Thursday, September 18, 2014

கோவில்கள்

http://hindusamayams.forumta.net/t1026-topic#axzz3DgUx0Ed0

ஜோதிடம்

http://classroom2007.blogspot.in/2011/10/blog-post_14.html

ஆன்மிகம்

http://copiedpost.blogspot.in/

கல்பனா சாவ்லாவின் மறுபிறவி…?

கல்பனா சாவ்லா. விண்வெளி வீராங்கனையாக மலர்ந்து அந்த விண்ணிலேயே கருகிப் போனவர். இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர். அவர் விண்வெளி ஆய்விற்காகப் பயணம் மேற்கொண்ட கொலம்பியா விண்கப்பல் STS-87 தரையிறங்கும் போது பெரும் விபத்தைச் சந்தித்தது. இந்திய மனங்களில் பெரும் சோகம் சூழ்ந்தது. மண்ணில் பிறந்து மண்ணிலே தவழ்ந்த கல்பனா சாவ்லா 2003ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் விண்ணிலே மறைந்தார்.


இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாடா எனும் கிராமத்தில் வாழும் ஏழு வயதுச் சிறுமியான உபாசனா, தான் தான் முற்பிறவியில் ”கல்பனா சாவ்லா” என்று அறிவித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். உபாசனா கல்பனா சாவ்லா விபத்தில் இறந்த சில மாதங்கள் கழித்து ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் உபாசனா பிறந்தார். சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்ந்த அவர், தனக்கு நான்கு வயதாகும் போது தனது முற்பிறவிகள் பற்றிக் கூற ஆரம்பித்தார். கொலம்பியா விண்கலம் பற்றி, அதில் தன்னுடன் பயணம் செய்த சக விஞ்ஞானிகள் குறித்தெல்லாம் அவள் பல தகவல்களைக் கூற, அதிகம் கல்வியறிவு இல்லாத அவள் பெற்றோர்களுக்கு அவள் சொன்னது எதுவுமே புரியவில்லை.

”உபாசனா குழந்தையாக இருக்கும் போதே எப்போதும் பறப்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்; அவளுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு இருக்கிறது என்றும், அங்கு நிறைய பணம் இருக்கிறது என்றும் சொல்வாள். தான் ஒரு விமானத்தில் பயணம் செய்தபோது அது ஒரு பனிமலைச் சிகரத்தில் மோதி நொறுங்கி விழுந்து விட்டது என்றும் அதில் தான் இறந்து போய் விட்டதாகவும் சொல்வாள். குழந்தை ஏதோ உளறுகிறது என்று நாங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தாய் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போன போது அங்குள்ள ஒரு செய்தித்தாளில் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து, அது தான் தான் என்று கூற ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தினர் மூலம்தான் அது ‘கல்பனா சாவ்லா’ என்பதும், அந்தப் பெண் ஒரு விமான விபத்தில் இறந்து போய் விட்டாள் என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் குழந்தை சொல்வது பொய்யில்லை, அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டோம் என்கிறார் உபாசனாவின் தாய் ஞானேஸ்வரி.

தங்களுக்குக் கல்வியறிவு அதிகம் இல்லாததால் அக்கம் பக்கத்தினருடனான உரையாடல்கள் மூலம்தான் உபாசனா தனது முற்பிறவி பற்றிக் கூறுகிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்கிறார் தந்தை ராஜ்குமார். 

அதன் பின் உபாசனா தன் வீடு இதுவல்ல என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். தான் கர்நாலில் பிறந்ததாகவும் தாய் பெயர் ரேகா என்றும், தந்தை பெயர் பன்சாரி லால் சாவ்லா என்றும் கூறியவள், தான் உடனே அங்கு போக வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். விசாரித்ததில் அவள் கூறுவது அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்தது. (ஆனால் தாய் பெயர் ரேகா அல்ல. சன்ஜோக்டா. அதை மட்டும் அவளால் சரியாகச் சொல்ல முடியவில்லை). உபாசனாவிடம் தனியாகப் பல முறை உரையாடிய அவள் தாய் வழிப்பாட்டி குழந்தை நிச்சயமாகப் பொய் சொல்லவில்லை; அவள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்தாள்.

இந்த விவரங்கள் கல்பனா சாவ்லாவின் தந்தையான பன்சிலால் அவர்களுக்கும் தெரியவந்தது. ஆனால் அவர் இதனை நம்பாததுடன், இதெல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி உபாசனாவைச் சந்திக்க மறுத்து விட்டார். தாங்கள் ஒரு ஏமாற்றுக்காரர்களாகச் சித்திரிக்கப்படுவதை விரும்பாத உபாசனாவின் தந்தை ராஜ்குமார், அதுமுதல் மகளின் முற்பிறவி பற்றிய விஷயங்களை வெளியாருக்குக் கூறுவதை விட்டு விட்டார். உபாசனா உண்மையிலேயே கல்பனா சாவ்லாவின் மறுபிறவி தானா? விஞ்ஞானிகள் தான் முறையாக ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Monday, September 15, 2014

போட்டோ மிக்ஸ்


aNMsVQR.jpg


போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம். 

2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம். 




Before Make.png After KatteMake.pngFotoMixBefore.pngFotoMixAfter.png
 


விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது. 



DOWNLOAD:click here
  • 0

Sunday, September 14, 2014

கல்வி அப்ளிகேஷன்

vBqCYdT.png

சாம்சங் நிறுவனம் இந்தியாவில், முதல் முதலாக கல்விக்கென அப்ளிகேஷன் ஒன்றைத் தந்துள்ளது.  மாணவர்கள் இதனை இயக்கி, பாடங்கள் சார்ந்த தங்கள் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். 'Samsung Smart Learning' என இதனை சாம்சங் பெயரிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் MSC (Media Solutions Center) பிரிவு இதனை வடிவமைத்து இயக்குகிறது.


இது ஒரு க்ளவ்ட் அமைப்பிலான அப்ளிகேஷன் தீர்வாக இருக்கும். இது 2ஜி மற்றும் 3ஜி பார்மட்களில் கிடைக்கும். அனைத்து சாம்சங் டேப்ளட் பி.சி.க்கள் மூலமாக இதனைப் பெறலாம்.  இந்தப் பிரிவில், இந்தியாவில் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் பயிலும் 7 கோடி மாணவர்களுக்கு வகுப்பு 1 முதல் 12 வரையிலான  பாடக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்திடும் 45 லட்சம் மாணவர்களுக்கும், தேர்வுக் குறிப்புகள் இதில் கிடைக்கின்றன. மற்ற கல்வி திட்டங்களில் பயில்வோருக்கும் விரைவில் பாடக் குறிப்புகள் இதே போன்ற  அப்ளிகேஷன் வழியாக வழங்கப்படும். 

இந்த அப்ளிகேஷனில், வகுப்பறைகளில் ஆசிரியர்களால் தரப்படும் பாடக் குறிப்புகளுக்குக் கூடுதலான விளக்கங்கங்கள் தரப்படும். ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு மாணவரும் இதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பயன் பெறலாம். பள்ளிகளுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சாம்சங் இந்தியா முயற்சித்து வருகிறது. 
இந்த பாடக் குறிப்புகளை எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, சாம்சங் விற்பனை மையங்கள் வழியாக விற்பனை செய்திடவும் சாம்சங் 
இந்தியா நிறுவனம் திட்டமிடுகிறது. இது போன்ற க்ளவ்ட் அமைப்பில் கல்வி சார்ந்த பாடக் குறிப்புகளைத் தரும் முயற்சி, இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

அண்மையில், சாம்சங் நிறுவனம், இந்திய வாடிக்கையாளருக்கு மட்டும் என தனியே ஒரு அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியது. இதில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்கள் மட்டும் கிடைக்கும். மொத்தமாக லட்சக் கணக்கில் அப்ளிகேஷன்களை வைத்துத் தருவதனைக் காட்டிலும், எவை முக்கியமாகத் தேவைப்படுமோ, அந்த அப்ளிகேஷன்களை மட்டும் கொண்டு ஸ்டோர் இயக்குவது நல்லது என்று சாம்சங் கருதுகிறது. 



LINK:  CLICK HERE
  • 0

சகாயம் ஐ.ஏ.எஸ்

ஓர் அரசு அதி்காரி எப்படி இருக்க வேண்டும் ... ''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. தி்டீர்னு ஒருநாள் ராத்தி்ரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தி்ருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!'' சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதி்ப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தி்யாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதி்காரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்தி்ருக்கிறார் சகாயம். ''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்தி்ருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதி்ரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதி்காரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதி்ரிகள் அதி்கரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம். ''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன். காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதி்காரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக் குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்தி்ரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் தி்ரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன் னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்தி்ரிகைலயும் பெட்டிச் செய்தி்யாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி் விரிவா வந்தி்ருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி் மாத்தி்ப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் தி்ட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதி்க மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்தி்ரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' இந்த நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதி்காரிகள் நாட்டுக்கு நிறைய.... தேவை.......