Saturday, April 12, 2014

கண்ணாடி சட்டம்

கண்ணாடி சட்டம் (Mirror Law)
என்ன பாஸ் புரியவில்லையா? சிம்பு ஒரு படத்துல கூட சொல்வாரே நா கண்ணாடி மாதிரின்னு அடிச்சா திருப்பி அடி விழும்னு.இப்ப எதுக்கு இத சொல்றேன்ன இந்தியாவை காங்கிரஸ் ஆளும்வதால் மற்ற நாட்டினர் எல்லாரும் இந்திய நாடு ஒரு சொங்கி that means கோழைகள் என்று நினைத்தார்களோ என்னவோ புல்லபூச்சியெல்லாம் நம்மள மிரட்டுது.அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கூரும் பதில்களும் கேட்டால் எரிகிற தீயில் என்னை ஊற்றுவது போல் உள்ளது.சரி விசயத்திற்கு வருவோம்.அமெரிக்கா இந்திய தூதரை கொடுமை படுத்தியது,தமிழக மீனவர்களை வேண்டும் என்றே இலங்கை அரசாங்கம் கைது செய்வது,சீனா இந்திய எல்லைக்குள் அத்து மீறுவது,போதாகுறைக்கு பாகிஸ்தான் அதனுடைய வேலையை காட்டுவது இதற்கு எல்லாம் சேர்த்தி இந்திய வெளியுறவு கொள்கையில் mirror law (கண்ணாடி சட்டம் ) கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

அதற்கான காரணத்தையும் கூரி விடுகிறேன்:

1.இப்போ நாம அமெரிக்க போகும்போது நம்மள தீவிரவாதி ரேஞ்சுக்கு அம்மண படுத்தி செக் செய்வார்கள்.இப்போ கண்ணாடி சட்டத்தை கொண்டு வந்தால் அங்கே என்ன நடக்கிறதோ அது இங்கேயும் நடக்கும்.புரியவில்லையா?அமெரிக்கர்கள் இங்கே வரும்போது அவர்களை வேண்டும் என்றே தீவிரவாதி ரேஞ்சுக்கு செக் செய்ய வேண்டும்.அது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தாலும் சரி.அதுபோல் நம் நாட்டினருக்கு வெளிநாடுகளில் அவர்கள் நாட்டு அதிகாரிகளால் என்ன அவலம் நடக்கிறதோ அடுத்த 24 மணி நேரத்திற்குள் இங்கேயும் நடக்கும்.இதனால் அந்தந்த நாடுகளுக்கு வயிறு எரியும் ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.ஏன்னா நாம் பயன்படுத்தியது கண்ணாடி சட்டம்.இந்த சட்டம் ஒரு பதிலடி.ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.

2.இதேபோல் இலங்கைக்கும் நடக்க வேண்டும்.அவர்கள் நம் எல்லைக்குள் வந்து தாக்கி நம் மீனவர்களை 10 பேரை பிடித்து சென்றால் கண்ணாடி சட்டத்தின் படி நாம் அவர்கள் சென்று 20 பேரை பிடித்து வர வேண்டும்.இதன் மூலமாக கண்ணாடி சட்டத்தின் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்

3.இதேபோல் சீனாவுக்கும்.நமக்கு எதிராக குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு கண்டிப்பாக இந்த கண்ணாடி சட்டம் தேவை.இந்த சட்டத்தின் படி ஒரு அடி விழுந்தால் திருப்பி இரண்டு அடியாக கொடுக்க படும்.இஸ்ரேல் போல்.இஸ்ரேல் ஒன்றும் நல்ல நாடு கிடையாது ஆனால் அந்த நாட்டுடைய குடிமகன் ஒருத்தர் பாதிக்கபட்டாலும் திருப்பி அப்பவே பதிலடி கொடுக்கிறானே அதுபோல் இருக்க வேண்டும்.இதை படிக்கும் எல்லோரும் தயவுசெய்து facebook,twitter இல் இதை பற்றி வவாதியுங்கள்.ஏனென்றால் இதை விவாதம் செய்யும்போது தான் மக்கள் மத்தியிலும் சரி,அரசாங்கத்திடமும் போய் சேரும்.நான் facebook,twitter போன்ற தளங்களை பயன்படுத்துபவன் அல்ல.யாருக்காவது நான் போட்ட இந்த தகவல் பிடித்திருந்தால் fb,twitter போன்ற தளங்களில் போஸ்ட் செய்யவும். இந்த கண்ணாடி சட்டம் நம் நாட்டிற்கு அத்தியாசிய தேவை.இந்த கண்ணாடி சட்டத்தின் மூலம் மற்ற நாடுகள் நம் நாட்டிடம் வாலாட்ட முடியாது.
1

No comments:

Post a Comment