Tuesday, January 5, 2016

ஷிர்க் ஒழிப்பு tntj

Senthil Nathan அப்படிஎன்றால்?

ஏகத்துவம் ஹாஜா நல்லது.உங்களைப் போன்று அதற்கு யாரேனும் அர்த்தம் கேட்க மாட்டார்களா என்ற நோக்கத்துடனே அந்த வார்த்தை அரபி பதத்தில் அமைக்கப் பெற்றது.

ஏகத்துவம் ஹாஜா இனி கேள்விக்கு வருவோம்

ஏகத்துவம் ஹாஜா ஷிர்க் என்ற வார்த்தைக்கு இணைவைப்பு என்பது பொருள்.அதாவது இறைவனாகிய அல்லாஹ்வுக்கு இணையாக அவனால் படைக்கப்பட்டவைகளையோ, அல்லது தாமாக கற்பனை செய்துக் கொண்டவற்றையோ கருதுவது, வணங்குவது, துதிப்பது ஆகியவை.

ஏகத்துவம் ஹாஜா எப்படி ஒருவனுக்கு ஒரு தந்தைதான் இருக்க முடியுமோ அதைப்போல உலகைப் படைத்த இறைவனும் ஒருவனே.

Senthil Nathan //உலகைப் படைத்த இறைவனும் ஒருவனே.உலகைப் படைத்த இறைவனும் ஒருவனே.// எந்த மதத்தாருக்குக்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது தானே. இறைவனின் பெயரால்/ அருளால் இன்னலில் உள்ளவருக்கு இன்னல் நீங்க வழங்கப்படும் தாயத்து போன்றவை இறைவனுக்கு எதிரானதா?

ஏகத்துவம் ஹாஜா அற்பத்திலும் அற்பமான கயிற்றுக்கு கடவுளின் வல்லமை எவ்வாறு உண்டாகும் சகோ?

ஏகத்துவம் ஹாஜா அவ்வாறு நம்புவதை விட மடமை என்ன உண்டு?

Senthil Nathan கயிறு அற்பமானது தான், அதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை, அது இறைநாமம் ஓதப்படும் போதும் வல்லமை பெறாதா? பலனளிக்காத ஒன்றின் மீதா மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்கள்?

ஏகத்துவம் ஹாஜா SUPER.. நிச்சயமாக இல்லை.அது போன்ற மடமைகளை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிக்காது.

ஏகத்துவம் ஹாஜா அது மட்டுமல்ல பில்லி, சூனியம், தட்டு தகடு, ஜோசியம் என அனைத்து மூடத்தனங்களையும் வேரறுப்பதே இஸ்லாம்.
Nurool Hassan வெறும் கயிறில் ஆரம்பித்து சிலையில் முடிவதே இணைவைப்பிற்கு முழு முதற்காரணமாக இருக்கும் இது போன்ற மூடனம்கிக்கைகளை இஸ்லாம் அடியோடு வெறுக்கிறது

Senthil Nathan தூக்கத்தில் அலறி அலறி எழும் குழந்தைக்கு தாயத்து கட்டிய பிறகு நிம்மதியாக தூங்குகிறது. இப்படி பலன் இருந்தாலும் அது மூடத்தனம் தானா?

Senthil Nathan ஜோசியம் சில பல்கலைகலங்களிலும் பாடமாக உள்ளது அப்படி இருந்தாலும் அதுவும் மூடத்தனமா?

ஏகத்துவம் ஹாஜா தூக்கத்தில் அலறி அலறி எழும் குழந்தைக்கு தாயத்து கட்டிய பிறகு நிம்மதியாக தூங்குகிறது. இப்படி பலன் இருந்தாலும் அது மூடத்தனம் தானா?/// தவறு.நிருபிக்கவியலாது உங்களால்.எம்மால் அது பொய்மை என்பதை நிறுவ இயலும்.

ஏகத்துவம் ஹாஜா ஜோசியம் சில பல்கலைகலங்களிலும் பாடமாக உள்ளது அப்படி இருந்தாலும் அதுவும் மூடத்தனமா?//// பல்கலை கழகத்தில் பாடமாக இருப்பதால் மட்டுமே அது உண்மையாகி விடுமா சகோ?

ஏகத்துவம் ஹாஜா அப்படியானால் ஏன் அசம்பாவிதங்களை அவர்களால் முன்கூட்டியே கணிக்க முடிவதில்லை.

ஏகத்துவம் ஹாஜா ஜோசியம் உண்மையானால் கொத்து கொத்தாக மரணமெய்தும் உயிர்களை எளிதில் காப்பாற்றி விடலாமே?

ஏகத்துவம் ஹாஜா மழைவெள்ளத்தை முன்பே அறிந்து அப்பாவி மக்களின் உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றியிருக்கலாமே???

Senthil Nathan அநேக சந்தேகம் உள்ளது பசங்கள் வந்து விட்டார்கள். பின்னர் வருகிறேன்.

Senthil Nathan //ஏகத்துவம் ஹாஜா- தூக்கத்தில் அலறி அலறி எழும் குழந்தைக்கு தாயத்து கட்டிய பிறகு நிம்மதியாக தூங்குகிறது. இப்படி பலன் இருந்தாலும் அது மூடத்தனம் தானா?/// தவறு.நிருபிக்கவியலாது உங்களால்.எம்மால் அது பொய்மை என்பதை நிறுவ இயலும்//

கண்டிப்பாக உங்களால் பொய் என்று நிறுவ முடியும் நான் நம்புகிறேன் , உண்மையென்று அறிவுப்பூர்வமாக நிருப்பிக்க தற்சமயம் என்னாலும் முடியாது. இருந்தாலும் சில பள்ளிகளில் உபாயம் வேண்டி வருபவர்கள் எல்லோரும் ஏமாருபவர்களாக எனக்கு தெரியவில்லை. பயனடைந்தவர்களிடம் விசாரியுங்கள் மாற்றுக்கருத்து கிடைக்க வாய்ப்புள்ளது.


Senthil Nathan //
ஏகத்துவம் ஹாஜா -ஜோசியம் சில பல்கலைகலங்களிலும் பாடமாக உள்ளது அப்படி இருந்தாலும் அதுவும் மூடத்தனமா?//// பல்கலை கழகத்தில் பாடமாக இருப்பதால் மட்டுமே அது உண்மையாகி விடுமா சகோ?//

எதனை அடிப்படையாக கொண்டு உண்மையில்லை என்கிறீர்கள்?


Senthil Nathan //
ஏகத்துவம் ஹாஜா -அப்படியானால் ஏன் அசம்பாவிதங்களை அவர்களால் முன்கூட்டியே கணிக்க முடிவதில்லை.

ஏகத்துவம் ஹாஜா- ஜோசியம் உண்மையானால் கொத்து கொத்தாக மரணமெய்தும் உயிர்களை எளிதில் காப்பாற்றி விடலாமே?

ஏகத்துவம் ஹாஜா -மழைவெள்ளத்தை முன்பே அறிந்து அப்பாவி மக்களின் உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றியிருக்கலாமே???//

இது பற்றிய இரண்டு ஐயங்கள்
1.ஜோதிடம் என்றால் என்ன என்று நீங்கள் கருத்துகிரீர்கள்.
2.வல்லமை பொருந்திய கடவுள் இருக்கும் உலகில் மேற்கூறியவற்றையெல்லாம் கூறி கடவுளின் பேராற்றல் உண்மைதானா என எண்ணத்தோன்றுகிறது, இது பற்றி தங்களின் கருத்து என்ன?
Senthil Nathan சங்கடமான ஒரு கேள்வி

இக்கேள்வி தங்களை மனவருத்தம் அடையவைத்தால் அதற்காக என்னை மன்னியுங்கள், எனது நோக்கம் அதுவல்ல, மறுபதிப்பில் தெரிவியுங்கள் நீக்கம் செய்து விடுகிறேன்.

கேள்வி: இறைவேதமான திருக்குர்ஆன் ஷிர்க் கா? இல்லையா? இல்லை என்றால் எப்படி?


ஏகத்துவம் ஹாஜா நானறிந்து சோதிடம் என்பது பின்னர் வரும் எதிர்காலம் கணிப்பதும், அதில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க பரிகாரங்களை கூறுவதும்.

ஏகத்துவம் ஹாஜா கடவுள் மகா வல்லமை பொருந்தியவனே.இதில் நீங்கள் சந்தேகம் கொள்ள உலகில் நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக முடியாது.அந்த நிகழ்வுகளும் கூட அவனது பேறாற்றலை பறைச்சாற்றக் கூடியதாகவே அமையும்.

ஏகத்துவம் ஹாஜா முதலில் இறைவனின் வார்த்தையான அல்குர்ஆனை எந்த அடிப்படையில் ஷிர்க் என்கிறீர்கள்?

Senthil Nathan இதுவும் இறைவன் படைத்ததில் ஒன்று தானே அதற்கு இறைவனுக்கு நிகரான மதிப்பு அளிக்கப்படுவது உண்மைதானே? இது இணைவைப்பு ஆகாதா?

Senthil Nathan //ஏகத்துவம் ஹாஜா- நானறிந்து சோதிடம் என்பது பின்னர் வரும் எதிர்காலம் கணிப்பதும், அதில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க பரிகாரங்களை கூறுவதும்//
இதில் மூடத்தனம் என்ன ?


Senthil Nathan //ஏகத்துவம் ஹாஜா- கடவுள் மகா வல்லமை பொருந்தியவனே.இதில் நீங்கள் சந்தேகம் கொள்ள உலகில் நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக முடியாது.அந்த நிகழ்வுகளும் கூட அவனது பேறாற்றலை பறைச்சாற்றக் கூடியதாகவே அமையும்.//

அழிப்பதுவும் பேராற்றலா? இடைவிடாது தொழுது அவனையே சரணடைந்தோரை இன்னலில் தள்ளுவது பேராற்றல் என்கிறீர்களே, அப்படியானால் கடவுளை வழிபடுவது மூடத்தனமாக தங்களுக்கு தோன்றவில்லையா?




Senthil Nathan அநேக வழிபாட்டு முறையினை கொண்டுள்ள நாட்டில் ஏகத்துவ முறையை நிலைநாட்டுவோம் என்பது மற்றவர்களின் மன(மத)நிலையை பாதிக்காதா?

ஏகத்துவம் ஹாஜா திருக்குரானும் இறைவன் படைத்ததில் ஒன்று தானே அதற்கு இறைவனுக்கு நிகரான மதிப்பு அளிக்கப்படுவதும் உண்மைதானே? இது இணைவைப்பு ஆகாதா?//// மதிப்பளிப்பு என்பது எப்படி இணைவைப்பாகும் சகோ? இறைவனுடைய வார்த்தை அப்படியே மதிப்பது இணைவைப்பல்ல.மாறாக அந்த வார்த்தைகளை ஓதுவதன் மூலமாக நாங்கள் மனிதரின் உள்ளங்களை மாற்ற முடியும் என்றே நம்புகிறோம்.அதுவும் அதை தன் வாழ்வில் செயற்படுத்த முனையும்போதுதான்.

ஏகத்துவம் ஹாஜா //ஏகத்துவம் ஹாஜா- நானறிந்து சோதிடம் என்பது பின்னர் வரும் எதிர்காலம் கணிப்பதும், அதில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க பரிகாரங்களை கூறுவதும்//
இதில் மூடத்தனம் என்ன ?/// முதலில் எதிர்காலத்தை அதாவது ஒரு மனிதனின் எதிர்வரும் வாழ்வின் நிகழ்வ்களை முன்னரே ஒருவன் அறிய முடியும் என்பதே மிகப்பெரிய பித்தலாட்டம்.அவ்வாறு அறிய முடியும் என நம்புவது அதனினும் பெரிய மூடத்தனம்.ஒருவன் தன் வாழ்வெதிர் நிகழ்வுகளையே அறிய முடியாதெனும் போது அடுத்தவர் வாழ்வெதிர் நிகழ்வை எவ்வாறு கணிக்க முடியும்?

ஏகத்துவம் ஹாஜா //ஏகத்துவம் ஹாஜா- கடவுள் மகா வல்லமை பொருந்தியவனே.இதில் நீங்கள் சந்தேகம் கொள்ள உலகில் நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக முடியாது.அந்த நிகழ்வுகளும் கூட அவனது பேறாற்றலை பறைச்சாற்றக் கூடியதாகவே அமையும்.//

அழிப்பதுவும் பேராற்றலா? இடைவிடாது தொழுது அவனையே சரணடைந்தோரை இன்னலில் தள்ளுவது பேராற்றல் என்கிறீர்களே, அப்படியானால் கடவுளை வழிபடுவது மூடத்தனமாக தங்களுக்கு தோன்றவில்லையா.?//// நிச்சயமாக நாம் அறியாத விதத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்துமே அவனுடைய பேராற்றலை பறைச்சாற்றவே செய்யும்.ஒரு மனிதனின் விதியை அடிப்படையாக கொண்டதே அழிப்பதும்.விதியை இறைவன் மட்டுமே நிர்ணயிக்கவும் அறியவும் முடியும்.மனிதனால் அவற்றை தடுத்து அவர்களை காப்பாற்ற இயலவில்லை என்கிற போதே நம்மால் அது இறைவனின் வல்லமைக்குட்பட்ட விசயம் என்பதை நம்மால் உணரமுடியும்

ஏகத்துவம் ஹாஜா அநேக வழிபாட்டு முறையினை கொண்டுள்ள நாட்டில் ஏகத்துவ முறையை நிலைநாட்டுவோம் என்பது மற்றவர்களின் மன(மத)நிலையை பாதிக்காதா?/// அநேகர் மது அருந்துகிறார்கள் என்பதால் அதை எப்படி ஆதரிக்க முடியாதோ.. அநேகர் விபசாரம் செய்கிறார்கள் என்பதற்காக எப்படி அதை அனுமதிக்க முடியாதோ அதைபோல இறைவனை தவிர மற்ற படைப்பினங்களையும் கற்பனைகளையும் வணங்குவதும் மிகப்பெரும் பாவமாகும்.அதை மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.அதை அவர்கள் உள்ளங்கள் நோகும் விதமாக நாங்கள் எடுத்தியம்ப எங்களுக்கு அனுமதியில்லை.ஆனால் புரியவைக்க எங்களால் இயலும்.
Senthil Nathan // மதிப்பளிப்பு என்பது எப்படி இணைவைப்பாகும் சகோ?//

மதிப்பது என்பதே வணங்குவத்தின் அடிப்படை தானே. நம்புவது, மதிப்பது, வணங்குவது இவை மூன்றிற்கும் நூலிழை அளவுதானே வேறுபாடு உள்ளது இதனை அனைவராலும் பிரித்து அறிதல் என்பது கடினம் தானே.

இணைவைப்பு என்று தாங்கள் சொல்லுகின்ற பொருட்களை நாங்கள் வணங்கவில்லை மதிக்கிறோம் என்று சொன்னால் ஏற்பீர்களா?

//இறைவனுடைய வார்த்தை அப்படியே மதிப்பது இணைவைப்பல்ல.//

இறைவனுடைய வார்த்தை இணைவைப்பல்ல என்கிறபோது மனித சக்தி அன்றி இறைவனின் நாமத்தினால் செய்யபடுகின்ற செயலை மட்டும் எதன் அடிப்படையில் இணைவைப்பாக கருதுகிறீர்கள்?

Senthil Nathan //முதலில் எதிர்காலத்தை அதாவது ஒரு மனிதனின் எதிர்வரும் வாழ்வின் நிகழ்வ்களை முன்னரே ஒருவன் அறிய முடியும் என்பதே மிகப்பெரிய பித்தலாட்டம். அவ்வாறு அறிய முடியும் என நம்புவது அதனினும் பெரிய மூடத்தனம்.ஒருவன் தன் வாழ்வெதிர் நிகழ்வுகளையே அறிய முடியாதெனும் போதுஅடுத்தவர் வாழ்வெதிர் நிகழ்வை எவ்வாறு கணிக்க முடியும்?//

மனிதனால் முடியாது என்பதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடவுளின் அருளினால் மனிதனுக்கு எதிர்காலம் பற்றி அறியும் ஆற்றலை கொடுக்கமுடியும், அதற்கான உபகரணம் வழங்க முடியும் என்பதனை மறுக்கிறீர்களா?

Senthil Nathan //விதியை இறைவன் மட்டுமே நிர்ணயிக்கவும் அறியவும் முடியும்//

செந்திலாளையும் முடியுமென்று நான் சொன்னால் நிருபிக்க சொல்லுவீர்கள். அவரிடம் இது பற்றி கேள்வி கேட்க மாட்டீர்கள். எனக்கு என்ன விதி நிர்நயத்துள்ளார் எனக்கேட்டால் அவர் அறிவார் ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டார் என்பீர்கள். அவர் (என் விதி பற்றி) அறிவார் என்பதனை எதன் அடிப்படையில் நம்புவது.

Senthil Nathan //படைப்பினங்களையும் கற்பனைகளையும் வணங்குவதும் மிகப்பெரும் பாவமாகும்.//

கற்பனை என்றால் என்ன? யார் வணங்குவது கற்பனை கடவுள்.?

பாவத்தின் பொருளும் அது எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது ? பாவம் என்பதனை இம்மையில் எவ்வாறு உணருவது?


Senthil Nathan //மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.அதை அவர்கள் உள்ளங்கள் நோகும் விதமாக நாங்கள் எடுத்தியம்ப எங்களுக்கு அனுமதியில்லை//

திரு நபிகள் நாயகம் அவர்கள் முதற்கொண்டு அதிகாரம் பெற்ற ஆக்கிரப்பு காரர்கள் வரை (அன்று முதல் இன்று வரை அவ்வப்போது ) இதே பெயரில்(ஷிர்க் ) கோவில் சிலைகள்/ தளங்கள் இடித்து ஒழிக்கபடுவது தொடர்கதையாகத்தானே உள்ளது. இதில் அவர்கள் உள்ளங்கள் நோகும் விதமாக நாங்கள் எடுத்தியம்ப எங்களுக்கு அனுமதியில்லை என்பதின் பொருள் என்ன?



No comments:

Post a Comment