மரணப் படுக்கையில் இருந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் இரண்டு பிள்ளைகளை அழைத்தார்.
" மக்களே உங்கள் இருவருக்கும் போதுமான செல்வத்தை சம்பாதித்து விட்டேன். இருந்தாலும் எனக்கு ஒரு ஆசை. நான் சொர்க்கத்திற்கு போகும் போது நான் சம்பாதித்த பணத்த்தில் கொஞ்சமாவது கொண்டு செல்ல ஆசைப் படுகிறேன். எனவே நான் இறந்த பின்னால் என்னை அடக்கம் செய்யும் சவப் பெட்டிக்குள் ஆளுக்கு ஒரு லட்சம் வைத்து அடக்கம் செய்வீர்களா ? " என்று கேட்டார்.
மகன்களும் சம்மதித்தார்கள்.
ஒரு மாதம் கழிந்தது .
இறந்து போன பெரியவரை அடக்கம் செய்து விட்டு திரும்பும் வழியில் மூத்தவன் வருத்ததோடு சொன்னான். " ச்சே ..நான் அப்பாவை ஏமாற்றி விட்டேன். அவர் சொன்னது போல் செய்யவில்லை. வெறும் பத்தாயிரம் ரூபாயை மட்டும் சவப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். இப்போது என் மனம் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறது என்றான்.
இரண்டாமவன் சொன்னான். " நான் அப்பாவின் சொல்லை மீறவே இல்லை... ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பெட்டிக்குள் வைத்து விட்டேன். "
# நீதி : பிள்ளைய பெத்தா.கண்ணீர் கூட நிச்சயம் இல்லை
No comments:
Post a Comment