நம்பினால் நம்புங்கள்
* 2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.
* 25 ஆயிரம் பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்! * ஒரு அலுமினிய டப்பாவை மறு உபயோகம் செய்வதன் மூலம், ஒரு டிவியை 3 மணி நேரம் இயங்கச் செய்யும் அளவு சக்தியைச் சேமிக்கிறோம். * பசு மாடுகள் மனிதர்களைவிட 200 மடங்கு அதிக வாயுவை வெளியிடுகின்றன. * சராசரி மனிதன் படுக்கையில் விழுந்த 7 நிமிடங்களில் உறங்கி விடுகிறான். * உலகை 150 முறை சுற்றிவரும் அளவுக்கு நீளமான சாலைகள் அமெரிக்காவில் உள்ளன. * நீங்கள் விழித்து எழுந்தவுடன் ஒரு சிறு பல்பு எரியக்கூடிய அளவு மின்சக்தியை, மூளை உண்டாக்குகிறது. * நம் ரத்தத்தில் உள்ள இரும்பானது, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பல ட்ரில்லியன் மைல் தொலைவில் உருவானது! * காதல் வயப்படும் ஜென்ட்டோ பெங்குவின், தன் காதலிக்குப் பரிசளிப்பதற்கான சிறிய கல்லை கடற்கரை முழுவதும் தேடித் தேர்ந்தெடுக்கும்! * ஒரே ஒரு முனையில் பொருந்தியுள்ள, நம் உடலின் ஒரே ஒரு தசை நாக்கு மட்டுமே!
* பூமியின் சுழற்சி வேகம் ஒரு நூற்றாண்டுக்கு 17 மில்லி செகண்டுகள் குறைகிறது.
* தண்ணீரை வேதியியல் மாற்றம் மூலமாக எரியக்கூடிய ராக்கெட் எரிபொருளாகக்கூட மாற்ற முடியும். * பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு 473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ சராசரியாக 8 ஆயிரம்! * காகங்களால் தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்! * 1850ம் ஆண்டு வரை இடது, வலது ஷூக்கள் கிடையாது. இரண்டுமே ஒரே மாதிரியானவை! * பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்த்ததற்குக்கூட பெண்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. * ஒவ்வொரு ஆண்டும் நம் உடலில் 98 சதவீதம் அணுக்கள் மாற்றமாகின்றன. * மனச்சோர்வினால் அவதிப்படு கிறவர்களுக்கு மற்றவர்களைவிட 3-4 மடங்கு அதிக கனவுகள் ஏற்படுகின்றன. * ஜப்பா னில் ஆண்டுதோறும் 2400 கோடி சாப்ஸ்டிக் குச்சிகள் (ஜோடி) பயன்படுத்தப்படுகின்றன. சீனாவிலோ 4500 கோடி. இதற்கு மட்டுமே இரண்டரை கோடி மரங்கள் தேவை! * உலகில் 7500 தக்காளி ரகங்கள் உள்ளன. * வயதான பெற்றோரை அவ்வப்போது வந்து சந்திக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் சீனாவில் அமலாக உள்ளது.
* முதல் அலாரம் கடிகாரத்தை அமெரிக்காவிலுள்ள கன்கார்ட் நகரத்தைச் சேர்ந்த லெவி கட்ச்சின்ஸ் 1787ல் கண்டுபிடித்தார். பணத்தின் மீது நாட்டம் இல்லாததால் அதற்கான உரிமத்தை அவர் வாங்கவே இல்லை!
* நம் வயிற்றில் மியூகஸ் படலம் இல்லாமல் இருந்தால், ஜீரணமாகி விடும்! * 12 லட்சம் கொசுக்கள் தலா ஒருமுறை நம்மைக் கடிப்பதாக (பயங்கரமாக) கற்பனை செய்தால், ஒரு துளி ரத்தம் கூட மீதம் இருக்காது! * நாய்கள், பூனைகளுக்கும் மனிதர்களைப் போலவே இடதுகை பழக்கம் உண்டு. துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் உடையவை. * வண்ணத்துப்பூச்சிகள் கால்களின் மூலமாக சுவை அறிகின்றன. * நாம் உரையாடுகையில் 72 வெவ்வேறு தசைகள் செயல்படுகின்றன. * ஆந்தையால் தன் தலையை 270 டிகிரி அளவுக்குச் சுழற்ற முடியும். * எறும்புகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்பது உண்மையல்ல. எறும்புகளும் உறங்கும்! * டால்பின்கள் ஒரு கண் திறந்தவாறு உறங்கும். உறக்கத்திலேயே நீந்தவும் செய்யும். * ஒருவரது புருவத்தில் சராசரியாக 550 முடிகள் உள்ளன. கருத்துகள்
NATO Secretary General Statement in...
* 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.
* 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை). * 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். * 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997). * 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். * 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர். * இப்போது 713 கோடி மக்கள் வாழ்கின்றனர். * 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை. * 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை. * நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும். * முதலைகளிலே 23 இனங்கள் உண்டு. * மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்! * தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது. * சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன. * பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள். * ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும். * சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’. * தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும். * ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு. * குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள். * சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை. * இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது. * துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்! * மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும். * கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது. * பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும். * மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்! * சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. * 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்! * சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது. |
Tuesday, June 24, 2014
நம்பினால் நம்புங்கள்
Friday, June 20, 2014
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
Monday, June 16, 2014
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்
'அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும்
மஞ்சள் கரிசலாங்கண்ணி

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது. கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.
வல்லாரைக் கீரை

வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி

கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.
நிலவேம்பு

சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை

தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.
திப்பிலிக்கொடி

திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.
ஓமவல்லி

கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.
துளசி

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.
துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை

இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.
வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி

கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கொசு தொல்லை

தூங்கும் முன் மகள் அப்பாவிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
Sunday, June 15, 2014
பழைய பொருட்கள் பயனுள்ள தயாரிப்புகள்
மூன்று வாட்டர் பாட்டில்களை துடப்பமாக மாற்றுதல்
மூடிகளை மேலுகுவர்த்தியாக்குதல்
வளைந்த ஸ்பனர்களாக மாற்றுதல்
சீ டி டப்பாவை கேக்கு பாக்ஸ் ஆக்குதல்
ஊட்டயுள்ள பட்டியலில் கலர் கண்ணாடிகளை வைத்தல்
எம்டி கம்ப்யூட்டர் பாக்ஸ் யை மெயில் பாக்ஸ் ஆக்குதல்
பியானோ நீர்வீழ்ச்சி
பல்பு விளக்கு
சைக்கிள் ரிம் கடிகாரம்
பாளை ட்ரம்ஸ் விளக்கு
பழைய ஏணி புத்தக செல்ப்
பாத் டப் சோபா
சூட்காஷ் ஷேர்
பியானோ புத்தக செல்ப்
பழைய ஷேர் ஸ்டான்ட்
வாட்டர் கேன் கரண்டி லைட்
க்லாம்பை புத்தக செல்ப்பாக மாற்றலாம்
தொப்பி லைட்
கண்ணாடி
Subscribe to:
Posts (Atom)