Tuesday, May 27, 2014

குளிரூட்டி ஹெல்மெட்

I0RcQvT.jpg?1



குளிரூட்டி கருவி பொருத்தப் பட்ட ஹெல்மெட்டை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போர்க் களத்தில் வெயிலின் தாக்கத்திலி ருந்து வீரர்களைக் காக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்.மிகக் குறைந்த எடையுள்ள இந்த கருவி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்றின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும். வீரர்கள் சுவாசிப்பதற்கான தூய்மையான காற்றை வடிகட்டி அனுப்பும் செயலையும் இந்த கருவி மேற்கொள்ளும். இதற்கு மின்சா ரத்தை வழங்கும் பேட்டரியை இடுப் பில் கட்டிக் கொள்ள வேண்டும்.

ரசாயனம், கதிர்வீச்சு, அணுக் கதிர் தாக்குதலில் இருந்து வீரர் களை காக்கும் வகையிலான சுவாசக் கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை எட்ஜ்வுட் ரசாயன உயிரியல் மைய விஞ்ஞானிகள் 2013-ம் ஆண்டிலிருந்து மேற் கொண்டு வருகின்றனர். இந்த மையம் அமெரிக்க ராணுவத்தின் ஆராய்ச் சிப் பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இப்போது வடிவமைக்கப் பட்டுள்ள ஹெல்மெட்டில் சுவாசத்திற்கான முகமூடி பொருத்தப்பட்டு ள்ளது. இதில் காற்றை குளிரூட்டும் கருவி பொருத்தப்பட் டுள்ளது. மிகக் குறைந்த எடையுடன் இருக்கும் இக்கருவி, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது. அதை அணிந்திருப்பவருக்கு எந்தவித மான அசவுகரியங்களும் ஏற்படாது.

குளிரூட்டி கருவி பொருத்தப்பட இந்த ஹெல்மெட் தற்போது பரிசோதனைக் கட்டத்தில் உள்ளது. மேலும் சில மாற்றங்களை செய்ய தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகளை அந்த ஹெல்மெட்டிலேயே பொருத்து வதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன

பிறப்பு இறப்பு சான்றிதழ்-ஆன்லைன்

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.


இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ்(save)  பன்ணி கொள்ளுங்கள்.


அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.

அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.


உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........


கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி ஆட்களுக்கு -https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -http://tirunelvelicorp.tn.gov.in/download.html

trackers



udp://11.rarbg.com/announce

udp://tracker.openbittorrent.com:80/announce

udp://tracker.istole.it:80/announce

udp://tracker.publicbt.com:80/announce

udp://tracker.ccc.de:80/announce

udp://tracker.yify-torrents.com:80/announce

udp://tracker.prq.to/announce

http://www.h33t.com:3310/announce

http://exodus.desync.com/announce

http://tracker.coppersurfer.tk:6969/announce

http://9.rarbg.com:2710/announce

Wednesday, May 14, 2014

துணிக்கடைகள்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’
- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி பொன்மொழிகள்...

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி பொன்மொழிகள்...
* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே.
* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.
* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள்.
* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.
* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.
* போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித்
துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தம ாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப்
பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில்
பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில்
கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தா லும் விவாதம்
செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக்
கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப்
பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட
வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில்
கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

நீதிக்கதை

மரணப் படுக்கையில் இருந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் இரண்டு பிள்ளைகளை அழைத்தார்.
" மக்களே உங்கள் இருவருக்கும் போதுமான செல்வத்தை சம்பாதித்து விட்டேன். இருந்தாலும் எனக்கு ஒரு ஆசை. நான் சொர்க்கத்திற்கு போகும் போது நான் சம்பாதித்த பணத்த்தில் கொஞ்சமாவது கொண்டு செல்ல ஆசைப் படுகிறேன். எனவே நான் இறந்த பின்னால் என்னை அடக்கம் செய்யும் சவப் பெட்டிக்குள் ஆளுக்கு ஒரு லட்சம் வைத்து அடக்கம் செய்வீர்களா ? " என்று கேட்டார்.
மகன்களும் சம்மதித்தார்கள்.
ஒரு மாதம் கழிந்தது .
இறந்து போன பெரியவரை அடக்கம் செய்து விட்டு திரும்பும் வழியில் மூத்தவன் வருத்ததோடு சொன்னான். " ச்சே ..நான் அப்பாவை ஏமாற்றி விட்டேன். அவர் சொன்னது போல் செய்யவில்லை. வெறும் பத்தாயிரம் ரூபாயை மட்டும் சவப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். இப்போது என் மனம் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறது என்றான்.
இரண்டாமவன் சொன்னான். " நான் அப்பாவின் சொல்லை மீறவே இல்லை... ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பெட்டிக்குள் வைத்து விட்டேன். "
# நீதி : பிள்ளைய பெத்தா.கண்ணீர் கூட நிச்சயம் இல்லை