Wednesday, February 5, 2014

நம் பண்பாடு

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே. சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம். மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.

# இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு

ஓவியம்


கலைஞரும், ஜெயலலிதாவும் அருகே அருகே நிற்கும் அரிய புகைப்படம்.


வாழை இலையின் பயன்கள்…!

வாழை இலையின் பயன்கள்…! 

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். 
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:

 இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. வழக்கம் போல் ஆராய்ச்சி தொடங்கியது.கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர் அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!! எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும் நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்...!

Monday, February 3, 2014

அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்

ஒரு சிறு பையன், தனது தகப்பனார் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவருடைய வேலை நேரம் முடியும் தருணத்தில் சுரங்கத்திற்குள்ளிருந்து  வெளியே ஒருவர் வந்தார். அவர், 'தம்பி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். 'என் தகப்பனார் இந்த சுரங்கத்தில்தான் வேலை பார்க்கிறார். அவருக்காகக் காத்திருக்கிறேன்,’’ என்றான் சிறுவன். 'உன் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, எல்லாருடைய முகமும் நிலக்கரி தூசியால் கருப்படைந்திருக்கும். 

அதோடு தலையில் ஹெல்மெட் வேறு மாட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வரும் சுமார் 700 சுரங்கத் தொழிலாளிகளில், உன் தகப்பனாரை எப்படி உன்னால் அடையாளம்  காணமுடியும்?' என்று வியப்புடன் கேட்டார். ஆனால், அந்தச் சிறுவனோ, 'எனக்கு ஒருவேளை என் தந்தையாரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். சிரமமில்லாமல் என்னைக் கண்டுபிடித்து விடுவார்' என்று பளிச்சென்று பதிலளித்தான்

உலகின் அதிசயம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372) நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை ! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !