பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30
அன்று “பசும்பொன்” என்ற
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர்
30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார்.
மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த
பசும்பொன் தேவர், இதில் 4000
நாட்களை சிறையிலேயே கழித்தார்.
இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த
போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த
சேதுராமன் செட்டியார் அவர்கள், சாயல்குடியில்
விவேகானந்தர் வாசக சாலையை நிறுவி,
அதை தேவர் திருமகனார் அவர்களைக்
கொண்டு திறந்து வைக்க செய்தார்.
இது தான் பொது வாழ்கையில் அவர் ஏறிய முதல்
மேடையாகும். அந்த இடத்தில தான் தேவர்
திருமகனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக தொடங்கிய பொது வாழ்க்கை,
விடுதலை வேட்கையாக ஈர்க்கப்பட்டு,
தென்பாண்டி சீமையினுடைய, குறிப்பாக
தமிழகத்தினுடைய இளைஞர்களின், நாடி,
நரம்புகளை முறுக்கேற்றி, சுதந்திர
வேட்கையை உருவாக்கி, தன்னுடைய
பேச்சாற்றலால், சுதந்திரப் போராட்டதிற்கு பெரும்
படை திரட்டிய போராளிகளில் இவரும் ஒருவராவார்.
காங்கிரஸ் காரராக பொது வாழ்கையில் நுழைந்த
பசும்பொன் தேவர், நேதாஜியின் பார்வர்டு பிளாக்
இயக்கத்தின் தலைவராக இருந்த பொது மறைந்தார்.
தேர்தல் களத்தில் இராமநாதபுரம் ராஜாவைத்
தோற்கடித்த வரலாறும், சட்டமன்றம்,
பாராளுமன்றம் என இரு பதவிகளுக்கும்
ஒரே நேரத்தில்
போட்டியிட்டு வாக்கு கேட்டு தொகுதிக்குச்
செல்லாமலேயே வெற்றிவாகை சூடிய வரலாறும்
பசும்பொன் தேவருக்கு மட்டுமே உண்டு.
தனி நபர் ஒழுக்கம், தியாக உள்ளம்,
அநீதியை கண்டு எதிர்க்கும் ஆண்மை, தெய்வ
பக்தியையும் தேசபக்தியையும்,
இரு விழிகளாகக்கொண்டு அமைத்துக்கொண்ட
வாழ்க்கை, தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகரற்ற
புலமை, தன்னலம் நாடத் தகைமை என பல
சிறப்புகள் அமைத்திருந்த போதிலும், அவர்
“அரிஜனங்கள்” என்று அழைக்கபடுகின்ற
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களுடைய
உயர்விற்காகும் பட்டபாடுகள் மகத்தானதாகும்.
1957 ல் நடந்த பொது தேர்தலில் முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதிக்கும், பாராளுமன்ற
தொகுதிக்கும் பசும்பொன் தேவர் போட்டியிட்டார்.
இரண்டிலும் வெற்றியும் பெற்றார். முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதியை ராஜினாமா செய்ததால்,
வந்த இடைதேர்தலில் சசிவர்ணத்
தேவரை வேட்பாளராக நிறுத்தினார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும்
வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் சசிவர்ணத்
தேவரே வென்றார். காங்கிரஸ்
கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு,
அது கலவரமாக மாறி, இறுதியில் கொலையில்
முடிந்தது. இந்தக் கொலை வழக்கில் பசும்பொன்
தேவர் இணைக்கப்பட்டு, சிறை வாழ்ந்து, குற்றம்
தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலையானார்.
இரண்டு கட்சிகளுக்கு இடையே நடந்த கலவரம்
இரண்டு ஜாதிகளுக்கு இடையே ஏற்பட்ட
கலவரமாக பிரசாரம் செய்யப்பட்டு,
அனைத்து கொடுமைகளும் நடந்தன. அதன்
காயங்கள் இன்றும் அப்பகுதி மக்களிடம்
வடுக்களாக இருந்து வருகின்றன.
இந்த பின்புலத்தோடு பசும்பொன் தேவர் அரிஜன
மக்களுக்காக ஆற்றிய பணிகளைப் பார்க்க
வேண்டும். அப்போது தான் பசும்பொன் தேவரின்,
சிறப்பும், இரண்டு சமூகத்தாரிடையே வளர
வேண்டிய நட்பும் புலப்படும்.
காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம்
கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன
மக்களை ஆலையதிற்க்குள் அனுமதி மறுக்கும்
உயர் சாதியினர் செயலை கண்டித்து, “அரிஜனங்கள்
ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்க்கு தேச
பக்தர்கள் வழிவிடவேண்டும்” என்று முழங்கினார்.
அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள்
அரிஜன மக்களை ஆலயத்திற்கும்
கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன
மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார்.
இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர்.
இந்த எதிர்ப்பைசமாளிப்பதற்காக, வைத்தியநாத
ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக்
கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூடத்தில்
கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம்
வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார்.
பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.
இதை அறியாத சனாதனிகள், “மீனாட்சி கோவிலில்
அரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய
விளைவுகைளை சந்திக்க வேண்டியது வரும்”
என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர்.
இதற்க்கு பதிலாக தேவர், “ஸ்ரீ வைத்தியநாத ஐயர்,
மீனாச்சி அம்மன் ஆலயத்திற்குள்
அரிஜனங்களை அழைத்துக்கொண்டு
உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால்
ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம்
விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன்.
ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால்
தாக்கி,
அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச்
செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல்
கிடைத்துள்ளது.
சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த
ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன்.
வைத்தியநாத ஐயர்
அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும்
வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த
ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில்
சந்திப்பேன்”. என்றி துண்டு பிரசுரம் வெளியிட்டார்.
1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன்
வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன்
பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில்
பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும்தயார்
நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த
சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த
திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த
அரிஜனங்கள்
மீனாட்சி அம்மனை தொழுது மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின்
சார்பாக சிங்கமே வந்துவிட்டது, என்பதை எதிரிகள்
உணர்ந்து கொண்டார்கள்.
1954 மார்ச் மாதத்தில், அன்று “சென்னை ராஜதானி”
என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், ”
அரிஜன முன்னேற்றம்” பற்றிய விவாதம் நடந்தது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24
அன்று தேவர் பேசியது கவனம்
கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,
“ஆதி காலத்தில் தொழிலின் பேரால்
ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச்
சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற
உண்மை. அதற்கு உதாரணம்
ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர்
பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக,
ஒரே பெயருடைய பலரை கூப்பிடும்
பொழுது ‘இன்ன தேவர்’, ‘ இன்ன செட்டியார்’,
‘இன்ன ஐயர்’ என்று பெயர் வைத்த தமிழ்
பெரியோர்கள் , பெண்களை அழைக்கும் போது அந்த
பெயரின் கடைசியில் வால் வைத்து கூபிடாமல்,
அதாவது, ‘இன்ன பிரமனத்தி’, ‘இன்ன செட்டிச்சி’
என்று கூப்பிடாமல், அனைவரையும், ‘இந்த
அம்மாள்’, ‘அந்த அம்மாள்’ என்று கூப்பிடுவதுதான்
பழக்கமாக இருந்து வருகிறது.
இது நீண்ட காலமாக இந்த நாட்டில்
அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும்.
அப்படி இருக்கும் போடு ஆண்களுக்கு மாத்திரம்
தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து,
ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால்
வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்’.
என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள்
இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும்
உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய
உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.
ஒன்று வலது கரம்; இது உண்ணவும்,
எண்ணுகின்ற எண்ணத்தை எழுத்து மூலமாக
வெளிப்படுததவும் பயன்படுகிறது.
இன்னொன்று இடது கரம்,
உடம்பிலிருந்து வெளிவரும்
அசுத்தங்களை அப்புறப்படுத்தி,
உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள
பயன்படுகிறது.
அனால், இறைவனையோ,
பெரியவர்களையோ வணங்குகிறபோது,
இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான்
வணங்க வேண்டும். இதுபோல
அணைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள்
போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள்
அனைவரும் செம்மையாக வாழ்ந்திட முடியும்.
மேலும், சமுதாயத்தின் பொருளாதார ரீதியான ஏற்ற
தாழ்வு பற்றி தேவர் பேசும்போது ” பெரும்பாலான
நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன.
அந்த பெரும்பாலான
நிலங்களை தர்காஸ்து கொடுக்கிற பொழுது பழைய
அரசாங்கத்தின் பழக்கபடியே உயர்ந்தவர்கள்,
வேண்டியவர்கள்
என்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறதே தவிர, இந்த
ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டப்படுவதில்லை?
அப்படியே ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டாலும்,
அதன் பின்னால் இருக்கின்ற பணக்காரர்களுக்க
ு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற
பழக்கத்தை நிறுத்திக்கொண்டு, இந்த
ஏழைகளுக்கு ஒரு ஏக்கர், அரை ஏக்கர்
விவசாயத்திற்கு லாயக்காக புதிதாக நிலம்
வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும்
எதிர்பாராமல், முயற்சி செய்து வாழ
வசதி ஏற்படும்.
இதே உரையில், ‘ மதுரையில் அரிஜனங்கள்
தங்குவதற்கு ஒரு விடுதி ஆயிரக்கணக்காக பணச்
செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அது நகரத்தின்
மத்தியில் இருந்திருக்குமேயானால், பல
அரிஜனங்கள் வந்து தங்கவும், அவர்கள் இதர
சமூகத்தினரோடு, பழகவும் வசதி அளிக்கும்’
என்று குறிப்பிட்டார்.
அதே போன்று அரிஜன
மக்களுக்கு கட்டிக்கொடுக்கும் பள்ளி, விடுதி,
வீடு ஆகியவற்றை ஊருக்கு வெளியே கட்டிகொடுப்பதின
ால், அவர்கள் காலம், காலமாக தனித்து வாழும்
சூழ்நிலை ஏற்படுகின்றது. இதைத்தான் பசும்பொன்
தேவர் தனக்கே உரிய பாணியில் அன்றைய
ஆட்சியாளர்கள் கட்டிய விடுதி பற்றி குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் அரிஜன
மக்களுக்காக வலியுறுத்திய
அதே கருத்துக்களை வலியுறுத்தி, “ஹரிஜன
மக்களுக்கு எனது வேண்டுகோள்” என்ற
தலைப்பில், ‘கண்ணகி’ பத்திரிகையில் ஓர்
கட்டுரையையும் பசும்பொன் தேவர் எழுதினார்.
இந்த கட்டுரையை இன்றைய இளைய
தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும்
அப்போதுதான் அரிஜன மக்கள் மீது பசும்பொன்
தேவர் கொண்டிருந்த அன்பும், அவர்களுக்காக அவர்
சொல்லிய கருத்துக்களும் தெரியும்.
பசும்பொன் தேவர் திருமணம் செய்துகொள்ள
வில்லை என்பதும்,
அவருக்கு வாரிசு இல்லை என்பதும்
அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்
எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர்
அறிவர்?
1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான
எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர்,
திருச்சுழி பத்திரப் பதிவாளரை, தம் இருப்பிடத்திற்க
ு அழைத்து ஓர் இனாம்
சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய
சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில்
ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16
ப்பன்ன்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.
அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில்
பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும்
இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர்
பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய
சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில்
இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த
பெருந்தகையாளன் பசும்பொன் தேவர்.
பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள்,
இளைஞர்கள், தேவர் திருமகனாரின்
வீட்டிலேயே நிரந்தரமாக
தங்கி இருந்து தங்களது கல்வி, உணவு,
உடை தேவைகளை, சிறப்பாக பெற்றிருக்கிறார்கள்.
தேவர் திருமகனாரின் வீட்டின் சமையர் கூடத்தில்
அடுப்பு அனைக்கப்பட்டதே கிடையாது. அந்த
அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய
மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம்
செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின்
சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன்
என்று முழக்கமிட்டவர் தேவர்.
பசும்பொன் தேவர் அரிஜங்னகள் மீது கொண்டிருந்த
அன்பை, அதுவும் பசும்பொன்
தேவரை எதிர்த்து அரிசயல் நடத்திய காங்கிரஸ்
கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற
உறுப்பினராய் இருந்த ஒருவர்
சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுபினராக
இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற
உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின்
போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத்
தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார்.
தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம்
கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன்
தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான
பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும்,
காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது.
அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில்
பசும்பொன் தேவரின்
வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான்
ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம்
சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள
தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த
போது ஒருவர்
வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார்.
அதை தேவர் பார்த்துவிட்டு பையில்
போட்டுக்கொண்டார்.
மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார்.
படித்துவிட்டு கையில்
வைத்துக்கொண்டே பேசினார். கூட்டம் முடியும்
நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ்.
ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். சற்றும்
சஞ்சலப்படாத தேவர் நிதானமாகக் கூறினார்;
‘என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும்
ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள்
என்று தான் இருந்தது. நீங்க வற்புறுத்துவதால்
நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ்
ஆறுமுகத்தை நன்கு அறிவேன்.
ஆர்.எஸ். என்றே அவரை அழைப்பேன். அவர்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
நல்லவர்.நல்ல பண்பாளர்.சிறந்த நண்பர்.
நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர்.
எனது சகோதரனை போன்றவர்.
என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார்.
அதுவும் அரிஜன மக்கள்
அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர்
போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவர் மக்கள்
எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர்.
அவற்றை எல்லாம்
தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.
சிறிதுநேரம் கழித்து நான் போனேன்.
நடந்ததை கூறினார்கள். எனக்கு போட
மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ‘
நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக
வாங்கிவந்த
மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான்
ஆனந்தபடுகிறேன்.
நான் எதிர் கட்சிளிருந்தும்
என்னை பற்றி அப்படிகூறிய அந்த
மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை என
நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர்
மாலையோடு ஓடிவந்தார். ‘
இது தேவருக்கு போட்ட மாலை.
அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன்.
நீங்கள் வந்துருகிக்றீர்கள். அகவே,
உங்களுக்கு அதை சூடுகிறேன்’
என்று சூது வாது இல்லாமல் மாலை போட்டார்.
நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.
ஆம்! அரிஜன வகுப்பை சேர்ந்த பசும்பொன்
தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ்.
ஆறுமுகம் சொல்லிய இந்த
இகல்விலிருந்து பசும்பொன் தேவரின்
சாதி பேதமற்ற உள்ளத்தை அறியலாம்.
தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற
படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர்
என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர்
திருமகன் தமிழகத்தின் தங்கம். எல்ல இனத்திற்கும்
பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம்
விளக்கும்.
இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட
பொது மதுரை திலகர் திடலில் நடந்த
பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன்
அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி.
அவர்கள் காரில் கிளம்பிய போது,
மதுரை கோரிபளையத்தில்
வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து,
நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த
நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத
விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார்.
அப்போது தேவர், “இது அரசியல் சூழ்ச்சி,
இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும்
ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார
்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப்
பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச்
சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும்
அமைதி காக்க வேண்டும்” என்று கேட்டுக்
கொண்டு காவல் துறை வேனில் ஏறினார். “