Sunday, March 23, 2014

நீதிகள்

உலக நீதி! குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை!
படிக்காமல் ஒருநாளும் இருக்காதே!
பிறர் மனம் வருந்தும்படி எதையும் சொல்லாதே!
பெற்ற தாயை என்றும் மறவாதே!
வஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே!
போகத் தகாத இடங்களுக்குப் போகாதே!
ஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப் பேசாதே!



நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் உதடுகளை விட உன்னை பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி அது தான் உண்மையான அன்பு



சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கபடுகிறான்!
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகம் கயப்படுகிறான்!



கொஞ்சம் படித்தால் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப் படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
வசிப்பது உள்நாடோ வெளிநாடோ, பண்பாடு மாறாமல், சொந்த மண்ணையும் மொழியையும் மறவாமல் இருக்கும் வரை நாம் நாமாகவே இருப்போம்.




முதுமையில் எவ்வளவு சொத்து இருந்தாலும் , மனைவி இழந்து விட்டால் அவனை தவிர ஏழை உலகில் யாரும் இல்லை !



ஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன! அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து
கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்!
புரியவில்லையே! பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ!!!?



1."கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல் .
2."டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல் .
4."வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.



தோல்விகள் நல்ல பாடங்களை தருபவை -- படிப்போம் ..
வெற்றிகள் கண்ணாடி போன்றவை --- பாதுகாப்போம் ...
நல்ல உறவுகளும் நல்ல நட்பும் விலை மதிப்பற்றவை - தக்க வைத்து கொள்வோம் .



பூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை! எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை! எல்லாக் காய்களும் கனியாவதில்லை! எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே
ஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும்! அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்




No comments:

Post a Comment