Monday, February 10, 2014

மதங்களும்

"ஏகம் சத்யம்" "விப்ரஹ பஹுத வதந்தி" உண்மை ஒன்றே அதை பண்டிதர்கள் பலவராக பகர்கின்றனர் என்கிறது சமஸ்க்ருத ஸ்லோகம். இதையே பாரதியும் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் என்றோதியதை அறியீரோ? என்கிறார். கடவுள் ஒருவனே அவனே பஞ்ச பூத இறைவனாகி காட்சி தருகிறார். இதையே பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் என்கிறார் தாயுமானவர். நம்முன்னோர்களும் நிலத்திற்கு காஞ்சியிலும், நீரிற்கு திருவானைக்காவிலும், நெருப்பிற்கு அண்ணாமலையிலும், காற்றிற்கு காலஹஸ்தியிலும், ஆகாசத்திற்கு சிதம்பரத்திலும் பஞ்சலிங்கத்தையும் சிவ லிங்கமாக (ஆனந்தத்தின் குறியீடு) வைத்து வணங்கினர். இவ்வுலகில் நாம் காணும் அனைத்து உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் பஞ்ச பூதத்தால் ஆன கலவையே. ஆகையால் எப்படி சவுதியில் உள்ள நம்பரை தொலைபேசி முலம் தொடர்பு கொள்கிறோமோ அது போல பார்முதல் பூதத்திலும் நம்மிலும் (கடந்தும் உள்ளும் ) மறைந்துள்ள கடவுளை எளிதில் தொடர்பு கொள்ளவும் இயற்கையோடு நாம் இணைந்து வாழவும் நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியே ஆலய வழிபாடு. இங்கே மண் தத்துவத்தால் ஆன பிரபஞ்ச வடிவில் இருக்கும் ஆனந்தத்தின் குறியீடான சிவ லிங்கத்திர்ற்கு (சிவம் = ஆனந்தம், மங்களம், cosmic conciousness , லிங்கம் = குறியீடு , symbol ) நீர் தத்துவமான ஆற்று அல்லது குளம் கிணறு நீரால் அபிசேகம் செய்து தீபாராதனை ஹோமம் போன்ற அக்னி தத்துவத்தால் வழிபாடு செய்து பதிகங்கள் ஸ்லோகங்கள் பஜனைகள் என்ற காற்றை மென்மையாக அதிர்வடையச்செய்து தியானம் அல்லது பிரார்த்தனை என்று ஆகாசத்தொடு மனதை சேர்த்து பஞ்ச பூத தத்துவத்தால் வழிபடுகிறோம் சில பிரச்சனைகள் இருப்போர் பெரியோர் குறிப்பிட்ட பரிகார தலம் சென்று வழிபடும்போது அது சரியாவதை இன்றும் கண்கூடாக பார்க்கிறோம் சனாதன தர்மம் அறிவியல் பூர்வமானது. எப்படி அருவுருவ திரவ நிலையில் உள்ள நீர் குளிர்ந்தால் உருவமுள்ள ஐஸ் கட்டியாகவும் சூடாக்கினால் உருவமில்லாத வாயுவாக மாறுமோ, பக்தரின் நிலைக்கேற்ப எல்லாம் வல்ல இறைவனை அருவமாகவும் (த்யனத்தால்), உருவ வழிபாடாகவும் (பல இறைவன்கள்) , அருவுருவ (சிவ லிங்கம்) ஆகவும் தொடர்பு கொள்ளலாம் என்பது நம் முன்னோர்களால் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்ட ஒன்று. உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் ஆகிய அடிப்படை தேவைக்கு குறைவில்லாமல் போட்டி பொறமை இல்லாமல் செழிப்பாக இருந்த நம் பாரத தேச மகன்கள் கண்டறிந்த நுட்பங்கள் இவை. ஜன நாயகம் போல உங்கள் விருப்பத்திற்கு உங்கள் இறைவனை எப்படி வேண்டுமானாலும் குல டெஇய்வமாக இஷ்ட தெய்வமாக வைத்துக்கொள்ளலாம். மற்ற தேசங்களில் உதித்த மகான்களான நபி இயேசு போன்றவர்களுக்கு பாலைவனத்தில் உணவுக்கே போட்டி பொறாமையோடு சண்டை போடும் மக்களை உடனடியாக உயர்த்த அவர்களை இணைக்க கண்ட வழியே அருவம் ஏக இறைவன் என்ற தத்துவங்கள். போரில் கணவனை அல்லது தந்தையை இழந்த பெண்களை காப்பாற்றும் பொருட்டு அங்குள்ள ஆண்கள் மற்றோர் மணம் புரிவது தவறல்ல என்றது அன்றைய கால கட்டத்தில் அர்த்தமுள்ள நிலைப்பாடே. வாசுதெய்வ குடும்பகம் = உலகமே குடும்பம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நமது பாரத தேச பரந்த கோட்பாட்டில் இஸ்லாமும் கிறித்துவமும் இனி பிறக்கப்போகும் அனைத்து மதங்களும் ஓர் அங்கமே. ஆன்மிகத்தின் ஆழம் தெரிந்தோர் மதம் மாறுவது அவசியமில்லை மனம் மாறுவதுதான் அவசியம் என நினைப்பர்.

No comments:

Post a Comment