபி தலைவர் ஜனர்த்தனான் பணம் கட்டுகட்டாக வாங்கும் போது சிக்கியது போன்ற பல உள்ளன ..டெகல்கா டாட் காம் என்ற இணைய பத்திரிகை தளத்தை பாருங்கள்
Michael P
//கடவுளும் மனித கண்டுபிடிப்புத்தானே, மறுப்பீர்களா?//
புதசா ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் பாருங்கள்
Arivu Arivarasan
கோவில் கருவரைக்குள் போய் தவறு செய்யலாம் அங்கு தான் யாரையும் விடுவதில்லையே என்ன செய்தாலும் தெரியாது
Senthil Nathan
அங்கு அவா மட்டும் தானே தப்பு செய்ய முடியும். எல்லோரும் பயமில்லாமல் தவறு செய்ய வழி உள்ளதா?
Arivu Arivarasan
இந்த கேள்வியை நீங்கள் அவா விடம் தான் கேட்க வேண்டும் அவர்க்ளுக்கு தான் அது போன்ற இடம் தெரியும்
Michael P
அதான் கோவில் நேர் எதிரே குடியிருக்கும் வீட்டின் வாசல் வரக்கூடாதாம்
இப்ப புரிஞ்சிருக்குமே என்ன காரணம் என்று
Senthil Nathan
//இப்ப புரிஞ்சிருக்குமே// இவ்வளவு மட்டும் தான் புரியுதா?
Michael P
உங்களுக்கு புரிந்த்து என்ன அதை சொல்லுங்கள்
Senthil Nathan
அவ்வீட்டில் குடியிருப்போர் கோவிலிலிருந்து வெளிப்படும் ஆற்றலை தாங்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். கோவிலில் ஒன்னுமில்லாமல் இருக்குமானால் இந்த பிரச்சனை இருக்காது.
Dhanaraj Nagappan
கோவிலில் ஆற்றல் இருக்கு என்று அவா யாருமே நம்பல. அப்படி நம்பியிருந்தா அவா அங்கிருந்து தப்பு செய்வாளா. கருவறைக்குள் இருக்குற அவாளே நம்பாத போது, கருவறைக்குள் NO Entry Mode ல் இருக்கும் நீங்க ஏன் கோவிலுக்குள் ஆற்றல் இருக்கு என்று நம்பறீங்க.
Senthil Nathan
ஒரு விடயத்தினை அறிந்து கொள்ள அதிலுள்ள தவறானவர்களை வைத்துத்தான் அளவீடு செய்வீர்களா?
Dhanaraj Nagappan
நூற்றுக்கு நூறு விழுக்காடு தவறு செய்பவர்கள் இருக்கும் போது அதை கண்டுகொள்ளவும் மாட்டீர்களா. ஓ நீங்கள் ஆதிக்க சாதியா? அப்போ உங்கள் கண்ணுக்கு புலப்படாதுதான். பாதிக்கப்படுபவன் கேட்கக் கூடாதா? ஆற்றல் எங்கே இருக்குன்னு நீங்க சொல்றீங்களோ அதே சன்னிதானத்தில்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தத் தவறு நடக்கின்றது. நாங்க கோவிலுக்குள் ஆற்றல் இருக்குன்னு நம்பனும். அதோட சன்னிதானத்திலேயே நடக்கும் தவறை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்த ஆற்றல் என்ன செய்து கிழித்தது.
Senthil Nathan
//நாங்க கோவிலுக்குள் ஆற்றல் இருக்குன்னு நம்பனும்.//
ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதனை நான் பகிர்ந்தேன்.
நம்பனும் என்னும் கட்டாயமெல்லாம் ஒண்ணுமில்லை.
தவறு மட்டும் தான் நடக்கிறது, தவறு செய்வதற்காக
மட்டுமே கட்டப்பட்டது என்ற வாதம் தான் தங்களின் பகுத்தறியும் திறனின் அளவுகோலா, வெளிப்பாடா?
Dhanaraj Nagappan
தவறு மட்டுமே நடக்கின்றது. இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.
Dhanaraj Nagappan
தகுதி படைத்த எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் மன்னர்கள் கட்டிய பொது கோவில்களில் என்று இருப்பதே இயற்கையானது. ஆனால் பார்ப்பனர் மட்டுமே கருவறையில் நுழையலாம் என்று இன்றும் இருப்பது உங்கள் கண்களில் படவில்லையா. ஆலய நுழைவுப் போராட்டம் ஏன் நடந்தது. ஆலயங்களுக்குள் சாதி பார்த்து உள்ளே விடாமல் இருக்காக் காரணம் என்ன. இது தவறாகக் கூட உங்களுக்குத் தெரியவில்லையா.
Senthil Nathan
தகுதி என்பது என்னவென்று அறிவீர்களா?
Dhanaraj Nagappan
தாயுடன் உறவாட சேயுக்கு தகுதி வேண்டும் என்பது தவறல்லவா
Dhanaraj Nagappan
சபரி மலையில் பெண்கள் நுழையக் கூடாது என்பதை நீதி மன்றங்கள் கண்டித்துள்ளன. நாளிதழ்களைப் பார்த்தீர்களா. ஆணுக்குள்ள தகுதி பெண்ணுக்கு என்ன இல்லை.
Senthil Nathan
நீங்கள் தானே குறிப்பிட்டீர்கள் 'தகுதி படைத்த எல்லோரும்' என்று அந்த தகுதி?
Dhanaraj Nagappan
தகுதி என்று வைத்ததே தவறல்லவா?
Dhanaraj Nagappan
தாயுடன் உறவாட சேயுக்கு தகுதி வேண்டும் என்பது தவறல்லவா
Dhanaraj Nagappan
எல்லா கோவில்களிலும் இந்த தவறு உள்ளது என்பதே நான் கூற விழைவது.
Senthil Nathan
நல்லது.
Dhanaraj Nagappan
நன்றி
Michael P
//அவ்வீட்டில் குடியிருப்போர் கோவிலிலிருந்து வெளிப்படும் ஆற்றலை தாங்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். கோவிலில் ஒன்னுமில்லாமல் இருக்குமானால் இந்த பிரச்சனை இருக்காது.//
அது அவா விட்டகதை
கோவிலுக்குள் நடக்கும் தவறுகள் வெளியே தெரியக்கூடாது என்ற யுக்தி
Senthil Nathan
இவ்வளவு மட்டும் தான் புரியுதா?
Michael P
தேவநாதின் தப்புகள் வெளியே வந்தமாதிரி வந்து நாறி போயிரக்கூடாதில்ல அதான்
Senthil Nathan
இறுகிய பிடிப்பு
சீற்றமுள்ள பார்வை -அருமை
உங்களால் முடிந்தால்
போட்டுள்ள கண்ணாடியை
கலட்டிடும் பாருங்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment