Saturday, February 27, 2016
பகுத்தறிவு -3
https://www.facebook.com/groups/410598659080912/permalink/617428675064575/
ராம நாதன்
உலகில் மதம் என ஒன்று இருக்கும் வரை செல்வந்தர்களை ஏழை எளியவர்கள் கொலை செய்யவே முடியாது - நெப்போலியன்
Comments
Senthil Nathan
மதமென்ன அழிந்து விட்டதா?- கூலிப்படைகள் அதிகரிக்கிறதே.
ராம நாதன்
மதம் அழிந்து விட்டது என்று சொல்லவில்லையே மதம் இருந்தால் ஏழைகள் கண்டிப்பாக இருப்பார்கள்
Senthil Nathan
கூலிப்படைகள் செல்வந்தர்களை கொலை செய்கிறார்கள் தானே. கூலிப்படைகள் ஏழைகள் தானே, அதனால் தான் அவ்வாறு கேட்டன்.
Senthil Nathan
//மதம் இருந்தால் ஏழைகள் கண்டிப்பாக இருப்பார்கள்// இது என்ன சித்தாந்தம்? மதம் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா?(அதாவது ஏழைகள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா?)
ராம நாதன்
மதம் இல்லாத நாடுகள் இப்போது அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது சுவீடன் நாட்டில் 90% மத நம்பிக்கையறவர்கள் இதை எல்லாம் கேட்பதற்கு கொஞ்ச நேரம் இணையத்தில் தேடிப் பாருங்கள் தெளிவான விடைகள் அங்கு கிடைக்கும் சுவீடன் ஒரு உதாரணம் தான் அது போல பலநாடுகள் உலகில் உள்ளன இந்தியா மட்டும் உலகில் இல்லை
Senthil Nathan
சுவிடனில் ஏழைகள் இல்லையா திரு ராம நாதன் அவர்களே?
ராம நாதன்
எனுடைய பின்னூட்டம் உள்ளது முடிந்தால் படியுங்கள்
Senthil Nathan
நன்று. ஒரு காலத்தில் நீங்கள் சொல்லுவது போல இருந்தது உண்மை தான், இன்றைய ஏற்றத்தாழ்வுக்கும் அதேதான் காரணம் என்கிறீர்களா?
அனைவரும் சமம் என்பது என்னமாதிரியான வாதம்? எப்படி சாத்தியம்?
நேர்மையானவர்-நேர்மையற்றவன், உழைப்பாளி-சோம்பேறி, புத்திசாலி-முட்டாள்..., இப்படியானவர்கள் வாழும் உலகில் அனைவரும் சமம் என்பது என்னமாதிரியான வாதம்? எப்படி சாத்தியம்?
இன்றைய ஏற்றத்தாழ்வுக்கு நீங்கள் சொன்ன காரணத்தை தவிர வேறு எதையாவது பகுத்தறிந்து சொல்லமுடியுமா? திரு ராம நாதன் அவர்களே.
Kuppaikani Cithiraikannan
அது கூலிப்படை மட்டும் தான்.செல்வந்தர்கள் - கூலிப்படை - செல்வந்தர்கள்
Sudhahar Sambamoorthy Rao
அப்போ மதம் இல்லாமல் இருந்தால் ஏழைகள் எல்லாம் பணக்காரர்களை கொலை செய்து பணக்காரர்கள் ஆகி வேறு ஒரு ஏழையால் கொலை செய்யப்பட்டு இறுதியில் வெறும் கொலை காரர்கள் மட்டும் எஞ்சி இருப்பார்கள்.ஆக மதம் கொலை செய்வதை தடுத்திருக்கிறது
Jeyakumar Selvaraj
...ஆக மதம் கொலை செய்வதை தடுத்திருக்கிறது// !! எம்மாம்பெரிய கண்டுபிடிப்பு !!
ராம நாதன்
பதிவை தவறாக புரிந்து கொள்ள கூடாது ஏழை ஏழையாகவும் செல்வந்தர் மேலும் செல்வந்தராகவும் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம்.செல்வந்தர்கள் மேலும் வளர அவனுக்கு சேவகம் செய்ய அவர்கள் மேலும் வளர அவனுக்கு கீழே மக்கள் இருந்தால் தான் அவன் முன்னுக்கு வரமுடியும் ஊர் கூடி
தே
ர் இழுப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்கள் தேர் பணக்காரன் அதை இழுப்பவர்கள் ஏழை எளியவர்கள் தேரை எதற்கு அவர்கள் இழுக்க வேண்டும் அந்த தேரில் உள்ள ஒரு கற்பனை வடிவமாக உள்ள இறைவன் அதை வைத்து பொய்யாக புனையப்பட்டுள்ள மதங்கள்
இறைவன் என ஒன்று மக்களுக்கு அதை தரும் இதை தரும் நீ கடவுளை நம்பவில்லை உனது கடமையை செய்யவில்லை என்றால் உனக்கு நரகம் தான் கிடைக்கும் அங்கு கற்பனைக்கு எட்டாத துன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும் கடவுளை வணங்கினால் சொர்க்கம் கிடைக்கும் அங்கு ஏழை எளியவர்கள் இல்லை எல்லோரும் சமமாக இன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம் என்று முட்டாள் தனமாக மக்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளார்கள் ஏழை என்றால் இருக்கின்றவனை கொலை செய்யவேண்டும் என்பது அல்ல நெப்போலியன் சொல்ல வருவது மதம் கடவுள் என்பது முதலாளி தான் எப்போதும் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள கொண்டு வரப்பட்டது. கடவுள் இல்லை என்றால் பொதுவுடமை சமுதாயமாய் அனைவரும் சமமாக ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் வாழலாம் என்பதை இந்த பதிவிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் உள்ள வரை மக்களிடம் ஏற்ற தாழ்வுகள் என்றும் நீங்க போவதில்லை, சொர்க்கம் எனும் கற்பனையை மக்கள் நினைத்தால் அதை நாம் வாழும் பூமில் கூட நாம் உருவாக்கலாம் அதற்கு தடை மதம் கடவுள் அதை உருவாக்கிய முதலாளித்துவ சமுதாயம்
Senthil Nathan
ஒரு காலத்தில் நீங்கள் சொல்லுவது போல இருந்தது உண்மை தான், இன்றைய ஏற்றத்தாழ்வுக்கும் அதேதான் காரணம் என்கிறீர்களா?
அனைவரும் சமம் என்பது என்னமாதிரியான வாதம்? எப்படி சாத்தியம்?
...
நேர்மையானவர்-நேர்மையற்றவன், உழைப்பாளி-சோம்பேறி, புத்திசாலி-முட்டாள்..., இப்படியானவர்கள் வாழும் உலகில் அனைவரும் சமம் என்பது என்னமாதிரியான வாதம்? எப்படி சாத்தியம்?
இன்றைய ஏற்றத்தாழ்வுக்கு நீங்கள் சொன்ன காரணத்தை தவிர வேறு எதையாவது பகுத்தறிந்து சொல்லமுடியுமா? திரு ராம நாதன் அவர்களே.
ராம நாதன்
ஒரு காலத்தில் என்ன இருந்தது? பதிவு ஏழை செல்வந்தன் பற்றியதே தவிர குணம் செய்கை பற்றியதல்ல இல்லாத கடவுள் என ஒன்று இருக்கும் வரை முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் பிரச்சனை ஓயாது
Senthil Nathan
என்னுடைய பாட்டனை நீ இதை செய்யக்கூடாது இதை செய்தால் தெய்வகுத்தம் நரகம் தான் கிடைக்கும் என்று சொல்லி ஏழையாகவும் இழிஜாதியனாகவும் வைத்தார்கள். இன்று நானும் அப்படியே இருக்கிறேனே என் நிலைமைக்கு யார் காரணம்?
ராம நாதன்
கடவுளும் சாதிமதங்களும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் தான் காரணம் அந்தகாலத்தின் தீவிரம் வேண்டுமானால் சற்று குறைந்து கொண்டு வருகிறது எனலாம் இதை சரி செய்ய அரசு நினைத்தால் முடியும் செய்ய மறுக்கிறார்கள்
Senthil Nathan
//இதை சரி செய்ய அரசு நினைத்தால் முடியும் செய்ய மறுக்கிறார்கள்// ஏன் மறுக்கிறார்கள் அவர்கள் பகுத்தறிவு பட்டறையில் வார்க்கப்பட்டவர்கள் தானே, நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் தானே ஆளுகிறார்கள், ஏன் மறுக்கிறார்கள்? கடவுளின் பெயரை சொல்லி சொல்லி எங்களை அடிமையாகவே வைத்து ஆழலாமென்றா? மறுக்கிறார்கள்
Rockrajesh Rock
Yarum ealaiya saga adika thevai illa ... Avangalave pattinia irunthe seththunu irukanga....... Ithula dialogue Vera.....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment