Sunday, April 17, 2016
திராவிடம் என்றால் என்ன?
Javeed Asraff
திராவிடம் என்றால் என்ன?
Arul Kumar
தமிழின் இன்னொறு பெயர்.
அசு ரன்
தமிழன் என்று சொல்லலாமே
Arul Kumar
யார் சொல்லவில்லை. யார் சொல்ல மறுக்கிறார்கள். தமிழன் என்பதும் திராவிடன் என்பதும் எமது அடையாளம்.
அசு ரன்
அந்த தீராவிடத்தில் தெலுங்கு மலையாழம் எல்லாம் சேர்த்துதானே
Arul Kumar
அசு ரன்
ஆம்.
Senthil Nathan
தனித்த தமிழன் எப்படி திராவிடன்
Arul Kumar
Senthil Nathan
தனித்த தமிழன் யார்?
Arul Kumar
எதில் தமிழன் தனித்து நின்றான், எப்போது, எப்படி?
Senthil Nathan
// தனித்த தமிழன் யார்?// நான் தனித்த தமிழன், எனக்கு ஏனைய திராவிட மொழிகள் தெரியாது, மற்றும் தொடர்பும் கிடையாது. நான் எப்படி திராவிடன்? என்னை போன்ற தமிழர்கள் எப்படி திராவிடர்கள். திரு ஐயா தந்தை பெரியார் அவர்கள், திரு மூதறிஞர் ஐயா கலைஞர் அவர்கள், திரு வீரமணி அவர்கள் ஆகிறோரை போன்றோர்கள் திராவிடர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. நான் மற்றும் என்னைப்போன்றோர்கள் எப்படி திராவிடர்கள்?
Senthil Nathan
// எதில் தமிழன் தனித்து நின்றான்,//உலகத்திற்கே பொதுமறை தந்த வம்சம், திராவிடர்கள் எங்களை ஆழத்தொடங்கிய இந்த ஐம்பது ஆண்டுகளில் தனித்து நிற்க திராணி அற்றே இருக்கிறோம்.
Senthil Nathan
// எப்போது, எப்படி?//
எங்களை மேம்படுத்த, கட்டிக்காக்க, உணர்வு மற்றும்
உரிமையுள்ள எங்கள்(தமிழ்) இனத்தலைவன் எப்போதும் வரமாட்டான் வரமுடியாது என்றே தோன்றுகிறது,
எப்படி எனில்
இளம்குறுத்து முதல் அநேகமானவர்கள் மதுவுக்கு அடிமையாகி சிந்திக்கும் திறனை துறந்தவர்களாக இருக்கிறார்கள்,
அவரவர் தனக்கான ஜாதி மதங்களை அமைதியாக பின்பற்றினாலும் சமத்துவம் ஏற்படுத்துகிறோம் என்று ஒருவருக்கு ஒருவர் விரோதமானவராய் வைத்து இருக்கிறார்கள்.
இலவசங்களை கொடுத்து தன்மானத்தை இழந்தவர்களாய், உழைக்க வக்கற்றவர்களாய், கையேந்தும் பிச்சைக்காரர்களாய் வைத்து
இருக்கிறார்கள்
நாங்கள் எப்படி எப்போது தனித்து நிற்க முடியும்
திரு Arul Kumar அவர்களே ?
Arul Kumar
Senthil Nathan
தமிழ் வேறு திராவிடம் வேறென கூறிய மொழியியயல் ஆய்வாளர் அல்லது வரலாற்று ஆய்வாலர் பெயர் கொடுக்க முடியுமா தோழரே.
Like
·
Reply
·
57 mins
Senthil Nathan
அவ்வாறு யாரையும் எனக்கு தெரியாது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவைப்படுகிறதா?
Like
·
Reply
·
54 mins
Arul Kumar
Senthil Nathan
கருணா மற்றும் ஜெவின் குற்றங்களுக்காக தமிழனின் தனித்த பெருமைக்கு சொந்தமான திராவிட அடையாளத்தை குறை கூறுவது தவறு. திராவிட அடையாளம் ஒன்றே ஆதிக்க பார்ப்பனீயத்தை என்னைவிட்டு தள்ளி நிற்க வைக்கும் வல்லமை கொண்டது திராவிட கருத்தியலும் பெரியாரின் சிந்தனைகளும் தான். எதன் பொருட்டும் அதை இழக்க தமிழர்கள் தயாராக இல்லை.
Arul Kumar
Senthil Nathan
ஆதாரமில்லா முழக்கங்கள் கேட்பதற்கு மமட்டும் தான் சுகமாக இருக்கும். தமிழே திராவிடமென ஆராய்ந்து எழுதிய பல்வேறு அறிஞர் பெருமக்ககள் முட்டாள்களா? இல்லை பைத்தியங்களா?
Senthil Nathan
//அறிஞர் பெருமக்ககள் முட்டாள்களா? இல்லை பைத்தியங்களா?// முட்டாளாக ஆக்குபவர்கள் எப்படி முட்டாளாக இருக்க முடியும்?
Senthil Nathan
ஆதிக்க பார்ப்பனீயம் தமிழ் நாட்டில் மட்டும் தான் உள்ளதா?
Senthil Nathan
பக்கத்து வீட்டுக்காரர் செல்வங்கள் நிறைந்த அனாதைக்கு பாதுகாவலாராக மட்டுமே இருக்க முடியுமே அன்றி பெற்ற தந்தையை போன்று அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியாது, இருக்க மாட்டார். உண்மையில் நாம் தலைவன் இல்லாத அனாதைகள் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கியுள்ள அடிமைகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment