How to get rid of wrinkles
தடம் பதித்த தாரகைகள்
லரிசா லடினினா
2012... லண்டன் ஒலிம்பிக்ஸ். லரிசா லடினினா மிகவும் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டார். அவர் எந்தப் போட்டியிலும் பங்கு பெறவில்லை. அவருடைய உறவினர்களோ, நண்பர்களோ கூட கலந்துகொள்ளவில்லை. பின் எதற்கு இந்தப் பரவசம்? நீச்சல் உலகின் ராஜாவாக வலம் வரும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் பங்கேற்கும் போட்டிதான் அது. ஏற்கெனவே 16 தங்கப் பதக்கங்களுடன் களமிறங்கிய பெல்ப்ஸ், இந்தப் போட்டியிலும் பதக்கம் பெற்றபோது, ‘அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்றவர்’ என்ற சாதனையை எட்டினார். பெல்ப்ஸ் முறியடித்த சாதனைக்குச் சொந்தக்காரர்தான் லரிசா லடினினா!
18 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று, 48 ஆண்டுகள் வரை வேறு யாரும் தொடாத உச்சத்தில் இருந்தவர் சோவியத் யூனியனின் லரிசா லடினினா! “பெல்ப்ஸ் என் சாதனையை முறியடிப்பார் என நிச்சயம் தெரியும். சாதனை என்பதே இன்னொருவர் முறியடிப்பதற்குத்தானே? என்ன... ஒரு பெண்ணின் சாதனையை ஆண் முறியடிப்பதற்கு அரை நூற்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது” என்று சிரித்தார் லரிசா.‘அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற பெண்’ என்ற சாதனை இன்னும் லரிசாவை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கிறது!
1934 டிசம்பர் 27...
அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனில் பிறந்தார் லரிசா. இரண்டாம் உலகப் போரில் நாட்டுக்காக உயிர் துறந்தவர் லரிசாவின் அப்பா. அம்மாதான் வேலை செய்து படிக்க வைத்தார். தான் படிக்கவில்லை என்றாலும் தன் மகள் படித்து, நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதால், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார். லரிசாவுக்கு பாலே நடனத்தின் மீது ஆர்வம். அதற்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தார் அம்மா. அந்தப் பள்ளியோ, விரைவில் மூடப்பட்டது. அக்காலகட்டத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பள்ளிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. லரிசாவும் தன் விருப்பத்தை பாலேயிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸுக்கு மாற்றிக்கொண்டார். 12 வயதில் பயிற்சியை ஆரம்பித்தார். ஆர்வமும் கடின உழைப்பும் அவரைச் சிறந்த ஜிம்னாஸ்டாக மாற்றின.
1954...
19 வயது லரிசா ரோமில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் குழுவாகக் கலந்துகொண்டு, தங்கப்பதக்கத்தோடு திரும்பினார். எல்லோரின் கவனமும் அவர் பக்கம் திரும்பின. அன்றைய பொதுவுடைமை ஆட்சியில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. திறமையானவர்களையும் ஆர்வம் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு, சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. லரிசாவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார்.
1956...
மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அன்று ஜிம்னாஸ்டிக்ஸில் கொடிகட்டிப் பறந்த ஹங்கேரியைச் சேர்ந்த ஆக்னஸ் கெலிட்டியைத் தோற்கடித்துத் தங்கம் வென்றார். தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் லாரிசா 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்தார். பதக்க வேட்டையில் சோவியத் யூனியனின் கொடி பறக்க ஆரம்பித்தது.
1957ல்
நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களைக் குவித்தார். 1958 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றார் லரிசா. 5 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதில் மிக முக்கியமான விஷயம்... அவர் அப்போது 4 மாத கர்ப்பினியாக இருந்தார். லரிசா கர்ப்பமாக இருந்த விஷயம் அவருடைய மருத்து வருக்கு மட்டுமே தெரியும். பயிற்சியாளர் உள்பட யாருக்கும் இந்த விஷயத்தை அவர் சொல்லவே இல்லை. கர்ப்பமாக இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய அனுமதி கிடைக்காது என்பதால் ஆபத்து என்று தெரிந்தும் விளையாடினார் லரிசா. மகள் பிறந்த ஏழே மாதங்களில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத் தையும் வென்றார்!
“இந்தப் பதக்கங்கள் எல்லாம் நானும் அம்மாவும் சேர்ந்து வாங்கியவை!” என்று அவருடைய மகள் பிற்காலத்தில் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்! திருமணம், குழந்தை, குடும்பம் என்று எந்த விஷயமும் லரிசாவின் லட்சிய வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்க முடியவில்லை. பயிற்சி... பயிற்சி... பயிற்சிதான் எப்பொழுதும். இந்தக் கடினப் பயிற்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் சோவியத் மீது வந்தபோது, “பயிற்சிகள் கடினமானவைதான். ஆனால், இதன் மூலம் நானும் என் நாடும் பெருமைகொள்ள முடிகிறது என்பதால், இந்தப் பயிற்சிக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது” என்கிறார் லரிசா.
1960ல்,
ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார் லரிசா. 1962 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.
1964...
30 வயதை எட்டியிருந்தார் லரிசா. இதுதான் அவருக்குக் கடைசி ஒலிம்பிக் போட்டி. டோக்கியோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களைத் தட்டினார். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் அவர் பெற்ற பதக்கங்கள் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம். மொத்தம் 18 பதக்கங்கள்! இப்படியாக ஜிம்னாஸ்டிக்ஸ் உலகில் கம்பீரமான தேவதையாக வலம் வந்தார் லரிசா. உலக அரங்கிலும் சோவியத் யூனியனிலும் சாதனையாளராகக் கொண்டாடப்பட்டார். முக்கியமான பல விருதுகளால், அவர் கௌரவிக்கப்பட்டார்.
1965...
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார் லரிசா. ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. ‘தான் மிகச் சிறந்த வீராங்கனை மட்டுமல்ல... மிகச்சிறந்த பயிற்சியாளரும் கூட’ என்பதை அவருடைய செயல்கள் உணர்த்தின. அவர் பயிற்சியாளராக இருந்த 10 ஆண்டுகளில் 10 ஒலிம்பிக் பதக்கங்கள் சோவியத் யூனியனுக்குக் கிடைத்தன. அதற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்படச் செயல்பட்டார்.
‘‘இன்று 5 வயதிலேயே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, 10 ஆண்டுகளில் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களாக வெளி வருகின்றனர். அந்தக் காலத்திலும் பயிற்சிக் காலம் இதே 10 ஆண்டுகள்தான். ஆனால், நான் 12 வயதில் பயிற்சியை ஆரம்பித்தேன். அன்று வெறும் தரையில் போட்டி நடக்கும். விழுந்தால் காயம் உறுதி. இன்று அடிபடாத அளவுக்கு ஸ்பிரிங் மேடைகள் வந்துவிட்டன. இந்த முன்னேற்றம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிறார் லரிசா.
‘‘அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நிலவிய பதக்கப் போட்டி, சோவியத் யூனியன் சிதைந்த பிறகு குறைந்து போனது. இன்று சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேதான் போட்டி. வாலண்டினா, லரிசா போன்ற எளிய பின்னணியில் இருந்து வந்த பெண்களும் சாதனையாளர்களாக வலம் வந்தது அன்றைக்கு இருந்த பொதுவுடைமை அரசாங்கத்தால்தான்...’’ என்று ஏக்கத்துடன் சொல்கிறார் 80 வயது லரிசா.

No comments:
Post a Comment