Saturday, April 12, 2014

ரோபோ கப்பல்

பெங்களூருவில் ஆட்டோ சேவை வழங்கி வரும் ‘நம்ம பெங்களூரு’ என்னும் நிறுவனம் எம்காடி எனப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நமக்கு ஆட்டோ தேவை என்றால் ஸ்மார்ட் போனை எடுத்து எம்காடி அப்ளிகேஷனிடம் தெரிவித்தால் போதும். போனில் உள்ள ஜி.பி.எஸ். மூலம் நாமிருக்கும் இடம் அந்த நிறுவனத்தின் ஆட்டோ டிரைவருக்கு (அந்த சுற்றுவட்டாரத்தில் இருப்பவருக்கு) தெரிவிக்கப் படும். அடுத்த 5 நிமிடத்தில் அவர் நம்மை தேடி வந்து விடுவார். நாம் செல்கிற தூரத்தை பொறுத்து பயணக்கட்டணத்தையும் அந்த அப்ளிகேஷனே சொல்லிவிடும். நம்மை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநரை அவரின் நடவடிக்கைகளை வைத்து எம்காடியில் நாம் மதிப்பிடலாம். பயணி அளிக்கும் மதிப்பீட்டை வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறதாம் ‘நம்ம பெங்களூரு’ நிறுவனம்.

கூகிள் லென்ஸ்:

Posted ImagePosted Image

கூகிள் நிறுவனம் மருத்துவ துறையிலும் தனது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தான் கூகிள் கிளாஸை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் இப்போது கூகிள் காண்டாக்ட் லென்ஸ் என்னும் புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. முழுக்க முழுக்க மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சாதனம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த சாதனத்தை சாதாரண காண்டாக்ட் லென்ஸை போலவே கண்களில் அணிந்து கொள்ளலாம். இரண்டு மெலிதான கண்ணாடி அடுக்குகளின் இடையே நுண்ணிய ஒயர்லெஸ் சிப்கள் பொருத்தப்பட்ட இந்த லென்ஸை கண்ணில் பொருத்திவிட்டால், கண்ணில் உள்ள ஈரப்பதத்தை வைத்தே உடலில் உள்ள சர்க்கரை அளவை சொல்லிவிடுமாம்.



ரோபோ கப்பல்:



Posted Image

ஓவ்வொரு கப்பலையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கட்டுக்கோப்பாக செலுத்த வேண்டிய கடமை அந்த கப்பலின் கேப்டனுக்கும் அவருடைய குழுவிற்கும் உண்டு. ஆனால் இப்படி கேப்டன் மற்றும் கப்பலை இயக்கும் குழுக்கள் பயணங்களின்போது அடைகிற துன்பங்கள் கொஞ்சம் செஞ்சமல்ல. உணவில் ஆரம்பித்து உயிரை பாதுகாப்பது வரை எல்லாமே ஆபத்தானவை. இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆளில்லாமல் ரோபோக்களை பயன்படுத்தி கப்பல்களை இயக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த திட்ட வேலைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது. Maritime Unmanned Navigation through Intelligence in Networks என்னும் பெயரில் ரோபோக்கள் இயக்குகிற கப்பலை தயாரிக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இனி விரைவில் கடல்களில் மனிதர்கள் இல்லாத ரோபோ கப்பல்கள் பயணமாவதை பார்க்கலாம்.


புது முயற்சி:


Posted Image

பேஸ்புக், ட்விட்டர் எப்படியோ அதைப் போலவே ‘லிங்க்ட் இன்’ என்னும் சமூக வலைத்தளம் உள்ளது. ஆனால் அது பேஸ்புக்கை போல் பொழுதுப் போக்குக்கான தளம் அல்ல. கிட்டத்தட்ட புரொபஷனல் சமூக வலைத்தளம் என்று சொல்லலாம். உலகம் முழுக்க இந்த தளத்தில் 259 மில்லியன் பயனர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த உறுப்பினர்களை குஷிப்படுத்தும் விதமாக லிங்க்ட் இன் வலைத் தளத்திற்கான தன்னார்வ பணியாளர் என்னும் வேலைவாய்ப்பினை வழங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது. வலைத்தளத்தை கட்டமைக்கும் முயற்சியாக அதன் உறுப்பினர்களை பயன்படுத்தும் முயற்சி தான் இதுவாம். மேலும் அந்த உறுப்பினர்களை தங்கள் வலைத்தள வேலைகளுக்கு மட்டுமன்றி சமூகப்பணிகளில் ஈடுபடவைக்கிற திட்டமும் லிங்க்ட் இன்னிடம் உள்ளதாம். 
0

விஞ்ஞான ஆச்சரியங்கள்

சுய படங்கள் (Selfies), தானாய் மறையும் படங்கள் (Disappearing photos), கடவுத்திருட்டு (Password theft), இணைய உளவு (Internet survivalance), மெய்நிகர் நாணயம் (Virtual currency), அணி கணினி (Wearable computer), திறன் கடிகாரம் (Smart watch) இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ஆம் ஆண்டில் சாமானிய மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த தொழில்நுட்பப் போக்குகள். இதுவரை பெரும்பாலும் தொழில்நுட்பப் பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்தப் போக்குகள் இந்த ஆண்டு வெகுஜனப் புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன.

மெய்நிகர் நாணயம் (Virtual currency)


Posted Image

ரூபாய், டாலர்,யூரோ இவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணையப் பணமான பிட்காயின் (Bitcoin) தான் இப்படிப் பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது எனப் பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நாணயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்தப் புதுயுகப் பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லாப் பரிமாற்றத்திற்காகத் தொழில்நுட்பப் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களைத் தொட்டபோது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தைத் தொட்ட பிறகு சரிவைச் சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது.

அணி கணினி (Wearable Computer)


Posted Image

இது பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம். அணி கணினி என்பது, கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணினியின் ஆற்றலை உள்ளீடு செய்வதாகும். இப்போது வந்திருக்கும் கூகுள் கண்ணாடியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஆனால் ஆய்வு நிலையிலேயே இருந்த இந்தத் தொழில்நுட்பத்திற்குக் கூகுள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம். காமிராவாக உபயோகப் படுத்தலாம். ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்தக் கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர்.

Posted Image

கூகுள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்கப் பெண்மணிக்குப் போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்தத் தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணினி பரவலானால் அதில் கூகுள் கண்ணாடிக்குப் பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.


ஸ்மார்ட்ஃபோன்கள்

Posted Image

ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிளின் ஐஃபோன் பிரபலமாக்கியிருந்தாலும் இன்று சந்தையில் கோலோச்சுவது என்னவோ ஆண்ட்ராய்டுதான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலைப் பார்க்கலாம் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட நோக்கியா மைக்ரோசாப்டால் வாங்கப்பட்டதும் இந்த ஆண்டு நடந்தது. இதன் நடுவே ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை ஒரு பில்லியன் எனும் மைல்கல்லையும் இந்த ஆண்டு எட்டியது.

ஸ்மார்ட் வாட்ச்

Posted Image


ஸ்மார்ட் வாட்ச் பற்றியும் இந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லாம் பெபில் வாட்ச் செய்த மாயம். பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனை வெளியே எடுக்காமலேயே அதில் வந்துள்ள இமெயிலையும் குறுஞ்செய்தியையும் கையில் உயர்த்திப் பார்த்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் பெபில் வாட்ச் இணைய நிதி திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதியைப் பெற்று அறிமுகமாகிப் பலரையும் கவர்ந்தது. கூகுள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யப்போகிறது, சாம்சங் அறிமுகம் செய்யப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டு ஸ்மார்ட் வாட்சின் செல்வாக்கு கூடியது.



ஸ்னேப்சேட்


Posted Image

பேஸ்புக்கிற்கு அடுத்து பங்குச்சந்தைக்கு வந்திருக்கும் சமூக வலைத்தளம் ட்விட்டர். ஆனால் அதைவிட அதிகம் கவனத்தை ஈர்த்தது ஸ்நேப்சாட்தான். அனுப்பியவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தானாக மறைந்து விடும் புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் இந்த செல்போன் செயலி இளைஞர்களின் புதிய கலாச்சாரமாகவே உருவெடுத்திருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் செயலி இதுவரை டவுன்லோடுகளைத் தான் கண்டிருக்கிறதே தவிர லாபத்தை அல்ல. அப்படி இருந்தும் 3 பில்லியன் டாலருக்கு வாங்க முற்படும் அளவுக்கு இந்தச் செல்வாக்கு அதிகரித்திருப்பது ஆச்சரியம் தான். ஆனால் என்ன செய்ய இளசுகள் எல்லாம் ஸ்னேபசாட் வழியேதான் பேசிக்கொள்கின்றனர்.

செல்போனைக் கொண்டு ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைத் தான் செல்பீ என்கிறனர். தமிழில் சுயபடங்கள். ஆக்ஸ்போர்டு அகராதி இந்த ஆண்டின் சொல்லாக அங்கீகரிக்கும் அளவுக்கு செல்பீ பிரபலமானது.

பாஸ்வேர்டு திருட்டுகள்


Posted Image

இவை எல்லாம் உற்சாகம் தந்த போக்குகள் என்றால் இணையவாசிகளைக் கவலையில் ஆழ்த்தி இணையக் கண்காணிப்பு பற்றி விழித்துக் கொள்ள வைத்தது ஸ்நோடன் குண்டு. முன்னாள் ஐ.எஸ்.ஐ ஊழியரும் என்.எஸ்.ஏ ஒப்பந்ததாரருமான எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்க உளவு அமைப்பு எப்படி இணைய நிறுவன சர்வர்களையும் இமெயில்களையும் கண்காணிக்கிறது என்பதை அம்பலமாக்கி அதிர வைத்தார். இதன் பிறகு அவர் ஓடி ஒளிய வேண்டியிருந்தாலும் அவரால் கண்காணிப்பு யுகத்தின் மத்தியில் இருக்கும் திகைப்பை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்தக் கண்காணிப்பின் விளைவாக பிரேசில் போன்ற நாடுகள் தனி இண்டெர்நெட்டை உருவாக்குவது பற்றி எல்லாம் பேசத் துவங்கின. ஐக்கிய நாடுகள் சபை சார்பிலான இணைய மாநாட்டிலும் இது பற்றித் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அதுபோல இந்தாண்டு பாஸ்வேர்டு திருட்டுகள் அதிகம். அடோப் போன்ற முன்னணி நிறுவனங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளைத் தாக்காளர்கள் களவாடி இணையதளங்களில் வெளியிட்டுப் பகிரங்கப்படுத்தியது நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் எவ்வளவு பலவீனமானதாக இருக்கின்றன என்று கவலைகொள்ள வைத்தன. பயோமெட்ரிக் பாஸ்வேர்டு, இரண்டு அடுக்குப் பாதுகாப்பு என்றெல்லாம் இப்போது இதற்கான மாற்று வழிகளை விவாதித்து வருகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா

Posted ImagePosted Image
2014ஆம் ஆண்டு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2013இல் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் தமிழ் விக்கிபீடியா பத்தாண்டுகளைக் கடந்ததுள்ளது. 50,000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டு இந்திய மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இணைய உலகின் முன்னோடி தேடு இயந்திரங்களில் ஒன்றாக விளங்கிய ஆல்டாவிஸ்டா (ஆம் அப்படி ஒன்று இருந்தது), இந்த ஆண்டோடு மூடு விழா கண்டது இணைய வரலாற்றை அறிந்தவர்களுக்கு வருத்தம் தரக்கூடியது. 

முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை

நம் தினசரி வாழ்வில் தேவைப்படும் அடையாளச் சீட்டுகளான (DOCUMENTS) பான் கார்டு, வீட்டு முகவரி, வோட்டர்ஸ் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு முதலியவற்றிற்கு போதுமான நகல்களை எடுத்து வைத்திருக்கவேண்டும். இதில் ஏதாவது தொலைந்து போனால் நகலைவைத்து எளிதாக மீண்டும் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் நம் பர்ஸில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.

இன்று எல்லாம் இன்டர்நெட் யுகமாக மாறிவிட்டதால், இவைகளை நம்முடைய ஈமெயிலில் அல்லது DROPBOX என்று சொல்லப்படும் ஒரு ப்ரோக்ராமில் நாம் பத்திரபடுத்தி வைத்து உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.


நாம் எதையெல்லாம் அளக்கிறோமோ அது மட்டுமே கண்டிப்பாக வளரும். இன்று வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டதால் நமக்கு பல விஷயங்களைக் கவனிக்க நேரமுமில்லை, மனமுமில்லை. இதனால் எது மிகவும் அவசியமோ அதைக்கூட சரிவர செய்வதில்லை.

நாம் தேடிய ஒரு செல்வத்தை பாதுகாக்க நேரமில்லை என்றால் எதற்காக மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். இன்று எல்லோரும் பிஸியாக, பொருளை தேடுவதால் அதை அனுபவிக்க யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை என்பது வருந்தக்கூடிய ஒரு விஷயம்.

எல்லோரும் சொல்லும் பொதுவான பதில் என்னிடம் பணம் இல்லை, அல்லது என்னிடம் பணம் தங்குவதில்லை. இதை சற்று உள்நோக்கி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பணத்தை மதிப்பதில்லை. தன்னை மதிக்காததால் பணம் அவர்களிடத்தை விட்டு உடனே ஓடிவிடுகிறது. இதை படிப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும் இது முற்றிலும் உண்மை. முன்பு ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.

இன்று இல்லாததால் அலுவலகத்தில் செலவிடும் நேரம்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நம் வாழ்வில் அடிக்கடி எதிர் நோக்கும் சில முதலீடுகளில் நாம் என்ன கவனிக்கவேண்டும் என்று பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு
Posted Image

இன்று கிரெடிட் கார்ட் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதை சரிவர உபயோகப்படுத்த தெரியாதவர்கள் 90 சதவீதத்துக்கு மேல். நாம் வாங்கும் பொருளுக்கு 30 முதல் 50 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் கிரெடிட் கார்ட் போல ஒரு உபயோகமானது எதுவும் இல்லை. ஆனால் பலருக்கும் இதை உபயோகிக்கத் தெரியாததால் இதை குறை கூறுகின்றனர்.

நாம் வாங்கிய பொருளில் 5% பணம் கொடுத்தாலே நாம் தொடர்ந்து உபயோகிக்கலாம், ஆனால் மீதமுள்ள பணத்திற்கு மாதம் 3% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். இதைப்புரிந்து கொள்ளவேண்டும். அதே போல ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் பாலிசியையும் நம் தலையில் கட்டி விட்டு மாதா மாதம் பணம் எடுப்பார்கள் பலர் இதை முதல் மாத பில்லிங்கிலே பார்க்காமல் விட்டுவிட்டால் ஒரு வருடம் கட்ட வேண்டி வரும்.


இன்சூரன்ஸ் பாலிஸி


Posted Image

பாலிஸி நம் கைக்கு வந்த தினத்திலிருந்து 15 நாட்களுக்குள் நமக்கு பிடிக்காவிட்டால் உடனே சரண்டர் செய்ய முடியும். பலர் ஏதாவது பிரச்சினை என்று வரும் போதுதான் அதைப் பிரித்துப் பார்ப்பார்கள். மேலும் அதில் நம்முடைய பெயர், வயது, ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். நாமினியின் பெயர் சரியாக இருக்கிறதா, நம்முடைய முகவர் சொன்னதற்கும் பாலிசியின் வார்த்தைகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும்.

பாலிசி ஒரிஜினல் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அது தொலைந்தால் மீண்டும் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் நடுவில் நாம் கொஞ்சம் பணம் எடுப்பதாக இருந்தாலும் அல்லது சரண்டர் செய்வதாக இருந்தாலும் ஒரிஜினல் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.


மியூச்சுவல் ஃபண்ட்

Posted Image

நாம் முதலீடு செய்தவுடன் நமக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் நம்முடைய பெயர், பான் நம்பர், பேங்க் கணக்கு எண், விலாசம் மற்றும் ஈமெயில், மொபைல் நம்பர், நாமினி எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். இதில் ஒரிஜினல் என்பது கிடையாது, நாம் ஒரு சாதாரண காகிதத்தில் நம்முடைய FOLIO NO –ஐ குறிப்பிட்டு பணத்தை எடுக்கவோ அல்லது வேறு ஃபண்டில் சுவிட்ச் செய்வதோ எளிது. நம்முடைய பான் நம்பர் அல்லது ஈமெயில் ஓர் மொபைல் நம்பரை வைத்து நம் அனைத்து முதலீட்டையும் நம்மால் எளிதாக எடுக்க முடியும். ஒவ்வொரு முதலீட்டிற்கும் (FOLIO NO) தருவார்கள் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்தாலே போதுமானது.
ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நாமினியின் பெயரை மாற்றிக் கொள்ள முடியும். முன்பு கொடுத்த பேங்க் கணக்கை நாம் க்ளோஸ் செய்தால் புது பேங்க் பற்றிய தகவலை உடனடியாக தர வேண்டும் இல்லாவிட்டால் அது பழைய வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.

பங்குச் சந்தை முதலீடு

Posted Image


எப்படி பணத்திற்கு வங்கி கணக்கு எண் உள்ளதோ அதே மாதிரி பங்குகளுக்கு தரக்கூடியது டீமேட் கணக்கு எண். இதற்கு கண்டிப்பாக ஈமெயில் மற்றும் மொபைல் நம்பர் தர வேண்டும். அன்று ஏதாவது நம்முடைய கணக்கில் வர்த்தகம் நடந்திருந்தால் உடனடியாக அலெர்ட் மெசேஜ் வந்துவிடும். மறுநாள் டெலிவரி நோட் நம் மெயிலுக்கு வரும். இதில் என்ன சார்ஜ் செய்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். நாம் பவர் ஆப் அட்டார்னி (POWER OF ATTORNEY) கொடுத்திருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


வீட்டுப் பத்திரம்

அதே போல வீட்டுப் பத்திரத்தில் நம்முடைய பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா, வில்லங்க சான்றிதழ் சரியாக பெறப்பட்டிருக்கிறதா அது ஏதாவது அடமானத்தில் உள்ளதா போன்றவற்றை சரியான நபரிடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும். வங்கிதான் கடன் கொடுக்கிறார்களே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். இன்றைய தொழில்நுட்பத்தில் யாரை வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்ற முடியும்.


பேங்க் ஸ்டேட்மென்ட்

ஒவ்வொரு காலாண்டு ஸ்டேட் மென்டும், நமக்கு வீட்டிற்கு தபாலிலும், மாதா மாதம் ஈமெயிலிலும் வரும். அதில் ஏதாவது தேவையற்ற சார்ஜ் செய்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். முன்பு பேங்க் பாஸ்புக் ரெகுலராக அப்டேட் செய்வார்கள். இன்று நம் வீட்டைத் தேடி வருவதால் அதைப் பார்ப்பதற்கு சோம்பல் படுகிறோம். ஆனால் அது மிகவும் அவசியமானது.

சாராம்சம்

மேலே சொன்ன யாவும் ஒருவரால் எளிதாகக் கடைபிடிக்கக் கூடியதே. அதற்கு கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும், அவ்வளவுதான். இதைச் சரிவரசெய்தால் நம்மால் எங்கு ஓட்டை உள்ளது என்று கண்டறிய முடியும், அப்போதுதான் நம்மால் அதிலிருந்து வெளிவர முடியும். இப்படி செய்வதால் நாம் பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேமிக்க முடியும்.

ஒரு டாக்குமென்ட் நம் பெயருக்கு வந்தால் அதில் நாம் சொன்னவை எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நம்முடைய கடமை, அதை விட்டு இதைக் கூட தவறாக ஒருவர் செய்வாரா என்று குறை கூறினால் அவதிப்படுபவர் நம்மைத்தவிர வேறு யாரும் இல்லை.

இன்று எவ்வளவோ (APPS) நம்முடைய ஸ்மார்ட் போனில் வந்து நம் வாழ்வை எளிமைப் படுத்தினாலும் முந்தைய தலைமுறைபோல நிம்மதி யான வாழ்க்கை இல்லை, காரணம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வாழ்வது என்பதை மறந்து கொண்டே இருக்கிறோம்

குரோம்

Posted Image


1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.


2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.


3. குரோம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு "Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், "Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.



6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்துபவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் "+” அல்லது "--” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.


8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.


9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, "Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.


10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் "Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.



11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, "On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Continue where I left off.” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்து இணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும். 

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளி

உலகிலேயே முதல் முறையாக சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான எக்ஸ்ரே ஒளியை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 50 மில்லியன் ஆண்டு பழமையான தாவர படிமங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. 


இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்களையும் இந்த எக்ஸ்ரே ஒளிக்கதிர்கள் மூலம் துல்லியமாக ஆராய முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாவரத்துக்கும் அதே இனத்தை சேர்ந்த தற்போதைய தாவரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், ரசாயன குணங்கள், அவற்றால் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இந்த புதிய எக்ஸ்ரே கதிர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானி பில் மேனிங் கூறுகிறார். 

Sunday, April 6, 2014

இருபது ஓவர் உலகக் கோப்பை


Posted Image


இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது நடைபெறுவது 5-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.

முதல் 4 உலகக் கோப்பையை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

இருபது ஓவர் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு உரியது. இதுவரை 26 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 16 போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

தோனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் பால் கோலிங்வுட் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபோட்டிக்கு தலைமை வகித்துள்ளார். அவர் 17 போட்டிகளில் கேப்டனாக இருந்து 8 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.

இருபது ஓவர் உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர்களே பெற்றுள்ளனர்.
இலங்கை வீரர் ஜெயவர்த்தனா இப்போது 4-வது உலகக் கோப்பைபோட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 992 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கும். சராசரி 39.68.

இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம், 7 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.35.

அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். 30 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உள்ளார். 23 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. 2007-ம் ஆண்டில் கென்யா அணிக்கு எதிராக இலங்கை இந்த சாதனையை படைத்தது.

இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 2007-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது.


20 ஓவர் உலகக் கோப்பையில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த மோசமான சாதனை இந்த உலகக் கோப்பையில்தான் படைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

Tuesday, April 1, 2014

எப்படி ஏப்ரல் முட்டாள்கள் தினம்


எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய ஜாலி பதிவு இது. 

Posted Image

ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள் !

ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.

ஏப்ரல் 1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல் அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும் 9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர் !
அதே பிபிசி 1957 இல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன
1980 இல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார் !
ஆறு வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் பென்குயின்கள் பறக்கின்றன பாஸ் என்று இன்னொரு போலி வீடியோவோடு வந்தது பிபிசி. அதையும் நம்பினார்கள் மக்கள் !

பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள்
பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின !


ஐரீஷ் டைம்ஸ் 1995 இல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது !

The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன.

முதல் உலகப்போரின் April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே,அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்தை சியிருக்கிறார்கள் ! அதில் "ஏப்ரல் ஃபூல் !" என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள் !

பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.

கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004 இல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள் ! இப்படியும் ஏமாற்றலாம் பாஸ் !
லண்டன் டைம்ஸ் இதழ் 1992 இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு!

இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள்.
லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும் டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள் !
 
0