Monday, February 3, 2014

அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்

ஒரு சிறு பையன், தனது தகப்பனார் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவருடைய வேலை நேரம் முடியும் தருணத்தில் சுரங்கத்திற்குள்ளிருந்து  வெளியே ஒருவர் வந்தார். அவர், 'தம்பி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். 'என் தகப்பனார் இந்த சுரங்கத்தில்தான் வேலை பார்க்கிறார். அவருக்காகக் காத்திருக்கிறேன்,’’ என்றான் சிறுவன். 'உன் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, எல்லாருடைய முகமும் நிலக்கரி தூசியால் கருப்படைந்திருக்கும். 

அதோடு தலையில் ஹெல்மெட் வேறு மாட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வரும் சுமார் 700 சுரங்கத் தொழிலாளிகளில், உன் தகப்பனாரை எப்படி உன்னால் அடையாளம்  காணமுடியும்?' என்று வியப்புடன் கேட்டார். ஆனால், அந்தச் சிறுவனோ, 'எனக்கு ஒருவேளை என் தந்தையாரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். சிரமமில்லாமல் என்னைக் கண்டுபிடித்து விடுவார்' என்று பளிச்சென்று பதிலளித்தான்

No comments:

Post a Comment