Monday, April 21, 2014

உணவே மருந்து

வேனல்கட்டிக்கு

வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும். கட்டி பழுத்து உடைந்துவிடும்.

சிறுநீர் எரிச்சல்

வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கு தயிரை நன்றாகக் கடைந்து நீர் மோராகச் செய்து, அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் விட்டுக் குடித்துவந்தால் சரியாகிவிடும்.
நாள்பட்ட இருமல்
ஒரு ஸ்பூன் மிளகு, 3 ஸ்பூன் திப்பிலி இரண்டையும் கொஞ்சம் நெய் விட்டு வறுத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் காய்ந்த திராட்சையைப் போட்டு 2 சுற்று சுற்றியெடுத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலையும் சாப்பிடவும். அத்துடன் பாலும் சாப்பிட்டால் இருமல் நின்றுவிடும்.
பல்வலி

புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும். இப்படிச் செய்தால் பல்வலி, சொத்தை வராது. பல்லும் வெண்மையாக இருக்கும்.



வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி தரும். 
2

No comments:

Post a Comment