#பாரீஸ்_குண்டு_வெடிப்புச்_
சிரியா உள்நாட்டின் கலவரத்திற்கு காரணமான நாடுகளில் ப்ரான்சும் ஒன்று. சிரிய மக்கள் அகதிகளாக வெளியேறும் போது அவர்களை ஆதரிக்க#ஐரோப்பிய_நாடுகள் முன்வரவில்லை. இது #ஐநா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் நீலிக்கண்ணீரைத்தான் சிரிய மக்களுக்கு ஆதரவாக வைத்தது. இந்நிலையில்தான் கடற்கரை ஓரமாக ஒதுங்கிய சிரியா நாட்டு குழந்தையின் பிணம் அகதிக்கான உரிமைகளைக் குறித்து மீண்டும் உலக நாடுகளை பேச வைத்தது. தாங்களும் மனிதாபிமானமுள்ள நாடுதான் என்று ப்ரெஞ்ச் அரசும் 'அகதிகளை வரவேற்போம்' என்றது. ஆனால் உள்ளுக்குள் பாசிசவாதத்தை முன்னெடுத்தது. விளைவு பாரீஸ் குண்டு வெடிப்பு. 'இனி அகதிகளை உள்நாட்டுக்குள் விடுவோமா?' என்கிற பாணியில் அரசியல் நகர்வுகள். முதல் கட்டமாக ஏதோ ஒரு காருக்குள் கண்டெடுக்கப்பட்ட சிரியா நாட்டு பாஸ்போர்ட். "பார்த்திங்களா.... பார்த்திங்களா....#தீவிரவாதிகள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள்" என்கிறது அரசு. மக்களும் நம்பத்தான் செய்கிறார்கள். இந்த #ப்ரெஞ்ச்_அரசு செயல்பாட்டை கவனிக்கும் போது தோழர் #ஏங்கல்ஸ்கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. "சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீது வன்முறை திணிக்கப்படவில்லை. அரசு என்பது சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் சமூகத்தால் படைக்கப்பட்டது. பல பொருளாதார முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றிய போது அதற்கு தீர்வு காண முடியாமல் அரசு உண்மை ஒப்புதல் வாக்குமூலத்தை சமுகத்திற்கு அளிக்க முடியவில்லை. முரண்பாடுகளையும் பகைமையையும் அதிகரிக்கும் போது அவை சமூகத்தை அழித்துவிடாமல் இருக்க சமுகத்தில் தன் ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள உருவாக்கிக் கொண்டதுதான் வன்முறையில் சமூகத்தை அடக்குதல். அதற்கும் சமூக நலன்களுக்காக உருவாக்கப்பட்ட கருவிதான் சட்டங்கள், நிதிமன்றம், போலீஸ் இராணுவம்." உலக அரசியல் தற்போது இதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. இதைத்தான் பாசிசவாதஅரசு, பயங்கரவாத அரசின் நடவடிக்கை என்கிறோம்! #தமிழச்சி 15/11/2015 மற்றொரு பதிவு: https://www.facebook.com/ |
Saturday, February 27, 2016
பாரீஸ்_குண்டு_வெடிப்புச்_சம்பவம்
Subscribe to:
Posts (Atom)