உங்கள் ஸ்மார்ட் போனில் இதை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் போதும்... அவசர நேரத்தில் இது உதவும்! ஆண்ட்ராய்டு ஆப்னு சொன்னாலே, ‘என்னவோ ஜாலி மேட்டர்... பசங்க - பொண்ணுங்க கடலைக்காகவே உருவானது’ன்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனா, எங்க உதிரம் ஆப் அப்படியில்ல. ஆபத்தான நேரங்கள்ல உங்க உயிரைக் காப்பாத்துற ஆப் இது!’’ என்கிறார் மகேஷ். சென்னை தி.நகரில் ஆப் உருவாக்கத்துக்காகவே ‘க்ரேயோன் டிஜிட்டல் ரீச்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். இவர்களின் உருவாக்கமான உதிரம் ஆப் ரத்த தானம் செய்வோரையும் ரத்தம் தேவைப்படுவோரையும் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது.
‘‘இப்ப காலம் நிறைய மாறியிருக்கு. ரத்த தானம் உடம்புக்கு நல்லதுங்கற மருத்துவ உண்மை எல்லாருக்கும் தெரியுது. இளைஞர்கள் ரத்த தானம் செய்யத் தயாரா இருக்காங்க. ஆனாலும், சரியான நேரத்தில் அவங்களைப் பிடிக்க முடியாததால நிறைய உயிரிழப்புகள் ஏற்படுறதா சொல்றாங்க. இனி அந்த இழப்புகளை ‘உதிரம்’ குறைக்கும்’’ என நம்பிக்கையோடு பேசும் மகேஷ், அப்படி என்ன செய்கிறது இந்த ஆப் என்பதையும் விவரிக்கிறார்...
‘‘கூகுள் ப்ளேவுல இந்த ஆப் இலவசமா கிடைக்குது. ஆண்ட்ராய்டு போன்ல டவுன்லோட் பண்ணிட்டா அதுக்கப்புறம் உங்க கூடவே ஆயிரக்கணக்கான ப்ளட் டோனர்ஸ் இருக்குறதா நினைச்சுக்கலாம். இந்த ஆப் வச்சிருக்குற எல்லாரையும் இது எந்நேரமும் தொடர்புலயே வச்சிருக்கும். ஏதாச்சும் ஆபத்துன்னா, எனக்கு இந்த குரூப் ரத்தம் தேவைப்படுதுன்னு இதுல ஒரு போஸ்ட் போட்டா போதும். அந்த குரூப் ரத்தம் கொண்டவங்க எல்லாருக்கும் அது ஒரு ரிக்வெஸ்டா போகும். உடனே வந்து ரத்தம் தர நினைக்கிறவங்க அதை அக்செப்ட் பண்ணுவாங்க. சில குரூப் ரத்தத்துக்கு வேற குரூப்பும் சேரும்னு கணக்கு இருக்கு. அந்தக் கணக்குப்படி யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்னு அதுவே கணக்குப் போட்டுக் காட்டும்.

ஒருவேளை இந்த ஆப்ல உறுப்பினரா இருக்குறவங்களால அந்த நேரத்தில் ரத்த தானம் செய்ய முடியலைன்னாலும், தெரிஞ்ச நண்பர்கள்கிட்ட கேட்டு அவங்க சம்மதத்தோட அவங்க நம்பரைக் கொடுக்கலாம். அதுமட்டுமில்லாம, இந்த ரத்த ரிக்வெஸ்டை ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் மூலமா ஃபார்வேர்டு செய்யும்போது, இன்னும் நிறைய பேரோட உதவிகள் கிடைக்கும். ரத்த தானம் செய்யிறவங்க மூணு மாசம் கழிச்சுதான் ரத்த தானம் செய்யணும். அதனால, உறுப்பினர்கள் எப்ப கடைசியா ரத்த தானம் செஞ்சாங்கன்னும் இந்த ஆப் கணக்கு வச்சுக்கும்!’’ என்று முடிக்கிறார் மகேஷ். உயிரை வாங்குகிற பல ஆப்களுக்கு மத்தியில் உயிரைக் கொடுக்கிறது இந்த ‘உதிரம்’ ஆப்!
No comments:
Post a Comment